Showing posts with label ஆடி மாத திருவிழாக்கள்.. Show all posts
Showing posts with label ஆடி மாத திருவிழாக்கள்.. Show all posts

Saturday, August 9, 2014

ஆடி தபசு , சங்கரன் கோவில்





"சொன்னாலும் வாயினிக்கும் சொலக்கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம் 
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே'

அணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்
பணியாத தலை பணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும் கோமதியே'

அருளும் பொருளும் அனைத்து அருளும் 
துன்ப இருள் தொலைந்து  மறையும்
 தூயவள் என் அன்னை கோமதி 
 திருப் பாதம் பற்றிடும் அன்பருக்கு

[gomathiamman.jpg]


பனிதூங்கும் மலரிலே பட்டொளி வீசிட  பகவலன் வந்து தித்தான் 
இனிய நல் காற்றினில் புள்ளினக் குரலோசை  எழுந்துமே பொங்குதம்மா 
நன்மக்கள் நற்றவத்தோர் நலிந் தோர்தலை வாசலில் வந்து நின்றார் 
புன்னையின் வனக்குயில் பொற்கோ மதித்தாயே  பூம்பள்ளி எழுந்தருளுவாய் 

உலக அன்னையாம் உமையவள்-அனைத்துத் தலங்களிலும் எண்ணற்ற யுகங்களில் இறைவனை வணங்கி, பெறுதற்கரிய சங்கர நாராயண அம்சத் திருவளையும் பெற்று கோமதி அம்பிகையாகத் தோற்றம் கொண்டனள். 

ஆதி மூல பராசக்தி அவதாரங்களில் ஒன்றே கோமதி மூர்த்தமாகும். 

பன்னெடுங்கால யுகங்களாக வான லோகங்களில் வழிபடப் பெற்ற கோமதி அம்பிகை அரிய தவங்களால் கோமதித்தாய் பெற்ற இறையருளை, அம்பிகையை உபாசிப்பதன் மூலம் எளிதில் அடைந்திடலாம் எனில் என்னே பராசக்தியின் பரந்த நற்கருணை! 
 பராசக்தி வழிபாட்டின் திரண்ட திருவருளைக் குறிப்பதாகும்.

ஸ்ரீ கோமதி அம்மன் துதி              

ஓம் ஜகத் ஜும்பே ஜகத் ஜாலனிம்
 ஜய ஜய மாதுர் ஜன நாயகிம்
ஜ்வாலா ஜ்வால ஜும்ப வதனிம்
மதே மதே ஸ்ரீ கோமதீம்

ஆடி பவுர்ணமியன்று சங்கர நயினார் கோவிலில் ஆடித் தபசு நிகழ்ச்சி கோலாகலமாக  முறையில் நிகழ்ந்து வருகின்றது. 
வலப்பாகம் சிவன் உருவமும் இடப்பாகம் திருமால் உருவமாக இருக்கும். 

வலப்பக்கம் நெற்றியில் திருநீறும் இடப்பக்க நெற்றியில் திருமண் ணும் காணப்படும். 

வலபக்கம் இடுப்பில் புலித்தோலுடையும் இடப்பக்கம் இடுப்பில் பீதாம்பரமும் இருக்கும். 

வலப்பக்கம் செம்மேனியும், இடப்பக்கம் நீலமேனியும் தோன்றும். 

இவை போன்றே வலப்பக்கம் சிவனுக்குரிய அம்சங்கள் யாவும் பொருந்தியிருக்கும். 

இடப்பக்கம் திருமாலுக்குரிய அம்சங்களை கொண்டு இயங்குவது இததிருவுருவமாகும். 

சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். 

சங்கர நயினார் சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். 

பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள் .பிரசாதமாக விபூதியும், துளசி தீர்த்தமும் ஒன்றாகத் தரப்படுகிறது

சிவன் அபிஷேகப்பிரியர்.  அலங்காரப்பிரியதிருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். பெருமாள் குளிர்ச்சி பொருந்தியவர் என்பதால், சிவனுக்கு அபிஷேகம் கிடையாது!

சங்கர நயினார் சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப் படுகிறது. 
சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபி ஷேக, பூஜை நடக்கும். 

ஆடித்தபசு விழா வன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர  வெளியே புறப்பாடாகிறார் இந்த உருவ கோலத்தை சங்கர நயினார் கோவிலில் நேரே இன்றும் காணலாம்.  

இந்தச் சிவன் கோயிலில் சொர்க்க வாசல் உண்டு; 
வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாட்டம்!

எப்போதுமே அருவத்தில் லிங்கமாகக் காட்சி தரும் ஈசன், கருவறையில் உருவமாக காட்சி அளிப்பது மிக மிக விசேடம்!

எனினும் ஆகம வழக்கப்படி லிங்க உருவத்தில் மட்டுமே பூசை நடக்க வேண்டி, சங்கரலிங்கம் என்று இன்னொரு தனிச் சன்னிதியிலும் எழுந்தருளி உள்ளார் ஈசன்! அவர் நாயகியாக கோமதி அம்மன்!

புற்று சூழ்ந்த சங்க-பத்மன்! நாக நண்பர்கள் வழிபட்டதால் புற்று மண்ணே பிரசாதம்!

ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! 
உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
 ஆடித் தபசு மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! 
ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
  
பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! 

ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! 

மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!

மாதே, மலையத் தவஜ பாண்டிய சஞ்சாதே!
மாதங்க வதன குக மாதே!
சகோதரி சங்கரி! சங்கரி! சங்கரி!
சாமுண்டீஸ்வரி, சந்திர கலாதரி, தாயே கெளரி!
உலகன்னை! ஜகன்மாதா!
தர்ம சம்வர்த்தினி! அறம் வளர்த்த நாயகி!
நம சிவாய!ஓம் நமோ நாராயணாய!
கோமதித் தாய் திருவடிகளே சரணம்!!!

Friday, August 8, 2014

சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீவரலஷ்மிபூஜை





































சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்

வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு வாழையும் தோரணமும் கட்டி 
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி  அன்புடன் அழைத்தோம் 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
மல்லிகை, ஜாதி மருவுடன் ரோஜா 
மணம் மிகு தாழை மலர்களும் மற்றும்
எல்லை இல்லாத பக்தியும் சேர்த்து 
ஈஸ்வரியே உனக்கர்ச்னை செய்வோம்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 

பாயசம் வகையும் பஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எங்கள் அன்னையே வருக 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
மாணிக்க சிவப்பில் மூக்குத்தி  மரகத குண்டலம் காதினில் ஆட
ஆனிப் பொன் முத்து மாலைகள் அசைய
அச்சுதன் நாராயணன் மார்பினில் வாழும் 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 

அழகிய கூந்தல் இடைவரை புரள 
அருள்மிகு கண்கள் கருணையும் பொழிய 
எழில் மிகு நெற்றியில் குங்குமம் இலங்க
எங்கள் மங்கள பாக்கியங்கள் பெருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
ஜல் ஜல் ஜல் என சதங்கைகள் ஒலிக்க 
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல கல கல என கால் சிலம்பொலிக்க 
கருணையால் எங்கள் கஷ்டங்கள் பறக்க 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
கல்வியில் குழந்தைகள் சிறந்திட வேணும் 
கன்னியர் நல்ல கணவனைப் பெறவும்
செல்வங்கள் சேர்ந்து மங்களம் பெருகி 
சீருடன் சிறப்புடன் வாழ் என வாழ்த்தி 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி 
கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி
பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி
புண்ணியம் அடைவோம் அன்னையே வருக 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க 
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்


பார்வதிதேவியின் சாபத்தால் நோயால் அவதிப்பட்ட சிவகணம்  பார்வதியின் கருணையால் உபதேசம் பெற்று நோயிலிருந்து விடுபட்டதாக ஐதீகம்..

அன்னை பார்வதிதேவி வரலஷ்மி விரதத்தை கடைப்பிடித்தே  முருகனை மகனாக கிடைக்கப்பெர்றாள்..

வரலஷ்மி விரதம் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கச் செய்யும் .. 

 ஸ்ரீமகாலஷ்மியே வரலாஷ்மி பூஜை மகிமையை பற்றி அருளி இளவரசிக்கு செல்வச்செழிப்பு ஏற்பட உதவினாள்..

வாசலில் கோலம் போட்டு  மாவிலை தோரணம் கட்டி முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். 
ஈசானிய மூலையில்  மண்டபம் அமைத்து ஒரு படி நெல்லை சதுரமாகப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பூலம் வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி அரிசியின் மேல் ஒரு குடம் வைத்து அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி, அந்த குடத்தின் சுற்றி சந்தனம் குங்குமம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து அந்த குடத்தின் மேல் மாவிலை சொருகி அதன் மேல் தேங்காயை வைத்து கலசத்தின் மேல் ஸ்ரீமகாலஷ்மி உருவத்தை அமைத்து நகைகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரித்த பிறகு லஷ்மி மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க வேண்டும். 
ஒன்பது முடிச்சு உள்ள சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். 
ஸ்ரீ வரலஷ்மி பூஜை எண்ணற்ற வரங்களை வாரி தரும்.
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி. 

மிகவும் பக்தி ச்ரத்தையோடும் சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்து , அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து  தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜித்து ஆராத்திக்கவேண்டும்..







வரலஷ்மி விரத பூஜை செய்தால் அஷ்ட லஷ்மிகளையும் பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் சித்திக்கும்தனம், தான்யம், ஆரோக்யம், சம்பத்து, தீர்க்க சௌமாங்கல்யம் யாவும் ஸ்ரீவரலஷ்மியின் அருளால் கிடைக்கும். 











திருச்சி, உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், வளைகாப்பு விழா , குங்குமவல்லி தாயார் பல்லாயிரக்கணக்கான வளையல்களால் அலங்காரம்