Friday, July 25, 2014

ஞானம் அருளும் ஸ்ரீ ராஜமாதங்கி







 ""கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
 பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மாதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டித் தன் பேரழகே''

"நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.'

 என்ற அபிராமி அந்தாதி பாடல்கள்  ராஜமாதங்கியின் அருளைப் போற்றும்..

ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின்  தரிசனம் பெற்று அன்னையே தன் மகளாக பிறக்கவேண்டும் என்று வரம் பெற்றார்.
அதன் பயனாக ஸ்ரீ ராஜமாதங்கி திருவெண்காடு (சுவேதாரண்யம்) என்ற திருத்தலத்தில் உள்ள மதங்க தீர்த்தத்தில் ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அன்று, மதங்க மகரிக்ஷிக்கு குழந்தையாகக் கிடைத்தாராம். 

 ஏழு வயதானபோது திருமணம் செய்து வைக்க விருப்பம் கொண்டு, மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாதசுக்லபட்ச சப்தமியில் திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காட்டுத் தல வரலாறு கூறுகிறது.

அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து  உண்டான மந்த்ரிணி .

பராசக்தியின்  ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள்.சங்கீதத்திற்கு  அதிபதி -அதிஷ்டான தேவதை 

 பராசக்திக்கு உகந்த நேரத்தில் உகந்த ஆலோசனை கூறுபவள். 
எனவே, வாக்கு சித்தி, அறிவுக்கூர்மை, சகல கலைகளிலும் வல்லமை, மந்திரசித்தி பெற விரும்புவோருக்கு சியாமளா உபாசனை மிகச்சிறந்தது.

ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும்  சியாமளா தேவி என்றும் வணங்கப்படுகிறார். சியாமளம் என்றால்  நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். 

ராஜ மாதங்கி பத்மாசனத்தில் அமர்ந்து கையில் வீணை இசைத்தபடி இருப்பாள்.
சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், 
தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்

 மகா கணபதிக்கு அடுத்து பூஜிக்க வேண்டிய தெய்வம் ஸ்ரீராஜமாதங்கி என்று சாக்த நூல்கள் கூறுகின்றன. 

மதுரை மீனாட்சியே மந்த்ரிணி ரூபம் என்பதால், 
மீனாட்சியே மாதங்கி ஸ்வரூபம் என்பர். 

இவளுக்கு 16 திருப்பெயர்கள் உள்ளன. 
அவை: சங்கீதயோகினி, சியாமா, சியாமளா, மந்த்ரிநாயிகா, மந்த்ரிணி, சசிவேகாணி, பிரதானேசீ, சுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணி, பிரியகப்பிரியா, நீபப்பிரியா, ககம்பேசி, கதம்பவனவாசினி, ஸ்தாமதா. 

மேலும் உள்ள 6 அங்க தேவதைகளும்  கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் வழங்குவாள்.

இசை,இலக்கியம் ,நடனம் மற்றும்சகலகலைகளிலும்சிறப்பான
தேர்ச்சியும் ,பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை
ராஜமாதங்கி அனைத்து மந்திர, யந்திர, தந்திரங்களிலும் இருப்பவள். வித்யைகளுக்குக் காரணமானவள்; 

அன்னைக்கு சண்ட, முண்டன் வதத்தின்போது உதவிய  13 சக்திகளுள் ராஜமாதங்கி குறிப்பிடத் தக்கவள்.

ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா தேவி. 

பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் . 

மதுரை மீனாட்சி கோவிலில் சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.

வீணை, கிளி, புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை, காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.

 பிரம்மன் பூஜித்த வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் தலத்தில். உள்ள பச்சைக் கல்லாலான தேவிக்கு மரகதவல்லி என்றே பெயர்.

"கேய சக்ர ரதாரூடமந்த்ரினி பரிஸேவிதா
மந்த்ரிணி அம்பா விரசித விடிங்கவத தோஷிதா'

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். அதாவது, பண்டாசுரனின் சகோதரன் விடிங்கனை, கேய சக்கர ரதத்தில் அமர்ந்து போரிட்டு வென்றாளாம் சியாமளாதேவி.

ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி .மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யாஉபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம் ,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரிமந்திரம்,பின்னர்  ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் 
அதன் பிறகே ஸ்ரீவாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும்..




சேலம் மாவட்டத்தில் மன்னார் பாளையத்தில் இயற்கை எழில் சிறக்கும்  அழகிய  சுற்றுச்சூழலில் மனம் கவரும் வண்ணம் அமைந்துள்ள ராஜமாத்ங்கியின் ஆலயம் தனிச்சிறப்பு பெற்றது..
SRIRAJAMATHANGIESWARIAMMAN ASHRAM, Mannarpalayam, Salem
இருபுறமும் கிளி கொஞ்சும் சிற்ப அழகுடன் அருள் பொழியும் 
அன்னை ராஜமாதங்கியின் கருவறை..


கோவிலின் முன்புறம் வரவேற்கும் யானை சிறபங்கள்..

DSC00692
கோவிலின் எழில் கொஞ்சும் அமைப்பு...

ராஜமாதங்கி ஆலயத்தின் முகப்புத்தோற்றம்..

SRIRAJAMATHANGIESWARIAMMAN ASHRAM, Mannarpalayam, Salem
Pachiamman, Mannarpalayam

SRI IRUTTUKKAL MUNIAPPAN TEMPLE, Mannarpalayam, Salem
SRI IRUTTUKKAL MUNIAPPAN TEMPLE, Mannarpalayam, SalemSRI IRUTTUKKAL MUNIAPPAN TEMPLE, Mannarpalayam, SalemSRI IRUTTUKKAL MUNIAPPAN TEMPLE, Mannarpalayam, SalemSRI IRUTTUKKAL MUNIAPPAN TEMPLE, Mannarpalayam, Salem

SRI KALIESWARI KAMESWARER ASHRAM, Mannarpalayam, Salem
SRI KALIESWARI KAMESWARER ASHRAM, Mannarpalayam, SalemSRI KALIESWARI KAMESWARER ASHRAM, Mannarpalayam, Salem

17 comments:

  1. ராஜமாதாங்கி அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. இந்த ஆடிவெள்ளியில் ராஜமாதங்கி தரிசனம் கிடைத்தது.
    பம்பாய் சிஸ்டர் காணொளி மிக அருமை.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகிய படங்களுடன் சியாமளம் பற்றிய விளக்கத்துடன் சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. பதிவர்கள் அனைவருக்கும் தன் அருட்கண்களால் நல்லது புரிவாளாக ஸ்ரீ ராஜ மாதங்கி என்று வேண்டுகிறேன்!

    ReplyDelete
  5. superb pictures thanks for sharing

    ReplyDelete
  6. அழகிய படங்களுடன் இனிய பதிவு..
    ஸ்ரீ ராஜமாதங்கி அம்மனின் தரிசனம் கண்டு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. ஷ்யாமளா தேவியான ராஜமாதங்கி அம்பிகையைப் பற்றி அற்புதமான தகவல்கள்! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. ராஜ மாதங்கி... இதுவரை அறியாத பல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. வெண் பட்டு உடுத்தி வீணை மீட்கும் அம்பாள் படம் அழகாக உள்ளது.

    இருப்பினும் அதில் அம்பாளுக்கு மிகச்சிறிய முகமாகவும், பெரிய கைகால்களாகவும், வனப்பான உடல் அமைப்புகளும், ஏராளமான நகைகளுமாகக் காட்டியுள்ளது சற்றே விசித்திரமாகவும் வித்யாசமாகவும் உள்ளது.

    அதற்குக்கீழே இரண்டாவது படத்தில் முத்து மாலைகள், நெக்லஸ் முதலியவற்றுடன் காட்டியுள்ள அம்பாள் அலங்காரங்கள் அசத்தல்.

    >>>>>

    ReplyDelete
  10. ராஜ மாதங்கி பற்றிய தங்களின் பழைய பதிவுகள் சிலவற்றை ஏற்கனவே படித்திருப்பினும், ஞானம் அருளும் ராஜ மாதங்கி பற்றி ஏராளமான புதிய தகவல்களுடன் இந்தப்பதிவினைக் இன்று ஆடி வெள்ளிக்கிழமையில் கொடுத்துள்ளது மிகவும் மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. அபிராமி அந்தாதியுடன் ஆரம்பமே ஜோர் ஜோர் !

    >>>>>

    ReplyDelete
  12. ஸ்வேதாரண்யத்தின் அம்பாள் ஷ்யாமளி ....
    நீலம் பச்சை கலந்த நிறம் ....
    அழகான காம்பினேஷன் ....
    சொல்லிப்புரிய வைத்ததும் ஓர் ஷ்யாமளியே !
    கையில் வைத்துள்ள கரும்பு [வில்] போல
    இனிமையோ இனிமைதான்

    >>>>>

    ReplyDelete
  13. பாம்பே சிஸ்டர்ஸ் பாடியுள்ள வர்ணம் காணொளி பதிவுக்கு மேலும் சிறப்பூட்டுகிறது. மனதுக்கும் செவிக்கும் இன்பமூட்டுகிறது.

    >>>>>

    ReplyDelete
  14. கீழிருந்து 12வது வரிசைப்படத்தில் [கோயிலின் எழில் கொஞ்சும் அமைப்பு என்ற எழுத்துக்களுக்கு மேல்] வலதுபுறம் காட்டியுள்ள அம்பாள் நல்ல தீர்க்கமாக இருக்கா.

    மூக்கும் முழியுமா சும்மா ஜம்முனு இருக்கா. ;)

    >>>>>

    ReplyDelete
  15. மொத்தத்தில் இன்றைய தங்களின் தங்கமான பதிவு மிகவும் அருமையாகவும், சிறப்பாகவும், அழகான படங்களுடனும், அற்புதமான தங்களின் விளக்கங்களுடனும் அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    இன்றும் என் வருகையில் தாமதமாகிவிட்டது.

    மாதங்கி அம்பாள் ...... என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ! ;)

    ;) 1348 ;)

    oooOooo

    ReplyDelete
  16. மொத்தத்தில் இன்றைய தங்களின் தங்கமான பதிவு மிகவும் அருமையாகவும், சிறப்பாகவும், அழகான படங்களுடனும், அற்புதமான தங்களின் விளக்கங்களுடனும் அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    இன்றும் என் வருகையில் தாமதமாகிவிட்டது.

    மாதங்கி அம்பாள் ...... என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

    ;) 1348 ;)

    oooOooo

    ReplyDelete
  17. என் மகள் பெயர் ஸ்ரீராஜமாதங்கி என பெயர் வைத்துள்ளேன் இது வரை எனக்கு இப்பெயர் வைக்க குலப்பமாக இருந்தது இப்பொலுது அக் குலப்பம் போய் விட்டது ..... நன்றீ

    ReplyDelete