Tuesday, April 24, 2012

குபேர லட்சுமி பூஜை


Sri Lakshmi

" பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே!"

ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் மகாலட்சுமிக்கு "ராஜ்யஸ்ரீ'' என்றும் பெயருண்டு.

அட்சய திரிதியை அன்று காலையில், திருவிளக்கு முன்பு சொல்ல வேண்டும் 
ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை
கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை
தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.

செல்வவள லக்ஷ்மி மந்திரம்:
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் 
மூன்று கோடி மதிப்புள்ள 17 கிலோ எடையுள்ள,
50 லிட்டர் தண்ணீர் கொள்ளும்,  
(அண்டா), தங்க அபிஷேக பாத்திரம், 
[tblgeneralnews_19458734990[5].jpg]
கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம் 
உருவாக்கியுள்ள 6 கிலோ தங்கத்தில் பிரமாண்ட நகை.. 
[jewellery[4].jpg]

காசிலே கலை வண்ணம் ..

[ATT42754[3].jpg][ATT42753[4].jpg][ATT42755[3].jpg]
[ATT42757[3].jpg][ATT42758[4].jpg]
  அக்ஷய' என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு.  மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். 


பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். 


இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. 

'அக்ஷய திரிதியை' தினத்தை 'நல்லுதவி தின'மாய் கொண்டாடி 'மணிமேகலை தினம்' என்றும் கொண்டாடலாம்...
நாம் நம் முன்னோருக்குச் நன்றி செலுத்தலாம்..
Goddess Laxmi Pictures Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
குபேரர் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார்
என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது.

அட்சய திருதியை நாளில் குபேர லட்சுமி பூஜைநடத்தப்படுகிறது.  
Parad Kuber Yantra

அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.


சாபத்தால் க்ஷயரோகம் (உடல் தேயும் நிலை) பெற்ற சந்திரன், அபயம் என்று அரனைத் தேடி ஓடியதும் 
மூன்றாம் பிறையாக இருந்த அவனை, திருமுடி மீது தரித்துக் கொண்டு, முறுவல் பூத்தார் முக்கண்ணன். க்ஷயம் நீங்கி, அக்ஷய வரம் பெற்றான் சந்திரன். 
சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா?

நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்புதலைத் தெரிவித்தார்.

ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியின் பயனாக முக்தியடைந்தார். இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்.
அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம், தர்மம் எல்லாமே அக்ஷயமாக வளர்ந்துகொண்டே போகும்; என்பது உறுதி. 
குசேலர் சரித்திரம் படித்தால் அருளும், பொருளும் அமோகமாக வளரும். 

எனவே, அக்ஷயதிரிதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடியபின் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து மகாலக்ஷ்மி படத்தின் முன் (லக்ஷ்மி நாராயணர் படம் இருப்பின் சிறப்பு) கோலமிட்டு, நுனிவாழை இலை ஒன்றின் நடுவே கொஞ்சம் அரிசியை பரப்பி வைத்து அதன்மீது நீர் நிரம்பிய கலசம் (செம்பு) வைத்துமஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து அந்த கலசத்தின் அருகே வைத்து, பொட்டிட்டு, மலர்சூட்டிமகாலக்ஷ்மியை மனதார நினைத்தபடி 
துதியைச் சொல்லிதூப, தீபம் காட்டியபின், பால் பாயசம் நிவேதனம் செய்தால் வாட்டிடும் வறுமை தொலைந்து, இனிமையும், வளமையும் வாழ்வில் கூடும் அக்ஷயமாக ஆனந்தமும், செல்வமும் வளரும்.

மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
ஸர்வ சக்த்யை ச தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்

 மகாசக்தியாகவும், உயிர்களை உய்விப்பவளாகவும் நன்னெறியில் நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள தேவி எங்களைக் காத்திடட்டும். எங்கள் செயல்களை அவளே ஊக்குவிக்கட்டும்...


காயேன‌ வாச‌ ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌ண‌ம்!

20 comments:

 1. வறுமையை போக்கும் குபேர லட்சுமி பூஜையை செய்யும் வழிமுறைகளை தெள்ளத்தெளிவாக விளக்கி சொன்னமைக்கு நன்றி

  ReplyDelete
 2. படங்கள் வழக்கம் போல் அருமை.

  ReplyDelete
 3. செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியால் முக்தி அடைந்தார்

  உண்மை தான் ஆனால் பக்தி துச்சமாகப் பார்ர்கப் படும் இந்நாளில் உணர்வுகளுக்கு எங்கே மதிப்பிருகிறது

  ReplyDelete
 4. அழகான படங்களுடன், அருமையான பகிர்வு.

  ReplyDelete
 5. அழகான படங்களுடம் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

  ReplyDelete
 6. ”குபேர லக்ஷ்மி பூஜை” என்ற தலைப்பில் இன்றும் அக்ஷயதிருதியைப் பற்றி, அக்ஷயமாக மேலும் பல தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  நல்ல பயனுள்ள பதிவு.

  ReplyDelete
 7. //ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் மகாலட்சுமிக்கு "ராஜ்யஸ்ரீ” என்றும் பெயருண்டு//

  இதுவும் இந்தப்பதிவரின் பெயரைச் சுருக்கியது போலவே தான் உள்ளது. அழகாகவும் உள்ளது.

  ReplyDelete
 8. அக்ஷய திருதியை அன்று சொல்ல வேண்டிய ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி + செல்வவள லக்ஷ்மி மந்திரம் ஆகிய இரண்டையும் கொடுத்துள்ளது சிறப்பு.

  அதைவிட சிறப்பு ருத்ராக்ஷத்தை உருட்டி ஜபம் செய்யும் இரண்டு கைகளை அனிமேஷனில் எங்கிருந்தோ வலைவீசிப் பிடித்துக் கொண்டுவந்து காட்டியிருப்பது. மிக நல்ல பொருத்தமானத் தேர்வு தான்.
  ;)))))

  ReplyDelete
 9. //திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்று கோடி மதிப்புள்ள 17 கிலோ எடையுள்ள,50 லிட்டர் தண்ணீர் கொள்ளும், அண்டா, தங்க அபிஷேக பாத்திரம்.//

  ஆஹா அருமை.

  அவர் மிகப்பெரிய இடம்.
  மிகப்பெரிய பெருமாள். பணக்கார சாமி.

  இதெல்லாம் அவரைப் பொருத்தவரை மிகச் சாதாரணம்.

  நமக்கு .. இல்லை இல்லை.. எனக்கு இது மிகவும் ஆச்சர்யமான ஜொலிக்கும் தகவல் தான்.

  ReplyDelete
 10. //கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம்
  உருவாக்கியுள்ள 6 கிலோ தங்கத்தில் பிரமாண்ட நகை//

  இதை யார் அணிய முடியும்?

  அடிக்கும் வெயிலில். மின் தடை நேரங்களில், ஒற்றைவடம் இரட்டை வடம் சங்கிலியே கழுத்துக்குக் கசகசப்பாக உள்ளதாக தூக்கி எறிந்து விடுகிறார்கள் நம் வீட்டுப்பெண்மணிகள்.

  அதுவும் அது 10 பவுனே என்றாலும் கூட வெறும் 80 கிராம் எடை தான் இருக்கும்.

  இது 6 கிலோ என்றால் 6000 கிராம் அல்லவா!

  அணிந்து கொண்டால் ஒரு இரண்டு வயது குழந்தை நம் கழுத்தைக் கட்டுக்கொண்டு தொங்குவது போலல்லவா இருக்கும்.

  தில்லானா மோகனாம்பாள் வடிவு + சவடால் வைத்தி ஞாபகம் தான் வருகிறது[C.K.Saraswathi+நாகேஷ்].

  இந்த பிரும்மாண்ட ஆபரணத்தையும் அந்த திருப்பதி பெருமாளால் தான் தன் கழுத்தில் தாங்க முடியும்.

  ReplyDelete
 11. //'அக்ஷய திரிதியை' தினத்தை 'நல்லுதவி தின'மாய் கொண்டாடி 'மணிமேகலை தினம்' என்றும் கொண்டாடலாம்.

  நாம் நம் முன்னோருக்குச் நன்றி செலுத்தலாம்//

  நல்லதொரு அழகான ஆலோசனை தான்.
  ======================

  //சாபத்தால் க்ஷயரோகம் (உடல் தேயும் நிலை) பெற்ற சந்திரன், அபயம் என்று அரனைத் தேடி ஓடியதும் மூன்றாம் பிறையாக இருந்த அவனை, திருமுடி மீது தரித்துக் கொண்டு, முறுவல் பூத்தார் முக்கண்ணன். க்ஷயம் நீங்கி, அக்ஷய வரம் பெற்றான் சந்திரன்//

  அடடா! தகவல் களஞ்சியத்திடமிருந்து இன்று ஒரு அரிய தகவல் அதுவும் மூனறாம் பிறைச்சந்திரன் போன்ற அழகிய தகவல். ;)))))

  ReplyDelete
 12. //குசேலர் விஷயமாக நம்பூதிரியின் வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்புதலைத் தெரிவித்தது//

  இதுபற்றி காலம்சென்ற சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் வாயால் சொல்லி கேட்க வேண்டும்.

  ஹே குருவாயூரப்பா ”..........”

  அப்படிய்யான்னார் பட்டத்திரி ....

  ஸ்வாமி “ஆமான்னார்” என்பார்

  அவருக்கே உரித்தான கணீர் குரலில்.

  சம்ஸ்கிருதத்தில் எல்லா ஸ்லோகங்களுமே ரொம்ப ஜோராகச் சொல்லுவார். பலமுறை கேட்டுள்ளேன்.

  ReplyDelete
 13. //அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம், தர்மம் எல்லாமே அக்ஷயமாக வளர்ந்து கொண்டே போகும் என்பது உறுதி//

  பதிவு செய்தாலும் அப்படியே. தங்களின் பதிவு தினமும் அக்ஷயமாக வளர்ந்து கொண்டே போகிறதே! ;)))))

  ReplyDelete
 14. //பால் பாயசம் நிவேதனம் செய்தால் வாட்டிடும் வறுமை தொலைந்து, இனிமையும், வளமையும் வாழ்வில் கூடும் அக்ஷயமாக ஆனந்தமும், செல்வமும் வளரும்.//

  இந்தப் பதிவைப்படித்ததும், பால்பயஸம் சாப்பிட்ட திருப்தியே ஏற்பட்டது எனக்கு.

  //காயேன‌ வாச‌ ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
  க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌ண‌ம்!//

  தாங்கள் இட்ட இந்தப்பதிவும், அதைப்படித்து விடிய விடிய நான் கொடுத்துள்ள பின்னூட்டங்களும்
  ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம்
  தான்.

  ஏதோ ஒருவர் மிகவும் சிரத்தையாகப் கஷ்டப்பட்டு தினமும் பதிவிடுகிறார்.

  மற்றொருவர் ஏதேதோ எழுதி பதிவிட்டவரை உற்சாகப்படுத்தி வருகிறார் என்பது அந்த நாராயணனுக்கே வெளிச்சம்.

  சம்பந்தப்பட்ட இருவரும் தான், ஏதோ சம்பந்தமே இல்லாதவர்கள் போல, தாமரை இலைத்தண்ணீர் போல, பட்டும் படாததுமாக இருக்க வேண்டிய துர்பாக்ய நிலை நீடித்து வருகிறதே!

  அதுவும் இன்னும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கப்போகிறதோ!

  நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
  பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது.

  ReplyDelete
 15. படத்தில் காட்டியுள்ள ”மாதுளை”
  எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  அது “பழமா” ”காயா” என மட்டும் எனக்கு இன்னும் புரியவில்லை.

  இந்த மாதத்திற்குள் On or before 30th April புரியவைத்தால் நல்லது.

  ReplyDelete
 16. Very nice and useful post as usual dear.
  viji

  ReplyDelete
 17. அக்ஷய் திரிதியை தினத்தை நல்லுதவி தினமாய் கொண்டாடி மணிமேகலை தினம் என்றும் கொண்டாடலாம்.//

  நல்ல யோசனை. நல்ல கருத்து.

  படங்கள் எல்லாம் அற்புதம்.

  ReplyDelete
 18. 100. ஆபத்பாந்தவா கோவிந்தா

  ReplyDelete
 19. திவ்யமான படங்கள் .
  அருமையான பதிவு.

  ReplyDelete