Saturday, June 22, 2013

உலக இசை தினம்வளரும்  வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் 
ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 
இன்பம், துன்பம் என்று அனைத்து தருணங்களிலும் மனித வாழ்வில் 
இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

 இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர்.
 "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின.
நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது.

நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது.

இசையை ஒரு பூசையாகச் செய்யும் போதுதான் அது அதிக சக்தி பெறுகிறது.''
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் 
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே

கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே
முகலாய பேரரசர்  அக்பரின் அவையில் சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்  என்ற இசைக்கலைஞர்  தன் குருவான ஹரிதாசரிடம் கற்ற ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, அணைந்து இருந்த விளக்குகளை ஒளிரச் செய்தாராம்..!.

இசையால் வசமாக இதயமேது?

இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை
நிகழ்த்திக் காட்டியுள்ளனர். 

தியாகராஜ சுவாமிகளும் ‘ஜோதிஸ்வரூபிணி’ 
என்ற ராகத்தைப் பாடி தீபத்தை எரியச் செய்துள்ளார். 

மும்மூர்த்திகள் எனப் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள்; ராமதாசர், கபீர்தாசர், துளசிதாசர், மீராபா இப்படிப் பலர் இசையால் இறைவனின் பேரருளைப் பெற்றதுடன், நமக்கும் வழிகாட்டினார்கள். 
அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். 

‘இசைந்த பண் எழுத்தும் நீ’ என்று இறைவன் போற்றித் துதிக்கப்படுகிறார் ..

முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு சமயம் எட்டயபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் மரங்கள் பட்டுப்போய், பயிர்கள் காய்ந்து மக்கள் குடிதண்ணீர் இன்றித் தவிப்பதைக் கண்டு வருந்தினார். ‘அம்ருத வர்ஷினி’ ராகத்தில் ஆனந்தாம் ருதவர்ஷிணி என்ற பாடலைப் பாடினார். 

‘வர்ஷா, வர்ஷா’ என்று அவர் பாடுகையில், மழை கொட்டித் தீர்த்தது. 

பின்பு அவர் ‘ஸ்தம்பய’ என்று பாடியதும்தான் மழை நின்றதாம்!

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் மூடிய கதவு திறக்கவும், மீண்டும் மூடவும் தேவாரம் பாடினார் என்பது வரலாறு.

‘சம்பந்தர் பெருமான் இயற்றிய கோளறு பதிகமும், அருணகிரிநாதர் இயற்றிய ‘நாள் என் செய்யும்’ என்னும் கந்தரலங்காரப் பாடலும் கிரக தோஷங்களைப் போக்கவல்லவை.

திருமாலின் கரத்தில் சங்கு;
கண்ணனிடம் புல்லாங்குழல் என்று இசைக்கருவிகள். 

தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவனும் வீணையுடன் காட்சி தருகிறார்.  

கலைமகள் வீணையையும் நாரதர் தம்பூராவையும் மீட்ட, 
நந்தி மத்தளம் வாசிக்க, நடராசர் ஆடுகின்றார்.
தெய்வங்களும் இசையுடன் ஒன்றும்போது, அந்த இசையின் பெருமை எல்லை காணமுடியாமல் திகழ்கிறது ...!

நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்ட தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், இசைப்பண்கள் யாவும் தமிழும் இசையுமாக இணைந்த கலந்த பொக்கிஷங்கள்.

வீணை கொடியுடைய வேந்தன்
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்  பத்துத்தலை ராவணன்
கயிலை நாதரை தன் கானத்தால் கவர்ந்த ராகம் - காம்போதி
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு,
தனிமையை விரட்டும் கருவி 

கவலையை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது குறையும்  
அதே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள். 

அப்படி தான் இசையும். கவலையாக இருக்கையில்  பிடித்த பாடல்களை கேட்டால் கவலை குறையும். 

 மகிழ்ச்சியாக இருக்கையில் இசையைக் கேட்டால் அது அதிகரிக்கும். 
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா’ என்று மனத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் உற்சாகத்தையும் தரவல்லது இசை. 

எந்த எல்லையும் கட்டுப்படுத்த பொழுதுபோக்கு அம்சமாகவும் 
அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும் என்கிற  பொறுப்பு இசை கலைஞர்களுக்கு உள்ளது. இசைக்கும், சமூக பொறுப்பு உள்ளது.

இசை எனது மதம்
இசை உள்ளவரை, நீ இசையாகவே இரு - 
இசை உணர்ச்சியின் சுருக்கெழுத்தாக இருக்க வேண்டும் 
இசை கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டம் 
இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - 


இசையால் விளைந்த அதிசயங்கள்தான் எத்தனை எத்தனை?! 
இசையில் தன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என்று கர்வம் கொண்டு, ‘பாண்டிய நாட்டில் என்னை வெல்ல யாராவது இருக்கிறார்களா’ என்று அறைகூவல் விடுத்த பாடகர் ஹேமநாதனின் கர்வம் போக்க, சொக்கநாதர் மதுரையில் புரிந்த லீலை இசையின் மேன்மையை விளக்கும் ..

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை   - திருவிளையாடல்


இசை, வேறுபாடு இல்லாத எல்லையற்ற வானம் போன்றது. 

கிராமப்புற மக்கள் வயல்களில் வேலை செய்து கொண்டே பாடும் எளிமையும் இனிமையுமான நாட்டுப் பாடல்கள் முதல் திருமணம் என்றால் நலங்கு, ஊஞ்சல், வாழ்த்துப் பாக்கள்... அந்தந்தப் பண்டிகைகளுக்குரிய பாடல்கள் எல்லாமே இசை வடிவானவை!
வாடிய பயிர்கள் இசையைக் கேட்டுத் துளிர்க்கவும், 
நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் கூட இருக்கிறது இசை இன்பம்!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?

இசை ஒரு வேள்வி...
ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’, 
மன அழுத்தத்துக்கு ‘லதாங்கி’, 
ஞாபகமறதி, அம்னீஷியா போன்ற நோய்களுக்கு ‘ரேவதி’, 
பால்வினை நோகளுக்கு ‘மார ரஞ்சனி’, 
சர்வரோக நிவாரணியாக ‘ஸ்வேதாம்பரி’... 

இப்படி பற்பல ராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. 

இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே
கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். 

ஹிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின்
இசை குணமாக்கி விடுகிறதாம். 
அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 

மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.

பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது. 

இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.

இசைக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு20 comments:

 1. சிறப்பான பாடல்... படங்கள் வழக்கம் போல் அருமை...

  தகவல்கள் விளக்கங்கள் அனைத்தையும் ரசித்தேன்....

  நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. எப்படிதான் தினங்களை கண்டு பிடிகிறீங்களோ.
  இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை.
  நோய்களுக்காண ராகங்களை பட்டியலிட்டது சிறப்பு.

  ReplyDelete
 3. ”உலக இசை தினம்” வாழ்த்துகள். ;)))))


  நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன்.


  >>>>>

  ReplyDelete
 4. Aha .....
  Now only i am knowing about world music day. Really you are great dear
  What a pictures and what a narration
  Do you know i sing all the songs you referred in this post.(nobody is in my house...Thank God).
  Really i enjoy the post dear.
  viji
  .

  ReplyDelete
 5. இசைக்கு மயங்காதார் எவர் உண்டு! சகல ஜீவராசிகளும் இசைக்கு மயங்குமே! உங்கள் செய்திகள், படங்கள் எல்லாம் மயங்கவைத்து விட்டன. வாழ்த்துக்கள்.
  கல்லும் கனியும், புல்லும் இசையும் அற்புதம் இசைக்கு உண்டு.
  நன்றி.

  ReplyDelete
 6. இசையால் வசமாக இதயம் எது????

  அத்தனை சிறப்புமிக்க பதிவும் படங்களும் இன்று.

  பதிவைப் பார்க்கும்போதே ஆனந்தம் மேலோங்குகிறதே.

  அருமை. பகிர்தலுகுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 7. இசைக்கு மயங்காதவர் யாரேனும், உண்டா... அழகான படைப்பு...

  ReplyDelete
 8. /வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. //

  ஆஹா .... இது எனக்கு இன்று கிடைத்துள்ள புதிய தகவல் .... தகவல் களஞ்சியம் வாழ்க!

  இசை கேட்டால் புவி அசைந்தாடும் !

  உங்கள் பதிவினைப் பார்த்தால்

  அனைத்து விசேஷ தினங்களும் அறிய வரும் !!.

  >>>>>

  ReplyDelete
 9. / இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர். "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின. நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது.

  நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது.

  இசையை ஒரு பூஜையாகச் செய்யும் போதுதான் அது அதிக சக்தி பெறுகிறது.''//

  அடடா, இதிலும் இத்தனை தெய்வீகச்செய்திகளா ? சூப்பரோ சூப்பர். தெய்வீகப் பதிவர் என்றால் சும்மாவா?

  ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 10. //விதியோடு விளையாடும் ராகங்களே ..... விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே//

  //ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் .... இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?//

  சபாஷ்! அருமையான பாடல்வரிகளை ஆங்காங்கே நுழைத்துள்ளது தங்களின் சிறப்பான தனித்தன்மை. ;)))))

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  >>>>>

  ReplyDelete
 11. //ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’, மன அழுத்தத்துக்கு ‘லதாங்கி’, ஞாபகமறதி, அம்னீஷியா போன்ற நோய்களுக்கு ‘ரேவதி’, பால்வினை நோகளுக்கு ‘மார ரஞ்சனி’, சர்வரோக நிவாரணியாக ’ஸ்வேதாம்பரி’... இப்படி பற்பல ராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன.

  சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன.

  இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர்.

  ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.

  அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

  மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.//

  ஹைய்யோ ..... ஹைய்யோ ..... ஹைய்யோ !!!

  எப்படி ... எப்படி ..... எப்படி ,.... ? எப்படித்தான் இவ்வளவு தகவல்களைத் திரட்டித்தருகிறீர்களோ. ;)))))

  நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி தான் .

  தங்களின் அறிவுக்கும் பொறுமைக்கும், திறமைக்கும் மிகப்பெரிய

  ச லா ம் ;) .

  >>>>>

  ReplyDelete
 12. பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது. இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.

  இசைக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு//

  உணர்ச்சிமிக்கக் கட்டுரையை வெகு அழகாக இசைத்துக் கொடுத்து அசத்தி விட்டீர்களே !!!!! :)))))

  அடேங்கப்பா .... அடேங்கப்பா !!

  >>>>>

  ReplyDelete
 13. கீழிருந்து நான்கு + ஐந்து வரிசைகளில் உள்ள பூனையார் படங்கள் மிகவும் மனதைக் கவர்ந்தது.

  அதுவும், அந்த பூனையால் [நலங்கில் மஞ்சள் தேங்காய் போல] உருட்டப்படும் பந்து, பூனைகளின் கண்கள், பூனைகளின் காதுகள் + பூனையில் வால் மட்டும் அசையும் படம் முதலியன, இசை கேட்கும் மகிழ்ச்சியைத்தருவதாக உள்ளது.

  மிகவும் அருமையான வித்யாசமான அழகிய பதிவாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  அன்பான பாராட்டுக்கள். மகிழ்ச்சியுடன் கூடிய இனிய நல்வாழ்த்துகள். அருமையான ஆக்கத்திற்கும், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  வாழ்க!

  >>>>>>

  ReplyDelete
 14. நாளை, தங்களால் வெளியிடப்படவுள்ள. இந்த 2013ம் ஆண்டின், வெற்றிகரமான 175வது பதிவுக்கும், நாளை மறுநாள் வெளியாக உள்ள 950வது பதிவுக்கும், என் மனமார்ந்த இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். வெற்றிகள் குவியட்டும்.

  “ஆயிரம் நிலவே வா ...... ஓர் ஆயிரம் நிலவே வா” என மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு இன்னும் ஐம்பத்து இரண்டு பதிவுகளே பாக்கியுள்ளன என நினைக்க, என் மனம் ஒரே மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !!!!!

  oooo 948 ooooo

  ReplyDelete

 15. வணக்கம்!

  இசையின் இனிமையை ஏந்தும் பதிவில்
  அசையும் அலைபோல் அகம்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 16. மிக அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. தகவல்கள் அனைத்தும் அருமை. அழகான படங்கள். அருமையான பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 17. அனுமன் பாடிய குண்டக்ரியா ராகம் பற்றி அறிந்து கொண்டேன்.
  இசையால் பல நோய்களையும் குணமாக்கலாம் என்று அறிந்திருந்தாலும், பல் மருத்துவர் இசையின் மூலம் மயக்க மருந்தில்லாமல் பல நோயாளிகளை குணமாக்குவது நல்ல விஷயம்.
  தீபக் ராகப் பாடல் இனிமையானது.

  இசை தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. நீங்களும் இசை தினம் பதிவு போட்டீங்களா? (கூடவே சிவனையும் சேத்துக்கிட்டீங்க).
  மார ரஞ்சனி ராகமா! கேள்விப்பட்டதில்லை. நெட்டில் தேடிப் பார்க்கிறேன்.
  சுவாரசியமான விஷயங்கள் நிறைய அங்கங்கே தெளித்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 19. மனசா ஸ்ரீராம என்ற பாடலை இத்தனை வருஷம் திரு.ரமணியின் குழலிசையில் கேட்டிருக்கிறேன் - மார ரஞ்சனி ராகம் என்பது உங்கள் தயவால் இன்றைக்குத் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 20. இசை தினம் தகவல்கள் அருமை.படங்கள் அதைவிட அழகு.நன்றிகள்.

  ReplyDelete