Sunday, June 30, 2013

கடல் பசுக்கள் டால்பின்கள் , திமிங்கலங்களை போல இல்லாமல் அரிய கடல்வாழ் பாலூட்டியான  வேகமாக நீந்தத் தெரியாதவை..
கடல் பசுக்கள் மனிதர்களுக்கு அரிதாகத்தான் காணமுடிகின்றன..!

 டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு
முதுகு துடுப்புகள் இல்லை.

 கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிப்பதில்லை.

மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன.
எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுப்படுவதில்லை.

குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில்,
சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும்.

உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது.கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.

நிலத்தில்வாழும் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் 
கடல் அடியில் வளரும் புல்வகைகளை மேய்ந்து கொண்டிருக்கும்.

 கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதை கடல் பசுக்கள் விரும்புகின்றன,,!

தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக்களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது.

 தாய்லாந்தில்  நகரின் நினைவாக கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகக்கிடைக்கின்றன..!.
 தாய்லாந்து மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும்,
அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.

 மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை..
கடல் பசுக்களின் பற்களில் உள்ள வளையங்களைக் கொண்டு அவற்றின் வயதைக் கணிக்க முடியும்.

சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டையாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்யாத  இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
 உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

அசைவ பிரியர்களுக்காக பல நாடுகளில்  பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன.
நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை.
ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது  பிடிக்கப்படுகின்றன.
Walrus' Michael Jackson Routine

Saturday, June 29, 2013

சுவர்ண ஆகர்ஷண பைரவர்வணங்குவோர்க்கு வாழ்வு தரும் வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும் தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும் நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும் பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர் திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர் அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர் சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர் சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார்.
[Gal1]
அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி சிவபெருமானை வழிபட்டார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.
அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்த சிவலிங்கமாக காட்சியளித்தது.

பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு ' என்றும் "சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன.
[Gal1]
இலுப்பைக்குடி சுவர்ண ஆகர்ஷண பைரவர் இடது கையில் கபாலயத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் ஏந்தி அருள்கிறார்..

 சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சய பாத்திரமாக வைத்திருக்கும்சுவர்ண ஆகர்ஷண பைரவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

 வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது.

பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 தேய்பிறை அஷ்டமியில் விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட
"நாய்க்கடி பலகை'' இருக்கிறது.
நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அட்சய திருதியை தினத்தன்று சுவர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள சின்னஞ்சிறு விநாயகர்' சிற்பத்தில்  கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. 
[Gal1]
 தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது
வித்தியாசமான அம்சம். 
அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. 
[Gal1]
 அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
அரியக்குடி போஸ்ட்,
சிவகங்கை மாவட்டம்.
இலுப்பைக்குடி- 630 202, 


Friday, June 28, 2013

அற்புதங்கள் அருளும் கற்பகவல்லி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட  - கற்பகவல்லி
வேதங்கள் நான்கும் அனுதினமும் வந்திருந்து மந்திரம் சொல்லி, ஆராதிக்கும் வேத புரியாம் சுக்கிரபுரி என்ற தலத்தில் பிரம்மா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து உளமாற பூஜையில் ஈடுபட்டு கயிலாய மயிலை என பெயரும் சூட்டிய அற்புதத்தலம் மயிலை என்னும் மயிலாப்பூர். 

 இந்த ஈசனின் கிருபையாலேயே பிரம்மா தான் இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெற்றார்..

பார்வை இழந்த சுக்கிர பகவானே பார்வை பெற்ற தலம் இந்த கபாலீஸ்வர க்ஷேத்திரம். 

எப்படிப்பட்ட நோயாயினும் குணம் பெறும் என்பது, இன்றும் கண்கூடு.

கபாலீஸ்வரர் என்று  போற்றப்படும் சிவபெருமானை இங்கே பிரதிஷ்டை செய்தபோது, பகவான் மகாவிஷ்ணு ரிஷிகள் புடைசூழ கலந்துகொண்டார். 

இப்பூவுலகில் இதற்கு சமமான ஒரு புண்ணிய தேசம் கிடையாது என்று விஷ்ணுவே கூறியிருக்கும் முக்கியத்துவமும் பராக்கிரமும் நிறைந்த தலம் .. 
மகாலட்சுமி தேவியே கற்பகாம்பாளுக்கு ஆராதனை செய்தார் என்கிறது ஓலைச்சுவடி.

வெள்ளிக்கிழமைகளில், தங்க காசு மாலையிட்டு அம்பாள் கற்பகவல்லி வீற்றிருக்கையில், மகாலட்சுமியும் சரஸ்வதிதேவியும் எதிரே அமர்ந்து வழிபாடு செய்கிறார்கள். 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அன்னை கற்பகாம்பாளை வழிபடுபவருக்கு கண்டிப்பாக மாங்கல்ய பலம் சேருவதுடன் சகல ஐஸ்வர்யங்களும் குவியும் என்கிறார், அகஸ்தியர்.

மயில் ரூபத்தில் பார்வதி பிராட்டியார் இந்த கயிலாய மயிலையில் தவமிருந்து சிவதரிசனம் பெற்றதால் மயிலை இறைவனின் அருளாகிய காந்த அலைகள் நிரம்பித் ததும்பும் அற்புதம்  கபாலீஸ்வரன் சந்நதியில் வினாடி பிசகாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

ராமர், லட்சுமணனுடன், தனது முக்கிய சேனைத் தலைவர்களுடன், குல குருக்களுடன், ஆராதித்த தலம் இந்த கபாலீஸ்வரர் சந்நதி. அப்போது அங்கு ‘ஜெய ஜெய ராமா, ஜெய ஜெய ரகுராமா, ஜெய ஜெய சீதாராமா,’ என அசரீரி முழங்கியது. பின் ராமர் ராவணேஸ்வரனை எளிதில் வென்று, சீதையை மீட்டார். ஜெயராமனானார். ‘இன்றளவும்  என்றும் ஆஞ்சநேயர் இந்த ராமநாமத்தையே மந்திரமாக்கி பாடி வருகிறார்’ 
Kapaleeswarar
ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு முதல் அடியான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என எடுத்து தந்து ஆசி ஈந்தது, இங்குள்ள கற்பகவல்லி நாயகி என்று நாடி  கூறுகிறது. 
இந்த மயிலை மாடவீதியில்தான், கற்பகவல்லி சந்நதிக்கு நேர் எதிராக இருந்த வீட்டில்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பது அகஸ்தியர் வாக்கு.

கபாலீசன் அருளால், இறந்து போன சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவை உயிர் பெற்று மீண்டார் என்றால், சிவனின் கீர்த்தியை, கபாலீஸ்வரனின் கிருபையை என்னென்பது! 
வாயிலார் நாயனார் முக்தி பெற்ற தலம் . 

ஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வரால் போற்றிப் பூஜிக்கப்படுவது கபாலீஸ்வரன் ஆலயம். 
உற்சவ காலங்களில், அதிகார நந்தி மற்றும் கிளி வாகனங்களில் ஈஸ்வரன் வருகையில், தேவர்களும், சப்த ரிஷிகளும், சப்த மாதாக்களும், சித்தர்களும், இன்னபிற சித்தர்களும் அரூபமாக கலந்து கொண்டு சிவனை ஆராதிக்கின்றனர். 


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper