Wednesday, April 17, 2013

ஆற்றல் சிறக்கும் கிஷ்கிந்தாகாண்டம்நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் 
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய  வகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறுவார்க்கே
விதிவசத்தால் இராமனது வனவாசத்தின்போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேட வானரப்படை உருவானதும் ஸ்ரீஆஞ்சனேயர் என்கிற மகிமையை பொருந்திய வானரரின் நட்பும் இராமனுக்கு அமைந்த சம்பவத்தை சொல்கிற பகுதி கிஷ்கிந்தாகாண்டம் ..
இராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்க  இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் சுக்கிரீவனின் நட்பு  தன் பக்தரான அனுமன் நட்பும்  கிடைத்தது.  
சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன், கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றார். அங்கே அசோகவனத்தில் சிறையிலிருந்த சீதையைக் கண்டார்.
 “அம்மா…நான் இராமபக்தன். பெயர் ஆஞ்சனேயன்.” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சீதைக்கு ஆறுதல் சொன்னார். தைரியம் தந்தார். 
இராமதூதனான ஆஞ்சனேயனை சிறைப்பிடித்த இராவணனுக்கு தகுந்த பாடம் புகட்டி, இராமனிடம் பத்திரமாக திரும்பினார் ஆஞ்சனேயர்.
இராமனிடம். சீதையை பார்த்தேன் என்றால், முதலில் “சீதை” என்ற பெயர் கேட்டவுடன் சீதைக்கு ஏதேனும் விபரீதமோ என்று இராமர் நினைத்துவிடுவாரோ என்றஞ்சி, “கண்டேன சீதையை” என்று மகிழ்ச்சியுடன் கூறி, “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தை பெற்றார் ஸ்ரீஆஞ்சனேயர்.
சீதை இருக்கும் இடத்தை அனுமன் மூலமாக அறிந்துக் கொண்ட இராமர், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்கு சென்றார்.

இராவணனின் தம்பியான விபீடணனும் இராமருக்கு உதவி செய்ய முன்வந்தார். 
கடும் யுத்தத்திற்கு பிறகு இராமன் சீதையை மீட்டார்.
சீதையின் சிறப்பை நிருபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து
வெளி வர வேண்டியதாயிற்று.  
இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு திரும்பினர். 
இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
ஒருநாள் இராவணனின் பிடியில் இருந்த  சீதையை பற்றி 
தவறாக பேசினான் ஒருவன். 

விதியின் விளையாட்டால் மீண்டும் சீதையைக் 
காட்டுக்கு அனுப்பினார் இராமர். 

அப்போது சீதை கர்ப்பமாக  இருந்தாள். காட்டில் 
சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்த
சீதைக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். 
அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.
அயோத்தியில் இராமன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். 

அசுவமேத யாகம் செய்ய வேண்டுமானால்  அந்த மன்னன்,  ஒரு குதிரையைப் அண்டை நாடுகளுக்கு அனுப்புவான்.

அந்த மன்னனுடன் போரிட விரும்பாத அண்டைநாட்டு அரசர்கள் அந்த குதிரையை தமது நாட்டில் உலவ விடுவர்.

அப்படி இல்லாமல் அவ்வூர் அரசன் அந்த குதிரை பிடித்து கட்டிவிட்டால், அந்த நாட்டின் மேல் புரிந்து போர் புரிந்து அந்த நாட்டை வென்ற பிறகுதான் அசுவமேத யாகம் செய்ய வேண்டும்.
அசுவமேத யாகம் செய்ய விரும்பிய இராமர் அனுப்பிய  குதிரையை இராமரின் பிள்ளைகளான லவனும், குசனும் ..
பிடித்துக்கட்டியவர்கள் தன்னுடைய பிள்ளைகளே என்று அறியாமல் .....
இராமர் அனுப்பிய போர்படை தோல்வியடைந்ததை அறிந்த இராமர்,  நேரடியாக வந்து லவன்-குசனுடன் போரிட்டார். 
 போர் முடிவதாக இல்லை. 

பிறகு “யார் அவர்கள்.” என்று விசாரித்து, லவனும் குசனும் தம் 
பிள்ளைகளே என்பதை அறிந்து சீதையையும் கண்டார். 

