Monday, June 24, 2013

விஸ்வரூப சிவபெருமான்..

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா!

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா

எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா

பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! மங்கா மதியானவா


 அயோத்தியை தலைநகரமாக கொண்டு  அரசாண்டு வந்த சூரிய குலத்து வேந்தன் சகரன், தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேத யாகம் தொடங்கினான். 

இந்திரன், வேள்விக் குதிரையை கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் கபில முனிவர் தவம் செய்யும் குகையில் கட்டி வைத்தான்.

 சகரன், குதிரையைத் தேட தனது அறுபதாயிரம் புதல்வர்களை அனுப்பினான். தவத்தில் ஆழ்ந்திருந்த கபிலர்தான் குதிரையை கவர்ந்து கொண்டு வந்திருப்பார் என எண்ணிய சகர புத்திரர்கள் கபிலரைத் தாக்கினர். கடுங்கோபம் கொண்ட கபிலர் தம் தவ வலிமை யால் சகர புத்திரர்கள் அனைவரையும் சாம்பலாக்கினார்.

 சகரன், அவர்களைத் தேடிவர தனது பேரன் அம்சுமானை அனுப்பினான். கபிலரை சந்தித்த  அம்சுமான் அவரைப் பணிந்து வணங்கினான்.

ஆகாச கங்கையை பூமிக்கு  கொண்டு வந்து அந்தப் புனித நீரினால் பாதாளத்தில் உள்ள சகர குமாரர்களின் சாம்பலைக் கரைத்தால், அவர்கள் சாபம் நீங்கி நற்கதியடைவார்கள்  என்பதையும் தெரிந்து கொண்டான்.

கபிலரின் அனுமதியோடு யாகக் குதிரையை மீட்டு வந்து சகரனிடம் சேர்த்தான். வேள்வி இனிதே நிறைவேறியது. 

‘ பாரத தேசமெங்கும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடு.

1008வது லிங்கப்  பிரதிஷ்டையின் போது சாபம் நீங்கி நலம் பெறுவாய்’’ என்றார். -

நிறைவாக 1008வது லிங்கத்தை பகீரதன் மனதில் நெருப்பு மலர்களாய் பூத்துக் குலுங்கும்  ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் லிங்கப் பிரதிஷ்டை செய்தான்.

அபிஷேகம் செய்ய புனித நீர்கங்கை பிரசன்னமானாள்.

 ஈசன் தோன்றி பகீரதனின் நோய் தீர்த்த ஈசன், இந்த புரசு வனத்திலேயே, ‘கங்காதரேஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டு, இன்றும் தம்மை நாடிவரும்  அடியார்களின் துயரங்களை துடைத்து அவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து அருள்கிறார்.

 புரசு வனம் பூத்துக் குலுங்க எரியும் தழல் போன்று காட்சி தரும் புரசு மலர்களின் காட்சி புரச மரங்கள் எல்லாம் வேள்வி செய்வதாய் தோன்றும்..

புரசு வனத்துப் பறவைகள் எழுப்பும் விதவிதமான ‘கீச் கீச்’ ஒலிகள் வேதகானமாய் அந்த பிரதே சத்தைப் புனிதப்படுத்தும்..

பார்த்தவுடன் மனதில் பசுமையாய் ஒட்டிக் கொள்ளும் அழகு வனத்தில் வாசம் செய்ய அரனுக்குள் ஆசை  எழுந்தது. அன்று புரசு மரக்காடாய் இருந்த பகுதி, இன்று புரசைவாக்கம் என்ற பெயரோடு சென்னையின் மத்தியில் இருக்கிறது. சென்னை-எழும்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் புரசைவாக்கம் செல்லும் சாலையில் கங்காதரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய கோயிலின் ராஜகோபுரம் அழகாய், கம்பீரமாய் காட்சி தருகிறது. கோயிலுள் நுழைந்து கொடிமரம், பலிபீடம், நந்தியை கடந்து காட்சி தரும் கங்காதரேஸ்வரரை முதல் தரிசனமாக தொலைவிலேயே கண்ணாரக் கண்டு பிராகாரத்தை வலம் வரலாம்.

முதலில் வைத்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட லிங்கத்திருமேனி தரிசனம் தருகிறது. இவர் முதலில் மேடவாக்கம் குளச்சாலையில் ஒரு பூந்தோட்டத்தில் இருந்தார்.

அருகில் சுடுகாடு. இந்த வைத்தீஸ்வரரை தினமும் வழிபடும் பூக்கார பக்தர், தினமும் கங் காதரேஸ்வரருக்குப் பூ கொண்டு செல்வார். சுடுகாட்டுப் புகை பூந்தோட்ட ஈசன் மீது வீசிக் கொண்டிருப்பது அவரை வருத்தியது. 

உடனே வைத்தீஸ்வரரை தான் பூ கொடுக்கும் கங்காதரேஸ்வரர் கோயில் அருகே கொண்டு வந்து நிறுவிவிட்டார். அன்று முதல் இவர் இங்கேயே குடிகொண்டு அருள்பு ரிந்து வருகிறார்.

இவருக்கருகில் விநாயகருக்கு தனிச் சந்நதி. அதற்கு எதிரே வில்வ மரமும்  அம்பாள் தெற்குமுகமாய் நிற்கும் அன்னை பங்கஜவல்லி  சந்நதியின் கொடிமரமும் சிம்மமும் காட்சி தருகின்றன.

 வட இந்திய பக்தர்கள் தம் வழக்கப்படி தம் கரங்களாலேயே அபிஷேக, ஆராதனை செய்து வழிபடுவதற்காக  பிரத்யேக ஏற்பாடு லிங்கமும் நந்தியும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இந்த லிங்கத் திருமேனிக்கு 

 வியப்பால் விழிகளை விரிய வைக்கும் சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சிவபெருமானின் விஸ்வரூப தரிசன சிவபெருமானுக்கு கீழே லிங்கத் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்வது போல அமைத்துள்ள சுதைச் சிற்பம், இந்த ஆலயம்  அமைந்த கதையை பளிச்சென்று விவரிக்கிறது.

தினமும் மாலை ஏழு மணிக்கு இந்த இடத்தில் பக்தர்கள் ஆலய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வசதியாக ஒளி-ஒலி காட்சி நடத்தி வருகிறது, ஆலய நிர்வாகம். 

கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் சிவபெருமானின் சிலை, வண்ண விளக்குகளுக்கு மத்தியில் அழகாய் ஒளிர, கம்பீரமாய் ஒரு குரல் ஆலய வரலாற்றை சொல்லக் கேட்பது சுகமான தெய்வீக அனுப வம்.

 சிவனை வலம் வந்து வணங்க மென்மையான பாதையும் பாதை இருநெடுகிலும் கண்கவர் பூச்செடிகளையும் வைத்திருக்கிறார்கள்.

பிராகாரத்தில் சத்தியநாராயண பெருமாள் கோயில் அருகே நெருப்பு மலர்கள் பூத்துக் குலுங்கும் புரசு மரமும் அதற்கு கீழே கங்கா தீர்த்தமும் இ ருக்கின்றன. அருகில் அரை ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் இருக்கிறது. இக்குளத்தை இந்த கோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழன் வெட்டியதாக  கூறப்படுகிறது. 

 பாணலிங்கம், நவகிரக சந்நதி, வள்ளலார் மற்றும் பாலசுப்ரமணியர் சந்நதிகள் உண்டு ...

 சூரிய-சந்திரர்களையும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கல் தூண்களையும் காணலாம்.

உள் பிராகாரத்தில் சோமாஸ்கந்தருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் தனி சந்நதிகள். அடுத்து நால்வர், நாகர்கள், தவக்கோலத்தில் பகீரதன், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் வீர பத்திரர் ஆகியோரின் அற்புத தரிசனம் மனதை குளிர்விக்கிறது.

அதற்கருகில் பூண்டி நீர்த்தேக்கம் உருவான போது அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்த  ஊன்றீஸ்வரர், மின்னொளிநாயகி, உச்சிஷ்ட கணபதி, ஆறுமுகம், துர்க்கை, பைரவர் ஆகியோரை அடுத்தடுத்து தரிசிக்கலாம். கோஷ்டத்தில் விநாயகர்,  தட்சிணாமூர்த்தி, நாராயணன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரின் தரிசனமும் கிடைக்கிறது.

கருவறையில்  பகீரதனின் நோய் தீர்த்த ஈசனின் அற்புத தரிசனம்! தீப ஒளியில் மின்னும் கருணைக் கடலான  கங்காதரேஸ்வரரின் லிங்கத்திருமேனியை வாசனை மலர்களாலும் வில்வ தளங்களாலும் அலங்கரித்துள்ளனர்.

அரனின் தரிசனம், அப்படியே மனத் துயரையெல்லாம் துடைத்தெறிகிறது.

. தெற்கு முகமாய் நின்றத் திருக்கோலத்தில் காட்சி  தரும் அன்னை பங்கஜவல்லிக்கு நான்கு கரங்கள். மேலிரு கரத்தில் பாசம், அங்குசம் தாங்கியிருக்கிறாள். கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தம்  காட்டி, தம்மை நாடி வருவோருக்கெல்லாம் இடர்களிலிருந்து அபயமும், கோரும் வரமும் தந்தருள்கிறாள்.
 புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அறுபத்து மூவரின் அற்புத தரிசனம் கிடைக்கிறது.

ஆலய வளாக  சுவர்களில் சுதைச் சிற்பமாய் அமைத்துள்ள ஈசனின் திருவிளையாடல் காட்சிகளும் ஸ்தல வரலாற்று காட்சிகளும் நிதானமாக, விரிவாக நின்று கவனிக்கச் சொல்கின்றன.

14 comments:

 1. அருமை. அருமை.
  இறுமையில் கிடைக்க வொண்ணா இறையின் தரிசனம்
  கிடைக்க அடைந்தேன் பெருமை.

  சுப்பு தாத்தா.
  subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 2. கங்காதரேஸ்வரர் மகிமையை தெரிந்து கொண்டதோடு புரசைவாக்கம் பெயர் வரலாறையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி... நன்றி...

  ReplyDelete
 3. கண்குளிரச் செய்யும் தரிசனம்!

  எந்தக் கோவிலும் நீங்க எடுத்துக் காட்டும் விதத்தில் மேலும் மெருகேறுகிறது.

  ReplyDelete
 4. பகீரதன் கதையை நன்கு அறிந்து கொள்ளும் விதமாய் அமைந்துள்ள பதிவு.
  ஓம் நமச்சிவாய !!

  ReplyDelete
 5. அற்புதம்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. thanks for sharing wounderful pictures of lord shiva

  ReplyDelete
 7. கோவிலின் தோற்றமும் சிறப்பும் கேட்கும்போதே தோழன் சிவனின் சன்னதி சென்று பார்க்கும் ஆவல் வந்துவிட்டது நன்றி பகிர்விற்கு

  ReplyDelete
 8. இன்றைய தங்களின் பதிவு வெற்றிகரமான 950வது பதிவாகும்.

  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  MY HEARTIEST CONGRATULATIONS ! ;)))))

  >>>>>

  ReplyDelete
 9. ஆயிரத்தை எட்ட இன்னும் 'ஐம்பதே ஐம்பது' பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன. ;)

  ’அந்த நாளும் வந்திடாதோ’ என ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  எழுத்துலக / வலையுலக ... வெற்றி வீராங்கனையான தங்களுக்கு, என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 10. ”விஸ்வரூப சிவபெருமான்” பற்றிய படங்களும், விளக்கங்களும் அருமையாய் உள்ளன.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  வாழ்க!

  ooooo 950 ooooo

  ReplyDelete
 11. மனதிற்கும் கண்களுக்கும் ஆனந்தவிருந்து. அற்புதப் பதிவு சகோதரி!
  சிந்தை நிறைந்த கண்கொள்ளாக காட்சிகள்!

  அருமை. பகிர்விற்கு நன்றிகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. புதியதகவல் புரசு மரம். புரசைவாக்கம் பற்றியும் அறிந்துகொண்டேன்.
  தகவல்களும்,படங்களும் அருமை.வாழ்த்துக்கள்,நன்றி.

  ReplyDelete
 13. இனிமையான பாடலுடன் பதிவின் தொடக்கம் அருமை.. அப்பனின் விஷ்வரூப தரிசனம் தகவல்களும் படங்களும் அற்புதம்.

  ReplyDelete
 14. புரசைவாக்கத்தில் பல வருடங்கள் இருந்தவர்கள் நாங்கள். தினமும் இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடுவோம். அதுமட்டுமல்ல; திருமுருகக் கிருபானந்த வாரியார், நீடாமங்கலம் திரு கிருஷ்ணமூர்த்தி பாகவதர், திரு பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் என்று பல பல பெரியவர்களின் உபந்யாசங்களும் இந்தக் கோவிலில் நடைபெறும். அவற்றையெல்லாம் கேட்டு வளர்ந்தவள் நான்.
  நீங்கள் எழுதியதைப் படிக்கப் படிக்க பழைய நினைவுகள் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன.

  ReplyDelete