Sunday, April 14, 2013

மங்களம் பொங்கும் சித்திரை புத்தாண்டு

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கும் மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

புதிய ஆண்டின் தொடக்கமாக முக்கனிகளும் ஒருங்கேகிடைக்கும் சித்திரை மாதம் முதல் நாளை  தமிழ் வருடப் பிறப்பாக சித்திரைகனி எனும் தமிழ்புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடுகிறோம் ..

முக்கனிகள் , காய்கறிகள் , மலர்கள் , பணம், நகை வைத்து காலை எழுந்தவுடன் அதில் விழித்து அன்றைய வருடம் சீரோடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு கோவில்களுக்கு செல்வதும்,  கொண்டாடுவதும் மரபு. 

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்' என்னும் 
வசந்த காலம் தொடங்குகிறது.

வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், 
மலர்களும் பூத்துக் குலுங்கும். 

வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். 

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் 
என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாகத் திகழ்கிறது ... 

.புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி  சந்தனம், குங்குமம்  இட்டு, .புத்தாண்டுப் பூஜைகளை செய்த பின்பு  புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.
 
புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம்

பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு பொன், வெள்ளி ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.
 
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை , சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக  குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைத்து .பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.
 பிறக்கும் இவ்வருடம் புனிதமாய் புதுமைகளோடு எம் வாழ்க்கயில் சகல வெற்றிகளும் ஏற்பட்டு நல்ல வளங்கள் வாழ்க்கையில் உருவாகவும் வழி தரட்டும் என பிரார்த்திக்கிறோம் ..!19 comments:

 1. VERY GOOD MORNING !

  இனிய “விஜய” தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  14.04.2013 புத்தாண்டின் முதல் நாளே வலைச்சரத்தில் முதல் அறிமுகமாக தங்களின் செந்தாமரை மலர்ந்துள்ளது காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_1170.html

  இந்தப்புத்தாண்டில் மேலும் மேலும் தங்களுக்கு பல்வேறு வெற்றிகள் குவியட்டும். ;)))))

  உங்களுக்கு அ டி யி ல் என்னையும் காட்டியுள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  ”பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்” என்பார்கள்.

  உங்கள் [தாமரைப்] பூவோடு சேர்த்து நாராக என்னையும் வலைச்சரத்தில் இன்று மணக்க வைத்துள்ளார்கள். ;)))))

  இந்தப்புத்தாண்டு துவக்கத்தில் இது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

  >>>>>>

  ReplyDelete
 2. ”மங்களம் பொங்கும் சித்திரைப் புத்தாண்டு”

  என்ற தலைப்பே மிக அழகாக உள்ளது.

  வழக்கம் போல படங்கள் அத்தனையும் ரம்யமாக ரஸிக்கத்தக்கதாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  புத்தாண்டுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஏராளமான தகவல்களை தாராளமாகக் கூறி மகிழ்வித்துள்ளீர்கள்.

  என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  இன்று பிறக்கும் புத்தாண்டில் அனைவர் மனதிலும் சந்தோஷம் பொங்கட்டும். நட்பு பெருகட்டும். உறவுகள் வளரட்டும். நலமுடனும் வளமுடனும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழட்டும். ;)))))

  ooooo 879 ooooo

  ReplyDelete
 3. மிக சிறப்பான பகிர்வு மற்றும் படங்கள்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 5. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. புத்தாண்டு பற்றிய புதுப் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
  உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. உங்களுக்கும்,குடும்பத்தவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. சகோதரி!... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete

 13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. அழகான படங்கள் மற்றும் தகவல்கள். நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  ReplyDelete
 17. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள்.
  நல்ல தகவல்கள்

  ReplyDelete
 18. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  கடைசி இரண்டு கோலங்கள் ஜோர்.

  இரண்டு சின்னக் கோலங்களுக்கும், சின்ன- பெரிய கோலங்களுக்கும் மொத்தத்தில் இரண்டு வித்தியாசங்கள் இருக்கு. சிலருக்கு 'குமுத' வழக்கப்படி அது ஆறாகக் கூட இருக்கலாம்.

  யார் கண்டுபிடிப்பார்களோ தெரியவில்லை.

  ReplyDelete
 19. விஜய தமிழ் புத்தாண்டில் தங்களுக்கு எல்லாவற்றிலும் ஜெயம் கிட்ட வாழ்த்துகள்

  ReplyDelete