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று 
மகிழ்ச்சியாக வாழ்ந்தார் ஸ்ரீ இராமர்.
வாரந்தோறும் சனிக்கிழமையில் இந்த கிஷ்கிந்தாகாண்டத்தை படித்தால்,  ஆஞ்சனேயரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். 

சனிஸ்வர பகவானின் தொல்லையில்  இருந்து விடுபடலாம். 
பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். 
விரோதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்.

நம் விரோதிகளுக்கு துணையாக இருப்பவர்கள், விபீடணனை போல் நமக்கு உதவியாக வருவார்கள். 
எதிலும் வெற்றி ஏற்படும். 

குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடு மறையும்.  
நண்பர்களின் உதவி கிடைக்கும். மகிழ்ச்சி ஏற்படும். 
இத்தகைய மகிமை கொண்டது கிஷ்கிந்தாகாண்டம்.
விரோதிகளால் பிரச்சினை இருந்தால் கிஷ்கிந்தாகாண்டம் 
படித்து வந்தால் அதனை தொடர்ந்து படித்து வந்தால்
வல்லவனுக்கு வல்லவனாக மாறும் சக்தி கொண்டவராக திகழும்
ஆற்றலை தருகிற சக்தி கிஷ்கிந்தாகாண்டத்துக்கு உண்டு23 comments:

 1. VERY VERY GOOD MORNING !

  மிகவும் அழகான பதிவாக இருக்கும் போலத்தெரிகிறது.

  பொறுமையாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.

  [பொக்கிஷம்-9 க்கு இதுவரை 8 தாமரைகள் மட்டுமே கிடைத்துள்ளது. ;))))))))) நன்றியோ நன்றிகள்.] vgk

  ReplyDelete
 2. ”ஆற்றல் சிறக்கும் கிஷ்கிந்தாகாண்டம்”

  என்ற தங்களின் தலைப்பே எங்களுக்கு ஆற்றலும் ஆறுதலும் அளிப்பதாக உள்ளது.

  இதில் தங்களின் பேராற்றலையும் அறிய முடிகிறது.

  கிஷ்கிந்தாகாண்டக்கதையை டக்டக்கென்று சுருக்கமாகக் கொடுத்து, இராமயணத்தையும் ஓரளவு விலாவரியாகக்கூறி, ராமர் + ஸீதைக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததையும் வெகு அழகாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். ;)))))

  >>>>>>>

  ReplyDelete
 3. முதல் படத்தில் ஸ்ரீ கோதண்டராமர் + ஸீதை + லக்ஷ்மணஸ்வாமி + ஹனுமன் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

  மூன்றாவது படத்தில் இருகரம் சேர்த்து உள்ளங்கையைப் பார்த்தால் அதில் ஸ்ரீராமர் தெரிகிறார். இருகரம் சேர்ந்துள்ளது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்குமோ?

  மிக நல்ல படத்தேர்வு. தங்களுக்கு இதெல்லாம் சொல்லவா வேண்டும். எக்ஸ்பர்ட் ஆச்சே! ;)

  >>>>>>

  ReplyDelete
 4. //விதிவசத்தால் இராமனது வனவாசத்தின்போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேட வானரப்படை உருவானதும் ஸ்ரீஆஞ்சனேயர் என்கிற மகிமையை பொருந்திய வானரரின் நட்பும் இராமனுக்கு அமைந்த சம்பவத்தை சொல்கிற பகுதி கிஷ்கிந்தாகாண்டம் ..//

  மிக அருமையான விளக்கம்.

  //இராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்க இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் சுக்கிரீவனின் நட்பும் தன் பக்தரான அனுமன் நட்பும் கிடைத்தது. //

  விதிவசத்தால், சில துஷ்டர்களால், அயோக்யர்களால், ராக்ஷஸ குணமுடைய கச்சடா ஆசாமிகளால், சில நல்லவர்களுக்கு துன்பமும், கஷ்டமும், அவப்பெயரும் வருவதும், இதனால் பாவம் ஒருவரையொருவர் சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டியதானதும், எவ்வளவு ஒரு வருத்தம் அளிக்கும் சம்பவங்கள் பாருங்கோ, நினைத்தாலே மிகவும் துக்கம் தான் ஏற்படுகிறது.

  >>>>>>

  ReplyDelete
 5. // “அம்மா… நான் இராமபக்தன். பெயர் ஆஞ்சனேயன்.” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சீதைக்கு ஆறுதல் சொன்னார். தைரியம் தந்தார். //

  இது மிகவும் ஆறுதல் அளிக்கும் காட்சி.

  தொடர்ந்து இதேபோல மற்றொரு நாள், சுந்தரகாண்டத்தையும் இதுபோல அமர்க்களமாக படங்களுடனும் விளக்கங்களுடனும் சொல்லுங்கோ, ப்ளீஸ்

  நீங்க சொன்னாத்தான் கதைகளுக்கே ஓர் தனி அழகு கிடைக்கிறது.

  கேட்கும் பார்க்கும் எங்களுக்கும் ஓர் தனி ருசி ஏற்படுகிறது. ;))))))

  >>>>>>>

  ReplyDelete
 6. // “கண்டேன சீதையை” என்று மகிழ்ச்சியுடன் கூறி, “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தை பெற்றார் ஸ்ரீஆஞ்சனேயர்.//

  ஆஹா, அருமை அருமையோ அருமை.

  இந்தச் ’சொல்லின் செல்வன்’ என்பதைச் ’சொல்லின் செல்வி’ யாகிய தங்கள் வாயால் கேட்க எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியாக உள்ளது தெரியுமா!!!!!!

  >>>>>>

  ReplyDelete
 7. /அப்போது சீதை கர்ப்பமாக இருந்தாள். காட்டில்
  சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்த
  சீதைக்கு ’லவன், குசன்’ என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.//

  சமத்தோ சமத்தான, சிங்கக்குட்டிகளான இரட்டைக் குழந்தைகளுக்கு அன்பான வாழ்த்துகள்.

  >>>>>>>

  ReplyDelete
 8. //போர் முடிவதாக இல்லை. பிறகு “யார் அவர்கள்.” என்று விசாரித்து, லவனும் குசனும் தம் பிள்ளைகளே என்பதை அறிந்து சீதையையும் கண்டார். அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் ஸ்ரீ இராமர்.//

  நல்லவேளையாக அனாவஸ்ய சண்டைகளும், மனஸ்தாபங்களும் இல்லாமல் சமாதானம் ஆச்சே!

  கேட்கவும் நினைக்கவும் மனதுக்கு ஒரே சந்தோஷமாக உள்ளது. ;)))))

  >>>>>>

  ReplyDelete
 9. //வாரந்தோறும் சனிக்கிழமையில் இந்த கிஷ்கிந்தாகாண்டத்தை படித்தால், ஆஞ்சனேயரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

  சனிஸ்வர பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

  பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும்.

  விரோதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்.

  நம் விரோதிகளுக்கு துணையாக இருப்பவர்கள், விபீடணனை போல் நமக்கு உதவியாக வருவார்கள்.

  எதிலும் வெற்றி ஏற்படும்.

  குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடு மறையும்.

  நண்பர்களின் உதவி கிடைக்கும். மகிழ்ச்சி ஏற்படும்.

  இத்தகைய மகிமை கொண்டது கிஷ்கிந்தாகாண்டம்.

  விரோதிகளால் பிரச்சினை இருந்தால் கிஷ்கிந்தாகாண்டம்
  படித்து வந்தால் அதனை தொடர்ந்து படித்து வந்தால்
  வல்லவனுக்கு வல்லவனாக மாறும் சக்தி கொண்டவராக திகழும் ஆற்றலை தருகிற சக்தி கிஷ்கிந்தாகாண்டத்துக்கு உண்டு//

  மிகவும் அருமையாக சுருக்கமாக விளக்கமாக நச்சென்று சொல்லியுள்ளீர்கள்.

  புட்டுப்புட்டு வைத்த லட்டுப்போல உள்ளது ஒவ்வொரு பலன்களும்.

  >>>>>>

  ReplyDelete
 10. இன்று மொத்தம் காட்டியுள்ள 22 படங்களையும் முழுவதுமாக தரிஸிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  கடைசிபடத்தில் ’ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகன ஹனூமத் ஸமேத ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி’யின் படம் ஒரு மாறுபட்ட ஸ்டைலில் [வடநாட்டு ஸ்டைலில்] காட்டப்பட்டுள்ளது.

  மொத்தத்தில் எங்கள் தங்கம் அளித்த தங்கமான பதிவு இது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும், பகிர்வுக்கும், கடும் உழைப்புக்கும் நன்றியோ நன்றிகள்.


  ooooo 882 ooooo

  ReplyDelete
 11. அது என்ன கடைசி படத்தில் இரண்டு அனுமார் சாமிகள்?

  அதுதவிர லக்ஷ்மணனுக்கு அருகே ஒரு நிழல் [மர்ம] ஆசாமி??

  விளக்குங்கோ விளக்குங்கோ, இல்லாட்டி எனக்கு மண்டை வெடிச்சுடும். ;)

  ReplyDelete
 12. அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
  பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
  விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
  மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனேபுனைந்தான் மௌலி ....

  .ராமரின் பட்டாபிஷேகக் காட்சியை விவரிக்கும்போது கம்பர்
  அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த...
  என்று அங்கதனைச் சிறப்பித்துப் பாடுகிறார்.

  ராம -ராவணப் போரில் அனுமனுக்கு இணையாக ராமனுக்குத் தோள் கொடுத்து உறுதுணையாக இருந்தவன்,

  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிசூட்டு
  விழா நடந்திருந்தால் அனுமனும் அங்கதனும் அங்கே
  காணமுடியாதன்றோ என்பதனை எண்ணி சுவைக்கும் போது
  இப்பாடலின்சிறப்பும் வரிசைமுறையும் அழகும் புலனாகும் ..
  இராமபிரானது வனவாசமாகிய முதலுக்குக் கிடைத்த வட்டி
  அனுமனும் அங்கதனும் ....

  ReplyDelete
 13. மிக அழகான பாடலுடன் கூடிய விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  இதையெல்லாம் உங்களைப்போல யாரால் எனக்கு அழகாக புரியும்படியாக எடுத்துச் சொல்ல முடியும்?

  மண்டை இதுவரை உடையவில்லை. ;)))))

  ReplyDelete
 14. சுந்தர காண்டம் படிப்பதால் பல பலன்களென்று தெரியும். கிஷ்கிந்தா காண்டத்துக்கும் பல மகிமைகள் இருப்பதை உணர்த்தி விட்டீர்கள்.
  'முதலுக்குக் கிடைத்த வட்டி' மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 15. சிறப்பான பகிர்வும் ஐயாவின் கருத்துக்களும் பிரமாதம்...

  வாழ்த்துக்கள் அம்மா... VGK ஐயா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. கிஷ்கிந்தா காண்டம் பற்றிய விரிவான பகிர்வு அருமை.
  இராமபிரானது வனவாசமாகிய முதலுக்கு கிடைத்த வட்டி அனுமனுக்கும் அங்கதனும். அருமை நல்ல விவரம்.
  கிஷ்கிந்தா காண்டம் படித்து சதி, பதிகள் குழந்தைகளுடன் சுகமாய் வாழ்ந்து இருக்கட்டும்.
  வாழ்த்துகள்.
  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 17. ஜகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே அதை
  செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே...

  என்ற பாடல் நினைவுக்கு வருகிறது சகோதரி...

  கிஷ்கிந்தாகாண்டத்தின் சிறப்புப் பற்றி உங்கள் பதிவு மிக அருமை.
  அழகிய படங்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 18. ராமர் படம் தெய்வாம்சம்.
  தகவல்களும் அருமை

  ReplyDelete
 19. எனக்கு ராமாயணத்தில் பிடித்த ஒரு விஷயம் ஆஞ்சநேயர் தான் அவரை பற்றி விஷயங்கள் தெரிந்து கொள்வதில் மிகவும் பிடிக்கும் இன்று உங்கள் பதிவில் அவரை பற்றி விஷயங்கள் மிகவும் மனம் மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி படங்களும் அருமை அந்த கடைசி படத்திற்கு கொஞ்சம் விளக்கம் எதாவது இருக்கா ? வித்யாசமான படம்

  ReplyDelete
 20. I'm not sure If I make my vote for this post.
  Excellent pictures. nicely written.

  Tnx

  ReplyDelete
 21. இனிய பகிர்வு. ரசித்தேன்.....

  ReplyDelete
 22. கிஷ்கிந்தா காண்டத்தின் மகிமையை படங்களுடன் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.
  ஸ்ரீராம நவமி தின வாழ்த்துகள்!

  ReplyDelete