Thursday, June 30, 2011

யானைக் கொண்டாட்டம்..


[guruvayurappan.jpg]


Elephant alphabet 4dru animated letter gif alpha

யானை யானை அழகர் யானை !!! 

அழகரும் சொக்கரும் ஏறும் யானை !!!

அல்லி குளத்தை கலக்கும் யானை !
ஆற்றில் நீரை உறிஞ்சி பீச்சி அடிக்கும் யானை

உச்சி மர இலையையும்உறித்து உண்ணும் யானை
பாடி ஆடும் சிறுவர்களோடு பந்தடிக்கும் யானை....... 

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம் !
பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சாம் !

என்று எத்தனை முறைபாடினாலும் அலுக்காத பாடல். 

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனை கட்டிப் போரடித்த வரலாறு நம்நாட்டிற்குண்டு.

சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளித்த பெருமை மிகுந்தது. 

குருவாயூருக்கு அருகில்அமைக்கப்பட்டுள்ள ஆனக் கொட்டாரத்தில் நூறுக்கு மேற்பட்ட யானைகள் இருந்தன. யானைத்தாவளம் என்றும் அழைக்கிறார்கள். 

எல்லாம் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தன. 

அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும்...!


அங்கிருந்த ஒரு அழகான குட்டி யானைக்கு தன்னை சங்கிலியால் பிணைத்திருப்பது  பிடிக்கவில்லை போலும்.  
சகாக்கள் எல்லோரும் கட்டின்றி இருக்க தன்னைக் கட்டி வைத்திருப்பதை ஆட்சேபித்துப் பிளிறி சங்கிலியைச் சுட்டிக்காட்டி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

[2860790170078118862BQBnNc_fs.jpg]


[DSCN0123.jpg]
[DSCN0120.jpg]
[DSCN0126.jpg]
[DSCN0115.jpg]


ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன.

 நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. 

இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். எல்லாயானைகளும் சுக சிகிச்சை அளிக்கப்பட்டு அருமையான கவனிப்பில் இயற்கை சூழலில் கண்கொள்ளக் காட்சியாக காட்சிப்பட்டன. 

அம்மா அளித்த யானை ராஜ உபசாரத்துடன் கம்பீரமாக இருந்தது.

குருவாயூர் கோவில் யானை ஓட்டத்தில் அதுதான் முதலாவதாக வந்ததாம்.

Wednesday, June 29, 2011

சொர்க்கமே என்றாலும் ....நம்ம ஊரு ..தொடர் பதிவு...எங்கள் ஊரைப்பற்றி தொடர் பதிவு எழுத வாய்ப்பளித்த தேவதைக்கு முதற்கண் ந்ன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சேலத்திற்குப்பக்கத்தில் இருக்கும் ஊர். 

வடகிழக்குப்பகுதியில் ஏரியும் தென்மேற்குப்பகுதியில் திருப்பதி சிலாதோரணம பகுதியில் காணப்படும் பாறைகளுக்கு இணையானகுன்றுப்பகுதியும் கொண்டு வாஸ்து சிறப்பு பெற்ற ஊர்.

எட்டுப்பட்டி மாரியம்மன கோவிலில் நடைபெறும் ஆடிமாத மாரியம்மன் பண்டிகையும் அன்று நடைபெறும் வண்டி வேடிக்கை,முளைப்பாலிகை மாவிளக்கு, , கரகாட்டம், ஒயிலாட்டம், பிரபலங்களின் பாட்டுக் கச்சேரி என திருவிழா நிகழ்ச்சிகள் களைகட்டும்.

பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அப்போதெல்லாம் நடைபெறும்.


காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேர்விழா விமரிசையாக நடைபெறும். காவடிகள் ஆடிவரும்.

பாம்பு கடித்தவர்களை புளிய மர நிழல் படாமல் கோவில் பிரகாரத்தில் கொண்டுவந்து திருநீறு கொடுத்தால் விஷம் இறங்கிவிடும் என்பது நம்பிக்கை. மிகவும் சக்தி வாய்ந்த முருகன் திருத்தலம்.


முனியப்பன் கோயில், ஊஞ்சக்காட்டு பெருமாள் கோயில், ஆற்றுப்பிள்ளையார் கோயில், புற்றுக்குப் பொங்கல் என்று அடிக்கடி பொங்கலுக்குத் தேவையான பொருள்களுடன் சென்று பொங்கல் வைத்து படையல் போட்டு வருவோம்.ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடும். கையால் சுற்றப்பட்ட முறுக்கு,மரவள்ளிக்கிழங்கு அப்பளம் , அதிரசம் எல்லாம் சுவையுடன் கிடைக்கும்.

பள்ளியில் படிக்கும் போது வழியில் இருக்கும் ஞானானந்தகிரி ஆஸ்ரமத்தில் இருக்கும் அழகான முருகன் கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்பே பள்ளி செல்வது வழக்கம். அங்கே பல சமயங்களில் ஞானானந்தகிரி சுவாமிகள் தங்கி  இருப்பார்.


பள்ளியில் ஆறு தன் வரலாறு கூறுதல் பற்றி கட்டுரை எழுதச் சொல்ல நொய்யல் ஆறு பற்றி எழுதினேன். 

எல்லோரும் கோனார் தமிழ் உரையை மனப்பாடமாக எழுதியிருக்க, சொந்த நடையிலான என் கட்டுரையைப் பார்த்து வியந்துபோன தமிழாசிரியர் அழகான கட்டுரையை அனைத்து வகுப்புகளுக்கும், தலைமை ஆசிரியருக்கும் காட்டி பாராட்டினார்.  

அன்று நான் நினைத்தேனா கோவை என் புகுந்த ஊராகும் என்று!! 

சிறுவாணித்தண்ணீரின் சுவையும் , ஈரப்பதமுள்ள காற்றும் தவழும் ஊர். ஊட்டி அருகில் இருப்பதால் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்கிறோம் என்று வாகனத்தை எடுத்தால் பலமுறை ஊட்டிக்குச் சென்று விடுவதுண்டு.

குன்னத்தூர் வழியாக கோவை வருவதற்கும், சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் அடைவதற்கும் நிறைய பேர் தயங்கி நேர்வழி  பேருந்தை நாடுவார்கள். 

எனக்கோ அந்தப்பயணங்கள் மிகவும் பிடிக்கும்.மலைப்பாதைகளின் இடையேயான பயணக் காட்சிகளை ரசிப்பேன்..


கல்லூரி படித்தது நாமக்கல். நாமகிரி என்று அழைக்கப்படும் 65 அடி உயரமுள்ள பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது.  

ஊரே அந்தக் கல்லைச்  சுற்றித்தான் உருவாகி யிருக்கிறது. 

வழக்கமாக ஆற்றைச் சுற்றிலும் ஊர் உரு வாகும்; இங்கே கல்லைச் சுற்றி ஊர்.  அதிசயம்தான் 


நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் எதிரில் ஒரு திருமண மண்டபத்தின் அருகே அப்போது மாணவியர் தங்கும் விடுதி இருந்தது.

நாமகிரி லட்சுமி தாயாரின் தரிசனமும், குடைவரை கோவிலான நரசிம்மரின் தரிசனமும் அற்புதமானது. . உள்ளே சென்றாலோ   மிக அற்புதமான புடைப்புச் சிற்பக் கவிதைகளை,  பார்க்கப் பார்க்கச் சலிக்காத சிற்ப எழிலைத திகட்டத் திகட்டக் காணலாம்இந்தப் பாறையின் மீது நாயக்கர் காலத்தைய  கோட்டை ஒன்று இருக்கிறது; 
கமலாலயம் கரையில் இருக்கும் கார்க்கோடக சயன ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதரின் காலடியில் இருந்து ஊற்றெடுக்கும் நீரே கமலாலயக் குளம் என்று சொல்வார்கள்.


என் கணவரின் தந்தை ஒவ்வொரு சித்திரை மாத முதல் நாளும் திருச்செந்தூருக்கும், கார்த்திகை பௌர்ணமிக்கு திருவண்ணாமலையும்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருதார். 

அவர் மறைவிற்குப் பின் கணவரும் திருவண்ணாமலை தரிசனத்திற்கு செல்ல அரம்பித்தார். 
அவரிடம் ஞானனந்தகிரி சுவாமிகளைப் பற்றிக் கூற, திருக்கோவிலூரில் இருக்கும் ஞானானந்த தபோவனத்திற்கு சென்று தரிசித்து வந்தார்.


 ஏற்காட்டில் இருக்கும் ஞானானந்தகிரி ஆஸ்ரமத்தில் தங்கினோம் ., சுவாமிகள் தங்கி இருந்த அறையில் அவரது உருவப்படத்தின் முன் தியானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

ஏற்காட்டில் இருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் அருமையாக பராமரிக்கிறார்கள்.

சேர்வராயன் மலைக்குகை கோவில் சுரங்கப் பாதை அதிசயப்படவைத்தது.

மகன்கள் படிக்க, உத்தியோகம் பார்க்க என்று ஆஸ்திரேலியா சொல்ல, அவர்களைப் பார்க்க சென்ற நாடு கவர்ந்தது.
வியட்நாமிய மார்க்கெட் எல்லாக் காய்கறிகளும் கிடைத்தன. கீரை வகைகள் தோட்டத்திலேயே சுத்தம் செய்யப்பட்டு சதுரவடிவத்தில் க்ட்டிகளாகப் பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன. இரண்டு பாக்கெட் வாங்கினால் ஒன்று ஃப்ரீயாம்.

நிறைய பேரை நாய்களுடன் பார்க்கமுடிந்தது. 

ஒரு அழகுப் பெண்மணி மூன்று மிக அழகிய ஒரேமாதிரியான குட்டிநாய்களை திரிசூலம் மாதிரியான சங்கிலியில் இணைத்து நடத்திச் சென்றதை கண்கொட்டாமல் கடந்து சொல்லும் வரை பார்த்து மகிழ்ந்தேன்.

நாய்கள் குரைக்கும் சத்தமோ காரின் ஹார்ன் சத்தமோ கேட்டதே இல்லை. நாய்கள் குரைக்கிறதென்று யாராவது புகார் கொடுத்தால் சிட்டி கவுன்சிலின் நடவடிக்கை பாயுமாம்.

(பெங்களூரில் அலுவலகம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே நாய்களின் ஓயாத குரைப்பொலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது குளிபதன வசதியையும் மீறி.... 

பக்கத்து பூங்காவில் நோயுற்ற நாய்களைப் பராமரிக்கிறார்களாம். 

அந்த பூங்காகுழந்தைகள் விளையாடும் விளையாட்டுச் சாதனங்களோடும் அழகிய மரம் செடி கொடிகளோடும் அருமையாக பராமரிக்கப்பட்டு இருந்தது. சில விலங்குகள் கூண்டுகளில் . தனி இடத்தில் ஆக்ரோஷமாக நாயகள் விதவிதமாக கத்திக்கொண்டு.)

 ஆஸ்திரேலியாவில் மகன்கள் வரவேற்பறையில் உலக வரைபடத்தையும் , உலக உருண்டை மாதிரியையும் கொண்டு வந்து வைத்தனர். அம்மாவுக்கு உலகம் தெரியவில்லை என்று உலகத்தைப் புரிய வைக்கும் முயற்சியாம்.
ஏனோ அங்கு இருந்தவரை பூமிப்பந்தின் ஓ,,,,ரத்தில் ஒருகால் மட்டும் பதிந்திருதிருந்த அந்நிய உணர்வு. அங்கிருந்தபோது வியந்தது முழுநிலவு இந்தியாவில் காணப்படுவதை விட பெரிதாகவும் அதிக ஒளியுடனும் இருந்ததும், வானவில் அடிக்கடி காட்சிப்பட்டதும், நிமிடத்திற்கொரு அழ்குத்தோற்றம் காட்டும் அழகிய வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதோ என்று தோன்றவைத்து மிகக் கவர்ந்தது.
கோவை விமானநிலையம் வந்து பாதம் தொட்டபின்பே நிம்மதி வந்தது.

Tuesday, June 28, 2011

குருவாயூரில் குண்டுமணி பிரார்த்தனை...குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் மஞ்சாடி விதைகளையும் குண்டுமணியையும் நிரப்பி வைத்திருப்பார்கள். 

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். 

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும்.  

மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள்.

சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணி இருக்கும். 

பொதுவாக குழந்தைகள் விளையாடுவதற்கு மட்டுமே இதனை பயன்படுத்தி பார்த்திருப்போம்.

கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூஜையில் குண்டுமணி   தனி முக்கியத்துவம்  பெறுகிறது ...

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியர், குருவாயூர் கோயிலில் பூஜை , குண்டுமணி அர்ச்சனைக்கு முக்கிய இடம் உண்டு. 

முன்னதாக பாத்திரத் தில் குண்டுமணிகளை நிரப்பி வைத்து இரு கைகளும் சேர்த்து முடிந்தளவு குண்டுமணிகளை அள்ளியபின், குழந்தை வரம் குறித்த கோரிக்கையை மனம் உருகி வேண்டிய பின்னர் அதே பாத்திரத்தில் விட்டு விடுவர். 

கோயில் மட்டுமின்றி கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) நாட்களில், சிலர் வீடுகளிலும் இதுபோன்ற பூஜைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சில பகுதிகளில், இந்த அர்ச்சனை முறை காணப்படுகிறது.

கோவை அஷ்டாம்ச அஞ்நேயர் கோவிலிலும்,தன்வந்திரி கோவிலிலும் உருளியில் இந்த சிவந்த மஞ்சாடி மணிகளையும், மேலே கறுப்பு கீழே சிவப்பு உள்ளே பருப்பு என்று விடுகதை போட்ட குண்டுமணிக்ளையும் காணலாம்.

பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்துவார்கள்...

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது.

 "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி 
மூக்கிற் கரியா ருடைத்து' 

என்ற குறள் குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது கருத்து. 

குருவாயூரில் திவ்யமாக திகழும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனின் வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் மேலும் நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார்

கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்ரஹம் மகா விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிப்பதாகும், 

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அவர் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு இவ்வாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் போற்றப்படுகிறது. 

கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்றழைத்து மக்கள் பரவசம் அடைகின்றனர்.


ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம்.  குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் கொள்ளை ஆசை கொண்ட வயதான பெண்மணியின். வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. 

குண்டுமணிகள் கீழே விழுபவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள்  சிரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று ஒரு மண்டலம் பயணம் செய்து அந்த மாதத்தின் முதல் நாளில் குருவாயூர்  கோவிலையும் அடைந்தாள். 

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். 

சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. 

கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.


அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. 

கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்து அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். 

அவள் ஆசையுடன்  சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. 

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .


பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. 

உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

ஒருசமயம், ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக வானில் பறந்து சென்ற போது, திரிலோக சஞ்சாரியான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
படிமம்:Vilakku.jpg
அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டார். 

""இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்கசெல்கிறேன். நீங்களும் வாருங்களேன்,'' என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர். 

""விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல,'' என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
Hotels in Guruvayur, Guruvayur Hotels, Budget Hotels in Guruvayur, Guruvayur Budget Hotels

குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும்போது, வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். 

குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தி பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடியவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்' என்று எடுத்துக்கூறினார். 

நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார். 

இன்றும் குருவாயூரப்பன் வீதிவுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர்.

அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.

குருவாயூர் கோவிலில் வடக்கு வாசலில் ஆதிசங்கார் பற்றிய குறிப்பும் காணக்கிடைக்கிறது.

ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம்  ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.

ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள்.

அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டி அலங்காரம் செய்யப்படுகிறது.

திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி,  புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான்.

இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.

 ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு  சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம்.

பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான். அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.

அவனும் அதிலிருந்து  தேவையானபோதெல் லாம் உணவை வரவழைத்துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் காஷு மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்து நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.

பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.

""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனா கக் காட்சி தருவேன். ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி  காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்.
Monday, June 27, 2011

வண்ண வண்ண எழில் கோலங்கள்..


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வண்ணப்பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா -- என்று 
வண்ணமயமாய் பாடிய முறுக்குமீசை முண்டாசுக் கவி பாரதியாரின் 
வாக்கை வண்ணச்சிறகுகளாக அணிந்து ,மனதைக் கொள்ளை கொண்ட 
வண்ணப்பற்வைகள் சிலவற்றின் வண்ணக்கோலங்கள் எழிலாய் பார்வைக்கு... 


வண்ணக்கலாப மயிலின் ஆடிவரும் அழகுக்கோலம் காண..


அழகென்ற சொல்லும் அழகு பெற அழகுவண்ணம் காட்டும் காட்சி..


ஆயிரம் கண்கள் போதாதே இந்த அழகைக் காண்பதற்கு வண்ணக்கிளியே..


என்மனவானில் சிறகு விரிக்கும் வண்ணப்பறவைகள்..இன்று வந்ததே புதிய பறவை.


கிளியே கிளியே கிளியக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா


வசந்தம் வந்தது என்று வரவேற்கும் வாய்ப்பு...


சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு..உலகம் முழுதும் பறந்து பறந்து
சிட்டாய் நீயும் தமிழ் பண்பாடு...


மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-


சிந்து பாடும் பறவை நாம் சிறகடித்துப் பற்ந்திடுவோம் 
பாஸ்போர்ட்டா விசாவா என்னதேவை எம்க்கு..