Wednesday, June 26, 2013

வளம் வர்ஷிக்கும் வராஹமூர்த்தி


பாசிதூர்த்துக் கிடந்த 
பார்மகட்குப் பண்டொருநாள் 
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம் 
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் 
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே  -- என்று  ஆண்டாள் போற்றுகிறாள்..

வராஹ அவதாரம் மற்றவற்றைக் காட்டிலும் பெருமை வாய்ந்ததாகிறது.
எந்த உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி வைத்தானோ அதே உலகமானது இந்த வராஹ அவதாரத்திலே பகவானின் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஏதோ சிறு அழுக்கு போல் துளியூண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
உலகையே மூக்கின் மேலே தரிக்கிறான்.

அரக்கன் இரண்யாட்சன்  பூமியை பந்தாக்கி பாதாள லோகத்திற்கு
எடுத்து சென்று மறைத்து வைத்தான்.

தன்னை மீட்கும்படி பூமாதேவி மகாவிஷ்ணுவிடம்   வேண்டினாள்.
அவரும் வராக அவதாரம் எடுத்து பாதாளம் சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார்.

அந்த ஆதிவராகப் பெருமாள் திருவருள்புரியும் கும்பகோணம் தாயார் அம்புஜவல்லியுடன் வராகதீர்த்தத்தையே தல தீர்த்தமாகக் கொண்டு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்படி பூஜைகளை   வராகமூர்த்தி ஏற்றருளும் திருத்தலம் ...

கும்பகோணத்தில் மகிமை மிக்க மகாமகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வராகமூர்த்தி எழுந்தருளிவிட்டதால்   இவர் ஆதிவராகர் என வணங்கப்படுகிறார்.

இவரே கும்பகோணத்தில் திருவருள்புரியும் தெய்வங்கள் அனைவருக்கும் முதன்மையானவர். 
மூலக்கருவறையில் ஆதிவராகர் பூமாதேவியை தன் இடது பக்க மடியில் அமர்த்திய திருக்கோலத்தில்   அருட்காட்சியளிக்கிறார்.

பூமாதேவி திருமாலை வணங்கிய நிலையில் அமர்ந்தருள்கிறாள்.

தினமும் இந்த ஆதிவராகருக்கு அர்த்தஜாம பூஜையின் போது கோரைக்கிழங்கு   மாவுருண்டையை நிவேதனமாகப் படைக்கின்றனர்.

 அமர, படுக்கப் பயன்படுத்தும் பாய்,   கோரைப் புல்லின் அடியில் முளைப்பதே   கோரைக்கிழங்கு.

அதைப் பொடித்து அதனுடன் அரிசிமாவு, சர்க்கரை, நெய் மற்றும் வாசனைப் பொருட்கள் கலந்து உருண்டையாகப் பிடித்து வராகமூர்த்திக்கு நிவேதிப்பர்.   மறுநாள் காலையில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர். பூமியை இரண்யாட்சனிடமிருந்து மீட்டு வந்த பெருமாள் என்பதால், பூமிக்குக் கீழே விளையும்   கிழங்கு கலந்த நிவேதனம் இந்த மூர்த்திக்கு படைக்கப்படுகிறது. 

 உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தன் இடது பாதத்தை ஆதிசேஷனின் மீது வைத்தபடி அருட்காட்சி தருகிறார்.

அவருக்கு முன்பாக உள்ள   வராக சாளக்கிராமத்தில் சங்கு, சக்ர ரேகைகள் உள்ளன.

அந்த சாளக்கிராமத்திற்கு தினமும் பாலபிஷேகம் நடத்தப்படுகிறது.

பிராகாரத்தில் விஷ்வக்சேனர், நிகமாந்த   மகாதேசிகர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன.

 துளசி மாடத்தின் கீழ் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்த   வராகசுவாமியை வணங்கி தீபமேற்றி வழிபடுகின்றனர்.

வராக தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே உள்ளது.

சார்ங்கபாணி, சக்ரபாணி ஆலயங்களுக்கு மிக அருகே இத்தலம்   உள்ளது.

வராக ஜயந்தி அன்று ஆலயம் திருவிழாக்கோலம் காணும்.

திருமணத் தடை நீங்க,   குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, நிலம் வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்த ஆதி வராகர் திருவருள் புரிகின்றனர்.Lord Varaha and Bhu Devi  Pralaya-Varahanatha Swami Temple, Kallahalli14 comments:

 1. Superb !

  EXcellent post !!

  Thanks for sharing !!!

  ALL THE BEST !!!!

  OOOOO 952 OOOOO.

  ReplyDelete
 2. ஆதி வராக சுவாமி கோவில் போய் இருக்கிறேன். சுவாமி பற்றிய அருமையான விளக்கங்களுடன் படங்களும் மேலும் சிறப்பு சேர்க்க பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சிறந்த தகவல்களுடன் படங்கள் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. சிறந்த படங்கள் மற்றும் தகவல்கள். கடைசியிலிருந்து இரண்டாவது படம் மிகவும் பிடித்தது. என்ன ஒரு வேலைப்பாடு.

  ReplyDelete
 5. வராஹா மூர்த்தி பற்றியத தெரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
  உங்கள் படங்கள் தெய்வீக மணம் கமழ்கிறது.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 6. excellent pictures of varaga murthi thanks for sharing

  ReplyDelete
 7. வராஹ மூர்த்தி பற்றி இவ்வளவு விடயங்கள் நான் அறிந்ததே இல்லை.
  அழகிய படங்களுடன் அற்புதப் பதிவு.
  பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!!

  ReplyDelete
 8. வராஹமூர்த்திசுவாமியின் தகவல்,படங்கள் எல்லாமே சிறப்பு.நன்றிகள்.

  ReplyDelete
 9. As ussual fine pictures. Nice post. Thanks for sharing.
  viji

  ReplyDelete
 10. ரசித்தேன்... படங்கள், கதைகள் அருமை!!!

  தொடருங்கள், வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. ஆதிவராக சுவாமியின் வரலாறும் புகைப்படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. அனைத்தும் புதிய தகவல் எனக்கு. படங்களுடன் சிறப்பு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete