Saturday, January 10, 2015

அனுமன் ஆராதனை
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

- என்ற இந்த மந்திரத்தை செல்வவளம் பெற 108 முறை ஜபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி
ஹனுமதே, லம்லம்லம்லம்
கைல ஸம்பத்கராயஸ்வாஹா.

- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.!


அனுமன் சூரியனிடம் குருவாகக் கொண்டு பாடம் கேட்டு வலம் வந்த போது மற்றய கிரகங்கள் சூரியனையும் அனுமனையும் வலம் வந்தன.

இலங்கையில் ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை ஆராதிக்கவேண்டும்..

ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார்.

அனுமனின் பெருமை அவரது வாலைப் போலே நீண்டுள்ளது. 
அனுமனின் வாலிற்கு  எத்தனையோ சிறப்புகள் உள்ளன. 


அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து  வந்தால் நவகிரகங்களை  வழிபட்டதற்கு ஒப்பாக நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. 

பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த  நிலையில் அவன் சென்று கொண்டிருந்த போது  வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று  இடைïறாக இருந்தது.

அது ஆஞ்சநேயரின் வால் என்பதை  அறியாத பீமன், பாதையை விட்டு  உன் வாலை நகர்த்து என்று கோபமாகக் கூறினார். அதற்கு ஆஞ்சநேயர், முதுமையின் காரணமாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத்திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ என்றார். பீமன் அலட்சியத்தோடு வாலை அகற்ற முயல, அது அசையவில்லை.

பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. பீமன் மலைத்து  நிற்க, அனுமனே தன்னுடைய வாலை  நகர்த்திக்கொண்டு, தான் வாயுபுத்திரனான அனுமன் என்று கூறி பீமனை ஆசிர்வதித்தார். 

தான்  கோபப்பட்டதற்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிய பீமன், அனுமனின் வலிமையை வியந்து பாராட்டி,  அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.

மேலும், எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங்களையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல  சவுபாக்கியங்களையும் அருள வேண்டும் என வரம் வேண்டினான். அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

அனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீ அனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். 

முதலில் சந்தனப்  பொட்டு வைத்து அதன் மேல் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும்.

வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சநேயருக்கு  வடை மாலை சாத்தி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் ஆஞ்சநேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

 அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும். திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்


CHANDHAN ABHISHEKAM TO BANASWADI HANUMAN, BANGALORE


BANGALORE.BANASWADI HANUMANJI KI MANDIR

Sri Prasanna Veeranjaneya Swamy Temple

Ragiguddada Sri Prasanna Anjaneyaswamy Temple


Sri Anjaneya Temple West Indies Feet Hanuman Statue Lord

12 comments:

 1. அனுமன் வாலியின் சிறப்பு உட்பட அனைத்தும் அருமை அம்மா...

  ReplyDelete
 2. ஸ்ரீ ராம ராமா ..ஸ்ரீ ராம ராமா ..ஹனுமன் துணை

  ReplyDelete
 3. தங்கள் நலம் வாழ்க!..
  மீண்டும் பதிவுகளைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது..

  ReplyDelete
 4. வாருங்கள், வாருங்கள்!

  அனுமனை ஆராதிக்க மனக் கவலைகள் மறைந்ததம்மா. புத்துணர்வு
  பிறந்ததம்மா!

  ReplyDelete
 5. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 6. தங்கள் நலம் வாழ்க..
  மீண்டும் பதிவுகளைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  ReplyDelete
 7. அனுமன் வாலின் சிறப்புக்கள்...
  படங்கள் என எல்லாமே அருமை அம்மா....
  இப்போது உடல் நலம் பரவாயில்லையாம்மா?

  ReplyDelete
 8. அனுமனின் சிறப்புக்களை அழகாக விளக்கினீர்கள்! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்! உடல்நலம் தேறிவிட்டதா?

  ReplyDelete
 9. பெங்களூரு பானஸ்வாடி ஆஞ்ச நேயர் கோவிலில் அவர் கண்ணிலிருந்து நீர் வழிகிறது என்னும் புரளி முன்பு ஒரு முறை எழுந்தது நினைவுக்கு வருகிறது. பெங்களூருவில் மாருதிக்காக கோவில்கள் அநேகம் உள்ளது. பிரசித்தி பெற்றது, மைசூரில் தத்தாத்ரேய ஆசிரமத்தில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. அது குறித்து ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் .

  ReplyDelete
 10. அழகிய படங்களோடு அருமையான ஆஞ்சநேயர் பதிவு... ஆஞ்சநேயரை நம்பி வழிபட்டால் வெற்றி நிட்சயமாம்ம்.. எனக்கும் சிலது பலித்திருக்கு..

  ReplyDelete
 11. அனுமன் வால் பொட்டு வைக்கும் தகவல் பயனுள்ளது. அழகழகான ஆஞ்சநேயர் படங்கள். கேள்வி ஒன்று அக்கா. எந்த நிலையிருக்கும் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம்?.பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. அன்ஜெநேயர் பற்றிய அருமையான படங்களும் பதிவு.
  விஜி

  ReplyDelete