Wednesday, June 1, 2011

வெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது -உடனடி கைமேல் பலன் கொடுப்பவர் நரசிம்மர்.
கர்ப்பவாசம் இல்லாமல் ஸ்தம்பத்தில் உக்ர ரூபமாய் அவதரித்த அவதாரம். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தன் பக்தன் வாக்கினைப் பரிபாலனம் செய்ய அண்டசரசரங்களிலும் ஊடுருவிக் கலந்தவன்.

ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
 பிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்
அந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.
வெள்ளெருக்கில் விநாயகர் தானே கேள்விப்பட்டிருகிறோம். 
விநாயகர் சதுர்த்தியின் போது வெள்ளெருக்கு மாலை அணிவிப்பது விஷேசமாயிற்றே.


சூரியனார் கோவிலிலும் வெள்ளெருக்கு தலவிருட்சமாயிற்றே.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மீக தெருக்கூத்து நிகழ்ச்சிகள் பிரபலமாக நடைபெற்று வந்தன. அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.

அந்தத் தெருகூத்து வம்சாவழியினர் ஒருவர் கனவில் நரசிம்மர் தோன்றி 
ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு இருக்கும் தன்னை எடுத்து பூஜைகள் செய்யுமாறு அறிவுறுத்தினபடி அங்கு போய் பார்த்தபோது ஒரு பாம்பு புற்று இருக்கவே அதைத் தோண்டிப்பார்த்தபோது ஒரு பெரிய வெள்ளெருக்கு வேர் காணப்படவே அதில் நரசிம்ம உருவத்தைச் செதுக்கி வழிபட ஆரம்பித்தார்கள்.

பிறகு நரசிம்மர் வாக்குப்படி, அந்த வெள்ளெருக்கு மூர்த்தியை மூலவராகவும், உற்சவமூர்த்தியாக லட்சுமி நரசிமரையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் உற்சவம் நடத்தி , கோவிலையும் அழகுற நிர்வகித்து வருகிறார்கள்.

பக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதியகத் திகழ்கிறார் வெள்ளெருக்கு நரசிம்மர்.

பாவூர் பரந்தாமன் - பதினாறு கரங்களால் பரிவுடன் அருளும் நரசிம்மர்.. 
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பாவூர் சத்திரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்- சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் என்னுமிடத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கை உடனுறை ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்தில் உள்ள நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் ஹிரண்ய கசிபுவை வதம் புரியும் கோலத்தில் தர்மம் காக்கும் தலைவனாகக் காட்சியளிக்கிறார். , 


பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். 
இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். 
நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன. 


நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். 

பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் இறைவன் அருளினார் ... 

நால்வரும் பெருமாளைக் குறித்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. 

பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். 

கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். 

பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. 

இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர். கலியுகத்தில் அர்ச்சாவதாரமாகக் கோவில் கொண்டிருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங்கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.

ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த  திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.

திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் மாலை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம்.

முதலில் பயந்து கொண்டிருந்த மக்கள், பின்னாளில் மாலை நேரப் பூஜையில் இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்து பானகம் நைவேத்யம் செய்யத் தொடங்கினர். அப்போது முதல் பெருமாள் சாந்த மூர்த்தியாகி பலருக்கும் பலவிதங்களில் அருள்பாலித்து வருகிறார்.

கடன்களிலிருந்து நிவாரணம் பெற, நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். 

நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது. இவரை சுவாதியன்று தரிசிப்பதால் தடைபட்ட திருமணம் விரைவில் நிறைவேறும். 


இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்திலுள்ள பாவூர்சத்திரம் சென்று, அங்கிருந்து சுரண்டை செல்லும் ரோட்டில் 5 கி.மீ., சென்றால் கீழப்பாவூரை அடையலாம். 


திறக்கும்நேரம்: காலை 7.30- 10.30மணி, மாலை5- இரவு7.30மணி
போன்: 94423 30643.

நரசிம்மப் பெருமாள் தன்னை நாடி வரும் அடியார்களுக்கு நாழிகைப் பொழுதில் நலம் செய்தருள்வார்.
பாவூர் சென்று பகவானின் அருளைப் பெறலாமே.

37 comments:

 1. விவரங்களும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யம்.

  ReplyDelete
 2. நரசிம்மரை தரிசித்தேன்
  படங்களும் பதிவும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @ஸ்ரீராம். said...
  விவரங்களும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யம்.//

  சுவாரஸ்யமான கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 4. @ Ramani said...
  நரசிம்மரை தரிசித்தேன்
  படங்களும் பதிவும் அருமை
  வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 5. அருமையான அருந்தகவல்களுக்கு நன்றி!!

  ReplyDelete
 6. ஆன்மீக தகவல்கள் படிக்கவே தித்திப்புதான்..நரசிம்மர் பற்றிய நிறைய தகவல்கள்....படங்கள் புதிதாக உள்ளன..

  ReplyDelete
 7. @ middleclassmadhavi said...
  அருமையான அருந்தகவல்களுக்கு நன்றி!!//
  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 8. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...
  ஆன்மீக தகவல்கள் படிக்கவே தித்திப்புதான்..நரசிம்மர் பற்றிய நிறைய தகவல்கள்....படங்கள் புதிதாக உள்ளன..//

  தித்திப்பான புதிய கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 9. இன்று அமாவாசை, தர்ப்பண தினம். மதியம் பொறுமையாகப் படித்துவிட்டு மாலை பின்னூட்டம் தருகிறேன்.

  அதுவரை பொருத்தருள வேண்டுகிறேன்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 10. தகவல்கள் அருமை

  ReplyDelete
 11. good morning perima,narasimar photos are too good and its content are amazing keep it up....

  ReplyDelete
 12. சில நிமிடங்கள் நரசிம்ம தரிசனத்தில்
  உறைந்துபோன உணர்வு!....சிறந்த
  விளக்கத்துடன்கூடிய படங்களும் பகிர்வும் அருமை!..பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 13. very nice post and my mom likes it a lot..

  ReplyDelete
 14. அற்புதம். நிறைய தகவல்களுடன். ;-)

  ReplyDelete
 15. சாமி எல்லாரும் நல்லா இருக்கணும்

  ReplyDelete
 16. வெள்ளெருக்கு நரசிம்மர், பாவூர் பரந்தாமன் இருவரும் என்னைப்பொருத்தவரை இதுவரை கேள்விப்படாத புதியவர்கள்.

  //அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.//

  ஆம்; அந்தக்காலத்தில் இது மிகவும் பிரபலமானது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

  //பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. //

  படிக்கும் போதே உக்கிரத்தை உணர முடிகிறது. வீட்டில் பானகம் கரைக்கச் சொல்லிவிட்டுத்தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். பெருமாளுக்கு நிவேதனம் செய்து, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தால் தான் மனம் சாந்தியாகும் என்று நினைக்கிறேன்.

  தன் பரம பாகவத பக்தனாகிய குழந்தை பிரகலாதனுக்காக
  எவ்வளவு வழிகளில் உதவிகள் செய்கிறார் பகவான்!

  ஹிரண்யகசிபு தன் மகனைக் கொலை செய்ய முயற்சிக்கும் அனைத்துத் திட்டங்களையும் தவிடுபொடியாக்கி, கடைசியில் சாகாவரம் பெற்ற அவனையே அவன் பெற்ற வரத்தின் லூப்ஹோல்களைப் பயன்படுத்தி, வதம் செய்கிறார் பாருங்கள்!

  சிறுவயது முதல் ஒருவித பயத்துடனும், பக்தியுடனும் பலமுறை பல உபன்யாசகர்கள் வாயால், பல்வேறு ஸ்டைலில், கேட்ட கதையாகையால் இன்றும் இதில் ஒரு தனி ஈடுபாடும் நடுக்கமும் உண்டு.

  தங்கள் படங்களும், விளக்கங்களும், ஸ்தல புராணங்களும், கோயில் அமைந்துள்ள இடமும், போக வேண்டிய வழிகளும் உங்களுக்கே உரித்தான சிறப்புடன் செப்பியுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ஓம் நமோ நாராயணாய நமஹா !!
  அன்புடன் vgk

  ReplyDelete
 17. Aha!!!!!!!!
  Today morning I had the Darshan of Narashimam.
  As usual very good informations.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 18. அந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.

  எங்கள் ஊர் மன்னார்குடியிலிருந்து வெகு அருகே உள்ள இந்த கோவிலை ப்பற்றி இத்தனை நாள் தெரியாமல் போனது என் அறியாமை.இதற்காகவே தனி நன்றி , இன்று பக்தி பானகம் அருந்தினேன், நன்றி மேடம்

  ReplyDelete
 19. @
  வை.கோபாலகிருஷ்ணன் said //
  தன் பரம பாகவத பக்தனாகிய குழந்தை பிரகலாதனுக்காக
  எவ்வளவு வழிகளில் உதவிகள் செய்கிறார் பகவான்!//

  ஓம் நமோ நாராயணாய நமஹா !!//
  விரிவாக ஆழ்ந்த பொருளுடன் அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 20. @ Giruba said...
  தகவல்கள் அருமை//

  நன்றி.

  ReplyDelete
 21. @ FOOD said...
  என்றும் போல் இன்றும் பக்தி மணம் கமழ்கிறது.//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @ arya said...
  good morning perima,narasimar photos are too good and its content are amazing keep it up....//

  நன்றி.

  ReplyDelete
 23. @அம்பாளடியாள் said...
  சில நிமிடங்கள் நரசிம்ம தரிசனத்தில்
  உறைந்துபோன உணர்வு!....சிறந்த
  விளக்கத்துடன்கூடிய படங்களும் பகிர்வும் அருமை!..பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....//

  நன்றி அம்மா. அருமையான கருத்துக்கு.

  ReplyDelete
 24. @ angel said...
  very nice post and my mom likes it a lot.//

  மிக்க நன்றி. அன்னைக்கு என் அன்பு வணக்கங்கள்.

  ReplyDelete
 25. @ RVS said...
  அற்புதம். நிறைய தகவல்களுடன். ;-)//

  அற்புதமான கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 26. @siva said...
  சாமி எல்லாரும் நல்லா இருக்கணும்//
  நன்றி. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 27. @ viji said...
  Aha!!!!!!!!
  Today morning I had the Darshan of Narashimam.
  As usual very good informations.
  Thanks Rajeswari.//

  வாங்க விஜி வாங்க. கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. @ A.R.ராஜகோபாலன் said...//
  இதற்காகவே தனி நன்றி , இன்று பக்தி பானகம் அருந்தினேன், நன்றி மேடம்//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 29. கொஞ்ச நாளாவே பக்தி மணம் கமழுது உங்க ப்ளாக்கில..
  படங்களுன் பதிவும் அருமை..

  ReplyDelete
 30. படங்களும் பதிவும் அருமை

  ReplyDelete
 31. @குணசேகரன்... said...
  கொஞ்ச நாளாவே பக்தி மணம் கமழுது உங்க ப்ளாக்கில..
  படங்களுன் பதிவும் அருமை..//

  Thank you for comment.

  ReplyDelete
 32. @ தோழி பிரஷா( Tholi Pirasha) said...
  படங்களும் பதிவும் அருமை//

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 33. அழகான படங்கள் அருமையான பதிவு

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. @யாழ். நிதர்சனன் said...
  அழகான படங்கள் அருமையான பதிவு

  வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 35. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete