Thursday, June 23, 2011

விந்தை விலங்கு கொலோபஸ் குரங்கு


இன்று வலைச்சரத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தும் அனைவரையும் வரவேற்பதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
சொந்த வலையிலும் பதிவுகள் தொடர திட்டமிட்டுள்ளேன். ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்


சமீபத்திய வலை உலாவில் கொலோபஸ் குரங்கு என்ற ஒருவகை குரங்கினத்தைப் பற்றிய தகவல்கள் வியப்பளித்து, பகிர்ந்து கொள்ளத்தூண்டின.

இராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் " என் குலம் எனக்காக்கி தன் குலம் தனக்காக்கி " என்று சுந்தரனான அனுமனை வியப்பார். அனுமன் மற்றும் குரங்கினங்கினங்களின் பங்களிப்பு காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

அன்றாட வாழ்விலாகட்டும், ஆன்மீகத்திலாகட்டும் கட்டைவிரலின் மகத்துவம் முக்கியத்துவம் அறிவோம். அந்தக் கட்டை விரலே இல்லாமல் ஒரு வகை குரங்கினம் கொலோபஸ் குரங்கு..

Animated gif of TJ dancing in a banana suit


படிமம்:Colubusmonkey.JPG

படிமம்:Mantled Guereza.jpg
கொலோபஸ் குரங்கு என்று அழைக்கப்படும் வெள்ளை-கறுப்பு கொலோபஸ் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம்.இது ஆப்பிரிக்காவில் கிழக்கு, நடு, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இயற்கையாக காடுகளில் வாழ்கின்றது. இக் குரங்குக்கு கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருப்பதால் இதற்கு கொலோபஸ் என்று பெயர். கிரேக்க மொழியில் ekolobóse (எக்கொலோபொசெ) என்றால் அவன் ஒட்ட வெட்டிக்கொண்டான் ("he cut short") என்று பொருள். இதனால் தமிழில் இதனை கூழைக் குரங்கு அல்லது கட்டைவிரல் கூழைக்குரங்கு என்றும் கூறலாம் (கூழை = குட்டையாக அல்லது அறவே இல்லாமல் இருப்பது). இதன் உடல் பட்டுநூல் போன்ற மழமழப்பான, மென்மையான கறுப்பு வெள்ளை முடியால் போர்த்தப்பட்டுள்ளது. தலை, முதுகுப்புறம், மற்றும் கை கால்கள் கறுப்பாகவும், தோளில் இருந்து உடலின் இருபுறமும் நீண்ட வெண்முடியும் கொண்டுள்ளது. உடலைவிட வால் சற்று நீளமாக இருக்கும். வாலும் வெள்ளையாக உள்ளது. இக் குரங்கின் குட்டிகள் பிறந்தவுடன், முகம், உள்ளங்கை உள்ளங்கால்கள் தவிர மற்றபடி உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். பின்பு ஏறத்தாழ 3-4 மாதங்களுக்குப் பிறகு வளர்ந்த குரங்குக்கான கருப்பு-வெள்ளை முடி அமைப்பைப் பெறுகின்றது கூழைக்குரங்குகள் (கொலோபசுக் குரங்குகள்) கூட்டமாக வாழ்கின்றன, பெரும்பாலும் ஒரு குழுவில் 5-10 குரங்குகள் இருக்கும். இவை வாழ்நாள் முழுவதும் மரங்களின் கிளைகளிலேயே வாழ்கின்றன. தரையில் இறங்குவது கிடையாது.கூழைக் குரங்கு (கொலோபஸ் குரங்கு) வகையில் ஐந்து இனங்கள் உள்ளன. கறுப்பு-வெள்ளை கொலோபஸ் குரங்கு, சிவப்புக் கொல்லொபஸ் என்னும் வேறு ஒரு குரங்கினத்துக்கும் உறவான உயிரினம்.
கொலோபஸ் குரங்கு இலை தழைகளையும், பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. துளிர் இலைகளை விரும்பி உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரங்களுக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன. குழுக்களில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 8-10 ஆக இருக்கும். அவற்றுள் ஒன்றோ இரண்டோதான் கடுவன்களாக(ஆண் குரங்குகளாக) இருக்கும். கடுவன்கள் தங்கள் வாழிட வலையத்துக்கான உரிமையை நிலைநாட்டவும் பிற கடுவன்களை எச்சரிக்கவும் உரக்க குரலெழுப்பிக்கொண்டு கிளைகளில் மேலும் மிகக் கீழுமாகத் தாவி தன் வல்லமையைக் காட்டும். கூழைக்குரங்கு இனத்தில் இனப்பெருக்கத்திற்கென்று தனியான காலப்பகுதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் சில இடங்களில் (ஈக்குட்டோரியல் கினீயாவில்) நிறைய பழங்கள் கிடைக்கும் காலமாகிய டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் கறுப்புக் கொலோபஸ் இனத்தில் இனப்பெருக்கம் நிகழ்வதாக (Oats) என்பார் குறிக்கிறார். கருவுற்று இருக்கும் காலம் 175 நாட்கள். பிறக்கும் பொழுது குட்டிகளின் எடை 820 கிராம்.
ஐந்து இனங்களும் எட்டு உள்ளினங்களும் உள்ளன.

சிவப்பு கொலோபஸ்
படிமம்:Red Colobus monkey.jpeg


What was the animated monkey called you could get on your PC Desktop can you download it still? Image

  அசத்தக்கூடிய செய்தி ஒன்று பகிர்வதில் மகிழ்ச்சி.

திக்கெட்டும் எக்காளமிடும் தமிழ் முழக்கம் தங்கத்திரை நாடான ஆஸ்திரேலியாவில் முழங்குவது நமக்கு பெருமை சேர்க்கிறது.

கனடா பாராளுமன்றத்தில் தமிழில் முழக்கமிட்ட ராதிகா சிற்சபேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். கனடாவில் தமிழும் ஆட்சி மொழி ஆகுமா சிங்கப்பூர் போல. காத்திருப்போம்.

 (அசத்தப்போவது யாரு...t7 comments:

 1. இதுவரை அறிந்திராத குரங்கினத்தை
  அறியத் தந்துள்ளீர்கள்
  படங்களும் விளக்கியுள்ள விதமும் அருமை
  இறுதியாக கொடுத்துள்ள இனிய செய்தியும்
  மன மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
  தங்கள் பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை
  200 த்தொட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அழகற்றவர்களை குரங்குபோல இருப்பதாகச் சிலர் சொல்லுகின்றனர்.

  இங்கு நீங்கள் குரங்களை அழகாக்கி, பதிவாக்கி, அருமையான தகவல்கள் அளித்து, அதன் மூலம் அந்தக் குரங்குகளுக்கும் ஒரே குஷியாகி தலைகீழாகத்தொங்கி, நடனமாடி, குட்டிக்கரணம் அடித்து கும்மாளம் போடுகின்றனவே! பார்க்கவே பரவசமாக்கிவிட்டது, என்னை.

  அடடா ... குட்டையாக இருந்தாலும், கட்டைவிரல் நமக்கு மிக முக்கியமானதாயிற்றே!

  அந்தக்கட்டைவிரலே இல்லாமல் ஒரு குரங்கினமா; அரிய தகவல்.

  உலகிலுள்ள அனைத்துக் குரங்குகள் சார்பாக உங்களுக்கு நன்றி !
  பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!


  [" என் குலம் எனக்காக்கி தன் குலம் தனக்காக்கி " - Thanks to கம்பர்.]

  ReplyDelete
 3. அபூர்வ தகவல்கள் பல தாங்கி வந்துள்ள இந்த பதிவு குரங்கு போல் அங்கும் இங்கும் தாவாமல் மனதை ஒருநிலைப் படுத்தி படிக்க வைக்கிறது, நன்றி புதிய தகவல்களுக்கு

  ReplyDelete
 4. என்னங்க திடிரென வித்தியாசமான ஒரு பதிவு...

  நான் இதைப்பற்றி தற்போதுதான் கேள்விப்படுகிறேன்...

  தந்திருக்கும் அத்தனை தகவல்களும் சிறப்பு...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. கொலோபஸ் பற்றிய பல தகவல்கள் அறிந்து கொண்டோம் உங்கள் பதிவில் இருந்து.

  ReplyDelete
 6. "சொந்த வலையிலும் பதிவுகள் தொடர திட்டமிட்டுள்ளேன்."--- சொந்த வலை எது என்று தெரிவிக்கவும்...பத்மாசூரி

  ReplyDelete