Tuesday, June 25, 2013

அமுதப் பாற்கடல்தாமரை திகழும் திருக்கரமும் தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்
க்ஷேமம் அளிக்கும் நல்லருளும் சேவிப் பார்க்கு நிறைவரமும்
மூவர் போற்றும் பெருமையுடன் முன்னே சங்க பதுமநிதி
காவல் செய்யக் காட்சிதரும் கமல மாதே! வணங்குகிறேன்!

புயங்கள் நான்கு கொண்டவளே!புதிய நிலாவின் வடிவினளே!
பயன்படு செல்வம் தருபவளே!பக்தர்க் கருளைப் பொழிபவளே!
அகிலம் முழுதும் உன்னொளிதான் அடர்ந்து படர்ந்து தொடர்கிறது!
அழகே! பொறுமை பூண்டவளே!அமுதப் பாற்கடல் ஈன்றவளே!

தூயவளே! நீ உலகன்னை!துலங்கு சக்தியின் முதற் பண்ணை!
தாயே காட்டுக கடைக்கண்ணை!தமியேன் பெறுவேன் செம்பொன்னை!
சந்திரனோடு உதித்ததனால் சந்திர வதனம் நீ பெற்றாய்!
மூர்த்தியர் மூவர் போற்றுகிற முதல்வியே! உன்னைப் பணிகின்றேன்!

“பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே, பத்மாலயே, பத்மதலாயதாக்ஷி என திகழும் மகாலக்ஷ்மியே, தாமரை மலர்போன்ற உன் திருப்பாதத்தை என் முடிமேல் வைத்தருளுக”

எல்லா நலங்களும் ஒருங்கே சேர்ந்த லக்ஷ்மி தேவியை அவளது பல இயல்புகளுக்கேற்ப அஷ்ட லக்ஷ்மி வடிவங்களில்  வழிபடுகிறோம்..

 மகாலக்ஷ்மி (ஆதிலக்ஷ்மி,) 
தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, 
சந்தான லக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி. 

தேவி பாகவதத்தில் தன் பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்றபடி லக்ஷ்மி எப்படி பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறாள் என்று விளக்கப் படுகிறது. 

அரண்மனையில்  இராஜ வைபவத்தோடு இராஜலக்ஷ்மியாக இருக்கிறாள். 

குடும்பத்தில் அவள் கிருஹலக்ஷ்மி. 
ஒரு வியாபாரிக்கு அவள் வாணிபத்தின் அதிதேவதை.
வாணிஜ்யே வஸதி லக்ஷ்மீ ததர்தம் க்ருஷி கர்மணி என்பது மூதுரை.
 வாணிபத்தில் வசிக்கிறாள் லக்ஷ்மி. 
உழவுப் பணிகளில். தான்ய லக்ஷ்மி வடிவத்தில் 
கைகளில் நெற்கதிர்களை தேவி ஏந்தி நிற்பதைக் காணலாம். 

போர்க்களத்தில் அவள் வீரலக்ஷ்மி. 

வெற்றித் திருமகள் விஜயலக்ஷ்மி. 

அமுதப்பாற்கடலில் தோன்றிய அமுதமாய் திகழும் 
அஷ்டலக்ஷ்மிகள் வாழ்வில் இனிமை சேர்ப்பார்கள்..!ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் தருகின்ற தனலக்ஷ்மி - அமுதப்பாற்கடல் வழங்கிய அமுதப்பொற்பாவை அவள்..
Photo: JAI MATA DIPhoto: Gliterring: The golden idol of Sri Swarnalakshmi to be installed at the Narayani temple, Sripuram, Vellore.PhotoPhoto: <3 meri pyari ma <3PhotoPhoto: Sri Meenakshi And Sundareshwara swamy thirukalyanam ....!!!Photo: Mahalakshmee namosthuthe .....

15 comments:

 1. நல்ல படங்கள்...

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அருமையான படங்கள் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. பாற்கடலைப் பற்றி ஒன்றும் என் கட்டுக்குத் தென்படவில்லை.

  ReplyDelete
 3. அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

  ooooo 951 ooooo

  ReplyDelete
 4. அமுதப் பாற்கடலில் நானும் ஒரு துளித் தேண், சுவைத்தேன் மகிரழ்ந்தேன் பக்திப் பாற்கடலில் மிதந்தேன். நன்றி

  ReplyDelete
 5. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. Aha ahahaha......
  I dont find words to appreciate you dear. What a pictures. I just love the Golden Lakshmi statue and I dontwant to close it at all.
  Very fine very very fine. Thanks for sharing.
  viji

  ReplyDelete
 7. மங்களம் பொங்கும் அழகான படங்கள்.. அழகான பகிர்வு.

  ReplyDelete
 8. மனதில் அமைதி தங்க
  மங்களம் எங்கும் முழங்க
  இதயம் மகிழ்ந்தே பொங்க
  வாழ்த்தினேன் மேலும் ஓங்க!

  அனைத்தும் அற்புதம் சகோதரி!
  இனிய வாழ்த்துக்கள்! நன்றிகள்!

  ReplyDelete

 9. நினைப்பவர்க்கு நினைத்த உருவில் காட்சி தரவேண்டியது அன்னையின் கடமையல்லவா.!

  ReplyDelete
 10. அஷ்டலக்ஷ்மி பற்றிய பதிவு அருமை!

  ReplyDelete
 11. படங்கள் மனத்தைக் கவர்ந்து சென்றது தோழி !!

  ReplyDelete
 12. அத்தனையும் அருமை.

  ReplyDelete
 13. படங்கள் அனைத்தும் மிக அழகு!

  ReplyDelete
 14. படங்கள் அழகாக இருக்கின்றன. அமுதபாற்கடல் ஈன்றவளின் பலமுகங்களை அறியத்தந்தமை அழகு.நன்றிகள்.

  ReplyDelete