Monday, July 23, 2012

சுபிக்ஷம் வர்ஷிக்கும் அன்னை சாகம்பரி தேவி..

யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் சக்தி ரூபமாக உள்ளனளோ அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியை வணங்குகிறோம்.

ஒரு சமயம் துர்கமன் என்னும் அரக்கன் வேதங்களை அபகரித்துச் சென்றான். இதனால் மழைக்கு ஏதுவான வேள்விகள் மற்றும் யாகங்கள் நடைபெறவில்லை.

மழை பொழிவதே நின்று போனதால் பயிரினங்கள் செழிக்கவில்லை. 

தேவர்கள, முனிவர்கள் ரிஷிகள் அனைவரும் இமயமலையடிவாரத்தில் ஒன்று கூடி  உருக்கமான பிராத்தனைக்கு செவி சாய்த்து அம்பாள் ஆயிரம் ஆயிரம் கண்களுடன், கைகளில் பச்சைப் பயிர்  மற்றும் கறிகாய்களுடன் அவதரித்தாள்.

மக்களின் கஷ்டங்களுக்குக் காரணமான அரக்கன் துர்கமனை வதம் செய்து உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் கலங்கி, துன்புற்று தாரை தாரையாக விட்ட கண்ணீரே மழையாகியது. 

ஒன்பதே நாட்களில் உலகமெங்கும் உள்ள ஆறு, ஏரி, குளங்களெல்லாம் நிரம்பியது. மழை பொழிந்து தண்ணீர் பஞ்சம் நீங்கியதால், பயிர்கள் செழித்தோங்கி உலக மக்களின் பசி, பட்டினி, பஞ்சத்தைப் போக்கியது.  

பயிர்களுக்கு ஆதாரமான மழையும், மழைக்கு ஆதாரமான பச்சைப் பயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து,  உலகம் சுபிக்ஷமானது.

முனிவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து அம்பாள் ஆயிரம் கண்களுடன் தோன்றியதால், அவளுக்கு “சதாக்ஷி” என்ற பெயருண்டு. 

கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால், அம்பாள் “சாகம்பரி” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள். 

சாகம் என்ரால் பச்சை கறிகாய் என்று பெயர். அன்றிலிருந்து சாகம்பரி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். 
துர்கமன் என்ற அசுரனை அழித்ததால் அம்பாளுக்கு துர்கை என்ற பெயரும் உண்டு.
உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய அம்பாளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனியும் பஞ்சம் வரக்கூடாதென்று வேண்டிக் கொண்டும், சாகம்பரி தேவியிடம் நேர்மையாக மனமுருகி வேண்டிக் கொண்டு பிராத்தனை செய்தால், வேண்டிய அனைத்தையும் அம்பாள் கொடுத்தருள்வாள் என்பது ஐதீகம்.

துயர சூழலில், அரிச்சந்திரன் தம்பதியர், தங்கள் இஷ்ட தெய்வமான சாகம்பரி அம்பாளை தியானம் செய்ய சாகம்பரி தேவியின் கருணையினால்  பொழிந்த அம்பாளின் அமிர்த மழையில் நனைந்த அரிச்சந்திரனின் மகன் உயிரோடு பிழைத்தெழுந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. 
விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றி அரிச்சந்திரனது மன உறுதியைப் பாராட்டி நாட்டைத் திரும்பக் கொடுத்துவிட்டு மறைந்தனர்.
இத்தனை துயரங்களிலிருந்து மகிழ்ச்சி மலரச்செய்த 
அன்னை சாகம்பரியின் கருணை அளவிடற்கரியது !
Maa Shakambari Devi Temple at Sambhar (Rajasthan)

சக்தி வாய்ந்த சாகம்பரி அம்பாளை மனமுருக வேண்டி, 
ஸ்ரீசாகம்பரீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் சொல்வதால்,  
உண்ண உடையும், பருகத் தண்ணீரும், உடுக்க உடையும், 
இருக்க இடமும் குறைவின்றி கிடைக்கும் என்பதும்,   
வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் ஐதீகம். 

Goddess Durga decorated as Shakambari.

23 comments:

 1. சுபிக்ஷம் வர்ஷிக்கும் சாகம்பரியா!! ;)

  தலைப்பைப் பார்த்தாலே மிக நல்ல பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 2. நேற்றைய பதிவு வளையல் அலங்காரம் குறித்தது. இன்றைய பதிவு காய்கறி அலங்காரம். தகவல்கள் புதிது. படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

  ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
  http://www.YahooAds.in/publisher_join.php

  ReplyDelete
 4. முழுக்க முழுக்க காய் கரிகளால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் படங்கள் கண்களுக்கு விருந்து! பதிவிலுள்ள தகவல்கள் செவிக்கு விருந்து!

  ReplyDelete
 5. காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் படங்கள் மிகவும் அருமை...
  துர்கமன் என்கிற அசுரனை அழித்ததால், துர்கை என்னும் பெயர்க் காரணத்தையும் அறிந்தேன். நன்றி..
  என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  ReplyDelete
 6. சாகம்பரி, துர்கை பெயர் காரணங்கள் தெரிந்து கொண்டோம். நன்ரி

  ReplyDelete
 7. காய்கறிகளால் அலங்காரம் அருமை...

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. அழகான காய்கறி அலங்கார அம்மன் படங்களுடன் சாகம்பரி அம்பாள் தரிசனம் அருமை! நன்றி!

  ReplyDelete
 9. //யாதேவி ஸர்வ பூதேஷு
  சக்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
  நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

  எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் சக்தி ரூபமாக உள்ளனளோ அந்த அகிலாண்ட
  கோடி பிரம்மாண்ட நாயகியை வணங்குகிறோம்.//

  மிகவும் அழகான ஸ்லோகமும் அதற்கான விளக்கமும் கொடுத்து ஆரம்பித்துள்ள இந்தப்பதிவும்
  மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது.

  ReplyDelete
 10. //சாகம் என்றால் பச்சை காய்கறி என்று அர்த்தம். கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால், அம்பாள் “சாகம்பரி” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.//

  காய்கறிகளைப்போன்ற ருசிமிக்கத் தகவலாகக் கொடுத்துள்ளீர்கள்.
  சந்தோஷமாக உள்ளது. ;)

  ReplyDelete
 11. ஹரிச்சந்திரன் தம்பதியினரின் துயரங்களிலிருந்து மகிழ்ச்சி மலரச்செய்த அன்னை சாகம்பரியின் கருணை அளவிடற்கரியது !

  துயரங்களைக் கொடுப்பதும் அன்னையே!

  துயரங்களைக் களைவதும் அன்னையே!!

  அளவிடற்கரிய அன்னையின் கருணை
  மழையில் அவ்வப்போது நனைந்து மகிழ்கிறோம்.

  ReplyDelete
 12. ஏராளமான காய்கறிகளையும், கனி வகைகளையும் உடம்பெல்லாம் அணிந்த நிலையில் பல்வேறு அம்மன்களை வெகு அழகாகக் காட்டியுள்ள அனைத்துப் படங்களுமே மிகச்சிறப்பாக உள்ளன.

  தங்கள் படங்களின் அழகினைப்பற்றிச் சொல்லவா வேண்டும்! ;)))))

  எங்கு தான் பிடித்து எப்படித்தான் தருகிறீர்களோ!

  காய்கனிகளைக் காண கண்களுக்குக் குளிர்ச்சியோ குளிர்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
 13. ராஜஸ்தான் சாம்பூர் சாஹம்பரி அம்பா தேவி,

  சாஹம்பரியாக மாறிய துர்க்கை அம்மன்,

  பாளயம்கோட்டை உச்சினி மாரியம்மன்

  ஜெனீவா அம்மன்

  நியூஜெர்ஸி சிவன்

  என எங்கள் எல்லோரையும் இன்று எங்கெங்கோ கூட்டிச்சென்று பல்வேறு காய்கறிகள் கனிகளுடன் மிகப்பெரிய விருந்து படைத்து விட்டீர்கள். ;)))))

  கண்களுக்கான அருமை விருந்தை
  கருத்துக்க்ளுக்கான பெருமை மருந்தாகக் கொடுத்து அருளி அசத்தியுள்ளதற்கு நன்றிகள்.

  தொடரட்டும் தங்களின் இதுபோன்ற ஆன்மீகப்பணிகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு நன்றி. அம்மன் அலங்கார அம்மன் அருமையான மற்றும் அழகான படங்கள்

  ReplyDelete
 15. சாகம்பரி அன்னை பற்றி அறிந்து தெளிவுற்றேன்.
  ராஜஸ்தான் மக்கள் சரியான தேவதைதான் தேர்ந்து எடுத்து வழிபடுகின்றனர் போலும் !
  உலக மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறைவிடம்
  மற்றும் கருணை மழை பொழிந்து பஞ்சம் தீர்க்கும் அன்னை இருக்கையிலே
  நமக்கெல்லாம் ஏது கவலை ?
  அருமை. அற்புதம்.
  மனம் குளிர வைத்த பதிவு.
  நன்றி !

  ReplyDelete
 16. சாகம்பரி என்கிற அம்பாளுக்கான
  பெயருக்கான காரணம் தங்க்களால்தான்
  இன்று அறிந்து கொண்டேன்
  படங்களுடன் பதிவுமிக மிக அருமை
  தொடர வாழ்துக்கள்

  ReplyDelete
 17. சாகம்பரி அம்மன் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. காய்கறி வைத்து அலங்காரம் ஆஹா அற்புதம்.

  ReplyDelete
 18. சாகம்பரி அன்னை ஆறு ,ஏரி, குளங்களெல்லாம் நிரம்பி வழிய செய்து பயிர்கள் செழித்தோங்கி உலக மக்கள் நலமாக வாழ அருள் புரிய வேண்டிக் கொண்டேன்.

  காய்கறி அலங்கரம் எல்லாம் தெய்வீகம்.
  நன்றி.

  ReplyDelete
 19. அனைத்து படங்களும் அருமை அக்கா... மிகவும் நல்ல தகவலுடன் கூடிய பதிவு .... வாழ்த்துக்கள் அக்கா.....

  ReplyDelete
 20. Aha!!!!!!!!!
  What a pretty pictures of Sakambari Ambal......
  Harichandran"s sons story is new to me. Thanks Rajeswari.
  I enjoyed the post.
  viji

  ReplyDelete
 21. உணவு அளிக்கும் சாகம்பரி அன்னையின் திவ்விய காட்சிகள் எம்மைக் கவர்ந்து கொள்கின்றன.

  அன்னபூரணி அவளின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 22. சுபிக்ஷம் வர்ஷிக்கும் சந்தோஷப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete