Wednesday, June 22, 2011

தீமைகளை விரட்டும் திரிசக்தி பீடம்!வலைச்சரத்திற்கும் வந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வாழ்த்துக்கள்.

goddess durga comments
இச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி அருள் புரியும் உன்னதத் தலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள திரிசக்தி பீடமாகும்!
WEB TITLE
விஜயவாடாவில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில், ஸ்ரீகாளி மாதா அம்மாவாரி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
ஆந்திராவின் தென்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவான ஸ்ரீமகா காளியின் சிலையைக் கண்ட ராணுவப் பொறியாளர் ஒருவர் அதை விஜயவாடாவிற்கு கொண்டு வந்தார். அதனை 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி குஞ்சராமசாமி என்ற அம்மனின் பக்தர் கிருஷ்ணவேணி நதிக்கரையில் வைத்து பிரதிஷ்டை செய்தார்.

திரிசக்தி
திரிசக்தி
7 ஆண்டுகளுக்கு பிறகு துராக வெங்கடேஸ்வரலு என்பவர் அந்தக் கோயிலை திறந்தபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு அம்மன் இருந்த கருவறையில் ஒளி நிரம்பிய மகாகாளியின் சக்தி இருப்பதைப் பார்த்தனர். 
 மகாகாளி 10 முகங்களுடனும், 10 கால்களுடனும் நீல நிறத்தில்  8 கைகளில் வாள், சாட்டை, சுதர்சன சக்கரம், வில், அம்பு, சுருக்குக் கயிறு, வெட்டப்பட்ட மனிதத் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளாள். இது தேவியின் தமசிக குணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
mahakali
மகாகாளியே யோக நித்ரா ..என்றும் அழைக்கப்படுகிறாள்.
maa durga comments

9 comments:

 1. எத்தனை எத்தனை தலங்கள்...எத்தனை வரலாறுகள்...அம்மம்மா....அழகிய படங்களுடன் மற்றுமொரு பதிவு.

  ReplyDelete
 2. இரண்டு வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் எழுதித் தள்ளுகிறீர்கள்... நன்று மிக நன்று.. ;-))

  ReplyDelete
 3. இச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி

  இராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்துடன் கோவையிலிருந்த படியே

  வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று,
  தனது வலைப்பூவினில் வழக்கம்போல அழகான பதிவுகள் தந்து
  அதே சமயம் உலகிலுள்ள மற்ற அனைத்துப் பதிவர்களின் படைப்புகளுக்கும் அருளாசி வழங்கி வருகிறார்கள்.

  திரிசக்தி கொண்ட இவர்களை நாமும் பாராட்டி வணங்குவோம்!

  ReplyDelete
 4. எத்தனை எத்தனை தலங்கள்...எத்தனை வரலாறுகள்அழகிய படங்களுடன் மற்றுமொரு பதிவு.

  ReplyDelete
 5. பக்திமயமான அரிய தகவல்களைத் தினமும் வழங்கிவரும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
  சகோதரி!.......

  ReplyDelete
 6. திருவிளையாடல் பழப்போட்டி styleல் படிக்கவும்.

  சூரி : தென் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு செல்வதாக உள்ளேன்!

  பத்மா: தென் இந்தியாவில் உள்ள கோவில்கள் என்றால் என்ன ! "மணிராஜ் {ராஜேஸ்வரி} இணைய தளம் என்றால் என்ன?

  சூரி: இரண்டும் ஒன்றுதான்!

  பத்மா: என்றால் "மணிராஜ் {ராஜேஸ்வரி} இணைய தளம்" தொடர்ந்து பார்த்தால் தென் இந்தியாவில் உள்ள கோவில்கள்
  அனைத்தயும் பார்த்ததாக தானே அர்த்தம்?

  சூரி: அதில் என்ன சந்தேகம்!!!!

  ReplyDelete
 7. அத்துணை தெய்வங்களும் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் சகோதரி! அருமையான பணி! தொடருங்கள்..

  ReplyDelete