Saturday, April 21, 2012

உலக பூமி தினம்

Spinning Earth

























நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்தெழிலி
தான் நல்காதாகிவிடின் 

ஆவியான கடல் நீர் மேகமாகி கடலில் விழுந்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
அதுபோல உலகின் உயர்ந்த மனிதர்களும் மனித சமுதாயத்திற்கே பயன்பட்டாலே அந்த சமுதாயம் உயரும்.
Picture

உலக பூமி தினம்
1972 ல் சர்வதேச தலைவர்களை கூட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி அமைப்பை ( ஐ.என்.இ.பி.,) துவக்கியது ஐக்கிய நாடுகள் சபை... 


Happy Earth Day
பள்ளி, கல்லூரிகளில் பசுமைப்படைகள் ,கல்லூரிகளில் சுற்றுச்சுழல் துறைகள் . பின் நீர், நிலம், காற்று, ஒளி, ஒலி மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை ,
தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 

இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். 

உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்

மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும். 

குண்டு பல்புகளை பயன்படுத்துவதால் வெப்பநிலை அதிகரிப்பதால்,
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. 
மாற்றாக சி.எப்.எல்.,பல்புகளை பயன்படுத்த வேண்டும். 

"டிவி' பிக்சர் டியூப்கள்  எல்.சி.டி., மற்றும் பிளாஸ்மா "டிவி  பாதரச டியூப் லைட்டுகள், எலக்ட்ரிக்கல் அடுப்புகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.மாற்றாக எல்.பி.ஜி.,காஸ் பயன்படுத்தலாம். 

பூமி சூடேற்றத்திற்கு கதிர்வீச்சு சாதனங்கள் பயன்பாடே காரணம். இந்தோனேசியாவில் பெட்ரோல் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்து, மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இதை ஊக்கப்படுத்த வேண்டும். 

ஓசோன் படலத்தின் மிருதுத்தன்மையை பாதுகாக்காவிடில், கதிர்வீச்சு புற ஊதா கதிர்களின் வீச்சு அதிகரிக்கும். தோல் மற்றும் புற்றுநோய்கள் பரவும். மரங்கள் 60 சதவீதம் நட்டால், 3 சதவீத வெப்பநிலை குறையும். இது பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் 
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் 
சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும் 
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும் வண்ண வின் மீன்கள் வேண்டும் 
 வண்டு உட்காரும் பூ மேலே  மலர்கள் வாய் பேச வேண்டும்
யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும் 
மரணம் காணாத மனித இனம் இந்த 
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும் 
பஞ்ச பசி போக்க வேண்டும் பாலைவனம் 
பூக்க வேண்டும் சாந்தி சாந்தி என்ற சங்கீதம் 
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்  
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் 



earth-day-people.gif
 
கடல் நீர் மட்டம் உயர்வதாய்
விஞ்ஞானிகள் சொல்கின்றனர்
அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது
அது தினம்  கடலோடு சேர்ந்து பூமி
சிந்தும் கண்ணீர் தான் என்று!





35 comments:

 1. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
  பூமியை காப்போம்.

  நல்ல அருமையான பதிவு.

  ReplyDelete
 2. நல்ல விழிப்புணர்வு பதிவு. தகுந்த படங்களுடன் நல்லா இருக்கு

  ReplyDelete
 3. தர்பூஷணிப்பழத்தை அழகாக ஹாட்டின் வடிவத்தில் கடித்துச் சாப்பிட்டு விட்டு, அந்த ஓட்டைப்பகுதியில், வானத்தையே அன்பின் எல்லையாக, அடையாளமாகக் காட்டியிருக்கும் படம் வெகு அருமை.

  அதன் அருகில் உலகமே அன்புக்காகவே சுழலுவதாகக் காட்டியிருப்பது அதைவிட அருமை.

  இப்போது வழக்கம்போல மின் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் மற்ற கருத்துக்கள் வழக்கம்போல நள்ளிரவுக்குள் வந்து சேரும்.

  ReplyDelete
 4. இந்த பூமியைக் காக்க நம்மால் ஆனதைச் செய்வோம்

  ReplyDelete
 5. BEST WISHES TO ALL FOR A VERY

  "HAPPY EARTH DAY - 22nd APRIL"

  ReplyDelete
 6. ஆறுமாதத்திற்கு ஒருமுறை பருவ நிலைகள் கோடையும் குளிருமாக மாறுவதும், வால் நக்ஷத்திரங்களுக்கும் ஒரு சீசன் உண்டு என்று சொல்வதும் போன்று அழகாக வடிவமைக்கப்பட்ட அசையும் படம் நல்ல தேர்வு! ;)

  ReplyDelete
 7. EARTH DAY -- Today & Every Day! --

  அர்த்தம் நிறைந்த வார்த்தைகள்!
  அறிவார்ந்த வரிகள்!

  தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்; வாழாக்கால்
  கவியரசரின் வரிகளின் படி
  வாரி வாரி வழங்கி
  வாழை போலத் தன்னைத் தந்து
  உருகியோடும் மெழுகுபோல ஒளி வீசி
  மனிதன் என்பவன் தெய்வமாகட்டும்!

  ReplyDelete
 8. //ஆவியான கடல் நீர் மேகமாகி கடலில் விழுந்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.

  அதுபோல உலகின் உயர்ந்த மனிதர்களும் மனித சமுதாயத்திற்கே பயன்பட்டாலே அந்த சமுதாயம் உயரும்.//

  ஆஹா! அற்புதமான விளக்கம்.

  அதுவும் பதிவுலகில் மிக உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கும் ஓர் அற்புதப் பதிவரிடமிருந்து.

  தங்களின் அனைத்துப் பதிவுகளும் மனித சமுதாயத்திற்குப் பயன்படுவதே என்பதல்லவோ என் அபிப்ராயம்.

  மழையும் நீங்களும் ஒன்று.

  ஏராளமான படங்களையும்
  தாராளமான விளங்கங்களையும்
  கொட்டோகொட்டென்று கொட்டித் தீர்ப்பதில். ;)))))

  [தினமும் நாங்கள் எல்லோரும் குடை பிடித்துக்கொண்டே படிக்க வேண்டியுள்ளது.

  எப்படியோ எங்க காட்டிலே உங்களாலே தினமும் மழை]

  ReplyDelete
 9. //தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
  இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். //

  தந்துடுவோம்!

  //சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும்//

  பயன்படுத்திடுவோம்

  //வீட்டுத்தோட்டங்கள் அமைத்து, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்//

  அமைத்திடுவோம், பாதுகாத்திடுவோம்

  //நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும்.//

  ஆஹா அப்படியே செய்திடுவோம்.

  //உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்//

  இது ஏற்கனவே செய்து வருவது தான்.
  ஆகட்டும் தொடர்ந்து உட்கொள்கிறோம்.

  //மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும்//

  மனவளம் ஏற்படத்தானே உங்கள் பதிவுப்பக்கமே மகிழ்ச்சியுடன் சுற்றிசுற்றி வருகிறோம். இதுவும் பிரசானையில்லாத விஷயமே.

  ReplyDelete
 10. அடேங்கப்பா!

  படங்கள் அழகோ-
  அழகு--எப்படித்தான்
  பொறுமையாக தேடுறீங்களோ....!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. குண்டுபல்பு, டி.வி.பிகசர் ட்யூப், எல்.சி.டி. மற்றும் ப்ளாஸ்மா டிவி பாதரச டியூப் லைட்டுகள், எலெக்ட்ரிக் அடுப்பு, முழுவதுமாகப் பெட்ரோல் பயன்படுத்துவது என ஒன்றையும் விட்டுவிடாமல் கக்கிவிட்டீர்களே!

  எங்கிருந்து தான் இவ்வளவு தகவலும் சேகரிக்கிறீர்களோ; எப்படித்தான் கோர்வையாக அவற்றைக் கொண்டு வந்து தருகிறீர்களோ!

  மிக்வும் ஆச்சர்யமாக உள்ளது.

  ReplyDelete
 12. //மரங்கள் 60 சதவீதம் நட்டால், 3 சதவீத வெப்பநிலை குறையும்.

  ஓசோன் படலத்தின் மிருதுத்தன்மை பாதுகாக்கப்படும்//

  நல்ல பயனுள்ள தகவல். பசுமைப்புரட்சியையும், மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 13. *****
  புத்தம் புது பூமி வேண்டும்

  நித்தம் ஒரு வானம் வேண்டும்

  தங்க மழை பெய்ய வேண்டும்

  தமிழில் குயில் பாட வேண்டும்

  சொந்த ஆகாயம் வேண்டும்

  ஜோடி நிலவொன்று வேண்டும்

  அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

  வண்ண வின் மீன்கள் வேண்டும்

  வண்டு உட்காரும் பூ மேலே, மலர்கள் வாய் பேச வேண்டும்

  யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்

  மரணம் காணாத மனித இனம் இந்த
  மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

  பஞ்ச பசி போக்க வேண்டும்

  பாலைவனம் பூக்க வேண்டும்

  சாந்தி சாந்தி என்ற சங்கீதம்

  சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

  தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் *****

  எவ்வளவு அழகான மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல் வரிப் பகிர்வுகள்!

  இந்தப்பதிவுக்குப் பொருத்தமாக பொறுக்கி எடுத்த முத்தான முத்துக்கள். பாடல் பகிர்வுக்கு நன்றிகள். ;)))))

  ReplyDelete
 14. //கடல் நீர் மட்டம் உயர்வதாய்
  விஞ்ஞானிகள் சொல்கின்றனர்
  அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது
  அது தினம் கடலோடு சேர்ந்து பூமி
  சிந்தும் கண்ணீர் தான் என்று!//

  இந்த வரிகளுக்கு மேல் காட்டியுள்ள ”கண்ணீர் சிந்தும் கடலின் கண்” படம் காட்டியுள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.

  ReplyDelete
 15. உலக பூமிதினம் சார்பாக தங்களின் கடும் உழைப்பு இந்தப்பதிவினில் நன்கு பளிச்சிடுகிறது.

  எதைப்பற்றியும் உங்களால் அழகாகத் தெளிவாக ஆக்கபூர்வமாக அசத்தலாக பலவித ஆதாரங்களுடனும், அசையும் படங்களுடனும் பதிவிட்டு, படிப்பவர் மனதினில் பசுமரத்து ஆணி போல பதியச்செய்ய முடியும் என்பதற்கு. இந்தக்கட்டுரை மேலும் ஓர் எடுத்துக் காட்டுதான்.

  தங்களின் கடும் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

  மனதாரப் பாராட்டுகிறேன்.

  நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  அனைத்துப்படங்களும் அருமை.

  கடைசிபடம், நாம் அனைவரும் ஒத்துழைத்தால் பூமியைக் காக்க முடியும் தான் என்பதை அழகாக பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

  தொடரட்டும் தங்களின் இதுபோன்ற சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள்.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Very fine post dear.
  I enjoyed all the pictures.
  viji

  ReplyDelete
 20. Very fine post dear.
  I enjoyed all the pictures.
  viji

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. win win onlywinner.2008@gmail.com


  to me
  Happy Earth day Amma,

  Nice article,

  kind regards,
  Sanju


  நிறைவான நன்றிகள் கருத்துரைக்கு..

  ReplyDelete
 24. விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
 25. வணக்கம்! பாரதியார் ” காணிநிலம் வேண்டும் பராசக்தி! காணி நிலம் வேண்டும்! “ என்று கேட்டார். நீங்கள் புத்தம் புது பூமியையும் நித்தம் ஒரு வானையும் கேட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. நம் பூமியைக் கொண்டாடுவோம். அழகழகான படங்கள். காணக்கிடைக்கா பாக்கியம்.

  ReplyDelete
 27. எர்த் டேக்கு அழகான படங்களும் கருத்துக்களும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 28. விழிப்புணர்வுப்பதிவுக்கு நன்றிகள்..படங்கள் அருமை..

  ReplyDelete
 29. பூமி சிந்தும் கண்ணீர்தான் கடலின் நீரின் உயரம் என்று சொல்லியிருப்ப்து இன்றைய பூமியின் நிலைமையை நிதர்சனமாக்குகிறது.கொஞ்சம் யோசிப்போம் !

  ReplyDelete
 30. அருமையான படங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. 96. ஹரிஸர்வோத்தமா கோவிந்தா

  ReplyDelete