Wednesday, July 31, 2013

ஆடி பிரம்மோற்சவம் - அழகர் கோவில்

ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும் 
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே. 

பல நதிகளையும் அனேகமாயிருந்த தடாகங்களையும் 
பல பூஞ்சொலைகளையும் உடைய மலை.அழகர் கோவில்

அழகர்கோவிலில் தான் மஹா லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்து  
கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை. 
அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். 
மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயேஅழகர்கோவிலில் 
உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் 
மிகவும் அழகாக இருப்பார். 
தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் 
பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி வந்துவிட்டாள்.
மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என்ற வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். 

இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.
 அழகர் ‌கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
ஷேச வாகனம் 

மோகினி அலங்காரம் ..!
Kalazhagar_Aadi_Utsavam_Sesha_Mohini_2013__21
அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவம் சிம்ஹ வாகனம்

அழகர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!

அழகர்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்  
ஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க 
வடம் பிடித்து இழுக்க அசைந்தாடி வரும் அழகுத்தேர் மனம் கரும் ..

 "கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து நிலைக்கு வந்த தேரிலிருந்து  பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வருவார்..
சுந்தரராஜ பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை சுற்றி 
வலம் வந்து அருள் காட்சி  அளிக்கிறார்.

ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு, சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்வது விஷேசம்..
தங்கப்பல்லக்கு கருட சேவை ..!

Tuesday, July 30, 2013

திருத்தணி தெப்பத் திருவிழாPhoto கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அருமறை தேடிடும் கருணையின் கடலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன்கனிமொழியாலேகாண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 

 குமரன் சினம் தணிந்து, தன் தேவியருடன்  குன்றில் அமர்ந்த 

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் என, ஐந்து நாட்கள் திருவிழா நடைபெறும் ...!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருப்பதி திருமலை அருள்மிகு 
ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் தேவஸ்தானத்தில் இருந்தும், 
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்தும் சீர்வரிசைகள் எடுத்து வரப்படுகின்றன...!

ஆடி அஸ்வினியுடன் துவங்கி ஆடி பரணி, ஆடிக் கிருத்திகை என விழாக்கோலம் களைகட்டுகிறது ...!

வெள்ளிவேல் விமானத்தில் முருகன் வீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சி ..!

சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் முருகப் பெருமானுக்கு தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருக்கும் ஆனந்தக்காட்சி அருமையானது ..!

சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீப ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும் ..!. 

‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் மலையில் எதிரொலிக்கும்
பால், பன்னீர், புஷ்ப காவடிகளை பக்தர்கள் எடுத்துவருவார்கள்..!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை 
விழாவுக்காக  சரவணப் பொய்கை குளத்தில் தயார் செய்யப்படும் தெப்பம் 
: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை ஒட்டி சரவணப் பொய்கை குளத்தில் தெப்பம் தயார் செய்யப்படுகிறது.
சரவணப் பொய்கையில் இரண்டு தெப்பங்கள் அமைக்கப்பட்டு ஒன்றில் இன்னிசை கச்சேரியும், இன்னொரு தெப்பத்தில் வள்ளி தெய்வானை சகிதமாக முருகப் பெருமான் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது  கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் 

மூன்று நாள் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் உற்சவ பெருமான் வள்ளி,தெய்வானை உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Monday, July 29, 2013

தாடிக்கொம்பு - ஆடித்திருவிழா


சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு


தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடித்திருவிழாவில் 
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும் ...
ஸ்ரீவிஷ்வக்சேனர், நம்மாழ்வார், ஸ்ரீரெட்டைவிநாயகர், ஸ்ரீஹயக்ரீவர், தசாவதார மூர்த்திகள், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கின்றனர். 
ஸ்ரீரெட்டைவிநாயகர்
16
தாயாரின் திருநாமம்- ஸ்ரீகல்யாண சௌந்தரவல்லி. 

அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மிகவும்  விசேஷம்! 
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்! 

தாடிக்கொம்பு ஆலயத்தில், இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் கோயிலின் நடை சார்த்துகிறபோது, கோயில் சாவியை பைரவரின் திருப்பாதத்தில் வைத்து வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது ....

 தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவொருமாதமும் தேய்பிறை அஷ்டமியின் முதல் நாள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை ஐந்து கால பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது .

இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரவருக்கு  மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக்காட்சி ..!

சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, தாடிக்கொம்பு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள 16 கரங்கள் கொண்ட சக்ரத்தாழ்வார் சிற்பம் சிறப்புவாய்ந்தது ,,,.


திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தாடிக்கொம்பு. சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில் இது! 

soundarrajaperumal temple

lamps glowing at Sri Soundararaja Perumal Temple at Thadikombu near Dindigul


http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_19.html

சிற்பக் களஞ்சியம் தாடிக்கொம்பு..

sounderrajaperumal temple


2026

242521