Tuesday, June 18, 2013

சக்தி திகழும் சாளக்கிரமங்கள்..!
”நம;ஸமஸ்த பூதா நாமாதி பூதாய பூப்ருதே
அநேக ரூப ரூபாய விஷ்ணவே பிரப்ஹ விஷ்ணவே”

எல்லா பூதங்களின் உற்பத்திக்கும் ஆதி பூதமாகவும் அநேக ரூபமாக அவதாரம் எடுத்தவருமான பரபிரம்ம ஸ்வரூபியான நாராயணணை நமஸ்கரிக்கிறேன் என விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வணங்கப்படுபவர்  மஹாவிஷ்ணு....
நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையோரம் மட்டும் கிடைக்கும்  சாளக்கிராமம் என்பது விசித்திரமான ஒரு கல்
கேரள ஆலயங்களில்  சாளக்கிராம பிரதிஷ்டை முக்கிய இடம் பெறுகிறது.
சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் வழிபாட்டில் இடம்பெறுகின்றன.... 

வியாசரிடமிருந்து மத்வாச்சார்யார் பெற்ற மூன்று சாளக்கிராம பிரதிமைகள் கர்நாடக மாநிலம்  உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் உள்ளன. 

பத்ரிநாத் கோயிலில் உள்ள பெருமாள், சாளக்கிராமத்தினால் வடிவமைக்கப்பட்டவர். 

இங்கு ஆதிசங்கரர் உருவாக்கிய நரசிம்ம மூர்த்தியும் உண்டு. 

பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுகிறது ...!
எல்லாக் கோயில்களிலும்  சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது. 
சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர
தெய்வங் ளுக்கும் பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம பூஜை மிக எளிதானது. குளித்து முடித்து  மடியுடுத்தி மிகுந்த ஆசாரத்துடன் பூஜைப்பெட்டியில் வைத்துள்ள சாளக்கிராமத்தை எடுத்து   புருஷசூக்தம்  சொல்லி வழிபடலாம். 
துளசி தளம் சார்த்தலாம். வெளியூர் செல்ல நேர்ந்தால் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது வழக்கம். 

முக்கியமாக வீட்டில் ஆண்கள் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும். பெண்கள் இதைத் தொட்டு பூஜை செய்யக் கூடாது. 

பால், நீர் அபிஷேகம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்வது வழ்க்கம் ..

சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். 

பொதுவாக விக்கிரகங்கள் பின்னப்பட்டுப் போனால் அதனை வழிபடுவது கூடாது என்ற காரணத்தினால் வேறு விக்கிரகத்தை புதியதாக பிரதிஷ்டை  செய்து வழிபடுவார்கள். 
ஆனால், சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து  வைத்து  பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக  பல குடும்பங்களில் இருந்து வரும் பழக்கம்
22 comments:

 1. அருமையான தகவல்கள்

  ReplyDelete
 2. விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டோம். நன்றி.

  ReplyDelete
 3. good information about saligram thanks for sharing

  ReplyDelete
 4. சாளக்கிராமப் பதிவு கண்டு புண்ணியம் பெற்றேன். நன்றி

  ReplyDelete
 5. சிறப்பான தகவல்கள், படங்கள்.... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. சாளக்கிராம கற்கள் பற்றிய பதிவு அக்கற்களைப் போலவே அரியது, விசேசமானது. அக்கற்களை நேபாள நாட்டு கண்டகி நதிக்கு சென்று நேரில் சேகரித்து வந்த அனுபவம் பற்றி திருமதி சிவகாடாட்சம் எழுதிய ஒரு பயணக் கட்டுரை வாயிலாக அறிந்தேன். தற்போது அதன் பெருமை பற்றி தங்கள் பதிவு வாயிலாக தெரிந்து கொண்டேன். நன்றி...

  ReplyDelete
 7. அருமை! அறிந்ததும் அறியாததுமான அற்புத தகவல்கள்!
  பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
 8. படங்களுடன் சொல்லிய விதம் அருமை

  ReplyDelete
 9. ”சக்தி திகழும் சாளக்கிராமங்கள்” என்ற தங்களின் இன்றையப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது

  >>>>>

  ReplyDelete
 10. தஸாவதார சாளக்கிராமங்கள் எனக்காட்டப்பட்டுள்ளது மிவும்அரிய தகவல்களாக, பொக்கிஷமாக உணர்கிறோம்.

  >>>>>.

  ReplyDelete
 11. //நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையோரம் மட்டும் கிடைக்கும் சாளக்கிராமம் என்பது விசித்திரமான ஒரு கல்.//

  அதைக்’கல்’ என்று சொல்லாதீங்கோ.

  புனிதமான ... மிகவும் புனிதமான ... தெய்வாம்சம் பொருந்திய ... பூஜைக்கு உகந்ததோர் வஸ்து அல்லவா!!!!!

  //கேரள ஆலயங்களில் சாளக்கிராம பிரதிஷ்டை முக்கிய இடம் பெறுகிறது.//

  ஆம். கேள்விப்பட்டிருக்கிறோம்.

  >>>>>>

  ReplyDelete

 12. //பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படுகிறது ...!//

  ஆம், எங்கள் குலதெய்வமாம் குணசீலம் பெருமாளுக்கும், மிகப்பெரிய, மிக நீளமான சாளக்கிராம மாலை தினமும் அணிவிக்கப்படுகிறது.

  அருகே சென்று கண்குளிரப் பார்க்கவும் முடிகிறது.


  >>>>>>>

  ReplyDelete
 13. /சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். //

  ஆஹா! அருமையான அழகான ஆறுதல் அளிக்கும் தகவல்.

  பஞ்சாயதன சிவ பூஜையிலும், மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்திற்கு தனி இடம் உள்ளது..

  >>>>>>

  ReplyDelete
 14. அனைத்துப்படங்களும் அருமையோ அருமை தான்.

  இருப்பினும் கீழிருந்து ஒன்பதாவதாகக் காட்டியுள்ள படம் என் மனதை மிகவும் சிலிர்க்க வைக்கிறது.

  சாளக்கிராமத்தை அப்படியே மலைபோல குவித்துக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

  மிக அருமையான அழகான படத்தேர்வு. ஸ்பெஷல் நன்றிகள்.

  அதேபோல கீழிருந்து எட்டாவது படத்தில், இடதுபுறம் TOP CORNER இல் உள்ள முதல் சாளக்கிராமத்தில் ஏதோ ஓர் காந்தக்கவர்ச்சியை உணர முடிகிறது.

  >>>>>>

  ReplyDelete
 15. இதுபோன்ற விசித்திரமான, பொதுவாக யாருக்குமே அவ்வளவாகத் தெரியாத, தகவல்களைத் திரட்டி, அழகான படங்கள் + விளக்கங்களுடன் பதிவிட, உங்களை விட்டால் வேறு யாரால் முடியும்? ;)))))

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்க்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo 944 ooooo

  ReplyDelete

 16. பல வீடுகளில் கூழாங்கல் மாதிரியான கற்களை சாலிக்கிராமம் என்று வழிபடுகிறார்கள். நீங்கள் கொடுத்துள்ள படங்களில் சாலிக்கிராமங்களில் சில உருவங்கள் தெரிகிறது.எல்லா சாலிக்கிராமங்களும் கண்டகி நதியில் கிடைக்கப் பெற்றதா.?வழிபடுகிறவரிடம் கேட்கத் தயக்கம். நம்பிக்கைகளில் குறுக்கீடு என்று எண்ணலாம்.

  ReplyDelete
 17. சாளக்கிராமம்னா என்னனு தெரியாமலே இருந்தேன். கேட்கவும் தயக்கம். கடைசியில் இதுவும் கல் தானா!
  தகவலுக்கு நன்றி.
  படங்கள் பிரமாதம். கோவில் எந்த ஊர்? நேபாளமா? கம்போடியாவா?

  ReplyDelete
 18. அழகு படங்கள்... வாழ்த்துகள் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. சாளக்கிராமம் புதுப்பெயர்.. நான் படம் பார்த்ததும் ஏதோ பழம்போல என நினைச்சு படிச்சேன்.

  ReplyDelete
 20. அருமையான தகவல்கள் நன்றி

  ReplyDelete
 21. சாலிக்கிராமம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். முக்திநாத் சென்று வர வேண்டும்.
  எங்கள் வீடுகளிலும் சாலிக்கிராம ஆராதனை தினமும் உண்டு. வீட்டுப் பெண்கள் திருமணத்தில் பெண்ணை சாளிக்ராமத்துடன் கன்யாதானம் செய்வோம்.

  ReplyDelete
 22. தகவல்கள் , படங்கள் அருமை .

  ReplyDelete