Tuesday, July 31, 2012

வசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’பூமியில் வாழும் ஜீவராசிகள் , மழையால்   வாழ்கின்றன.. 

ஆடி மாதத் தொடக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் துவங்கும். 

ஆடி பதினெட்டு அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். 

மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள், 
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், 
சித்தர்கள் 18 பேர்கள், 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள், 
குடிமக்கள் 18 வகை, 
நெல் முதலான தானியங்கள் 18 
எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்ததை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். 

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காவிரி அன்னைக்கு ‘
ஆடி பதினெட்டு’ என்று விழாவும் எடுத்தார்கள். 

   நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, அத்துடன் சிறிதளவு மண்ணோ - எருவோ கலந்து, தண்ணீரும் தெளித்து வைப்பார்கள். விழாவுக்குள் ஆடி பதினெட்டு  விழாவில் முளைத்து, வளர்ந்து இருக்கும். முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி...

ஆடி பதினெட்டு அன்று முளைப் பாலிகையைக் கையில் ஏந்தியபடி, பெண்கள் ஆற்றங்கரையில்  வட்டமாக கும்மி அடிப்பார்கள். 

 சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றுடன் தண்ணீரை  கலந்து, பிள்ளையார் முன்னால் வைப்பார்கள்.

மஞ்சள் தடவிய நூல் சரடை  முதிய சுமங்கலியிடம் பெற்று அணிந்துகொள்வார்கள்..

 ஒன்றாகக் கூடிக் கும்மி, கோலாட்டம் என ஆடுவார்கள். ஆடி முடித்ததும் ஆற்றில் இறங்கி, அவரவர் தாம் கொண்டு வந்த முளைப் பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள்.

துரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றும் உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் பட்டு. முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். 

எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் !!. 
மதுரை சுற்றியுள்ள  மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு  முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.
 படிமம்:TN 110805111100000000meenakshi.jpg 
அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. 
ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும். 
பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தரும் அன்னையின் முன்  பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக முளைப்பாரிகளை  வைத்திருப்பார்கள்.
கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைக்கப்படும்.http://sairkinfotech.com/wp-content/uploads/2011/07/adi1.jpg
  கருகமணி,  காதோலை ஆகியவற்றையும் ஆற்றில் விடுவார்கள். ‘
http://anudinam.org/wp-content/themes/News/includes/timthumb.php?src=http://anudinam.org/wp-content/uploads/2012/07/DSC00217.jpg&w=298&h=287&zc=1
ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய ஸ்ரீரங்கம்  அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். 
http://farm2.static.flickr.com/1087/1446949943_e0aa7bf18a.jpg
 கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வரும் மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsiNXb-r2aBAZn8LhO-13sWrPnICUNuClgD-pdq7EdrXmZiEUCVBWAtz0Stf8PH2WKU68oT3kRtjPBE5jJsPaS5o-BsnMvl5vdPdlEvZSI4LuO4Mb4MXZ2uiFnK9mnmgm1H4GX6rMng6I/s400/aadi+18+a.jpg
http://reflow.scribd.com/6k9xa4ozuo14r56k/images/image-22.jpg
 http://reflow.scribd.com/1mt7oz3dmorc8aa/images/image-70.jpghttp://www.kmmatrimony.com/Images/Temple/arulmigu-andal1.jpgபெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01155/27frGaruda4__JPG_1_1155797g.jpg
http://www.srichowdeshwaricharitabletrust.in/images/hall/photo18.gif


http://farm7.static.flickr.com/6123/6027755599_c18fe375d1.jpg
photo 
Sri Padmavathi Ammavari Temple, Tiruchanur

 
Monday, July 30, 2012

ஆண்டாள் தரிசனம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலக அன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம்..முத்தமிழ் வளர்த்த முச்சங்கம் இருந்த பாண்டி நாட்டில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ்... செந்தமிழையும் பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை- அந்தத் திருவரங்கனையும் ஒருங்கே ஆள... ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!

செவ்வாய், மங்களன், சேனாபதி, சேய், குஜன், அங்கராகன், குருதி, நெருப்புகொள்ளி, கனல், பூமகன், ஆரல், பூமிகாரகன், சகோதரகாரகன் வக்கிரன்
என்றெல்லாம் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் பரிகாரத்தலமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது.

குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை விட்டுவிட்டு விட்டுசித்தர் திருமகளாராய் ஆண்டாள் அவதரித்தாள்.சிறப்புமிக்க ஆண்டாள்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று கொண்டாடுகிறார்கள். ஆடிபுரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும்.

நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள்...

'அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை
நிறை வேற்றியும் காட்டியவள் , அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்!

 அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் அவள்.

அரங்கனின் துணையோடு பிரார்த்தனை பலிக்க, வாழ்வு இனிக்க வரம் தருவாள் கோதை நாச்சியார்.


தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும் 
கிளியானாள் துளசி மாலை போலானாள்

ஆண்டாள் தன் மாலையும் கிளியும்
ஒவ்வொரு ஆண்டும் அழகருக்கும் 
திருப்பதி பிரம்மோற்சவம் - ஐந்தாம் நாள் கருட சேவைக்கும்.
அரங்கன் இராப்பத்துக்கும் 
சொந்த ஊர் வடபத்ர சாயிக்கு தினமும் அனுப்புகிறாள்..

ஆண்டாளின் பக்திக்கு பெருமை அளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். 

இதை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின் 
7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த காலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். 

இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். தரிசனம் மிகவும் விசேஷமானது.

இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.

இரண்டாவது பெரிய தேர்:::: திருவாரூர் தேர்தான். தமிழகத்தில் மிகப்பெரிய தேர். இதற்கு அடுத்த மிகப்பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்.

ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று  தேரோட்டம் நடைபெறும். ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்தால் பிறவிப்பயனை அடையலாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால் இந்த கோவிலை
`மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர்.

கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க வேண்டி கொள்கிறார்கள்.

வியாசரின் மகனாகிய சுகபிரம்ம முனிவரே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாக கூறுவர்.

பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கையை கேட்கும் இந்த கிளி தாயே..இந்த பக்தன் உன்னிடம் இதை வேண்டினான். அதை  எப்போது நிறைவேற்றப் போகிறாய்  என்று ஆண்டாளிடம் நினைவுபடுத்தும் என்கிறார்கள்.

அதிக சக்தி உள்ள இந்த கிளி ஆண்டாளின் கையில் வைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.


கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவள்ளிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;

இப்படி சூரியனும், சந்திரனும் தினம் உதிப்பது போல்
திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தவள்" என்னும் பெருமை கொண்ட ஆண்டாளின் பேரழகான தத்தை என்னும் கிளி தயாராகிறது

http://jaghamani.blogspot.in/2011/12/blog-post_30.html


தெய்வக்கிளிகள் ! --பேசுகின்றன பதிவில் !!


Sunday, July 29, 2012

சக்தித் திருமகன்
இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி விடமேநீ
இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை  இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை பெருவலி வேறு  முளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத படியுன தாள்கள் அருள்வாயே''
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி 

வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே 


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா 
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.


-என்று நோய்கள் நீங்க தணிகைத் தீரனை அருணகிரி நாதர் பாடியுள்ள பாடல் நாமும் தினமும் ஆறுமுறை பாடிப் பிரார்த்தித்தால் நலம் பல பெறலாம்..
இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.

பிறவிகள் தோறும் நோய் அகல ஸ்லோகம்
தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் திருத்தணி முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை கொண்டு ,சக்தி வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது...


ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி ஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். 


நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை சொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது பக்தியை உண்டாக்கி பரவசப்படுத்தும். 


சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர், பிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

 மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். 


பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்கி அருள் பெறுகிறோம்..

தங்க விமானம், கோயிலின் சிறப்பை மேலும் மெருகேற்றியுள்ளது.


மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபட்டு முருகன் சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படும் சந்தனத்தை உட்கொண்டால் சகலவிதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.


முருகப் பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் சகலமும் தரும் முருகன் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் ..


தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். 
தணிகைமலைத் தீரன் தீமைகள் தீர்ப்பான்...

அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது.

ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை 

மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. 


ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவஆடிக்கிருத்திகை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 காவடி ஏந்தி மாட வீதியில்  பக்தர்கள்.

திருத்தணி முருகன் சரவண பொய்கை குளத்தில் ஆடிக்கிருத்திகை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தெப்பக்குள உற்சவம் கைலாயத்தில் நவரத்தினங்களாலிழைத்த சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலுவீற்றிருக்கும் அற்புதக்காட்சி !
ambal-commingambal-comming