Tuesday, April 16, 2013

அக்னி நட்சத்திரம்


Hippie Dippie Radiant AnimatedHippie Dippie Radiant Animated

சித்திரை மாதத்தில்  புத்தாண்டு விழா,
ஆதிசங்கரர் ஜெயந்தி,
ராமானுஜர் ஜெயந்தி,
மச்சாவதார ஜெயந்தி,
வராக ஜெயந்தி,
நரசிம்ம ஜெயந்தி,
வாசவி ஜெயந்தி,
ரமணர் ஆராதனை விழா,
காமன் பண்டிகை,
ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம்,
தேர்த் திருவிழா,
சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா,

காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா,
சித்திரை அன்னா  பிஷேகம்,
சப்த ஸ்தான விழா,
ராசிபுர திருமணம்,
தேர்விழா,
மகாலட்சுமி அவதார தினம்,
பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி,
தங்கத்தேர்,
சித்திரகுப்த பூஜை,
குருவாயூர் விஷுக்கனி,
நெல்லுக்கடைமாரி செடல் விழா,
கூத்தாண்டவர் விழா,
கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா,
அட்சய திரிதியை கனகதாரா யாகம்,
மகாலட்சுமி  எட்டு நாள் காட்சி தரும் விழா
என எல்லாமே நன்மை தரும்  விழாக்களைக் காணலாம்.

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும்.

கத்திரி வெயில் என்று கூறும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும்.

சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி.
கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம்.
எனவே இதை அக்னி நட்சத்திரம் என்கிறோம் ..

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல்
நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.  அக்னி தேவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.

எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

காண்டவ வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறியதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.

திருமால் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சு னன்  வான் நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி, மழை நீர் வனத்தில் விழாமல் தடுத்தான்.

அக்னி வனத்தை எரிக்கலானான்.

அப்போது கண்ணன், "அக்னியே'! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்' ன்றார்.

அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கிய நாட்கள் தான்
அக்னி நட்சத்திர நாட்கள் ...

அக்னி நட்சத்திர நாட்களில் முருகனையும்;
 பரணிக்கு உரிய துர்க்கை,
ரோஹிணிக்கு உரிய பிரம்மன்,
கார்த்திகையின் அதிதேவதை அக்னி ஆகியோரையும் வழிபடலாம்.

அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து, கடவுள்
அருளைப் பெறலாம்.


23 comments:

 1. அக்னி நட்சத்திர நாளில் அகமும், புறமும் குளிரும் வண்ணம் தர்மம் செய்து இறைவன் அருளை பெறலாம்.
  அருமையாக சொன்னீர்கள்.
  படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகு.

  ReplyDelete
 2. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 3. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 4. விளக்கங்கள் அருமை... படங்களும் அருமை...

  நன்றி அம்மா...

  ReplyDelete
 5. அக்னி நக்ஷத்திரத்திற்கு இப்படி ஒரு கதையா?

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. அக்னி நட்சத்திரம் பற்றித்தெரிந்துகொண்டேன்.அழகிய படங்களுடன் நல்லதொரு விளக்கம்.நன்றி.

  ReplyDelete
 7. அக்னி நக்ஷத்திர கதை பகீரென்கிறது சகோதரி!
  நல்ல பகிர்வு. மிக்க நன்றி!

  ReplyDelete
 8. பள்ளியில் படிக்கும்போது எங்கள் ஆசிரியை எங்களை "ஒவ்வொன்னும் ஒவ்வொரு நட்சத்திரமா வந்து வாய்ச்சிருக்கு" என்று மனம் 'மகிழ்ந்து' பேசுவார். அதன் காரணம் அக்னி நட்சத்திரம் பற்றிய உங்கள் கதையின் மூலம் விளங்குகிறது!!!! நல்ல பதிவு. நன்றி

  ReplyDelete
 9. ”அக்னி நட்சத்திரம்” பற்றி சுடச்சுடச் சுட்டெறிக்கும் அருமையான பதிவு.

  உஷ்ணம் தாங்க முடியாததால் A.C. போட்டுக்கொண்டு ஜில்லென்று காற்று வாங்கிய பிறகு மீண்டும் வருவேன் ;)

  >>>>>

  ReplyDelete

 10. தகவல்களும் படங்களும் வழக்கம் போல் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அகமும் புறமும் குளிர தந்த தகவல்கள் மனதை குளிர வைத்தன. நன்றிங்க.

  ReplyDelete
 12. அக்னி நட்சத்திரம் சுடசுட பக்குவமாக இருந்தது உங்கள் பதிவில் மட்டுமே.

  ReplyDelete
 13. //சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா,
  ஆதிசங்கரர் ஜெயந்தி,
  ராமானுஜர் ஜெயந்தி,
  மச்சாவதார ஜெயந்தி,
  வராக ஜெயந்தி,
  நரசிம்ம ஜெயந்தி,
  வாசவி ஜெயந்தி,
  ரமணர் ஆராதனை விழா,
  காமன் பண்டிகை,
  ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம்,
  தேர்த் திருவிழா,
  சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா,//

  ஆஹா, அருமை. கொளுத்தும் வெயில் ஒருபக்கம். மழையின்மையால நீர் வரத்து குறைந்துள்ளது ஒரு பக்கம். மின் தடைகள் போன்ற தொந்தரவு மறுபக்கம்.

  கரகங்காள், காவடிகள், பால்குடங்கள், பூச்சரிதல், தேரோட்டம், மேளம் நாயணம், வேட்டு வெடி, வாண வேடிக்கை என கோலகலங்கள்.

  ரோட்டு மேல் வீடு ஆகையால் மொத்தத்தில் சித்திரையில் நித்திரை கொள்ள முடியாமல் அடிக்கடி ஒரே சப்தங்கள்.

  இங்கே அவற்றை நீங்கள் அழகாகப் பட்டியல் இட்டுள்ளீர்கள்.

  எனினும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>>

  ReplyDelete
 14. //அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். கத்திரி வெயில் என்று கூறும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.//

  இருக்கட்டும், அது இயற்கை நிகழ்வுகள்.

  அதையெல்லாம் மறந்து மனதுக்குக் குளுமையூட்டத்தான் தங்களின் இதுபோன்ற அருமையான பதிவுகள் உள்ளனவே.

  அதனால் எங்களுக்குக் கவலை ஏதும் இல்லை. ;)))))

  >>>>>

  ReplyDelete
 15. //அப்போது கண்ணன், "அக்னியே'! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்' என்றார். அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கிய நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள் ...//

  இதுவும் அந்த மாயக்கண்ணன் கோபாலகிருஷ்ணன் செய்த வேலையா?

  நல்லதொரு சுவையான கதையை எடுத்து விட்டுள்ளீர்கள்.

  ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>>

  ReplyDelete
 16. பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் அளவு கூடுவதாகச் சொல்கிறோம் / உணர்கிறோம்..

  மரங்களை பெருமளவு அழித்து விட்டதும், அதனால் மழை பொழியாமல் இருப்பதும் முக்கியமான காரணமாக இருக்கலாம்.

  இன்னொரு காரணமும் உள்ளது.

  வெயிலோ குளிரோ இதுவரை இல்லாத அளவு போட்டுத்தாக்குவதாக நாம் சொல்கிறோம் அல்லவா.

  அதற்கான உண்மைக் காரணம் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு ஒவ்வொரு வயது ஏறிக்கொண்டே போகிறது அல்லவா!

  அதனால் வெயிலையோ அல்லது குளிரையோ இதுவரை தாங்கிய அளவு நம் தேகத்தால் தாங்க முடியாமல் போய் உள்ளது என்பதே உண்மையான காரணம்.

  >>>>>>>>

  ReplyDelete
 17. இன்று காட்டியுள்ள படங்கள் யாவும் அழகோ அழகு. அக்னி தேவனுக்கு பசி ஏற்பட்ட கதை வெகு அருமை. கதையென்றாலே நீங்கள் சொல்லி நாங்கள் கேட்க வேண்டும். அதன் ருசியே ருசி தான்.

  இன்றும் ஒருசில படங்கள் கடைசிவரை திறக்கவே இல்லையாக்கும் ;(

  திறந்து காட்டப்பட்டுள்ளவை யாவும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. ஏதோ காட்டப்பட்டவைகள் வரை சந்தோஷமே ! திருப்தியே !!

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.


  ooooo 881 ooooo

  ReplyDelete
 18. அஹா இதுதான் அக்னி நட்சத்திர வருவதற்கு அர்த்தமா நான் கேள்வி படாத விஷயம் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 19. பாரம்பரியம் மிக்க பண்டிகைகள் மாதந்தோறும் காரண காரியங்களோடு முன்னோர்களால் நம் பண்பாட்டில் நிலைத்திருப்பவை

  அக்னி நட்சத்திரக் கதை அருமை. அதனால்தான் சித்திரை மாத விழாக்களில் நீரின் முக்கியத்துவம் மிகுதியாய் இருக்கிறது போலும். கடுமை தாளாமல் கடவுள்களே ஆற்றிலும் கடலிலும் அமிழ்ந்து விடுவதும்!

  ஆன்மிகத்தின் பெயரில் நம் ஆரோக்கியம் காக்கப் படுகிறது.

  நாளொன்று போனால் வயதொன்று போகிறதென்ற வை.கோ. சாரின் கருத்தும் சிந்திக்கத் தக்கதே.

  ReplyDelete
 20. To திருமதி நிலாமகள் அவர்களுக்கு, வணக்கம்.

  //நாளொன்று போனால் ............. வை.கோ.சாரின் கருத்தும் சிந்திக்கத்தக்கதே//

  மிக்க நன்றீங்கோ; ஏதோ நீங்களாவது ஒருத்தர் என் கருத்தினை சிந்திக்க, இன்று உள்ளீர்களே என்பதில் எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ;))))) அன்புடன் VGK

  ReplyDelete
 21. அருமையான தகவல் வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு !

  ReplyDelete
 22. அக்கினி நட்சத்திரகதை அருமை.

  எமது அம்மாமார்கள் சுட்டெரிக்கும் வெயில் காற்றை காண்டாவனம் வீசுது என்பார்கள். காண்டவ வனம் என்பதைத்தான் குறிப்பிட்டிருப்பார்களோ என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete