Monday, April 30, 2012

மே தின வாழ்த்துகள்..












நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே


கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே


ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று 
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா


விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை


கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்


தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
பிராத்திக்கும் உதடுகளைவிட, பிறருக்கு உதவும் கரங்களே புனிதமானது".
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !

மீசைக் கவிஞன் பாரதி அன்று வைத்த சிந்தனை !!


வரப்புயர” நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்


கோன் உயர அரசு உயரும்

மே மாதம் முதல் நாளை உலகெங்கும் சர்வதேசத் தொழிலாளர் நாளாக 
நாம் கொண்டாடுகிறோம். 


உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! 


உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்!

1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, “மே தினப் பூங்கா” எனப் பெயரிட்டு; அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது;

 மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ உருவாகவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.


அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தியாவில் முதல் தொழிலாளர் தினத்தை பொதுவுடைமை வாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் அவர்கள் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் கொண்டாடினார்.

உலகத் தொழிலாளர்களே விழித்தெழுங்கள் என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.


குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொள்ளவேண்டிய உழைக்கும் திருநாள் .. விடுமுறை தினமல்ல.. உழைத்து சிறக்கவேண்டிய நன்நாள்..

ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும். 


 பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள் 


உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள் 

குழந்தைத் தொழில் ஒழிப்போம்

முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்


இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே


Socialists at their May Day Celebration in Union Square, New York, 1933
வல்லமையில் வெளியான ஆக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்..

http://www.vallamai.com/literature/articles/19565/


அன்பின் இராஜராஜேஸ்வரி,

தங்களுடைய அருமையான மேதின வாழ்த்துகளை நம் வல்லமையில் பிரசுரித்திருக்கிறோம். நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
பவள சங்கரி

May Day in Germany


Sunday, April 29, 2012

முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா





மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. 



வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷபக்கொடி ஏற்றப்
பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் சிற்ப்பு தீபாராதனைகள் நடைபெறும்...

மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் ப்ரியாவிடையும் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டு சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. 


  • பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.
  • பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். 
  • நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.


 பல உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். 

 அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். 

திருக்கல்யாணம் தேரோட்டம் .நடைபெறுகிறது. 

தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை திருவிழாவாகும். 

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளுவார்


தல்லாகுளத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்கிறார். தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். 

கோயில் எதிரில் வெட்டி வேர் சப்பரத்திலும், தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருள்கிறார்.  

அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.


மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவும் அழகர் கோயில் சித்திரை திருவிழா
 முன்னிட்டு மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டு கவருகிறது


முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்மவதாரம், ராமவதாரம், கிருஷ்ணவதாரம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்து மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில்  இருந்து புறப்பட்டு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில்  திருக்கண்களில் எழுந்தருளுவார்... 


தல்லாகுளத்தில் இருந்து அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி பூப்பல்லக்கில் புறப்பட்ட அழகரை வழியனுப்பி வைப்பார்கள்...  

அழகர், அழகர்கோவிலை அடைந்ததும் பெண்கள் திரண்டு வந்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். 








விநாயகர் புறப்பாடு

Saturday, April 28, 2012

கணபதி யந்திரம்


[Swami+ThiruKalyanam+-+RaghuSthalam.JPG]


































திருநாகேஸ்வரம்
*****************

திருநாகேஸ்வரம் திருக்கோவில் இராஜகோபுரம் அருகில் ஒரு சிறிய சன்னதி இருக்கிறது.   அங்கே கணபதி யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிற்து.


இந்த இடம் முற்காலத்தில் அடர்ந்தக்காட்டுப் பகுதியாக இருந்தது.

அங்கே வசித்துவந்த பிரம்மராட்சஸ் ஒன்று அந்தப் பகுதியில் இருந்த மக்களை துன்புறுத்தி வந்தது. யார் கண்களுக்கும் புலப்படாமல் அட்டகாசம் செய்து அச்சுறுத்தி வந்தது.




சதாசிவப் பிரம்மேந்திரர் தரிசனத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் மகானிடம் முறையிட்டனர்.  

அவர் அந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.  பிரமமராட்சஸின் சேட்டைகளைத தன் சக்தியால் அறிந்து அடக்கினார்.

மௌன குருவாய், அவதூதராய் விளங்கி, இருநூறாண்டுகளுக்கும் 
மேல் வாழ்ந்து பலரது வாழ்க்கைச் சிறக்கக் காரணமானவர் 
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்..



மக்களின் நன்மைக்காக இனி எந்த தீய சக்திகளும் அந்த கோவிலைச் சுற்றி நடமாட முடியாதபடி சக்திவாய்ந்த யந்திரப்பிரதிஷ்டை ஒன்றைக் கல்லில் வடித்து கோவிலின் முன் மந்திரப்பலகையில் ஸ்தாபிதம் செய்தார்.


இன்றும் பிரச்சினைகளுடன் வருபவர்கள் யந்திரத்தை வணங்கி முறையிட்டு தங்கள் ஊர் திரும்பியதும், காளைமாட்டுக்கு வாழைப்பழங்களைச் சாப்பிடக்கொடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி பிரச்சினை தீர்வதைக் கண்கூடாகக் காண்பதாகக் கூறுகிறார்கள்.


பல அற்புதங்களை சதாசிவப் பிரம்மேந்திரர் நிகழ்த்தியிருக்கிறார்.  

பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. 

அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். 

தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!


கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்குபவர் உற்சவமூர்த்தி. 

இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். 

இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாதவர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
[Image1]
புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். 

அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர்.


இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரருக்கு மானாமதுரை, கராச்சி, நெரூர் ஆகிய தலங்களில் சமாதி உள்ளது. ஒருவருக்கே மூன்று சமாதிகள் எப்படி? சித்தர்களின் பிரபாவங்களை சாதாரண மக்களால் உணர்ந்து கொள்ள முடியாது



சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. 

அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கினார். 

அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். 

அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், 
"ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம்' என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார்.

அதில் 45-ஆவது துதி, "சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக' என்பதாகும்.

சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

[Suriya+Puskarni+-Thirunageswaran+temple.JPG]

Friday, April 27, 2012

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்



ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் மகனாகி, இராமபிரானின் கட்டளைக்கு இணங்க சீதாபிராட்டியைத் தேடி தண்ணீர் நிரம்பிய கடல் மீது தாவி, வான்வழியில் பறந்து, பூமியில் (மண்ணில்) பிறப்பெடுத்த அச்சீதா பிராட்டியைக் கண்டுபிடித்து, எதிரி நாடாகிய இலங்கைக்கு நெருப்பு வைத்துவிட்டுத் திரும்பிய வெற்றி வீரர் ஆஞ்சநேயர்.

பக்தியினால் பெற்ற பலத்தினால் பஞ்சமுக உருவம் கொண்டு தான் வணங்கிய பகவானையே பாதுகாத்த பெருமை ஆஞ்சநேயருக்கு உண்டு.

ராமருக்கும்,ராவணனுக்கும் நடந்த போரில், ராவணன் தன் உறவினர்களுடன் அனைத்து படைவீரர்களையும் இழந்தான். 

கடைசியாக போரில் ராமரை நேருக்கு நேர் சந்தித்தான். இதனால் தன் படைக்கலங்களை இழந்து நிராயுதபாணியாக நின்றான். 

எனவே அவனைக்கொல்ல மனமின்றி, '' இன்று போய் நாளை வா'' என்று அனுப்பி வைத்தார் ராமர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தான் திருந்தத்தான் ராமர் வாய்ப்பளித்திருக்கிறார் என்பதை உணராத ராவணன், மற்றொரு அசுரனான மயில்ராவணனை உதவிக்கு அழைத்தான். 

தன்னிடம் உதவி கேட்டு வந்த ராவணனுக்காக, மிகவும் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான் மயில் ராவணன். 

இதன் மூலமாக பகவான் ராமரையும், லட்சுமணனையும் பலியிட திட்டமிட்டான். 

இந்த திட்டத்தை விபீஷணன் தெரிந்து கொண்டு,ராமரிடம் தெரிவித்தான். 

இந்த கொடிய யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை ராமர் அனுப்பி வைத்தார்.வாயுவின் மைந்தனான ஆஞ்சநேயர், யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர்,கருடன்,வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர், இந்த புனிதப் பணியில் வெற்றி பெற அந்தந்தக் கடவுளர்கள் தங்களின் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். 

இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சரூபத்தில் விஸ்வரூபம் எடுத்தார். 

இப்படி எடுத்த விஸ்வரூபத்தினால், மனித குல நல் வாழ்விற்காக மயில்ராவணனை அழித்தார்.


இப்படி பஞ்சமுகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததனால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். 


அதனாலேயே வெற்றியையும், வளத்தையும் குறிக்கும் 'ஜயமங்களா' என்ற விசேஷ புகழாரம் இந்த ஆஞ்சநேயருக்கு சூட்டப்பட்டுள்ளது.

தம்முடைய வாலினால் கோட்டை அமைத்து ராமலட்சுமணர்களை ஆஞ்சநேயர் பாதுகாக்க, மாயாவி அரக்கனோ உத்தமன் விபீஷணனின் உருவம் பூண்டு தந்திரமாக அவ்விருவரையும் பாதாள உலகிற்கு அழைத்துச் சென்று விடுகிறான்.
அவனுடைய பெரும்பலம் கருதி, 
பெரிய திருவடியான ஸ்ரீ கருடன், 
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ வராக மூர்த்தி, 
ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகக் கடவுள்) 
ஆகியோரின் அருளை வேண்டி, தம்முடைய திருமுகத்துடன் அந்த நால்வரின் திருமுகங்களும் இணைய, பஞ்சமுக ஆஞ்சநேயராகப் பேருருவம் கொண்டு மஹிராவணனை அழித்த ஆஞ்சநேயர் பகவானாகிய ஸ்ரீராமபிரானையும், அவர் தம்பி ஸ்ரீலட்சுமணனையும் பத்திரமாக மீட்டார். 
அஹங்காரத்தில் வீற்றிருந்த இராவணனின் சிம்மாசனமும்
ராமபக்தியில் சிறந்து உயர்ந்த அனுமனின் வாலாசனமும்..
பக்தியின் பெருமையைப் பாருக்கு உணர்த்திய வரலாறு இது.
இந்த ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கம்பீரமான 36 அடி உயரம் கொண்டவர். 118அடி உயர கோபுரம், 1200 கிலோ மணி ....
18மீட்டர் அகலம், 40மீ ஆழமும் கொண்ட தீர்த்தக்கிணறு உண்டு. 

இன்று பாப்பாஞ்சாவடி என்று அழைக்கப்படும் இப்பகுதி தொன்மையும், சீர்மையும் கொண்ட திருத்தலம் ஆகும். 


மெய்யுணர் முனிவர்களும், சித்தர்களும், அன்புநெறி போற்றிவாழ் அடியார்களும் பஞ்சவடியில் வாழ்ந்துள்ளனர். 


தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாக 'பஞ்சவடீ' என்ற இடத்தில் பஞ்சமுக வடிவம் கொண்ட ஆஞ்சநேயரை மக்கள் வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. 

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள், தங்களது மேம்பட்ட கல்வியறிவிற்காகவோ, தங்களைப்பிடித்த நோயிலிருந்து விடுபடுவதற்காகவோ இந்த பஞ்சவடீ தலத்திற்கு வந்திருக்கின்றனர். 

தேவப்ரஸ்னத்தில் ஆஞ்சநேய பகவான், விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயராக தானே பிரசன்னமாவார் என்றும், இவர் தன்னை வணங்குபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிப்பார் என்றும் தெரியவந்தது. 

இப்படி பிரமாண்டமாக விஸ்வரூப ஆஞ்சநேயரை அமைக்க 40 அடிக்கும் அதிகமான 150 டன் எடையிலான ஒரே கருங்கல், சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது நிலத்தில் கிடைத்தது. 

அதை வைத்து மகாபலிபுரம் அருகே கேளப்பாக்கத்தில் உள்ள முத்தையா ஸ்தபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார். 

இந்த ஆஞ்சநேயரைப் போலவே இந்த சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள எந்திரமும் 16''க்கு16''என்ற அளவில் 11 கிலோ எடை கொண்டதாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்,நரசிம்மர்,ஹயக்ரீவர்,வராஹர்,கருடர் ஆகிய கடவுளர்களின் அருளோடு தனது ஆற்றலையும் கொண்டு விளங்குகிறார். இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு:

நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றி மற்றும் லட்சுமி கடாட்சத்தையும், 

ஹயக்ரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல் மற்றும் ஆன்மிக பலத்தையும், 

வராஹரின் அருளால் மனத்துணிவையும், 

கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்தை விலக்கும் சக்தியையும், 


ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி-சகல சவுபாக்கியங்கள்-வளம்-மற்றவர்களுக்கு ஆபத்து என்றால் துணிந்து உதவி செய்வது 
போன்றவற்றை அருளுகிறார்.



அபிஷேக, அலங்காரம் செய்ய லிப்ட் வசதி உள்ளது.

திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சவடியில் 12 ஏக்கர் பரப்பில் கோயில் கட்டப்பட்டது. 

. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது.

 நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது.

ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள்.

அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.
ImageImage

உற்சவர் பட்டாபிராமர், வேணுகோபாலன் அலங்காரம்,
 நவராத்திரி திருவிழா, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்.









ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்,
வெள்ளி கவசம், கௌரிவாக்கம், சென்னை



ஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்சநேயர், பெங்களூர், 

TRYFRUITS,  முந்திரி திராட்சை, பழம் அலங்காரம்,  ராகிகுட்டா ஆஞ்சநேயர்




அரக்கன் அனுமன் வாலைத்தான் தீ வைத்தான்
அனுமன் தீவைத்தான் இலங்கைத் தீவைத்தான்



Monkey Buffet Festival: