Friday, July 12, 2013

க்ஷேமம் அளிக்கும் சந்திர வதனம்
தாமரை திகழும் திருக்கரமும் தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
க்ஷேமம் அளிக்கும் நல்லருளும் சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன் முன்னே சங்க பதுமநிதி
காவல் செய்யக் காட்சிதரும் கமல மாதே! வணங்குகிறேன்!
புயங்கள் நான்கு கொண்டவளே!புதிய நிலாவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!பக்தர்க் கருளைப் பொழிபவளே!
அகிலம் முழுதும் உன்னொளிதான் அடர்ந்து படர்ந்து தொடர்கிறது!
அழகே! பொறுமை பூண்டவளே!அமுதப் பாற்கடல் ஈன்றவளே!


*தூயவளே! நீ உலகன்னை!துலங்கு சக்தியின் முதற் பண்ணை!
தாயே காட்டுக கடைக்கண்ணை!தமியேன் பெறுவேன் செம்பொன்னை!
சந்திரனோடு உதித்ததனால் சந்திர வதனம் நீ பெற்றாய்!
மூர்த்தியர் மூவர் போற்றுகிற முதல்வியே! உன்னைப் பணிகின்றேன்!

எல்லா நலங்களும் ஒருங்கே சேர்ந்த லக்ஷ்மி தேவியை அவளது பல இயல்புகளுக்கேற்ப அஷ்ட லக்ஷ்மி வடிவங்களில் வழிபடுகிறோம்.. 
மகாலக்ஷ்மி (ஆதிலக்ஷ்மி,) 
தனலக்ஷ்மி,
 தான்யலக்ஷ்மி, 
கஜலக்ஷ்மி, 
சந்தான லக்ஷ்மி, 
தைர்யலக்ஷ்மி, 
விஜயலக்ஷ்மி, 
வித்யாலக்ஷ்மி. வடிவங்களில் அஷ்டலக்ஷ்மிகள் அருள் பொழிகிறார்கள்..!
தேவி பாகவதத்தில் தன் பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்றபடி லக்ஷ்மி எப்படி பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறாள் என்று விளக்கப் படுகிறது. 
அரண்மனையில் அவள் இராஜ வைபவத்தோடு 
இராஜலக்ஷ்மியாக இருக்கிறாள். 
குடும்பத்தில் அவள் கிருஹலக்ஷ்மி. 
வியாபாரிக்கு அவள் வாணிபத்தின் அதிதேவதை. வாணிஜ்யே வஸதி லக்ஷ்மீ ததர்தம் க்ருஷி கர்மணி என்பது மூதுரை. அதாவது வாணிபத்தில் வசிக்கிறாள் லக்ஷ்மி. 
 உழவுப் பணிகளில். தான்ய லக்ஷ்மி வடிவத்தில் கைகளில் நெற்கதிர்களை தேவி ஏந்தி நின்றருள் புரிகிறாள்..!
போர்க்களத்தில் அவள் வீரலக்ஷ்மி. 
வெற்றித் திருமகள் விஜயலக்ஷ்மி. 
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் 
வீடுகளும் நெடுநிலமும் தருகின்ற தனலக்ஷ்மி அவள்.
 “பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே, பத்மாலயே, பத்மதலாயதாக்ஷி என்று பாடி, இறுதியில் மகாலக்ஷ்மியே, தாமரை மலர்போன்ற உன் திருப்பாதத்தை என் முடிமேல் வைத்தருளுக” என்று பிரார்த்திப்போம்..!

14 comments:

 1. காலையில் அஷ்ட லக்ஷ்மி தரிசனம்.....

  மிக்க நன்றி.

  ReplyDelete
 2. அனிமேசன் படம் உட்பட அனைத்தும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற லக்ஷ்மிகரமான பதிவு.

  >>>>>>

  ReplyDelete
 4. ”க்ஷேமம் அளிக்கும் சந்திர வதனம்”

  சந்திர வதனம் போன்ற அழகான தலைப்’பூ”

  >>>>>>>

  ReplyDelete
 5. தேவி பாகவதத்தில் தன் பக்தர்களின் தேவைக்கு ஏற்றபடி லக்ஷ்மி எப்படிப் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறாளோ அதே போலவே, தாங்களும் தங்கள் வலைப்பதிவின் தீவிர ரஸிகர்களாகிய என்னைப் போன்றவர்களின் வேட்கைக்கு ஏற்ப, தினமும் பொழுது விடிந்தால் ஓர் உறுப்படியான நல்ல பதிவாகக் கொடுத்து அசத்தி வருகிறீர்கள்.

  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

  >>>>>

  ReplyDelete
 6. பல்வேறு லக்ஷ்மி படங்களுடன் இன்று மற்றுமொரு சூப்பரான பதிவு கொடுத்துள்ளீர்கள்.

  மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்:.

  அன்பான நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo 967 ooooo

  ReplyDelete
 7. Aha....
  Lakshmi kadaksham..
  Today is amirtha ;lakshmi virtham...
  Correct post for the day. Super.
  haiiiiiiii vijayalakshmi is glittering......
  arathi to maa is super. I enjoy all the picctures.
  very very happy dear. Thanks for the post.
  viji

  ReplyDelete
 8. 8 இலட்சுமிகள் பெயர் எழுதியது நன்று.
  மிக நல்ல பதிவு- படங்களுடன்.
  இலட்சுமி கடாட்சம் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. வெள்ளியன்று அஷ்டலஷ்மிக்களை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete

 10. முதல் முன்று பாடல்கள் அருமை. நிங்கள் புனைந்ததா.? இதுவரை நான் கேட்டதில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அஷ்ட லஷ்மிகள் தரிசனம்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 12. lakshmi kalai thaandavam aadukirathu .
  azhagu.arumai.

  ReplyDelete
 13. அஷ்டலக்ஷ்மிகளையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம் உங்கள் பதிவில்.

  ReplyDelete