Saturday, July 21, 2012

கருணை கமழும் கருட ஜெயந்தி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் --கருடன் காயத்திரி

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே
பல சித்திகளைப் பெற்றார்.

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹாகாசிப முனிவருக்கும்  வினதைக்கும் புத்திரர் கருடன்.
கும்பாபிஷேகங்களில் கருட தரிசனம் விஷேசமானது..
சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் கருடனது சகோதரர் ..

 சிவாலயங்களில் நந்திக்கு இருக்கும் முக்கியத்துவம், வைணவ ஆலயங்களில் கருடனுக்கு உண்டு. 
எந்நேரமும் எல்லா விதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்யும் நித்யசூரி களில் கருடனும் ஆதிசேஷனும் பிரதானமானவர்கள். 
இந்திரனே வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாகப் பிறந்ததாக புராணம் கூறும்..
ஆடி சுவாதித் திருநாளன்று கருடனுக்கு பல்வேறு ஆலயங்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள். இது பாம்பு, தேள், பூரான் வரையப் பட்ட நீண்ட வஸ்திரமாகும்.
Stone Garuda (bird deity) statue Stock Photo - 7594396
108 திவ்ய தேசங்களில் ஒன்றான.திருநரையூர் என்ற நாச்சியார் கோவிலில்  பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம். 
பூஜை, ஆராதனை, திருமஞ்சனம், புறப்பாடு எல்லாமே முதலில் தாயாருக்குத்தான். 
நாச்சியார் கோவிலில் வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் கல்லாலான கருட வாகனம் காணப்படுகிறது. இதில்தான் கருட சேவையும் நடக்கி றது. கல்லாலான வாகனத்தில் கருட சேவை நடக்கும் ஒரே ஆலயம் இது மட்டும்தான்.
 
பத்துக்குப் பத்தடி சதுரக் கருவறையை நிறைத்தபடி ஒரே கல்லாலான கருடன் காட்சி தருகிறார்.  . 

பறக்கும் இறக்கை, கூரிய மூக்கு, பெரிய கண்கள், ஏந்திய கரங்கள், ஒரு காலை மடித்து மண்டியிட்ட கோலத்தில் காட்சியளிக்கும் கருட வாகனத்தில்தான் பெருமாளும் தாயாரும் எழுந்தருள்வார்கள். 


மார்கழி விழாவின் நான்காம் நாள், பங்குனி விழாவின் நான்காம் நாளென வருடம் இருமுறை கருட சேவை நடைபெறும்.

இந்த கல்லாலான கருட சேவை யில் இரண்டு அதிசயங்கள் நிகழ் வதை இன்றும் காணலாம். 
கருவறையிலிருந்து கல் கருடன் புறப்படும் போது அதனை நான்கு 
பாதந்தாங்கிகள் சுமந்து வருவர். 


நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும். 


கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர். பிராகாரத்தில் 16 பேரும், ஆலய வாயிற்படியில் 32 பேரும், கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும், வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர். 


சுமப்பவர்களைவிடவும் கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம். 

இரண்டாவது அதிசயம் எப்படி கருடன் வெளியே வரவர கனம் அதிகரித்ததோ அதுபோல வீதியுலா முடிந்து கருவறை திரும்பும்போது அதன் கனம் குறைய ஆரம்பிக்கும். 


இப்போது 128 பேர், 64 32, 16, 8 பேர் என சுமப்பவர்கள் குறைந்த படி செல்வர். கருவறையில் கருடனை இறக்கி வைக்கும்போது முன் போலவே நால்வர் மட்டும் இறக்கி வைத்துவிடுவர்.
ஆழ்வார் திருநகரி கருடனுக்கும் சிறப்பு அதிகம்.


இங்கும் தாயாருக்கே முதலிடம். ஆடி மாத திருவாதிரை தொடங்கி ஆடி சுவாதி வரை பத்து நாட்கள் விழா நடத்துவார்கள்.


விஷேச திருமஞ்சனம் செய்து அமிர்த கலச நைவேத்தியம் செய்வர்.


பாசுரங்கள் பாடி திருவாய்மொழி நூற்றியெட்டையும் ஓதுவார்கள்.
சென்னை சவுகார்பேட்டை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை மாத விழாவின்ஆறாம் நாளன்று தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது என்பது ஆலயத்தின் சிறப்பாகும்.
 
தெய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடன் தனிச்சிறப்புடன் திகழ்கிறார்..

கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது  வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். 

இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். 


இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி
21 comments:

 1. க க க ஜெயந்தி

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

  மீண்டும் கருடன் போல பறந்து பறந்து வருவேனாக்கும். ஜாக்கிரதை.

  ReplyDelete
 2. இன்றும் தலைப்பகுதியில் பறக்கும் சிறிய மூன்று கருடன்களுக்குக் கீழேயுள்ள முதல் மிகப்பெரிய படம் திறக்கவே இல்லை.

  நேற்றைய முதல் படமும் இதுவரை திறக்கவே இல்லை.

  ??????????

  ReplyDelete
 3. இந்தமுறை முதல் பின்னூட்டம் என்னுடையது, வழக்கம்போல் அருமையான படங்களுடன் பதிவு கொள்ளை அழகு.

  ReplyDelete
 4. //108 திவ்ய தேசங்களில் ஒன்றான.திருநரையூர் என்ற நாச்சியார் கோவிலில் பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம்//

  ஆஹா அதனால் என்ன?

  அநேகமாக எல்லா நல்ல குடும்பங்களிலுமே, மிகச்சிறந்த வீடுகளிலுமே இது போல தாயாருக்கே [அதாவது குழந்தைகளின் தாயாராகிய மனைவிக்கே] தான் முதலிடம் தரப்பட்டு வருகிறது.

  இல்லாவிட்டால் போச்சே ...
  புவ்வா முதலிய அனைத்துமே ! ;)

  ReplyDelete
 5. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 6. //நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும்.

  கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர்.

  பிராகாரத்தில் 16 பேரும்,

  ஆலய வாயிற்படியில் 32 பேரும்,

  கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும்,

  வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர்//

  இந்த அழகிய நாச்சியார் கோயிலுக்கு நான் நேரில் சென்று தரிஸித்து வந்துள்ளேன்.

  இந்த மேற்படி கல்கருடனின் எடை கூடும், குறையும் என்ற அதிசயமான விஷயம் நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

  உண்மையிலேயே மிகவும் வியப்பான செய்திதான்.

  ReplyDelete
 7. //தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது//

  அடடா! எவ்வளவு அதிசயமான வியப்பான தகவல்களை அள்ளி அள்ளித் தந்து அசத்துகிறீர்கள்.

  ஆண் கருடன் ... பெண் கருடன் ...
  இனி இதை, கருடனை தரிஸிக்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். ;)))))

  ReplyDelete
 8. //ஓம் தத்புருஷாய வித்மஹே
  சுவர்ண பட்சாய தீமஹி
  தந்நோ கருட ப்ரசோதயாத்

  --கருடன் காயத்திரி//

  ஆஹா, கருடனுக்கென்ற தனியாக ஓர் காயத்ரி மந்திரமா! பேஷ் பேஷ். ;)

  சிவன் கோயிலில் நந்தி போல பெருமாள் கோயில்களில் கருடனா!

  சூப்பர். ;)

  திறக்கப்பட்டுள்ள (ஒன்றே ஒன்று தவிர) அனைத்துப்படங்களும் அழகாகவே தரப்பட்டுள்ளன.

  பலவித ஆண் கருடன்களை இன்று படத்தினில் தரிஸிக்க முடிந்தது.

  ஒரே ஒரு கோயிலில் மட்டும் எப்போதாவது தரிஸிக்கப்படும் பெண் கருடன், பற்றிய இனிய செய்தியையும் அறிய முடிந்தது.

  கருடன் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதன் கூரிய கண் பார்வையால் பூமியில் உள்ள அனைத்தையும் பார்த்து விடுமாம.

  அதுபோல தாங்கள் எவ்வளவு தான் பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும், மிகச்சரியாக மாலை வேளை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் பதிவு கொடுத்துவிட முடிகிறது.

  மகிழ்ச்சி! ;)

  ReplyDelete
 9. //காசிப முனிவருக்கும் வினதைக்கும் புத்திரர் கருடன்.

  கும்பாபிஷேகங்களில் கருட தரிசனம் விஷேசமானது//

  //சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் கருடனது சகோதரர்//

  மேற்படி இரு தகவல்களுக்கும் இடையே கடல் மீது பறக்கும் பறவை [கருடனோ .... கழுகாரோ?] ஜோராக Flight Land ஆவது போல
  மிதந்து மிதந்து வருவது நல்லாயிருக்கு.

  அவரையே எப்படியோ எங்கேயோ போய், வளைத்துப் பிடித்துப் போட்டுக் காட்டி அசத்தியுள்ளீர்களே!

  நீங்கள் காட்டும் படங்கள் எல்லாமே ஜோர் தான். அதுவும் இந்தப்படம் பார்க்க சற்றே பயமாகவும் உள்ளது.

  ஒரே கொத்தாகக் நம்மையும் கொத்திடுமோவென்று ......

  ;)))))

  ReplyDelete
 10. கருடனின் கருணை பற்றி நல்ல ஒரு பதிவு அக்கா . அனைத்தும் அருமை .... கடைசி படம் ரொம்ப அழகாக இருக்கிறது அக்கா .. நல்ல பகிர்வு அக்கா ...

  ReplyDelete
 11. தகவல்கள் வழக்கம் போல் பிரமிப்பை ஏற்படுத்துபவை!

  படங்கள் பல படங்களை என்னால் பார்க்க இயலவில்லை உடைத்து போய் காணப்படுகிறது. ஒருவேளை எனது இணைய வேகம் குறைவாக இருக்கிறதோ என்னவோ? அதன் காரணமாகத்தான் படங்கள் download ஆகாமல் அப்படி தெரிகிறது என்று எண்ணுகிறேன்!

  இறுதியாக இணைத்திருக்கும் படம் கண்களுக்கும் மனதிற்கும் நிறைவு!

  ReplyDelete
 12. ஞானத்தின் அம்சமாய் கருட பகவான். தரிசனம் கிட்டியதில் பெரும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. படங்கள், நல்ல விளக்கங்கள், தகவல்கள் என வழக்கம் போல் அருமை.. நன்றி சகோதரி !

  ReplyDelete
 14. கருட தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி தகவல்களும் படங்களும் நல்லா இருக்கு

  ReplyDelete
 15. //சுமப்பவர்களைவிட கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம்//

  இந்த அதிசயத்திலிருந்து தான்

  “கழுகுக்கு மூக்கிலே வியர்த்தால்

  போல கரெக்டா

  வந்துட்டான்யா .... வந்துட்டான்”

  என்ற பழமொழியும் ஏற்பட்டிருக்குமோ!

  ReplyDelete
 16. நாச்சியார் கோவில் கருடன் பற்றிய தகவல்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது! கடைசி ஓவியம் மிக அழகு!

  ReplyDelete
 17. மிக மிக அருமையானதொரு பகிர்வு. இதே நாச்சியார் கோயிலைப் பற்றி பதிவு எழுதிக்கொண்டிருந்தேன். தங்களது பதிவு அருமையாக இருப்பதனால், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். சிறப்பானதொரு பகிர்விற்கு மீண்டும் நன்றி! வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!

  ReplyDelete
 18. கருடனை பற்றிய தகவல்கள் சிறப்பு! படங்கள் அருமை!

  ReplyDelete
 19. கருணை வடிவமான கருடன் தரிசனம் மிக அருமை.
  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 20. கருணை கமழும் அற்புத கற்பகமாய் படங்களும் பகிர்வுக் மனதை வசீகரித்தன.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகல்..

  ReplyDelete