Sunday, June 19, 2011

அக்காரக்கனி” நரசிம்ம மூர்த்தி

Shollingar-Sri Yoga narashimar Thaiyar and Sri Yoga Hanuman.
சோளிங்கர் என்கிற திருக்கடிக்கை

பெரியமலை(யோக நரசிம்மர்)-1305 படிகள்.

சிறியமலை(யோக ஆஞ்சனேயர்)-406 படிகள்.

தாயார்-அமிர்த வல்லி நாச்சியார்.

தீர்த்தம்- தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம், அமிர்த புஷ்கரனி.

விமானம்-ஹேமகோடி விமானம், ஸிம்ஹாக்ர விமானம்.
[Image1]
பக்தன் பிரகலாதனுக்காக இரணியனைச் சம்ஹரிக்கத் தூணைப்பிளந்து கொண்டு உதித்த மூர்த்தி தான் இரணியன் உடலைக்கிழித்து உதிரம் குடிக்கும் நிலையில் காண்போர் அஞ்சும் நிலையில் உள்ளவர். 

பேரண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும் பரம்பொருள் தொட்ட இடமெல்லாம் தோன்றுவான் என்றான் பிரகலாதன். 

அதைக்கேட்டு ஏளனமாகச் சிரித்து விட்டு இந்தத் தூணில் இருக்கிறானா? என்று கேட்கிறான் இரணியன். 

இந்தத் தூணில் மாத்திரமென்ன, நீ சொல்கிறாயே கடவுளாவது, தெய்வமாவது என்று, அந்தச் சொல்லில் கூட அவன் இருக்கிறானே என்று வாதமிடுகிறான் பிரகலாதன். 

இந்த நிலையில் தூணை ஏற்றுகிறான், இரணியன். 

தூணில் பிறந்த் நரசிம்ம மூர்த்தி பயங்கர உருவமாக இருப்பதால் நரசிம்மனது மடியிலே லஷ்மியை இருத்தி லஷ்மி நரசிம்மராக மக்கள் வழிபடுகிறார்கள். 

யோக நிலையில் இருந்து மக்களுக்கு எப்போதும் அருள் புரிபவனாக எண்ணி, பக்தர்கள் யோக நரசிம்மராக வழிபடுகிறார்கள்.

கடிகை நரசிம்மரின் சிறப்பு, கோவில் அமைப்பு, யோக ஆஞ்சநேயரின் மகிமை ஆகியவற்றைப் பற்றி சந்தநிலையிலே யோக நரசிம்மனாக கோயில் கொண்டி ருக்கும் இடம் சோழசிங்கபுரம் என்னும் சோழிங்கிபுரம்.  வட ஆற்காடு மாவட்டத்திலே திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய ஊர்.

சோளிங்கர் என்று அழைக்கப் படும் சோழிங்கபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது. 

கடிகை என்றால் வடமொழியில் ஒரு நாழிகை என்று பொருள். 

இந்த ஸ்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அங்குள்ள யோக நரசிம் மனைக் கண்டு வணங்கினால் முக்தி பெறலாம் என்பதன் காரணமாகவே இத்திருப்பதி கடிகை என்று பெயர் பெற்றிருக்கிறது.
[Sholingur+Malai.JPG]
சோழசிங்கபுரம் என்ற பெயர் வர மற்றொரு காரணம்  தொண்டை நாட்டிடையே, சோழ நாடு போல வளம் மிகுந்து, நரசிம்ம மூர்த்தி தங்குவதற்கு வசதியான இடமாக இருப்பதனால், சோழசிங்கபுரம் எனப்பெயர் பெற்றிருக்க வேண்டும் ..
[Gal1]
சோழமன்னன் ஒருவன் சிவலிங்கத்தைப் பிரதிஷ் டை செய்தான் என்றும் அதனால் சோழ லிங்கபுரம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சோழலிங்கபுரமே நாளடைவில் சோழசிங்கபுரம் என்று மாறிற்றாம்,,!

யோக நரசிம்மனது கோயில்  நானூறு அடி (400) உயரமுள்ள மலையின் மேல் இருக்கிறது. 

எந்த திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும், கோயிலும் மலையும் பத்து மைல் தூரம் வரை தெரியும். 

