Wednesday, January 7, 2015

மீண்டு வந்தேன்

வணக்கம்..

15 தினங்களாக அதி உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்..

பிள்ளைகள் அனைவரும் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒருவாரம் , இந்தியாவில் 10 நாட்கள் மருத்துவமனை வாசம் மனச்சோர்வு தந்திருக்கிறது..

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி , திருவாதிரை எல்லாமே மருத்துவமனையில்தான் வாசம்/..

நலமடைந்ததும் மீண்டு,ம் வருகிறேன்..

ஆயிரக்கணக்கான் பதிவுகளுக்கும் கருத்த்ரை வழ்ங்கி உற்சாகப்படுத்திய அனைவருக்கும்  மனம் நிறைந்த நன்றிகள்..

35 comments:

  1. தெய்வம் துணையிருக்கும். கவலை வேண்டாம்..
    தாங்கள் பூரண நலம் அடைய வேண்டுகின்றேன்..

    ReplyDelete
  2. நீங்க பூரண நலமடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் அக்கா. நலமுடன் திரும்பி வருவீர்கள்.பழையபடி உற்சாகத்துடன் பதிவுகள் பகிரவேண்டும். நிச்சயம் நான் கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  3. உடல் நலத்தைப்பார்த்துக்கொள்ளுங்கள்....

    ReplyDelete
  4. பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் நலமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. அவனருளால் பழைய படி நன்றாக திரும்பி வந்து இன்னும் ஆயிரம் பதிவிதுவீர்கள்.

    ReplyDelete
  6. மனச்சோர்வும் உடற்சோர்வும் நீங்கிப் புத்துணர்வு பெற்றிடவும் முழுமையான குணம் பெறவும் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  7. விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் சகோதரி!

    ReplyDelete
  8. அக்கா ..உங்க உடல் நலத்தை கவனிங்க .ரெஸ்ட் எடுங்கக்கா .விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  9. தினமும் பதிவு போடுவீர்களே எங்கே காணோம் என்று நினைத்தேன். பின்னர் லீவில் எங்கேயாவது போயிருக்கலாம் என்றே எண்ணினேன் இப்போது அறிந்து மனம் மிக வருந்தினேன்.விரைவில் உடல் தேறி மறுபடியும் எம்முடன் உறவாடி பதிவுகள் பல இடவேண்டும் என்று வேண்டி வாழ்த்துகிறேன் தோழி ......வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
  10. விரைவில் நலமடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  11. ஆரோக்கியமான வாழ்வு அமையட்டும்
    சீராகட்டும் உயர் இரத்த அழுத்தம்
    அன்பான உள்ளங்கள் சூழ்ந்து நின்று
    வாழ்த்துவோம் வளமோடு வாழ்க!
    நலமோடு வாழ்க!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. மருந்து எடுக்காமல் இருந்தீர்களா? அவபத்தியமா? மன அழுத்தமா? சீக்கிரம் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். உடல் நலத்தில் கவனம் வையுங்கள்.

    ReplyDelete
  13. தாங்கள் நலமடைந்தது அறிந்து மகிழ்கின்றோம் சகோதரியாரே
    உடல்நிலையினை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  14. விரைவில் பூரண நலம் பெற்று வருவீர்கள் அம்மா...

    ReplyDelete
  15. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் அம்மா...

    ReplyDelete
  16. நலமடைவீர்கள். உடல் நலக் குறைவுகள் மன திடத்தைச் சோதித்துப் பார்க்கும். நீங்கள் தைரியமான genius உங்களுக்குத் தெரியாததா. . நலமடைந்து முன்புபோல் தினம் ஒரு பதிவு தருவீர்கள்.

    ReplyDelete
  17. இறைவன் அருளால் மீண்டு வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    எனக்கும் இதே மாதிரியான நிகழ்வு ஏற்பட்டு மீண்டு வந்தேன். எனது அனுபவத்தின் அடிபடையில் சில யோசனைகள்.

    உப்பையும், உடம்பையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
    நடப்பதெல்லாம் நம் கையில் இல்லை என்பதனை நினைத்து, டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். டாக்டர் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள். பிரார்த்தித்து கொள்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருப்பதால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை என்று நினைத்தேன்.

    ReplyDelete
  19. உடல் நலனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அது முக்கியம்.

    உடல் நிலை நன்குத் தேறியதும், பதிவுலகிற்கு வரலாம். அது வரை தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வும் மன அமைதியும் இரட்டை மடங்கு சக்தியைக் கூட்டித் தரும். வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  20. விரைவில் நலம் பெற்று ....புத்துணர்வும் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமா?! நம்ப முடியவில்லை! இறைவனை பற்றி எவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள்!? அவன் அருளால் தாங்கள் மீண்டு வந்துள்ளீர்கள்! வருவீர்கள்! நன்றாக ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். பிரார்த்திக்கின்றோம்

    ReplyDelete
  22. விரைவில் நலம் பெறுவீர்கள்.நன்றாக ஒய்வ எடுங்கள்.ஐயரைக் கணக்காண ஆன்மீகப் பதிவுகளை எழுதிய தங்களுக்கு இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  23. விரைவில் குணம் பெற அந்த இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா

    ReplyDelete
  24. மனதிற்கு பிடித்தமானவற்றை செய்யலாம்.மனகசப்புகளை , வெறுப்புகளை ஒரமாக வைத்து விட்டு இனிய இசையை ரசியுங்கள்.விரைவில் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள் .

    ReplyDelete
  25. கேட்கவே வருத்தமாக இருக்கிறது. நாள் தவறினாலும் உங்கள் பதிவு வரத் தவறாது. முதலில் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். மன அமைதி பெற பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நிதானமாக மறுபடியும் பதிவுகளை எழுத ஆரம்பியுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். எங்கள் எல்லோருடைய பிரார்த்தனைகளும் உங்களுடன்.

    ReplyDelete
  26. ஆண்டவன் அருளால் விரைவில் பூரண நலமடைந்து வழக்கம்போல பணிகளை தொடர பிரார்த்திக்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  27. Hearty Prayers for a speedy recovery

    ReplyDelete
  28. மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி.வலையே தங்களை மீட்க்கும்.நண்பர்கள் அனைவரும் தங்கள் நலம் பெற்று மீண்டும் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  29. madam, please take rest by taking weekly two days off from blogging.

    ReplyDelete
  30. உடம்பை நல்லா கவனிச்சுக்கோங்க. என்றும் அன்புடன். கலா ஸ்ரீராம்

    ReplyDelete
  31. விரைவில் நலம் பெற்று மீண்டும் புத்துணர்வோடு எழுதுவீர்கள் அம்மா...
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்...

    ReplyDelete
  32. நன்றாக ஓய்வு எடுத்துகொள்ளுங்கள் தோழி.

    ReplyDelete
  33. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  34. GEt Well soon. My prayers are with you. Take care.

    ReplyDelete
  35. மீண்டு வந்து எங்களை உயிர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி அம்மா..!

    ReplyDelete