Sunday, July 7, 2013

காதல் கடிதம் பரிசுப் போட்டி - நவீன கடிதம்..! .

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு   நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்
ஹைடெக் கடிதம்..!

காதல் கடிதம் தீட்டவே கணிணித்திரையே காகிதம்
கரத்தில் உருண்டிடும் மௌசே பேனாவாகிப் போனதே
ஃபேஸ்புக்கும் எஸ் எம் எஸ்ஸும் இமெயிலும் ட்வீட்டரும் வாகனம்

சேட்டிலைட்டுகளும் சூரியனும் சந்திரனும் அஞ்சல்காரர்கள்
இரவுபகல் எப்பொழுதும் நினைவுகள்  நம்மைச் சேர்த்திடும்

பளிச்சிடும் கணிணித்திரையில் ஒளிர்கிறாய்
மின்னஞ்சல்  வழியாய் வந்து  தகவல் சொல்கிறாய்


கண்ணே உன் மெயில் தன்னைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ

மெமரியில்  தனிச் சிறை பிடித்தேன் Shutdownனே செய்யாமல் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய நாளும் கடிதம் தீட்டுவேன்

நீலக் கண்ணோரம் மின்சாரம் பறித்து பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் நம்மோடு
நீலப் பல்லாலே  சிரித்திடும்  நீல வானம் நாமாய் டேட்டா ட்ராஸ்பர் ஆகாதோ

இன்றோடு மின்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு
கூகுள்கள் காணாத தேடல்கள் நம் கடிதங்களில்..

 நம் பெயரே பாஸ்வேர்டாய் கண்களே பாசையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாயிரம் விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி…
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கி எழுதிய கடிதம் ..!

ஃபேஸ்புக்கில் லைக்குகளாய் ட்வீட்டரில் ஸ்டேஸ்களாய் காவியங்கள் படைத்திடுவோம்...
ஜீடாக்கில் பேசி ஸ்கைப்பில் காத்திருப்போம் தினமும் தரிசனம் பெறவே

நிலாத் தட்டு நட்சத்திரச் சோறு கைக்கழுவ கடல் கைதுடைக்க மேகம்
வானவில்லாய் கனவின் விளிம்பில் கக்கத்தில் கடிதங்கள் இதுபோதும் நமக்கு

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசம் மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்  செய்யும் விந்தை காதலுக்கு கை வந்த கலை தானே..!

விண்ணோடு மேளச் சத்தம் என்ன? மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
மனதை கொள்ளை அடித்த தந்திரமும் மந்திரமும் கடிதமாய் எழுதுவோம்

நம்  ஆயுள் ரேகையும்  ஆணி வேரும்  நம் கடிதங்கள் தான்
“நாம்  நிஜத்தை நேசிக்கிறோம்  நிழலையோ பூஜிக்கிறோம்
நம்  நிழல் விழுந்த கடிதத்தின்  எழுத்துக்களைக் கூட போற்றுகிறோம்...!

கண்ணே உன் செல்போனில் சிம்கார்டு ஆகமாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

டேட்டாககள் நிரம்பி  ததும்பி வழியும்  கோப்புகளாய்
சேமித்த டெஸ்க்டாப்பில் அன்பை வார்த்து சிலிகான் சேர்த்து 

வயரூட்டி உயிரூட்டி ஹர்டிஸ்கில் நினைவூட்டி அழியாத 
உடலோடு வடியாத உயிரோடுஆறாம் அறிவை அரைத்து 
ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி..!

தீ இல்லை புகை இல்லை  காதல் வேள்வி செய்கிறோம் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை  ஒரு காதல் நெய்கிறோம் மனதிலே

பூ இல்லை மடல் இல்லை  புது தேனை பெய்கிறோம் உயிரிலே
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்வோம்
மொத்தமாய் கோர்த்துதான்காதல் செண்டொன்று செய்திடுவோம்

ஒரு வரி ஒரு வரி நான் சொல்லஎழுந்திடும் காதல் காவியம்
அதிகாலை விடிவதெல்லாம் உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம், உயிருக்குள் ஒலித்திடும்
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்

ஐசக் அசிமோவின் வேலையோ  ஐசக் நியூட்டனின் லீலையோ 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ  நவீன உலகத்தில்  அதிசய கடிதம் ..

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி கடிதம்  கொண்டுதான் ருசியறியும்

கடிதத்தின் வார்த்தைகளில் வாழும் காதல் காவியம் .. பேனாவில் ஊற்றி 
வைத்தது நம் உயிரல்லோ ..குட்டி குட்டி கணிணி பட்டனில் வாழ்ந்திடும்..!

தவமின்றி வரங்கள் தருவதனால்  மின்சார கண்ணனோ?
ஆட்டோமேட்டிக்காய் ஆட்டோகிராப்பாய் கடிதம் எழுதவா..!


கையில் மிதக்கும் கனவா .. கை கால் முளைத்த காற்றா
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா ..

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
 பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது...

நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் இருந்தாய்! இருந்தோம்!
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன

அலையெல்லாம் நாம் எங்கே எங்கே என்றது 
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது

காதல் பாஸ்போர்ட்டில், முத்த விசாவோடு நாடு கடந்தும் 
திருமண திருநாள் இன்டர்நெட் கஃபேயில் நடக்கும் 
கடலும் கடலும் கை தட்டும்..இரவும் நிலவும் பறை கொட்டும்...


உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும் 
காதல் காதல் காதல்காதல் என்றே முழங்கிடும் காதல் கடிதப்போட்டி 

காதல் உதயத்திற்குஅஸ்தமனமே இல்லை என்பதால்...
அதற்கென ஒருமேற்கும் இல்லையென்றே ஆகிறது!

காதல் வினோதமான நெருப்பு... பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

காதல் இல்லா விடம் சூனியமாம் புவி காதலினால் நடக்கும்.
காதலுள்ளத்தைத் தடுப்பது வாழ்வை கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.

என்னில் இன்று நானே இல்லை காதல் போலே ஏதும் இல்லை
ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட

பேச நினைக்கிறேன் ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ மௌனத்தின் கர்ப்பத்தில்--------------------------------------------------------------------------------------------------------------------------

Disclaimer :
பத்தாம் வகுப்பு படிக்கும்போது பக்கத்துவீட்டுப்பெண்ணின் காதல் கதை என்று தோழி சொல்லும் போது அது அவள் கதைதான் என்று தெரியாத ட்யூப்லைட் நானாய் இருந்தேன்..

கல்லூரியில் கைரேகை பார்க்கிறேன் என்று அறிவித்ததும் என்முன் நீண்ட கரங்களில் எத்தனை காதல் கதைகள் நான் கேட்காமலே சொல்லப்பட்டன..

பளிச் எனப் புரிந்தது பக்கத்து வீட்டு கதையல்ல அவரர்களின் சொந்தக் கதையே என்று..!

நெருங்கின தோழி அறிவித்தாள் அவங்க கூட எல்லாம் பேசாதே அவர்கள் யாரையோ காதலிக்கிறார்கள் என்று.. சிரித்துக்கொண்டேன் .. 

அவள் அம்மாவும் அறியாத அவள் காதல் கதையை விளக்கமாக  
என்னிடம் எடுத்துரைத்தவள் அவள்தானே ..!

பாதகங்களை எல்லாம் எடுத்துக் கூறி காதல் ஜெயிக்காதென்பதை எடுத்துக்கூறியபோது  குமுறி அழுது சொன்னாள்.. 

சிறு வயதிலேயே சித்தர் பாடல்கள் மற்றும் பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து ஞானி மாதிரி ஆகிய உனக்கு காதல் மாதிரி மெல்லிய உணர்வுகள் புரியாது போனதில் வியப்பில்லை...என்றாள்.!

இருந்துவிட்டுப்போகட்டுமே .. அதனால் ஒன்றும் குறைவில்லை எதையும் இழக்கவில்லை வாழ்வில்..

பள்ளியின் நிர்வாகப்பொறுப்பில் இருந்த என் கணவரிடம் பள்ளி மாணவன் எழுதிய  காதல் கடிதம் கொடுக்கப்பட்டு  அறிவுரை சொல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது ..

என் கையில் கடிதத்தை கொடுத்ததும் ஒரு பக்க அளவில் இருந்த அந்தக்கடித்தில் வரிக்கு வரி இருந்த எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்தின..ஏதோ கட்டுரை நோட்டு திருத்துவது போல் திருத்தினோம்..! 

இப்போது காதல் கடிதப்போட்டி ....!
வாழ்க்கை ஒரு விசித்திரமான வட்டம்தான்..!

39 comments:

 1. வணக்கம்
  அம்மா
  அருமையான கவிதை ஒவ்வொரு வரிகளுக்கும் அருமையான படங்கள் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அம்மாவின் கணினிக் காதல் கடிதம்
  அற்புதம் .

  ReplyDelete
 3. காதல் கண்ட மனிதபூச்சி கடிதம் கொண்டுதான் ருசி அறியும்.
  உண்மை.
  நம்பெயரே பாஸ்வேர்டாய், கண்களே பாஸையாய், கைகளே ஆசையாய் வையமே கோவிலாய், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ்க வாழ்க காதல்.
  கடிதம் வெகு அழகு’ காதல் கடிதம் தீட்டவே; பாடல் மெட்டில் எழுத பட்ட காதல் காவியம்.
  வரிக்கு வரி மயக்கி விட்டீர்கள்.
  பின் குறிப்பு வெகு அற்புதம்.
  வாழ்க்கை விசித்திரமான வட்டம் தான்.
  படங்கள் எல்லாம் அருமை.
  நவீன காதல் கடிதம் காதலர்களை மறுபடி மறுபடி படிக்கச்சொல்லும்.
  வாழ்த்துக்கள்.
  காதல்ர்கள் சார்பாய் பூங்கொத்து.

  ReplyDelete
 4. அருமையான படங்களை வைத்தே ஒரு காதல் காவியம்...! அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அடடா. உங்கள் பதிவுகள் எல்லாமே வித்தியாசம்தான். கணினிக் காதல் வாழ்க.
  அதைவிட முக்கியம் உங்கள் பின்குறிப்பு. சொல்லித்தான் தெரியவேண்டுமா காதல். மனதோடு மனம் சேரும்போது மலர்ந்த பூ மறையாமல் இருக்கட்டும்.
  வாழ்த்துகள் மா.

  ReplyDelete
 6. ஆஹா! வித்தியாசமான ஹை டெக்க காதல் கடிதம்தான்.உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. இனிய அதிர்ச்சிதான்.பாராட்ட வார்த்தைகள் இல்லை
  பரிசுபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அசத்தலான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. என்னங்க இது?.. அசத்திட்டீங்களே! ஒரே வார்த்தை: தூள்!

  //மெமரியில் தனிச்சிறை பிடித்தேன்..

  விண்ணோடு மேளச்சத்தம் என்ன? மண்ணோடு சிறு தூறல் என்ன?

  தீ இல்லை; புகை இல்லை. காதல் வேள்வி செய்கிறோம் விழியிலே
  ஒரு நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறோம் மனதிலே

  கடலும் கடலும் கைதட்டும்; நிலவும் நிலவும் பறை கொட்டும்!

  காதல் உதயத்திற்கு அஸ்தமனமே இல்லை என்பதால்
  அதற்கென ஒரு மேற்கும் இல்லையென்றே ஆகிறது..

  காதல் வினோதமான நெருப்பு
  பற்ற வைத்தால் பற்றாது; அணைத்தால் அணையாது

  -- வாசித்துக் கொண்டே மேலிருந்து கீழாக இறங்கி வருகையில் மனப் படிக்கட்டுகளில் இங்கெல்லாம் நின்று நின்று ஒரு சபாஷ் சொல்லிக் கொண்டேன்.. உங்கள் வரிகளை ஒத்தி எடுத்து பதிய முடியாதாகை யால், எடுத்தெழுதிச் சொன்னேன்.

  //...எழுத்துப் பிழைகள் கண்களை உறுத்தின.. ஏதோ கட்டுரை நோட்டு திருத்துவது போலத் திருத்தினோம்... //

  ஹி..ஹி... ரசித்தேன். ஆசிரியர் மனம்!

  ReplyDelete
 9. 1]

  முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ஆக்கம்.

  இது போன்ற ஓர் பதிவினை தங்களிடமிருந்து யாருமே நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

  இன்றைய கணினி மற்றும் இதர தொழில்நுட்பக்காதலை கசக்கிப்பிழிந்து ஜூஸ் ஆக்கித்தந்துவிட்டு கடைசியில் Disclaimer என எதையோ சொல்லி சமாளித்தவிதம் மிகவும் புத்திசாலித்தனம்.

  >>>>>

  ReplyDelete
 10. 2]

  //காதல் கடிதம் தீட்டவே கணிணித்திரையே காகிதம்
  கரத்தில் உருண்டிடும் மௌசே பேனாவாகிப் போனதே
  ஃபேஸ்புக்கும் எஸ் எம் எஸ்ஸும் இமெயிலும் ட்வீட்டரும் வாகனம்//

  காதலுக்குக் கண் இல்லை என்று சொல்லுவார்கள்.

  இன்றைய காதல் கடிதத்திற்கு ‘பென்னும் [PEN] இல்லை பேப்பரும் இல்லை’ என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 11. 3]

  தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு தான்.

  >>>>>

  ReplyDelete
 12. 4]

  //சிறு வயதிலேயே சித்தர் பாடல்கள் மற்றும் பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து ஞானி மாதிரி ஆகிய உனக்கு காதல் மாதிரி மெல்லிய உணர்வுகள் புரியாது போனதில் வியப்பில்லை...என்றாள்.!//

  மிகவும் மெல்லிய உணர்வுகளை எல்லோராலும் அவ்வளவு சுலபமாக வெளிக்காட்டவா முடியும்?

  //இருந்துவிட்டுப்போகட்டுமே .. அதனால் ஒன்றும் குறைவில்லை எதையும் இழக்கவில்லை வாழ்வில்..//

  பாராட்டுக்கள், வாழ்த்துகள். கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 13. 5]

  //என் கையில் கடிதத்தை கொடுத்ததும் ஒரு பக்க அளவில் இருந்த அந்தக்கடித்தில் வரிக்கு வரி இருந்த எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்தின..ஏதோ கட்டுரை நோட்டு திருத்துவது போல் திருத்தினோம்..! //

  கண்களை உறுத்தித் திருத்தியது அந்தத் தப்புத்தவறுகள் நிறைந்த காதல்க் கடித்தத்தை மட்டுமல்ல. கண்ணை மூடிக்கொண்டு காதல் வலையில் விழ இருந்தவனின் வாழ்க்கையையே திருத்தியிருப்பீர்கள் போலிருக்கிறது. உத்தம தம்பதிகளான உங்கள் இருவரின் செயலும் பாராட்டுக்குரியது.

  >>>>>

  ReplyDelete
 14. 6]

  இந்தப்போட்டிக்கான படைப்புகளுக்கு, வேறு யாருக்குமே, நான் இதுவரை கருத்துகள் ஏதும் கூறாமல் AVOID செய்தே வந்துள்ளேன்.

  இதற்குகூட கருத்தளிப்பதா வேண்டாமா என நான் நீண்ட நேரம் யோசித்தேன்.

  உங்களின் அனைத்துப்படைப்புகளிலும் இதுவரை என் பின்னூட்டங்கள் இருப்பதால் மனது கேட்கவில்லை. இதற்கும் கருத்தளித்துள்ளேன்.

  இதற்காக ’அ வ ள்’ என்னை மன்னிப்பாளாக!

  அந்த ‘அவள்’ யார்? என்றும் POLISHED ஆகச் சொல்வி விடுகிறேன்

  >>>>>

  ReplyDelete
 15. 7]

  அவளும் ஓர் பதிவர். மிகச்சிறந்த படைப்பாளி. சிறு வயதுப் பெண். இன்னும் திருமணமே ஆகாதவள். என் மீது அளவு கடந்த பிரியமும் மரியாதையும் அவளுக்கு எப்போதும் உண்டு.

  ”போட்டியில் நான் கலந்து கொள்ளவா வேண்டாமா? உங்கள் ஆலோசனையைச் சொல்லவும். *உன் இஷ்டம்* என்று ஒரு வரியில் சொல்லி தப்பிக்கக்கூடாது, சார் ” என்று மெயில் மூலம் கேட்டிருந்தாள்.

  அவளின் நலம் விரும்பியான நான் அவளுக்கு மிகவும் விபரமாகவே, நல்லது கெட்டதையெல்லாம் எடுத்துச்சொல்லி பதில் எழுதியிருந்தேன். அவள் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதற்காகவே நான் முதல் பரிசுத்தொகையை அவளுக்கு அனுப்ப ஆயத்தமானேன்.

  அதை அறிந்துகொண்ட அவள், அதற்கு பதிலாக அதைவிட மிகுந்த VALUABLE ஆன மிகப்பெரியதொரு பரிசினை என்னிடமிருந்து எதிர் பார்ப்பதாகச் சொல்லி பதில் எழுதினாள்.

  உடனடியாக அவள் கேட்ட அந்த பரிசினை கொரியர் மூலம் அனுப்பி வைத்தேன். அவளின் சந்தோஷம் முழுவதை கொட்டித்தீர்த்து விட்டாள் கைபேசி மூலம்.

  >>>>>

  ReplyDelete
 16. 8]

  தங்களின் அருமையான வித்யாசமான அழகான ஆக்கத்திற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  இந்தத்தங்களின் படைப்பு நிச்சயமாக போட்டித் தேர்வாளர்களை சிந்திக்க வைக்கும் தான்.

  நிச்சயமாகப் பரிசு பெறப்போகும் தங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  ooooo 963 ooooo

  ReplyDelete
 17. Aha ellavarrelum pugunthu purapadum unkal thramaikku en valthukal.
  viji

  ReplyDelete
 18. உங்களிடமிருந்து ஒரு காதல் கடிதம்!
  இன்ப அதிர்ச்சி! //ஐசக் அசிமாவோ, ஐசக் நியூட்டனோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எல்லோரையும் வைத்து அற்புதம்!
  கணணி, மௌஸ், என்று ஹை-டெக் காதல் தான் இப்போதெல்லாம்.அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.


  காதல், தாய்மை இரண்டும் பாரம் அறியாது - பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால் பசியோ வலியோ தெரியாது - அருமை அருமை!

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 19. ஹை..... நீங்களும் களத்தில இறங்கிட்டீங்களா......

  ஹைடெக் காதல் - படங்கள் அருமை - அதுவும் யானை கடிதம் போஸ்ட் செய்யும் படமும், பூனை கண்ணாடி மாட்டிக்கொள்ளும் படமும் மிகவும் பிடித்தது!

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. என்னால் நம்ப முடியவில் இது தாங்கள் தான் எழுதியது என்று.
  மிக அருமை. பரிசு தங்களிற்குத் தான்.
  வாழ்த்துடன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 21. திரைப்படப் பாடல்களை கொண்டே நவீன காதல் கடிதம் படைத்துவிட்டீர்கள் .. மிக்க நன்றி

  ReplyDelete
 22. காதல் கடித போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. முக்கால்வாசி திரைபட பாடல்கள் நகலை கொண்ட கடிதம் வித்தியாசம்

  ReplyDelete
 24. புதுமையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  அந்த தோழி இதைப் படித்தால் என்ன சொல்லுவாளோ?

  ReplyDelete
 25. ungal kadhal kadithathai naan kathalikkiren .
  vaazhthukkal !

  ReplyDelete
 26. உங்க versatility வியப்பாக இருக்கிறது. டெக்னாலஜியில் முக்கி எடுத்த கடிதம். மிக வித்தியாசமானது. பின்புல விவரங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. பொதுவாக காதல் விஷயங்களை படர்க்கைப் படுத்திச் சொல்வதற்கு பாதி பயம் பாதி குற்ற உணர்வு காரணம் என்று நினைக்கிறேன். காலம் மாறி வருகிறது என்று நம்புகிறேன், பார்ப்போம்.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. வித்தியாசமான சிந்தனையும் விதம் விதமானபடங்களும் காதல் கடிதம் விதம்பிய விதம் பிடித்திருக்கு போட்டியில்
  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. ஹை டெக் காதல் கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  படங்கள் வழக்கம் போல் மிரட்டுகின்றன

  ReplyDelete
 29. வித்தியாசமான கடிதம்! பூனை கண்ணாடி போடும் அழகைப் பார்த்தபின் அடுத்தவரி படிக்க ஓடவில்லை. அங்கேயே கொஞ்ச நேரம் நின்று விட்டேன்! 'பற்றவைத்தால் பற்றாத, அணைத்தால் அணையாத காதல்...சூப்பர்! பின்குறிப்பு யோசிக்க வைத்தது.

  ReplyDelete
 30. அசத்தல் இடுகை அக்கா. வெகுவாக ரசித்தேன்.
  படங்களைத் தேடிப் தேடிப் போடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
  அருமை.

  ReplyDelete
 31. ஹைடெக் காதல் - கடிதம் படங்கள் அருமை. வெற்றிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. காதல் கடிதம் அம்மாவும் எழுகிறார் என்றதும் உண்மையில் அப்படியா என வியந்தேன் பின்னர் தன தெரிந்தது புதிய கதை சிறப்போ சிறப்பு அன்னைக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 33. படங்கள் நிறைந்த காதல் கடிதம்....
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. அடடா.... எப்படி எப்படியெல்லாம் அசத்தியிருக்கிங்க. படங்களை பார்த்தபடியே இருந்து விட்டேன். மீண்டும் திரும்ப வரிகளை படித்ததும் ஏதோ பாடல் பயில வந்த உணர்வு... அருமைங்க அருமைங்க.

  ReplyDelete
 35. படங்களனைத்தும் அருமை தோழி.ஹைடெக் கவிதை வரிகளனைத்தும் அருமை.மிகவும் இரசித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 36. அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. உங்கள் பதிவினில் வித்தியாசமான பதிவு. மிக அழகாக அருமையாக இருக்கு.நாந்தான் லேட்.நன்றி.

  ReplyDelete