எங்கு சுற்றினாலும் திருத்தணி - சித்தூர் ரோடுக்கு வந்து, அதிலிருந்து பிரியும் பாதை வழியாக மலையடி வாரத்துக்கு வந்து, சேரலாம். 

இப்பதியில் 320 அடிகள் உயரமுள்ள குன்றின் மீது யோக நரசிம்மர் கோயில் கொண்டு விளங்குகின்றார். அதனால் இத்திவ்வியப் பதிக்கு கடிகாசலம் என்ற பெயரும் உண்டு. 

கடிகைப்பதி சோழ நாட்டைப் போன்ற சோலைவளம் மிக்க விளங்கியது. எனவே தான் பேயாழ்வார் வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகை என்று போற்றுகின்றார். 

நரசிம்மர் எழுந்தருளியதால் சிம்மபுரம் சோழ நாட்டைப் போன்றிருந்தால் சோழசிம்ம புரம் என்றும் பதிக்குப் பெயர் கொடுத்துள்ளனர்.

குன்றின் மீது  யோக நரசிம்மப் பெருமாளும், அமுத வல்லித் தாயாரும் எழுந்தருளியுள்ளனர். 

குன்றின் அருகில் உள்ள 200 அடி உயரமுள்ள மற்றொரு குன்றின் மீது ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். 

ஊரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் கொண்டு விளங்குகின்றார். 

குன்றிற்கு கடிகாசலம் என்று பெயர். 

குன்றின் அடிவாரத்திற்கும் கோயிலுக்கும் இரண்டு மைல்கள் தூரம் உள்ளது. 

கடிகாசலப் பெருமானைத் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

 சுமார் 108 தீர்த்தங்கள் உள்ளன ... 

குளம் குன்றின் அடிவாரத்தில் உள்ள தக்கான்குளம் பிரமதீர்த்தம்.குளக் கரையில் வரதராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது.

கடிகை என்ற சொல்லிற்குச் சோலை என்ற பொருளும் உண்டு. 

கடிகாசலம் என்பது சோலைகளையுடைய மலை என்று பொருள்படும். 

சோலைவளம், மிக்கக் குன்றின் மீது பெருமாள் யோக நரசிம்மர் திருக்கோயில் கொண்டு கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

நரசிம்மமூர்த்தி நான்கு திருக்கரங்களுடன் யோகாசனத்தில் ஹேம கூட விமானத்தில் எழுந்தருளியுள்ளார். 

இவர் சப்த ரிஷிகளுக்குப் பிரத்தியட்ச மானதாக ஐதீகம். 

மலைமீதுள்ள யோக நரசிம்மனை அன்று திருமங்கை ஆழ்வார் கண்டு வணங்கி  தக்க பெருமை உடைய தயாளு என்று உணர்ந்திருக்கிறார். 

 வெல்லம் போல் இனிப்புள்ள கனியாக விளங்குகிறான்.

யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ள குன்றுக்கு எதிரில் ஒரு சிறிய குன்றில் ஆஞ்சநேயர் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக யோகாசனத்தில் நரசிம்மரை நோக்கிய வண்ணம் வீற்றிருந்த திருக்கோலத்தில் விளங்கு கின்றார்.
சோளிங்கபுரம் - அனுமன் - மூலவர்
[Sholinghur_yoga+anjaneya_closeup.jpg]

எம்பெருமானைப் போன்றே யோகாசனத்தில் சங்கு சக்கரத்தோடு விளங்குவது புதுமை யானது, இத்தலத்தில் மட்டுமே நாம் காண முடியும். 

யோக மூர்த்தி மட்டும் அல்ல. அற்புதமான அஹிம்சா தர்மத்தை நிலை நிறுத்திய மூர்த்தியும் கூட. 

இதனை விளக்கும் புராண கதை, அன்று வடமதுரையை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்ற ஓர் அரசன் வேட்டையாடி வேட்டையில் ஒரு பெண் மானைத் துரத்திக் கொண்டு, இந்த மலையை அடுத்த காட்டுக்கே வந்து . மானின் மீது அம்பு தொடுக்க முனைந்த போது, மான் இருந்த இடத்தில் ஒரு ஜோதி தோன்ற, அதைத் தொழுது வணங்கி, அன்று முதல், வேட்டையாடுவதையே நிறுத்திவிட்டானாம் .. 

 கும்போதரன் என்ற அரக்கனுடைய கொடுமையையும் ஒழித்து, 
அந்த பிரதேச மக்களையே காப்பாற்றியிருக்கிறான்.
ஆஞ்சநேயர் கோயில் மலைப்பாதை

நரசிம்மனது ஆணையின்படியே ஆஞ்சநேயர் தான் ஜோதியாகத் தோன்றி வடமதுரை மன்னரை சிறந்த அஹிம்சாவாதியாக ஆக்கியிருக்கிறார்.

 எம்பெருமான் தம் பக்தனுக்கு அருள் புரியவேண்டி, ஆஞ்சநேயரிடம், சங்கு, சக்கரங்களை அளித்து, பகைவரை யொழிக்குமாறு கட்டளையிட்டார்.
ஆஞ்சநேயர் மலைக்கோயில் தோற்றம்
[Gal1]


[Sholinghur_anjaneya+utsavar.jpg]சங்கு, சக்கரங்களைக் குன்றி லுள்ள தடாகத்தில் சுத்தம் செய்து நரசிம்மரிடம் கொடுக்க,  ஆஞ்சநேயரை நோக்கி, இன்று முதல் நீ என்னைப் போல் சங்கு, சக்கரம் தரித்துச் சதுர்புஜனாய் எனக்கு எதிரில் வீற்றிருந்து, என்னையும், உன்னையும் நாடிவரும் அன்பர்களைக் காப்பாயாக என்று அருளினார்

 , யோக ஆஞ்சநேயர் மக்களின் மனநோய், உடல் நோய் போன்ற பிணிகளை நீக்கி, ஆரோக்கிய வாழ்வு அளிப்பார் ஆஞ்சநேயர்.
[Gal1]
இன்றும் நரசிம்மதீர்த்தம் போன்ற திருக் குளங்களில் நீராடி, நியமங்களை யெல்லாம் அனுஷ்டிக்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் குன்றுகளும், இக்கோயில்களும் விழாக் கோலம் கொண்டு, ஊர் மக்கள் திராளக வந்து யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை தரிசித்து பலன் அடைகிறார்கள்.
”அக்காரக்கனி” என்று திருமங்கை ஆழ்வாரால் பெரிய திருமொழியில் பாடப் பெற்ற தலம் அரகோணம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது.

விசுவாமித்திரர் இம் மலையில் ஒரு கடிகை (நாழிகை) நேரத்தில் நரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார், என்று கேட்டு சப்த ரிஷிகளும், வாமதேவர் என்ற முனிவரும் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை விரைந்து காணும் ஆசையில் இங்கு வந்து தவம் செய்தனர். சீக்கிரமாகவே நரசிம்மரும்  கொடுத் தரிசனத்தை ஆஞ்சனேயரும் பார்த்தார் 
[Gal1]
இராம அவதாரம் முடிந்ததும் ஸ்ரீ இராம பிரான் வைகுண்டத்திற்க்கு புரப்பட்டார். மாருதியும் பின்தோடர ”கடிகாசலத்தில் தவம் புரியும் முனிவர்க்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்க்கள் துன்பம் தருக்கின்றனர். அவர்களை நீ வதம் செய்வாயாக” என மொழிந்து, சங்கு சக்கரங்க்களை வழங்கினார்.

அனுமன் அந்த அரக்கர்களை சம்கரித்து நரசிம்ம தரிசனம் பெற்றார். அஞ்சனை மைந்தர் ஆன்ந்தமாய் பஜனை செய்ய “வாயுகுமாரா! நீ என் முன் அமர்ந்து யோக அனுமன்னாக பக்தர்க்களின் பிணிக்களை தீர்ப்பாய்யாக” என்றார் நரசிம்மர்.

இதனால் தான் சங்கு சக்கரத்துடன் இப்பதியில் அனுமன் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.

ஸதல மகிமை: ஒரு கடிகை நேரம் (24 நிமிடம் இம்மலையில் தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

போக முடியாதவர்கள் ஒரு நாழிகை நரசிம்மரை சிந்தித்தாலே போதும் என்கிறது 108 திருப்பதி அந்தாதி.
[Gal1]
 நரசிம்மருக்கு பக்தோசித ஸவாமி என்ற திருநாமம் உண்டு. பக்தர்கள் உசிதபடி அருள் பவர் என்று அர்த்தம்.  

ஸவாமியை பாடியவர்கள் “பேயாழ்வார்”, “திருமங்கையாழ்வார்”, ”ஸ்ரீமந் நாதமுனிகள்”, “திருக்கச்சி நம்பிகள்”, “மணவாள மாமுனி”, “ஸ்ரீமத் இராமானுஜர்”.

இத்தலத்தில் பிறந்தவர்கள் “தொட்டாச்சார்யார்”, “எறும்பியப்பர்”.

தொட்டாச்சார்யார் காஞ்சி கருட சேவைக்கு ஆண்டுத்தோறும் செல்வது வழக்கம். 

ஒரு ஆண்டு உடல் நலிவால் போக முடியாததை நினைத்து கண்ணிர் விட்டார். பகவான் அவருக்கு அங்கேயே கருட வாகனத்தில் காட்சி தந்தார். 

இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரமோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கோபுர வாசலில், கருட வாகனத்தில் ”தொட்டாச்சார்யார் சுவாமிகள்” சேவை என்று கற்புர ஆரத்தி நடந்து வருகிறது.

ஒரு சமயம் துர்வாச ரிஷி இங்கு வந்து நரசிம்மரை வணங்கி அவரது “துளசி” மாலையை பெற்று அதை கழுத்திலும், சிரசிலும் சூடி கூத்தாடினார். அப்பொழுது நரசிம்மரை தரிசித்துக் கொண்டிருந்த புதன் கேலி செய்து சிரித்தார்.

“திருக்கடிகையில் பாண்டவத் தீர்த்தத்தில் நீராடி, அங்கு தவம் செய்யும் முனிவர்களுக்கு தொண்டு செய்தாலே நீ விண்ணுலகம் செல்ல முடியும்” என சபித்தார் முனிவர். புதன் அப்படியே செய்து மீண்டும் உயர் நிலை பெற்ற சேத்திரம் இது.

ஒரே கல்லில்  மலை அமைந்ருப்பத்தால் இதற்கு “ஏகசிலா பர்வதம்” என்று பெயர்.

இராமானுஜர் தனது ”விசிஷ்டாத்வைத” வைணவக் கோட்பாடுக்களை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.

இங்கு விஞ்ச் ரயில் அமைக்க முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டிருக்கிறது. இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மை தரிசிப்பதையே நரசிம்மர் வேண்டுவதாக ஐதீகம்.

வரலாறு: சோழன் “கரிகால் பெருவளத்தான்” தொண்டை நாட்டை வெற்றிக் கொண்டு இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்று பிரித்திருக்கிறான். இச்செய்தி பட்டினப்பாலையில் உள்ளது.

கி.பி 1781ல் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் நடந்த 2-ஆம் கர்நாடகப் போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்ற போதும் இக்கோவிலுக்கு எந்த சேதமும் நிகழவில்லை.

இங்கு நரசிம்ம ஸ்வாமியை தரிசித்து விட்டுத்தான் ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்…

அக்காலத்தில் பள்ளிகள் கடிகாதானம் என்று அழைக்கப்ப்ட்டன.பிறகு வித்யாலயம் என்றனர்.தமிழில் பள்ளிகளைக் கடிகை என்றனர். 

ஒரு காலத்தில் குருகுலப் பள்ளிகள்  வேதம், அறிவியல், வானவியல்,ஜோதிடம், வீரவித்தைகள் என்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கற்றுத்தரப்பட்டன. 

கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் அப் பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் ஏழு ஆயிரம் பேர் கல்வி பயின்ற விவரம் தெரிவந்தது ஆச்சரியப்ப்டுத்துகிறது.கல்விக்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. 

சமீபத்தில் ஆட்சிமாற்றத்தால் பாடப்புத்தக் விவகாரத்தில் பள்ளிதிறக்க தாமதப்படுவது கவலை தருகிறது. 

புத்தகங்களை மட்டும் படிப்பது தான் கல்வியா என்ன. வாழ்க்கைக்குத்தேவையான சுத்தம் சுகாதாரம், ஒழுங்கு, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல கலைகளை வருங்காலக் குடிமகன்களான மாணவர்களுக்குக் கற்றுத்தர இந்த நேரத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் உதித்தது. 

அது சரி இந்த விஷயங்களை ஆசியர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது என்ற வினாவும் எழுந்துவிட்டது.

22 comments:

 1. //இந்த ஸ்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அங்குள்ள யோக நரசிம் மனைக் கண்டு வணங்கினால் முக்தி பெறலாம் என்பதன் காரணமாகவே இத்திருப்பதி கடிகை என்று பெயர் பெற்றிருக்கிறது.//
  பெயர் காரணங்கள் அறிய உதவிடும் பகிர்வு அருமை.

  ReplyDelete
 2. அருமையான திருத்தலப் பதிவு. நிறைய விஷயங்களைப் பதிந்திருந்தீர்கள். நிறைவு பாராவில் தென்பட்ட ஆதங்கம் மிகவும் நியாயமானது.

  ReplyDelete
 3. பதிவு படிக்க நல்ல அருமையாகவும், படங்கள் பார்க்க ரம்யமாகவும் இருந்தன.

  ஒரு ஐந்து வருடம் முன்பு நானும் என் பையனும், மேலும் இரு நண்பர்களும் [ஜோஸ்யர் ஒருவர் சொன்ன பரிகாரம் செய்ய] ஒரு காரில் சோளிங்கருக்குச் சென்று வந்தோம். முதல் நாள் இரவு ராணிப்பேட்டை BHEL Guest House இல் தங்கி விட்டு மறுநாள் விடியற்காலம் கிளம்பி நீங்கள் சொன்ன இரண்டு மலைகளிலும் ஏறி ஸ்வாமி தரிசனம் செய்து வந்தோம்.

  1310+400 = 1710 படிக்கட்டுகளிலும் படிக்கு பத்து குரங்குகள் வீதம் மொத்தம் 17100 குரங்குகளைத் தாண்டி போய் வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது எங்களுக்கு.

  கீழே உள்ள கடைக்காரர் கொடுத்த தடிக்குச்சிகள் ஆளுக்கு ஒன்று வீதம் கையில் வைத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் இறுக்கிப்பிடித்துக்கொண்டு பயந்து கொண்டே ஏறினோம். அது ஒரு பெரிய கதை / அனுபவம்.

  பாதி மலையில் ஒருவர் சுடச்சுட வடை சுட்டு தைர்யமாக விற்று வருகிறார். அவரிடம் உள்ள வடைகளை அவைகள் நெருங்காத வண்ணம் பயமுறுத்தி வைத்துள்ளார்.

  அவரிடம் காசு கொடுத்து நாம் வாங்கும் வடைகளைத் தான் அவை பிடிங்கிச் செல்லும். அவரிடம் நேரிடையாக அவைகள் வாலாட்டினால், இரும்புச் சட்டியில் கொதிக்கும் எண்ணையை, ஜாரிணிக் கரண்டியால் அவைகள் மீது தெளித்து விடுவாராம்.

  இதைக் கேட்டதும் எங்களுக்கே பயமாகிப் போய் விட்டது. அவரிடம் வடைகளை வாங்கி குரங்குகளுக்கு சாப்பிட விட்டெறிந்து விட்டு, அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட்டோம், கொதிக்கும் எண்ணெய் நம் மீதும் தவறுதலாகத் தெளிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில்..

  அந்த அனுபவம் தான் தங்களின் இந்தப் பதிவைப்படித்ததும் ஞாபகத்தில் வந்து பயமுறுத்துகிறது.

  பதிவுக்கு நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  நட்புடன் vgk

  ReplyDelete
 4. இது எங்களுடைய திருவள்ளூரில் இருந்து 60 கிமீ-ல் இருக்கிறது...

  இந்த தளத்தை நான் நண்பர்களுடன் இரு முறை சென்றிருக்கிறேன்...

  மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்
  பகிர்வுக்கும மிக்க நன்றி..

  ReplyDelete
 5. //புத்தகங்களை மட்டும் படிப்பது தான் கல்வியா என்ன. வாழ்க்கைக்குத்தேவையான சுத்தம் சுகாதாரம், ஒழுங்கு, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல கலைகளை வருங்காலக் குடிமகன்களான மாணவர்களுக்குக் கற்றுத்தர இந்த நேரத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் உதித்தது. அது சரி இந்த விஷயங்களை ஆசியர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது என்ற வினாவும் எழுந்துவிட்டது. //


  உங்களின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம்.

  ReplyDelete
 6. ஒரு ஸ்தலம் என்று எடுத்துக்கொண்டால்
  அது குறித்த அனைத்து தகவல்களையும்
  கொடுக்கிற தங்கள் முயற்சி குறித்து
  வியந்து போகிறேன்
  அதே போல் படங்களும்
  உங்கள் பதிவைத் தொடர்வதில்
  பெருமை கொள்கிறேன்

  ReplyDelete
 7. @ FOOD said...//
  பெயர் காரணங்கள் அறிய உதவிடும் பகிர்வு அருமை.//

  அரிய கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 8. @ ellen said...
  அருமையான திருத்தலப் பதிவு. நிறைய விஷயங்களைப் பதிந்திருந்தீர்கள். நிறைவு பாராவில் தென்பட்ட ஆதங்கம் மிகவும் நியாயமானது.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 9. @ # கவிதை வீதி # சௌந்தர் s//
  மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்
  பகிர்வுக்கும மிக்க நன்றி..//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 10. @ வை.கோபாலகிருஷ்ணன் //
  உங்களின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம்.//

  நீண்ட நாள் ஆதங்கம்.குழந்தைகள் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், பாடப்புத்தகத்தைத்தாண்டி அவர்களை வெளிவர நாம் அனுமதிப்பதில்லை.

  ReplyDelete
 11. @ Ramani said...
  ஒரு ஸ்தலம் என்று எடுத்துக்கொண்டால்
  அது குறித்த அனைத்து தகவல்களையும்
  கொடுக்கிற தங்கள் முயற்சி குறித்து
  வியந்து போகிறேன்
  அதே போல் படங்களும்
  உங்கள் பதிவைத் தொடர்வதில்
  பெருமை கொள்கிறேன்//

  தங்கல் அனுபவம் வாய்ந்த கருத்துரைகளுகு நன்றி ஐயா.

  ReplyDelete
 12. நானும் சென்று வந்துள்ள தலம் இது. படியில் இருக்கும் குரங்குகள் பயமுறுத்தினாலும் இது வரை ஒன்றும் செய்தது கிடையாது. ராமானுஜர், துர்வாசர் போன்ற விஷயங்கள் புதிது.

  ReplyDelete
 13. உங்கள் பதிவுகளைப் படித்தால் பக்தி தானாகவே வந்துவிடும்போல இருக்கு.அதோடு கதை கேட்பதுபோல சுவாரஸ்யம் !

  ReplyDelete
 14. @ ஸ்ரீராம். said...
  நானும் சென்று வந்துள்ள தலம் இது. படியில் இருக்கும் குரங்குகள் பயமுறுத்தினாலும் இது வரை ஒன்றும் செய்தது கிடையாது. ராமானுஜர், துர்வாசர் போன்ற விஷயங்கள் புதிது./

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. @ ஹேமா said...
  உங்கள் பதிவுகளைப் படித்தால் பக்தி தானாகவே வந்துவிடும்போல இருக்கு.அதோடு கதை கேட்பதுபோல சுவாரஸ்யம் !//

  வாங்க ஹேமா. சுவாரஸ்யமான கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 16. ஓம் நமோ நாராயணா .
  வட தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் அதிகம் வந்ததில்லை. தங்கள் புண்ணியத்தில் , இறைதரிசனம். நன்றி

  ReplyDelete
 17. @ சிவகுமாரன் said...
  ஓம் நமோ நாராயணா .
  வட தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் அதிகம் வந்ததில்லை. தங்கள் புண்ணியத்தில் , இறைதரிசனம். நன்றி//

  ஓம் நமோ நாராயணாய.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. பாராட்டுக்கள் அருமையான பதிவு

  ReplyDelete