Tuesday, July 3, 2012

சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கம்
"பொன்னூஞ்சலில் பூரித்து,பூஷனங்கள் தரித்து! 

ஈசனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து 

கண்ணூஞ்சல் ஆடுகின்றாள் காஞ்சனமாலை

மயிலாள் பொன்னூஞ்சல் ஆடுகின்றாள்...


பூலோக கைலாச,புண்ணியமா ம மதுரா,
ஆகாச சுந்தரேசா,சதானந்தமே கண்மலராய்!


இந்திரயங்கள் பூஜிக்க, சங்கரியும் பூரித்து

மங்களத்தாம்பூலம் ஆற்றினாள் - தேவி


என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி சொக்கருடன் அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கும் கோலம் கோலாகலமாய் கண்நிறைக்கும் ..

தேவ தேவோத்தமா 

தேவதா சர்வ தோமா 
ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகாச் சரிகா! 
பார்வதிப் பிரிய நாயகாச்சரிகா 
பாண்டியமண்டாலிதிபாச் சரிகா 
சோமாநாத பாண்டிய மஹாராஜா பராக்!பராக்!
என்று கட்டியம் கூறி மதுரை அரசாளும் தம்பதியர்


தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம்,வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம் 

ஆகிய 16 வகை தீபஆராதனைகள் களிப்புடன் ஏற்று உளமகிழ்ந்து பொன்னூஞ்சலில் அமர்ந்து அருள்பொழிகிறாள் சொக்கருக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத்தங்கமான அன்னை மீனாட்சி..


ஒரே நாளில் தானே இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தியாக அருள்பாலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய திருவிழாக்களில் ஆனி உற்சவ விழாவும் ஒன்று.  


ஆனி உத்திர திருமஞ்சன நிகழ்ச்சிபோது பஞ்ச சபை கால்மாறி ஆடிய நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


ஆனி முப்பழ பூஜையன்று இரவு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் காட்சியளிப்பார்கள்.ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅம்மா ஊஞ்சல் ஆடுகவே
ஆதிபராசக்தி ஆடுகவே அன்பரின் இதயத்தில் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு ஆசையெனும் மலர் மெத்தையிட்டு
ஆடிட உன்னையே அழைத்து நின்றோம் அம்மையே ஊஞ்சல் ஆடுகவே காசிபெருநகர்க்கதிபதியே காஞ்சியிலே வளர் தவநிதியே
காஞ்சனமாலை திருமகளே காசினி சிறக்கவே ஆடுகவே 


நல்லதும் தீயதும் நீ ஆனாய் இல்லதும் உள்ளதும் நீ ஆனாய்
நாதமும் கீதமும் நீ ஆனாய் நானிலம் போற்றிட ஆடுகவே


18 comments:

 1. ”சொக்கருக்கு
  வாழ்க்கைப்பட்ட
  சொக்கத்தங்கம்”

  சொக்கவைக்கும் தலைப்....பூ! ;)

  ReplyDelete
 2. முதல் படத்தில் பவழம் + ஸ்படிகம் + தங்க குண்டுகளுடன் ஆன மாலை + முரட்டு புஷ்ப மாலைகளுடன் அம்பாள் அழகோ அழகு.

  ReplyDelete
 3. பொன்னூஞ்சலில் பூரித்து
  பூஷணங்கள் தரித்து
  ஈசனாரிடத்தில்
  ஆசைகள் ரொம்ப வைத்து
  கண்ணூஞ்சல் ஆடுகின்றாள் காஞ்சனமாலை
  மயிலாள் பொன்னுஞ்சல் ஆடுகின்றாள்......

  என்ற அழ்கிய பாடலுடன் ஆரம்பமே ஜோர் ஜோர்.

  ReplyDelete
 4. கடைசி இரண்டு படங்களில் கோபுரத்தின் பிரும்மாண்டம் கவரேஜ் அற்புதம்.

  ReplyDelete
 5. இன்றைய அனைத்துப் படங்களுமே நல்ல பளீச்சோ பளீச் என்றாலும், கீழிருந்து 10 ஆவது படத்தில் குளத்தில் மின்னிடும் பொற்றாமரை மிக அழகு.

  அதற்கு மேல் உள்ள 11 ஆவது படத்தில் முழுத்தாமரைகளை மாலையாகக் கட்டியுள்ளதும், அதை அழகாகக் படம் பிடித்துக்காட்டியுள்ளதும் மிகவும் பாராட்ட வேண்டியதாக உள்ளது.

  ReplyDelete
 6. மேலிருந்து மூன்றாவது படத்தில் உள்ள அந்த குட்டி அம்மனுக்கு குட்டியூண்டு பாவாடைகள் இரண்டு விசிறி மடிப்பாகக் கட்டியுள்ளது, அற்புதமாக, தாமரை மலர்களை இதழ் விரித்துக்காட்டியுள்ளது போல மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது.

  ReplyDelete
 7. சிதம்பரம் நடராஜருக்கு ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் திருவிழாக்கள் முடிக்கும் முன்பே மதுரை வந்து விட்ட மர்மம் என்னவோ?

  வீட்டில் மதுரை ஆட்சியா, சிதம்பரமா? என் விளையாட்டாகக் கேட்பார்கள்.

  ஏனோ நேற்று எட்டாம் நாள் வரை தொடர்ச்சியாகச் சிதம்பரத்திலேயே நீடித்து நின்று வந்த நீங்கள், இன்று சிதம்பத்திலிருந்து திடீரென புறப்பட்டு மதுரைக்கு வந்ததால், அந்த விளையாட்டான கேள்வி ஞாபகம் ஏனோ எனக்கு வந்தது.

  மதுரை ஆட்சி தான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகாமும் இல்லை. அதையே நான் மிகவும் விரும்பக் கூடியவனும் கூட.

  வாழ்க!

  ReplyDelete
 8. ஒவ்வொரு பதிவிலும் சிறப்பான படங்களுடன் தேடித்தேடி விவரங்களும் விளக்கங்களும் கொடுப்பது ரொம்ப நல்லா இருக்கு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி

  ReplyDelete
 9. நல்லதும், தீயதும் நீ ஆனாய் இல்லதும் உள்ளதும் நீஆனாய், நாதமூம் கீதமும் நீஆனாய் நானிலம் போற்றிட ஆடுகவே!//

  ஊஞ்சல் உற்சவம் கண்டு மகிழ்ந்தோம்.

  அன்னையின் படங்கள் அற்புதம்.

  ReplyDelete
 10. அழகிய படங்கள்! அற்புத விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. அழகிய படங்கள்.அன்னை மீனாட்சி ஊஞ்சல் பற்றிய மனம் நிறைவு தரும் பகிர்வு

  ReplyDelete
 12. Wonderful Oonjal paattu.
  In the conventional folk mettu
  You may also listen it
  here.

  subbu rathinam
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 13. சொக்க வைக்குது படங்களும் பகிர்வும்.. அதுவும் முதல் படத்தை விட்டுக் கண்ணை எடுக்க முடியலை :-)

  ReplyDelete
 14. அன்னையின் படங்களும் விளக்கங்களும் அருமை....

  ReplyDelete
 15. சொக்கனுக்கு வாழ்க்கைப்பட்ட சொக்கத் தங்கத்தைக் கண்டு சொக்கிப் போனேன்! மிக்க நன்றி.

  ReplyDelete
 16. அழகிய வண்ண படங்களுடன் அம்மனை தரிசித்தேன் ..... பகிர்வுக்கு நன்றி அக்கா...

  ReplyDelete
 17. சொக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete