Wednesday, April 25, 2012

அற்புதத் திருநாள்


Happy Akshaya Tritiya


Wishing You Happy Akshaya Tritiya

Akshaya Tritiya: The Festival of Gold
அட்சய திரிதியை'  அட்சயம் என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான- தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பர்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.
Happy Akshaya Tritiya Graphic
ஐஸ்வர்யேஸ்வரர்
Happy Akshaya Tritiya Graphic For Myspace
Akshaya Tritiya Maha Yagnam 


இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன் வறுமையைப் போக்கிக் கொண்டான். குபேரன் சங்கநிதி, பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான். 


பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்றனர். இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம் போன்றது. எடுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது. வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப் பயன்பட்டது.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார். 
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.


Establishing Parad Shivling made from pure mercury metal is considered highly 
Auspicious on the muhurat of Akshay Tritiya, as it brings good fortune and 
fame to the entire family

வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்' என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். 


அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், 
பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், 
இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், 
அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், 
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், 
குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், 
பசுக்களில் கோமாதாவாகவும், 
யாகங்களில் தட்சிணையாகவும்
தாமரையில் கமலையாகவும், 
அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். 
இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்


ஐஸ்வர்யகாளி

எனவே, அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். 

நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான- 
தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம் உண்டாகும். 
அன்னதானத்தால் விபத்து விலகும். 

தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்தால் வியாதிகள் தீரும்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.
 ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும்.

 • அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்.Chandana Yatra festivals of Lord Jagannath in Narendra Puskarini -  Akshay Tritiya


13 comments:

 1. எம்மாம்பெரிய பதிவு. ஆனா எல்லாப் படங்களும் நால்லா இருந்தது.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு. படங்களும் அருமை.

  ReplyDelete
 3. அட்சய திருதியை பற்றிய தெளிவான விளக்கங்கள், படங்கள் நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ;) மிகவும் தங்கமான பதிவு.
  இறுதியில் பூக்கோலம் நல்ல அழகு.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. படங்கள் எல்லாமே பிரமாதம்.

  ReplyDelete
 6. I have no words to express my feelings in this post. உண்மையில் அசந்துபோயிருக்கிறேன். எத்தனைப் புகைப்படங்கள் அத்தனையும் மின்னும் வண்ணத்தில். உங்களின் அக்கறையும் மனமும் இதில் தெரிகிறது ராஜேஸ்வரி. உங்களின் நல்ல உள்ளம் அட்சய போல் வளரட்டும். மனதைப் பறிகொடுத்திருககிறேன் அத்தனைப் புகைப்படங்களிலும். மனதுக்கு இதம். நன்றிகள்.

  ReplyDelete
 7. எல்லா படங்களும் அருமை... அக்ஷய திரிதியை பற்றி உண்மையா எனக்கு இவளோ தகவல் தெரியாது.. இப்பொது தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி...

  ReplyDelete
 8. எந்த ஒரு விழா வருகிறதென்றாலும் உங்கள் தளம் "கலை"கட்டுகிறது

  ReplyDelete
 9. ஸ்ரீருத்ரத்தில் ஒரு வரியில் “வ்யுப்தகேசாய”-அதாவது கேசம் நீக்கப்பெற்ர சந்நியாஸி வடிவனராக--என்று சங்கரரின் அவதரம் நடக்கப்போவது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது!
  நல்ல பகிர்வுக்கு நன்றி.
  என் வலைப்பூவுக்கு வாருங்களேன்
  http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html

  ReplyDelete
 10. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. 101. ரத்னகிரீடா கோவிந்தா

  ReplyDelete