Monday, July 8, 2013

ஆனந்தத்தாண்டவம்

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,

கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,

ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,

வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் பெரியத் தேர்கள் விநாயகர், முருகன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய மூவருக்கும் சிறிய தேர்கள் என சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து தேர்கள் உள்ளன. 

ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம்.
ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தில் 9-ம் நாள் திருவிழாவாக தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
dance shiva photo danceshiva.jpg
சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.
ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. 

தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. 

மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் சிதம்பரத்தில் மட்டுமே நடக்கிறது.

படைத்தல் -காத்தல் - அழித்தல் -மறைத்தல் - அருளல் - என்னும் ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.

ஸ்ரீசுதர்சன சக்கரத்தால செல்வம் கொழிக்கும் திருத்தலமா திகழ்வது திருப்பதி. 

அன்னாகர்ஷண சக்கரத்தால, அன்னத்தில் செழிக்கறது, சிதம்பரம். 

'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று போற்றப்படும்  தலம் ''

இளவேனில் காலம் துவங்கும் அற்புத ஆனி மாதத்தில், விவசாயம் செழிக்கத் தேவையான மழை வேண்டி, இறைவனுக்குச் செய்யும் உன்னத விழாவாகவும் ஆனித் திருமஞ்சன விழாவைக் கொண்டாடுகின்றனர்! 

ஆனித் திருமஞ்சன நாளில், தில்லைக் காளி அம்மனுக்காகக் காத்திருந்து, தரிசனம் தந்து திரும்புவார் ஸ்ரீநடராஜர். இதில் குளிர்ந்து, கோபம் தணிவாள் தேவி என்பது ஐதீகம்! 

ஆனித் திருமஞ்சனத்தின் கொடியேற்றத்தின்போது வணங்கி, பிரசாதமான 'பலியை’ களியைச் சாப்பிட... பிள்ளை பாக்கியம் கிடைக்கும். 

சூரியப் பார்வையில் தரிசித்தால், வெம்மை முதலான நோய்கள் நீங்கும்; சந்திரப் பார்வையில் தரிசித்தால், மனம் குளிர வாழலாம்; 
பூத வாகனத்தில் வீதியுலா வரும் சிவனாரை வணங்கினால், பிசாசங்களில் இருந்து விடுபடலாம்; 

ரிஷப வாகனத்தில் சிவனாரைத் தரிசித்தால், செய்யும் தொழில் சிறக்கும்; லாபம் கொழிக்கும்.

 ஐராவத யானையில் வலம் வருவதைத் தரிசிக்க, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியைப் பெறலாம். 

 ராவணனின் ஆணவத்தை அழித்ததன் நினைவாக, கயிலாய வாகனத்தில் வலம் வருவதைக் கண்டால், கர்வம் ஒழியும். 

பிட்சாடனர் கோலத்தில் வலம் வரும் சிவனாரைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும்; நிம்மதியான வாழ்க்கை நிச்சயம். 

திருநடனத்துடன் காட்சி தரும் ஸ்ரீநடராஜரைத் தரிசிக்க... பேரின்ப நிலை கிட்டுவதாக நம்பிக்கை..!

17 comments:

 1. ஆனந்தத்தாண்டவம் என்ற தலைப்பில் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.


  >>>>>

  ReplyDelete
 2. படங்கள் அத்தனையும் அழகு.

  ஆனித்திருமஞ்சனம் போன்ற வரலாற்றுச்சிறப்புகளும் நல்லாவே சொல்லியிருக்கீங்கோ.

  வாழ்த்துகள்.


  >>>>>

  ReplyDelete
 3. மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட ..... ...

  என நல்ல நல்ல பாடல் வரிகளைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ooooo 964 ooooo

  ReplyDelete
 4. தலைப்பைப் படித்ததுமே நடராஜப் பெருமான் பற்றியதாக இருக்குமோ என்றுதான் எண்ணி வந்தேன். அம்பலத்தாடும் அழகனின் சிறப்புகளைப் படித்து ரசித்ததோடு (வழக்கம்போல) நீங்கள் பகிர்ந்திருக்கும் படங்களையும் மிகமிக ரசித்தேன்!

  ReplyDelete
 5. படங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 6. thanks for sharing information about aani thirumanjanam

  ReplyDelete
 7. Kandu kalithirukken ev vaibavankalai neril. Tharpodu payanam cheyya mudiyadha nilayil enke ungal padhivil kandu kalikeren amma. Nandri pala.

  ReplyDelete
 8. சிதம்பரத்திலிருந்து 13 கி.மீ. யில் நான் பிறந்த ஊர். வாழ்க்கைப் பட்டு வரும் முன் ஓராயிரம் தடவையேனும் தரிசித்திருப்பேன். உங்க வாயால் கேட்கும் சுகமே அலாதிதான். வேறுபாட்டுக்கு பலன் மாறுபடுவது தங்களால் அறிந்த ஒன்று.

  ReplyDelete
 9. சிறப்பான பகிர்வு. சிறு வயதில் நெய்வேலியிருந்து சென்று வந்தது.... மீண்டும் செல்ல வாய்ப்பு என்று வருமோ!

  ReplyDelete
 10. படமும் விளக்கமும் அறுமை...

  ReplyDelete
 11. ஆனி திருமஞ்சனத்திற்கு முன்பு எல்லாம் அடிக்கடி போவோம். இப்போது உறவினர் வருகை சமயம் எல்லாம் சிதம்பர நடராஜர் தரிசனம் உண்டு.
  சிறப்பான் தகவல்கள்.படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 12. அருமையான தகவல்கள்! ஒவ்வொரு தரிசனத்திற்கும் ஒருபலனை தரும் விளக்கங்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 13. அரிய பாடல் வரிகள்! சிறந்த படங்கள்!

  ReplyDelete
 14. ஆனந்த தாண்டவம் ஆடும் அற்புதனைப் பற்றிய தகவல்கள் படித்து ஆனந்தப் பட்டேன்.
  பொன் வேய்ந்த கூரையும், திருக்குளமும், திருக் கோபுரமும் அழகு!

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு...

  ReplyDelete
 16. ஆனந்ததாண்டவம் ,ஆனித்திருமஞ்சனம் பற்றிய தகவல்கள் அருமை.

  ReplyDelete
 17. http://www.youtube.com/watch?v=hDSxU4apCpg

  ReplyDelete