Tuesday, April 30, 2013

சர்வமங்கள காமாட்சி தேவி
திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே ----
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே

உலகாளும் சிவபெருமானின்  தாண்டவத்தை தரிசித்த அன்னை உமையவள் படைப்புகளிலே மேலான இடம் எது? மேலான உயிரினம் எது?’’ என்று  அனைத்தும் அறிந்தவளாக இருந்தும்  உள்நோக்குடன் கேட்டாள்..
திருநல்லூர் கோயில்
அனைத்தும்  அறிந்த ஈசன். அங்கிருந்த அனைவருக்கும் விளங்கும்படி, ‘‘நான் படைத்த பலகோடி அண்டங்களில் பூலோகமே சிறந்தது. அதிலும் பாரதமும் சைவம்  தழைத்திருக்கும் தென்னாடுமே சிறந்தவை. ஏனெனில்  அப்பகுதியில்தான் அர்ச்சாவதாரமாக பல்வேறு தலங்களில் அருளாட்சி புரிகிறோம். உயிரி னங்களில் மனிதகுலமே பெரும் பாக்கியம் பெற்றது. என்னை நினைக்க நெஞ்சமும் வாழ்த்த வாயும் தாழ்த்தி வணங்க சிரத்தையும் தந்துள்ளேன்.

தங்களது கண்களால் என்னை தரிசிக்கவும் கரங்களால் ஆலய உழவாரப்பணி செய்யவும் நாவினால் நமசிவாய எனும் ஐந்தெழுத்தையும் ஓதி என்னை  வணங்கும் அடியார்க்கு பிறவித் தளையை விடுவிப்பேன்’’ என திருவாய் மலர்ந்தருளினார்.

  அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த அங்கிருந்த நந்தியம்பெருமான் மாணிக்கவாசகராக பூமியில்  அவதாரம் செய்தார்.

அப்போது ஈசன் அருளிய உபதேசங்களை தன் திருவாசகத் தேனில் எடுத்துரைத்தார்.

 பார்வதிதேவி ஈசனிடம், ‘‘எவ்வளவோ மலர்கள் பூமியில் இருக்க, தாங்கள் ஏன் வில்வத்தில் பிரியம் கொண்டுள்ளீர்கள்?’’ எனக் கேட்டாள்.

‘தேவி, என் பக்தர்கள் விலையுயர்ந்த மலர்களைத் தேடி அலையக்கூடாது என்பதால்தான் நான் வில்வத்தோடு, எளிதில் கிடைக்கும் எருக்கு, கொன்றையைக் கூட விரும்பி ஏற்கிறேன்’’ என்றார்.

ஈசனின் திருநடனத்தை மலர்கள் சூழ்ந்த வனத்தில் மீண்டும் தரிசனம் செய்யும்  தேவியின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் ஈசன். தென்னாட்டில் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் கதம்ப வனமும் கொன்றை  மரங்களும் நிறைந்த இடத்தில் கதம்பவனேஸ்வரர், கொன்றைவனநாதர் எனும் திருப்பெயர்களில் கோயில் கொண்டு தன் திருநடனத்தை பார்வதிதேவிக்கு ஆடிக்காட்டினார் ஈசன்.

ஈசனின் நடனத்தை தன் கண்களால் தரிசித்து மகிழ்ந்த தேவி, காமாட்சி எனும் பெயரோடு அங்கு நிலைகொண்டாள்.

 ஈசனும் தேவியும் நிலை கொண்ட இடம் திருநல்லூர்.

தற்போது அந்த ஈசன் கருப்பனீஸ்வரர் என வணங்கப்படுகிறார். கதம்பவனேஸ்வரரே  மருவி கருப்பனீஸ்வரர் ஆனார்.

இங்கு சனி பகவான் ஈசனை வழிபட்டதால் கருப்பனான சனி வழிபட்டவர் என பொருள்படும்படி கருப்பனீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆயுட்காரகனான சனிபகவான் வழிபட்ட தலமாதலால் இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகவும்  பக்தர்களால் போற்றப்படுகிறது.

வேறு எங்கும் எளிதில் காண முடியாத தோற்றத்தில் இத்தலத்தில் சனீஸ்வரனின் நேர் பார்வையில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார்.

 அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது. ,
 [Thirunavukkarasar-768279.JPEG]
இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்றாலும் தீபாவளியன்று மகாலட்சுமிக்கும், சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த பூஜையில் கலந்து கொண்டால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி போன்ற சனி தோஷங்கள் நீங்குவதுடன், கல்விச்செல்வம், பொருட்செல்வம் போன்ற செல்வங்கள் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நல்லூர் அஷ்டபுஜமாகாளி  கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது.

பொதுவான கோப முகத்தினளாக இல்லாமல், மாகாளி புன்னகை  பூக்கும், மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள்.


மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள்.

அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார் கள்.

தீபாவளி அன்று  மகாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சமயத்தில் காளி அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் குழந்தை இல்லாத தம்பதிகள், அம்மனை மனம் உருக வேண்டிக் கொண்டு படியில் நெய் இட்டு மெழுக வேண்டும். 
அவ்வாறு செய்தால் எளிதில் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக  நம்பிக்கை ..!

பிரதோஷ வழிபாட்டின்போது எட்டு திக்குகளிலும் ஈசன் எழுந்தருளி
விசேஷ வழிபாடு நடக்கிறது.

 ஆலய கும்பாபிஷேகத்தின் போது ஐந்து கோடி நமசிவாய மந்திரம் எழுதப்பட்டு மூலவரின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பங்குனி  உத்திர தினத்தன்று சர்வமங்கள காமாட்சி தேவிக்கும் கருப்பனீஸ்வரருக்கும் திருக்கல்யாண மகோற்சவம் விமரிசையாக  நடைபெறும் ..

 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூருக்கு கிழக்கில் 12 கி.மீ தொலைவிலும் குன்றத்தூருக்கு தென்மேற்கில் 10 கி.மீ தொலைவிலும், திருநல்லூர்  தலம்  அமைந்துள்ளது.


Monday, April 29, 2013

இறை அருள் ..சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! 

நம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும் 
அவனை அவன் துணையின்றி அறிய முடியாது. 

சூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்து 
கொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன் 
அருளினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
அவனருளாலே அவன் தாள் வணங்கி =சிவபுராணம்

இறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவது
சித்து.! இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.

இந்த உடம்புள்ளே தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடம்புனுள்ளே வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்”

” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ” - திருமூலர்

சித்தர்கள் இறவாவரம் பெற்றவர்கள். சித்தர் சுவாசமுறை இறை நிலைக்கு ஒப்பாகும். சித்தர்களின் சமாதிகளுக்கு சென்று அவர்களை வணங்கி ஏராளமான நன்மைகள் பெற்றவர்களும் உண்டு. 

18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான 
சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஓம் நமசிவய‌,யநமசிவ‌சிவயநம‌வயநமசி ,சிவயசிவ‌ ஓம்
good place for meditation. 

மணரை உலகுக்கு அடையாளம் காட்டி, அவரை ஸ்ரீரமண மகரிஷியாக்கிய பெருமை மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளையே சேரும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி ,  ஆசிரமம் உள்ளது.

சென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மாடம்பாக்கம் சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அகோராஸ்தர ஹோமம் (மரணத்தை ஜெயிக்கக்கூடிய வேத மந்திரத்தால் சிவபெருமானைக் குறித்து செய்யப்படும் புனித வேள்வி), அஷ்ட பைரவர் ஹோமம், சுவாசினி பூஜை, செüபாக்ய லட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன..

                                         

Sri-Agasthiar-Ananthasayanam  Sri-Vallabhasiddhar-Madurai       Sri-Vallabhasiddhar-Madurai

Sri-Bhogar-Pazhani                     Sri-Idaikkaadar-Tiruvannamalai      Sri-Gorakkar-Tirukkonamalai

Sri-Gnaneswarar-Gujarath          Sri-Kaalaangi-Kancheepuram         Sri-Kamalamuni-Tiruvaaroor

Sri-Karuvooraar-Karuvoor-Thanjai   Sri-Konganar-Thiruppathi                Sri-Kuthambhaisiddhar-Mayavaram

                                                                                                                
Sri-Pulipaani-Pazhani               SrPulasthiar-Aavudaiyaar-Koil         Sri-PaambaattSiddhar-Tirugnaanam-Dwarakai

Sri-Macchamuni-Tirupparangunram
                                                     Sri-Thirumoolar-Tiruvaaduthurai  Sri-Tirumazhisai-Sivavakkiyar-Kumbakonam

Sri-Ramadevar-Azhagarmalai   Sri-Sirkaazhi-Sattainaathar-Tiruvarangam  Sri-Theraiar-Pothigamalai

SRI KAGA BUJANDAR SIDDHAR          Sri-Punnaakkeesar-Sangannacherry
S
ஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீடம் 

Sunday, April 28, 2013

பாட்டுப் பாடும் மயில் கழுத்துக்குருவி
பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை.
பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை'  
அவற்றுக்கான உணவு விளைநிலங்களிலேயே 
கிடைத்துவிடச்செய்பவன் இறைவன்

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு, பிறகு பொரித்த குஞ்சுகளும் அந்த ஏமாந்த பறவை மூலமாகவே பராமரிக்கப்படும் முறைக்கு
 "Brood Parasitism" என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏமாற்றங்களை தவிர்க்க ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 
Fairy-wren என்னும் ஒரு வகை மயில் கழுத்து குருவி - Fairy-wren- தன் குஞ்சுகளுக்கு அவை முட்டையின் உள்ளே இருக்கும் போதே ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து விடுகிறது. 

எத்தனை சினிமாவில் "குடும்பப் பாட்டை" பாடி க்தாசிரியர் உடன்பிறப்புக்கள் ஒன்றாக சேர்ந்து  எங்கவீட்டுப்பிளையாகி   நாளை நமதே என்று பாடி வில்லனை விரட்டி அடிப்பதை! 

ஒரு வேளை அந்த Fairy-wren குருவிகள் நம்மூர் சினிமாவைப் பார்த்துத்தான் இந்த ஐடியாவை கற்றுக்கொண்டு செயல்படுத்துகிறதோ என்னவோ ..

அவர்களுக்கு என்ன பாஸ்போட்டா , விசாவா , விமானப்பயணமா !!

எங்கெல்லாம் நம்ம திரைப்படங்கள்  திரைய்டப்படுகின்றனவோ ,, வீடுகளில் ஹோம் தியேட்டர்களில் ஓடும் படங்களை தங்கள் கூடுகளிலிருந்தே ஹாயாயாகப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு பாட்டுச்சொல்லிக்கொடுத்து தம் வம்சத்தை கண்டுபிடிக்கும் டெக்னாலஜியை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட்னவோ என்னவோ ..!

முட்டையிட்டதும் ஒரு ராகத்தை பாட ஆரம்பிக்கைன்றன ...

அதே மெட்டை மீண்டும் மீண்டும் கூவி குஞ்சுகளுக்கு 
மனப்பாடம் ஆகச் செய்கிறது. 
பிறகு தாய்க் குருவி கூட்டை நெருங்கு முன்னரே அதை 
கூவிக் கொண்டே இருக்கும். 
குஞ்சுகள் பதிலுக்கு அதே மெட்டை இசைத்தால்தான் 
கூட்டுக்குள் வந்து இரை கொடுக்கும்.

நாமெல்லாம் பாஸ்வேர்டு கொடுத்து கணிணிக்குள் நுழைந்து பதிவெழுதுவதையும் மோப்பம் பிடித்து பயன்படுத்தும் நுண்ணறிவுகொண்டவையாக பரிணமிப்பது எத்தனை வியப்பு ..!

ஆனால் அந்த பாஸ்வோர்ட் பாடலை குயிலின் குஞ்சும் முட்டையின் உள்ளிருந்து செவி மடுக்குமே? 
அங்குதான் இருக்கிறது சிக்கல் (குயில் குஞ்சுக்கு). 
குயில் குஞ்சு தன் உடனுறை குருவிக் குஞ்சுகளைவிட சீக்கிரமே முட்டையிலிருந்து பொரித்து வெளி வந்து விடுவதால் அந்த மெட்டை உள்வாங்கி மனப்பாடம் செய்ய அதற்கு நேரம் போதாமல் போய் விடுவதுதான் குயிலின் போதா காலமோ ..!

 அந்த சங்கேதக் குறியீட்டு கூவல் தெரியாமல், அது தன் இயல்புப்படி கத்தத் தொடங்குவதால் சுலபமாக அடையாளம் காணப்பட்டு  புறக்கணிக்கப்படுகிறது ...

தேர்வுக்காலங்களில் யோசித்து பதிலெழுத நேரம் கிடைக்காமல் தேர்ச்சியுறாமல் கலங்கும் மாணவர்கள் போல் சரியாகப் பாட்டு
வராமல் கூட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகின்றன ..! 

அடுத்தவர் உழைப்ப்பில் எத்தனைநாட்கள்தான் வாழமுடியும்..!

இனி குயில்களும் தாங்களே பொறுப்பாக அடைக்காகுமா...!!!
whatsinsideofme:

cats….