Thursday, July 31, 2014

சகல சௌபாக்கியங்கள் அருளும் கருட பஞ்சமி


கருடன் காயத்திரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் 
பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  கருட பஞ்சமி தினத்தில்  கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். 

கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். 

வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்களான் நாகங்கள்  செய்த சூழ்ச்சியினால்  வினதை அடிமையாக நேர்ந்தது ..

அன்னையின் அடிமைத் தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்து பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்து பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது ..

எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். 

 கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் 
அஷ்ட நாகங்களே. 

நோன்பிருந்து கௌரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். 

அன்று வடை, பாயசம், முக்கியமாக  கொழுக்கட்டை செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். 

சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். 

பூஜை செய்யும் போது அம்மனுக்கு  சரடு  சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். 
அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம்.  

வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். 
இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். 

ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். 

சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்
சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும்.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். 

அவர்களில்,   தாய் கத்ரு  சொல்லைக் கேட்காததால், தீயில் விழும்படி நாகருக்கு  கொடுத்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின் போது அக்கினியில் வீழ்ந்தன..

அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் 
சாப நிவர்த்தி கொடுத்தஅ நாள்தான்  நாக பஞ்சமி தினம்.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 

புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதம் கடைப்பிடிக்கும்போது,  உலோகத்தில் நாக உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

 கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். 
கருடன்,  தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்று தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்தவர்களுடன்  கடும் போர் நடத்தி இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். 

அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்த கருடாழ்வார் அவதரித்த தினம் பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி என்று சிறப்புடன்கொண்டாடப்படுகிறது..! 

 நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். 

முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தனது உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார். 

பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். 

இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார். 

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. 

பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. 

பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். 

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது. 

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். 

ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருக்கும் நித்யசூரியான கருடன்  திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார். 

கருடன்  பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள். 

கச்யபர்-வினதையின் மகனான் கருடனுக்கு பிரகஸ்பதி குரு. 

ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாளின் சன்னதிக்கு எதிராக கருடன் சன்னதியும், துவஜ ஸ்தம்பம் என்ற கருடக்கொடி மரமும் அமைந்தள்ளன. 

வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும். 

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். 

விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருட பஞ்சமி  கருடன் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்து வந்த தினம். 

கருடன் வேதங்களே வடிவானவர். 

சூரியனின் தேரோட்டியான அருணன், கருடனின் சகோதரன். 

ருத்ரா, சுகீர்த்தி இருவரும் கருடனின் மனைவியர். 

ராம-ராவண யுத்தத்தில் இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடந்த ராம-லட்சுமணர், ஆகாயத்தில் சஞ்சரித்த கருடனின் இறக்கைக்காற்றால் விழித்தெழுந்தனர். 

ஆறு மாதங்கள் கருட தியானத்தை விடாமல் உபாசிப்பவருக்கு தன் சக்தியில் ஒரு துளியை கருட பகவான் அருள்கிறார். 

கருட பக்தனின் பார்வை பட்டால் விஷ ஜுரம் குணமாகிவிடும். 

கருட பஞ்சமியன்று கருட சரித்திரம்  படித்தால் அமிர்தம் போல வாழ்வும் தீர்க்காயுளும் கிட்டும்.

18 comments:

 1. வணக்கம்
  அம்மா.

  அறியாத தகவல் அறிந்தேன் படங்களும் விளக்கமும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பெருமாளை கருடவாகனத்தில் சேவித்து விட்டேன்.
  கருடபஞ்சமி விரத பலன்கள் அருமை.
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  ஆடிமாத திருவிழா பகிர்வு அற்புதம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பெரிய திருவடிக்குரிய இந்த நன்னாளில், சிறப்புடன் வழி[பட குடும்ப சகோதரர்களிடையே நிலவும் பகைமையும் வெறுப்பும் நீங்கி அன்பும் பாசமும் கொண்ட உறவு வலுப்படும்.
  நாக பஞ்சமியினையொட்டி, சிறப்பு வழிபாடு செய்வதும், புத்திர பாக்கியம். திருமணத் தடை, குடும்ப ஒற்றுமை என அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து சகல சௌபாக்யமும் பெற்று வாழ்வர்.
  இறை அடியாரை வணங்குவதாலும், நன்மைகள் உண்டு என்பதனை டூ இன் ஒன் பதிவாக நாக பஞ்சமி, கருட பஞ்சமி இரண்டினையும் ஒருங்கிணைத்து அளித்த சிறப்பு பதிவு அருமை! அழகு சொட்டும் படங்களுடன். இறை அருளால், அடியார்கள் நலம் பெற பிரார்த்திக்கின்றேன் இன்னாளில்!

  ReplyDelete
 4. கருட வாகன படங்களும் - கருட பஞ்சமி, நாக பஞ்சமி பற்றிய விரிவான செய்திகளும் கண்டு மகிழ்ச்சி..
  அனைவரும் நலம் பெறட்டும் இந்நாளில்!..

  ReplyDelete
 5. படங்கள் அழகு !கருட பஞ்சமி பற்றி அறிந்து கொண்டேன்!

  ReplyDelete
 6. ஆஹா .....

  ’சகல செளபாக்யங்களும் அருளும் கருட பஞ்சமி’

  என்ற ஆறுதலான தலைப்பே சகல செளபாக்யங்களும் கிடைத்துவிட்ட திருப்தியை என்னுள் இன்று ஏற்படுத்திவிட்டது.

  >>>>>

  ReplyDelete
 7. Replies
  1. படங்கள் அத்தனையும் வழக்கம்போல் அழகோ அழகு.

   Delete
 8. கருடன் காயத்ரி, கருட மாலா மந்த்ரம் என
  ஆரம்பமே ஜோர் ஜோர்.

  >>>>>

  ReplyDelete
 9. ஏதோ சரடு விடாமல் வலது கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும், அதன் முக்யத்துவத்தையும் அழகாகக் கதைகளாகச்சொல்லி அசத்துயுள்ளது ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 10. நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரத மஹிமைகளை வெகு சிறப்பாக தங்களுக்கே உரிய தனித்தன்மை, தனித்திறமை, பேரறிவுடன் விளக்கியுள்ளது பிரும்மானந்தமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 11. கருடனின் சர்வாங்க அழகினையும் தாங்கள் திறம்பட வர்ணித்துள்ளது, ஸ்ரீரங்கம் கருடாழ்வார் சந்நதிக்கே என்னை அழைத்துச்சென்ற திருப்தியை அளித்தது.

  >>>>>

  ReplyDelete
 12. பெரிய திருவடி + சிறிய திருவடி விளக்கம் ....

  பலே பலே !

  >>>>>

  ReplyDelete
 13. ஒவ்வொரு தலைப்பிலும் பல்வேறு விஷயங்களை, அந்தந்த பண்டிகைகள் சமயம் சுவைபட எடுத்துரைத்து எப்படித்தான் தங்களால் அழகாக விரிவாக விளக்கமாக அசத்தலாக வெளியிட முடிகிறதோ !

  VGK உங்களுக்குள்ளும் ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாகவே தான் ஊடுருவியுள்ளது என்பதை என்னாலும் நன்கு உணரமுடிகிறது.

  [VGK = Very Good Knowledge]

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. VGK =

   V aluable
   G eneral
   K nowledge

   எனவும் வைத்துக்கொள்ளலாம். அதுவே உங்கள் விஷயத்தில் மிகப்பொருத்தமாக இருக்கும்.

   பிரியமுள்ள
   VGK

   Delete
 14. அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  தினமும் தங்கள் தளத்தினிலேயே அனைத்துலக ஆன்மிக விஷயங்களையும், கோயில்களையும், ஸ்வாமிகளையும், அம்பாள்களையும் ஆனந்தமாக தரிஸித்துவிட நாங்கள் மிகவும் கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம்.

  மேலும் பல விஷயங்கள் சொல்லணும் போலத்தான் எனக்கும் ஆசையாக உள்ளது. இருப்பினும் அடக்கி வாசிக்க வேண்டியதாக உள்ளது.

  வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

  ;) 1354 ;)

  ooo ooo ooo

  ReplyDelete
 15. விரோதிகளான பாம்புக்கும் கருடனுக்கும் ஒரே நாளில் வழிபாடு. இந்தப் பக்கம் எல்லாம் கருடபஞ்சமியை விட நாக பஞ்சமிதான் வெகுவாக அறியப் படுகிறது/ வழக்கம் போல் படங்களும் பதிவும் நிறையத் தகவல்களைத் தருகின்றன.

  ReplyDelete