Friday, July 20, 2012

எங்கெங்கு காணினும் சக்தி
கத்தி போல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவராம்!
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம்!
வேப்பிலையின் உள்ளிருக்கும் விந்தைதனை யார் அறிவார்! 

அன்னையே நீ இரங்கு! - என் அம்மையே நீ இறங்கு!!

'எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா-அவள்
தங்கும் வெளியெங்கும் கோடி அண்டம்-அந்த
தாயின் கைப் பந்தென ஓடுதடா'
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சிந்தனை சக்தியினுடைய தன்மையை எடுத்துக் காட்டும்..
அருளது சக்தியாகும் அரன் தனக்கு
அருளையின்றித் தெருள் சிவமில்லை
அந்தச் சிவமி;ன்றிச் சக்தியில்லை
 
அம்மியும் பறக்கும் சக்தி வாய்ந்த ஆடிக்காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும்  ஆடி மாதம் முழுவதும் அம்மனின் 
அருள் பெருக்கும்..
ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே நம்மை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள்.வெளியே தரிசித்த சக்தியை நமக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்பதுதான்...

பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘புற்றினுள்  தவமிருக்கிறாள்..

ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் 
சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும்.ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் 
எடுத்த நிலையில் நாகம் உள்ளது. 
நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை

18 comments:

 1. எங்கெங்கும் காணினும் சக்தியா?

  பின் இனி என்ன கவலை?

  மீண்டும் கவலையில்லாமல் வருவேன்

  ReplyDelete
 2. முதல் படம் திறக்க மறுக்கிறது.

  மேலிருந்து கீழே ஐந்தாவது மிகப்பெரிய அம்மன் படம் கையில் கரும்புடன் அழகோ அழகாக உள்ளது. மனதுக்கு மிக மிக நிறைவாகவும் உள்ளது.

  ReplyDelete
 3. கடைசி படத்தில் மிகப்பெரிய கோல வடிவில் காட்டியுள்ள எரியும் அகல் விளக்குகளின் அணிவகுப்பு சூப்பரோ சூப்பர்!

  சபாஷ்!

  மிக அருமையான படத்தேர்வு !! ;)

  ReplyDelete
 4. ”கத்தி போல வேப்பிலையாம்” என்று ஆரம்பிக்கும் அம்மன் பாட்டு

  புத்தியிலே பதிவதாக தந்துள்ள தங்களின் விந்தைதனை யார் அறிவார்?

  ReplyDelete
 5. //ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே நம்மை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள்.//

  அதே சக்தி தான் இந்தப்பதிவினிலும் வெளிப்பட்டிருக்கிறாள்.

  மிகச்சக்தி மிக்கத் தங்களால் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறாள்.


  //வெளியே தரிசித்த சக்தியை நமக்குள் காண்பதே பிறந்ததன் பயன்//

  ஆஹா! தங்களால் அந்தப் ப்யனை நாங்களும் இன்று இந்தப் பதிவின் மூலம் அடைய முடிந்ததில், மட்டில்லா மகிழ்ச்சியடைகிறோம்.

  வாழ்க! தாங்களும் தங்களின் இந்த தங்களின் அருள் தொண்டும்!!

  ReplyDelete
 6. என் மின் அஞ்சலில் உங்கள் பதிவு பற்றி அறிவிப்பு வராததால் படிக்க இயலவில்லை. என்னவோ என்று நேராக ப்ரௌசர் மூலம் பதிவிறக்கினேன். இனி கவலை இல்லை. தொடர்பாளன் ஆகிவிட்டேன்.மின் அஞ்சல் அறிவிப்பு நின்று விட்டதே.

  ReplyDelete
 7. ’’ எங்கெங்கு காணினும் சக்தியடா “ – சக்தி தரிசனம் பக்தியில்தான் என்று தெளிய வைக்கும் கட்டுரை. நன்றி!

  ReplyDelete
 8. என் அன்னையை தரிசிக்க வைத்த தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 9. படஙகளும் பதிவும் நல்லா இருக்கு நன்றி

  ReplyDelete
 10. ஆடி மாத சிறப்பு பதிவு....
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. அனைத்தும் அருமை. முதலாவது படத்தில் ஏதோ கோளாறு, தெரியவில்லையே.

  ReplyDelete
 12. நீண்ட நாட்களாக தொழில்னுட்ப பிரச்சையின் காரணமாக தொடர்பில் இல்லை. ஆனால் தங்களின் அனைத்துப் பதிவினையையும் "மெயிலில்' கண்டேன். திரு..கோபலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளபடி பதிவினை திறம்பட தருவதில் தங்களுக்கு இணை இல்லை.

  ReplyDelete
 13. வெளியே தரிசித்த சக்தியை நமக்குள் காண்பதே பிறந்த்தின் பயன்//

  உண்மை! நம்முள் காண்போம் சக்தியை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அனைத்தும் அருமை அக்கா அம்மன் படங்கள் எல்லாம் ஆடி மாதத்தை காட்டுகிறது..... நல்ல பகிர்வு அக்கா ...

  ReplyDelete
 15. எங்கெங்கு காணினும் சக்தியாய் நிரைந்த படங்களும் பகிர்வும் அபாரம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete