Saturday, June 25, 2011

திரு கொழிக்கும் திருச்செங்கோடு

படிமம்:Thiruchencode temple.JPG

தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

[Image(1169)1.JPG]


திருக்கோயிலின் ஒரு வாயில் வழி
[Image(1171)1.JPG]

திருக்கோயிலின் ஒரு வாசல்
[Image(1167)1.JPG]

கோயிலின் ஒரு பார்வை
[Image(1173)1.JPG]


தங்கத்தேர் மனதில் தங்கும் தேர்

திருச்செங்கோடு ஆதிகேசவப் பெருமாள் வடக்குரதவீதி செங்குந்தர் மண்டபக்கட்டளையின்போது


அர்த்தநாரீஸ்வரர் யானை வாகனம்

ஆனை முகத்தோனின் அற்புத தரிசனம்

சுந்தரமூர்த்தி நாயனார்

தங்கரதம் உற்சாக வலம்

கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா-3

அலங்கார நாகராஜா


நகரின் பறவைப் பார்வை

[Image(1130)1.JPG]
 திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. 

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று எல்லாவற்றாலும் சிறப்பு கொண்டு, உழைப்பு நிறைந்த சுறுசுறுப்பான மக்களைக்கொண்டு தலை நிமிர்ந்து தன் பெருமையைப் பறைசாற்றும் திருச்செங்கோடு மலை.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட் ..பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.

இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும் வடமேற்க்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், 

மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், 

தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. 

திருச்செங்கோடு மலை சுமார் 2000 அடி உயரம் கொண்டுள்ளது. 
மலைக்கு 1206 படிக்கட்டுகள் உள்ளன.

மலையின் ஆண் தோற்றம்

மலையின் பெண் தோற்றம்
Loading Image, please wait...
மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.

ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். 

ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். 

வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். 

சிவராத்திரியன்று இரவில்  4 கால பூஜை நடப்பது விசேஷம். 
ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.
 மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம்.

மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். 

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது.

நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு வழக்குகள் படியில் தீர்க்கப்படுகிறது. 

சத்தியப்படிகள் சுற்றுப்புறங்களில் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பயன்பட்டது. 

சத்தியப்படிகளில் ஒருவர் நின்று சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை படிகளில் தீர்க்கப்பட்ட பிரச்சனையை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
னவே இப்படிகளுக்கு சத்திய படிகள் என்று பெயர் வந்தது.
படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி நாக தோஷங்கள் நீங்குகிறது..!

குன்றின் உச்சியில் ராயர் கோபுரம் 5 நிலைகளுடன் பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. 

திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு படிவழியாக செல்வதற்குள்  பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்காக  11 மண்டபங்கள் உருவாக்கப்பள்டுள்ளன. 

மலைபடிபாதை தொடங்கும் இடத்தில் ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது.  

பசுவன் சுவாமிக்கு சுற்றுப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகள் நன்றாக பால் கறக்க வேண்டி வெண்ணெய் காப்பு செய்து வழிபடுகின்றனர். 

60அடி நீளம் 5தலை நாகப்பாம்பு புடைப்பு  சிற்பத்தில் மஞ்சள், குங்குமம், பால் போன்றவற்றை வார்த்தால் திருமண் தடைகள், நாகதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

சுற்று பிரகாரத்தில் குதிரை, யானை, தெய்வசிற்பங்கள்,  யாழி, அசுரவதம், உள்ளிட்ட நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. 

கல்சங்கிலி மற்றும் சிலைகள் பெரும் வேலைப்பாடுமிக்கதாக கருத்தைக்கவருகிறது..

1823-ம் ஆண்டு டேவிஸ் துரை என்ற சேலம் ஆட்சியர் சிதைந்த ஒரு சிலபகுதிகளை சரிசெய்துள்ளதால் அவரது உருவம் கொண்ட புடைப்பு சிற்பம் முக்கூட்டுவிநாயகர் கோவில் முன்பு அமைந்துள்ளது

ஆமை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆமை  மண்டபத்தில் சுவாமி சிலைகளை வைத்து அர்ச்சனை செய்யும்போது கோபுரத்திலிருந்து தானியங்கு அமைப்பு மூலம் ஒவ்வொரு பூக்களாக விழுவதற்கான விசை இந்த மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். இந்த மரத்திலான விமானத்தை பிச்சை அண்ணன் என்ற சிற்பி செய்துள்ளார்.
படிமம்:Thiruchengodu Arthanareeswarar Sannidhi-Amai mandapam.jpg
மனிதனின் ஐம்புலன்களையும் அடக்கினால் இறைவனிடம் சேரலாம் என்பதை உணர்த்தும் விதமாக ஆமை மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மொளசி வேலப்ப கவுண்டர் ஊமை நீக்கப்பட்டு பேசும் திறமை அடைந்த 
பின் மலை மீது ஆமை மண்டபத்தினை நிர்மாணித்தார். 

சந்தன குறடு(சந்தனம் தேய்க்கும் கல்) கல் ஆமை மண்டபத்தில் உள்ளது.

ஆமை மண்டபத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சஙகலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிருத்த மண்டபத்தில் உள்ள தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ள சபா மண்டபம்  அருமையானது ..


 ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டு காளியும் எதிரெதிரே இருந்து நடனமாடும் திருவுருங்கள் இங்கு கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலை தின்ற கல்நந்தி சிறப்பு வாய்ந்தது . 

திருஞான்சம்மந்தர் பாடிய பாடலால் கல்லாக இருந்த நந்தி ஆர்த்தெழுத்து கடலைதின்றதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். 
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபட பார்வதி, "முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், 'நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது.

மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப  இருவரும் இணைந்த வடிவம் 'அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது.

அர்த்தநாரீ என்ற 'இணைந்த வடிவத்துடன்  பூலோகத்திற்கும் வந்து  குடிகொண்ட   சில தலங்களில் திருச்செங்கோடும் ஒன்று..!. 

சக்தியின்கோபத்திற்கு ஆளான பிரிங்கி முனிவரின் தசை பாகத்தை எடுத்துவிட்டார் சக்தி. இதனால் தெம்பிழந்த பிரிங்கி முனிவருக்கு சிவன் மற்றும் ஒருகாலை வழங்கி உபதேசம் கூறி “சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவம் இல்லை” என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தினார்கள்.

ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். 

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும். 

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருப்பதில்  22வது வடிவம்  அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும். 

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற ஆத்மார்த்த மரகதலிங்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.

அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). 

இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசயமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார். 

உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. 
அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் சித்தர்களால் வெண்பாஷணம்என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. 

பாஷாணம் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. 

பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தமும்  பெருமானின் பாதத்தில் இருந்து வரும்  தேவ தீர்த்தமான சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன 

மிகப்பழமையான சிலை   மதியம் ஒருவேளை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. 

அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அலங்காரம் செய்யப்படுகிறது.

அர்த்தநாரீஸ்வரர்
உலகிலேயே வேறு எங்கும் காணாத புதுமையாய் அர்த்தநாரீஸ்வரரின் அர்ச்சனையின் போது ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்சிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பு. 

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவம் அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும். 

வேறு எந்த சிவதலங்களிலும் இல்லாதவாறு இங்கு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தேவ தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 செங்கோட்டுவேலவரை வணங்கி மேற்கு நோக்கி அமைந்துள்ள அம்மையப்பன் சன்னதிக்கு செல்லலாம் 

வலது கையால் தண்டாயுதத்தை பிடித்தவாறு பராபரையின் பாகமாகிய இடது கையை இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நிலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய நோக்கும் பூண்டு பச்சைநிற கோசீக உடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார். அம்மையப்பனின் திருமுன் திருவாயில் கிடையாது. மாறாக துவாரங்களுடன் கூடிய கல்லாலான பலகனி அமைக்கப்பட்டுள்ளது.


 நாகாசலத்தில் எழுந்தருளியுள்ள அர்த்த பாகத்திறைவனுக்கு தூபதீபங்கள் காட்டி சந்தனம், குங்குமம், விபூதிகளை அணிவித்து வில்வம், வெள்ளருக்கு, தாமரை, செண்பகம், செங்கழுதீர், மாந்திரை, பாதிரி, பொன்னரலி மலர் தூவி வழிபடல் வேண்டும்.

சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன.

சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் உள்ளது. 
காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். 

உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.

மரகதலிங்கம்
மரகதலிங்கம்

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். 

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். 

மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.

திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருகப் பெருமான் கோபமுற்று நாகாசலம் வந்தார் 

குமரன் கையிலையிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து பார்வதி தேவியார் மிகுந்த கவலை கொண்டிருந்தார். சோகமே உருவமானதைக்  கண்ட சிவன் அம்மைக்கு மகிழ்வூட்ட எண்ணி அவரைத் தாருக வனத்திற்கு அழைத்து வந்தார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இருளின் காரணமாக ரிசிகளும், முனிவர்களும் மேற்கொள்ளும் நித்திய வழிபாட்டுமுறைகள் மாறியது. 


சக்தி திருவண்ணாமலயில் விரதமிருந்து சாபவிமோசனம் பெற்றார். 

கந்தப் பெருமான் கொங்கு மண்டலத்தில் உள்ள கொடிமாடச் செங்குன்றின் மேல் கோயில் கொண்டு உள்ளான். அந்தக் குன்றம் தான் நாம் தங்குவதற்கு ஏற்ற இடமாகும் ஆகவே நீ அங்கு சென்று தவத்தினை மேற்கொள்வாய் என்றார். 

அதனைக் கேட்ட அன்னை தன் பிள்ளையாகிய வேலனை காணும் ஆசையாலும், சிவபெருமானின் உடலில் ஒரு கூராய் அமரவேண்டும் என்ற விருப்பாலும் திருவண்ணாமலையிலிருந்து நாகாசலம் எனப்படும் திருக்கொடி மாடச் செங்குன்றூர் வந்து அடைந்தார்.


அன்னை பராசக்தி நாகசலத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்திற்கு மேற்காகவும் இலுப்பை மரத்திற்கு கிழக்காகவும், அமைந்துள்ள தேவ தீர்த்தமே ஏற்ற இடமென்று கருதி அந்த தீர்த்தின் மேலுள்ள தாமரை மலரின் மேல் நின்று தன் தவமந்திரமாகிய பஞ்சசலத்தை உச்சரித்துக்கொண்டு பல காலம் கடும் தவம் புரிந்தார். 

தவத்தின் இறுதியில் சிவபெருமான் தோன்றி சிவமில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவமில்லை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தனது உடலில் இடது பாகத்தை தேவிக்காக தியாகம் செய்து. அப்பகுதியில் அம்மையின் உடலில் ஒரு பாகத்தை இடம் பெறச்செய்தார்.

சிவனின் உடலில் பாகம் பெற்றதால் பாகாயி என்றனர். 
பிற்காலத்தில் பாவாயி என மருவியது.. . 

இறைவனை குலதெய்வமாக எண்ணிய மக்கள் தன் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தநாரீ என்றும், பெண் குழந்தைகளுக்கு பாவாயி என்றும் பெயரிட்டனர்.

கேதாரகெளரி விரதம் இருந்து சிவனும் சக்தியும் இணைந்து மாதொருபாகனாக இங்கு காட்சியளிக்கின்றனர்.

*உமையொருபாகனுக்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது 

திருபள்ளி எழுந்தருளலும் இல்லை 

சிவன் பார்வதி உள்ள ஆலயங்களில் அர்த்த ஜாம பூஜையும் திருபள்ளி எழுந்தருளலும் வழக்கமாக நடைபெறும் 

ஆனால் சிவனும் பார்வதியும் ஒன்றாக அர்த்தநாரீஸ்வரராக இருப்பதால் நடைபெறுவதில்லை. 

ஆலயத்தில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. 

இதற்கு  காரணம் திருமலையினை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து அபிஷேகத்திற்கான பால் மலைக்கு மேல் கொண்டுவருவதற்கு நண்பகல் ஆகிவிடும் என்பதால் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறுவதாக காரணம் கூறப்படுகிறது. 

மஹாசிவராத்திரி அன்று மட்டும் 4 கால பூஜைகள் நடைபெறும். ஜாம பூஜை இல்லாததால் திருச்செங்கோடு திருமலையின் நடை மாலை 5 மணிக்கு பூட்டப்பட்டு விடும்.

சிறு வயதில் உற்சாகமாக ஏறிய படிகள் இன்று அழகிய மலைப்பாதையோடு இயற்கைக்காட்சிகளை மனம் நிறைய அள்ளிக்கொடுத்து மகிழ்விக்கிறது. முகப்பில் இருக்கும் பிரம்மாண்ட ஆனைமுகன் தன் கண்பார்வையில் திருச்செங்கோட்டு மக்களை உயர்வித்து தொழில் வளம் சிறக்கச் செய்கிறார்.

சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது.

கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. 

தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. 

செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

செங்கோட்டுவேலவர் சன்னதியின் முன் உள்ள கல்தூண்களில் சிவன் வேட்டுவனாகவும், பார்வதி வேட்டுவச்சியாகவும் காட்சியளிக்கின்றனர். 

அதே போல் விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும் மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.


குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம்.


வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். 

திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமாக
 இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். 

மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். 

வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார்.

மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளார். தெய்வ செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என்று பாடியுள்ளார்.

ஆறுமுகசுவாமி மூலவர்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக்
கண்ணாரக் காண நாலாயிரம் கண் படைத்திலனே
அந்தப் பிரம்மனே என அருணகிரியார் பிரமித்து உருகிப்பாடிய திருச்செங்கோட்டு வேலவனைப் பார்க்கும் போது நமக்கும் இரு கண் போதவில்லை என்ற உணர்வு ஏற்படும் அற்புத சேயோன் முருகனின் தலம்.
 தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரி முதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக அழைக்கப்படுகிறது. 

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும் 

சதயநட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர். இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும். 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண்ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் ராஜாஜியால் ஏற்படுத்தப்பட்டு காந்திஜி வருகை புரிந்த பெருமை பெற்றது. 

கொல்லிமலை பழங்களும், சுவையான கத்தரிக்காய் மற்றும் காய்கறிகள் எல்லாம் புத்தம் புதிதாகக் கிடைக்கும் அற்புத ஊர். 

இந்த மலையின் உச்சியில் உள்ளது பாண்டீஸ்வரர் கோவிலில். பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது தங்கி இருந்ததாகவும், அந்தபகுதியை ஆண்ட மன்னர்களால் உபசரிக்கப்பட்டதாகவும் வரலாறு உண்டு. 

பீமன் பனை மரத்தைப் பிடுங்கி பல் துலக்கியதாகவும், உச்சியில் உள்ள பாறையில் சுண்டைக்காய் நசுக்கி உண்டதாகவும் உற்சாகக் கதைகள் பெரியவர்களால் கூறப்படுவதுண்டு. 

வறடிக்கல் சுற்றி மகப் பேறடைந்தவர் போன்ற திகில் கதைகள் ஏராளம் வழங்கப்படுகிறது.

வரடிக்கல்
திருமணம் நிகழ்ந்தவுடன் தம்பதியர் முதலில் தரிசிக்க வேண்டிய கோவிலாகக் குறிப்பிடப்படுகிறது. 

காலை எழுந்தவுடன் இத்தலத்தில் வசிப்பவர்கள் முதல் தரிசனமாக சிவலிங்கமாகக் காட்சிதரும் செங்குன்றத்தையே வணங்குகின்றனர். 

இவ்வூர் மக்களின் மனவளத்திற்கும், பொருள் வளத்திற்கும் வேறு காரணம் வேண்டுமா என்ன!
இந்த கோவிலில் மலை உச்சியின் முனையில் உள்ளது. ஒரு பகுதியில் செங்குத்தான 900அடி பள்ளத்தாக்கு உள்ளது. 

வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டினால் மகப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. செங்குத்தான பகுதியில் இருந்து பலர் தவறி விழுந்தும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததால் இந்த அபாயகரமான பகுதியில் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் லாங்கிலிதுரை என்பவர் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்தார். இதன் பின் அசம்பாவிதங்கள் வெகுவாக குறைந்தன.

திருச்செங்கோடு மலையில் சிவன், பெருமாள், சக்தி, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளதால் சித்திரை முதல் பங்குனி வரையுள்ள அனைத்து மாதங்களிலும் விழாக்கள் உள்ளன. 

சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியும், 
வைகாசி மாதம் வைகாசி விசாக தேர்திருவிழாவும், 
ஆனி மாதம் ஆனித்திருமஞ்சனம்  விழாவும், 
ஆடி மாதம் ஆடிப்பூரவிழாவும், 
ஆவணி மாதம் ஆவணி அவிட்டமும், விநாயகர் சதுர்த்தியும், 
புரட்டாசி மாதம் கேதார கெளரி விரதமும், 
ஐப்பசி மாதம் நாகேஸ்வரர் அன்ன அபிசேகமும், 
ஐப்பசி மாதம் சூரசம்ஹாரம், 
கார்த்திகை மாதம் கார்த்திகை தீப கூம்பும், 
மார்கழி மாதம் படித்திருவிழா, 
தை மாதம் தை பூசம், 
மாசி மாதம் மாசி மகம், 
பங்குனி மாதம் பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
வைகாசி மாதத்தில் நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதன் முக்கிய அம்சமாகும்.
சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த கண்ணகி திருச்செங்கோடு மலையில் இருந்து வானுலகம் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் திருச்செங்கோடு மலையின் மேல் கண்ணகிக்கு கோட்டம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை உண்டு..! 


இம்மலைக்கு சென்று வர மலைப்பாதை அமைக்கப்பட்டு மூன்று பேருந்துகள் அறநிலையத்துறையின் சார்பாக இயக்கப்பட்டு வருகின்றது.  

அமாவாசை, பெளர்ணமி விழாக்களில் ஏராளமான பக்தர்கள் அமமையப்பனை தரிசித்து செல்கின்றனர். 


 பெளர்ணமி கிரிவலம் மிகபிரசித்தி பெற்ற பெருமைகள் வாய்ந்த கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகும்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், 
திருச்செங்கோடு- 637211. 
கொடிமாடச் செங்குன்றூர், 
நாமக்கல் மாவட்டம்.
+91-4288-255 925, 93642 29181


நிறைந்த நன்றிகள்...www.arthanareeswarar.com


21 comments:

 1. சிவ சிவ !

  மிகப்பெரிய பதிவு. படித்து முடிக்க நிறைய நேரம் ஆகும்.

  ReplyDelete
 2. மிக அழ்கான படங்களுடன் சிறப்பான விளக்கங்களும். அருமையான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. நேரடியாகச் சென்றால் கூட இத்தனை
  அழகாக அண்மையில் இருந்து பார்ப்பதுபோல்
  பார்க்க முடியுமா என்பதும் ஸ்தலம் குறித்த
  இத்தனைவிவரங்களையும் தெரிந்து கொள்ள முடியுமா
  என்பது சந்தேகமே
  படஙக்ளும் விளக்கங்களும் மிக மிக அருமை
  தெரிந்து கொள்கிற பயன்கள் எல்லாம்
  எங்களைச் சேரட்டும்
  அதற்கான புண்ணியங்கள் எல்லாம்
  உங்களைச் சேரட்டும் என வாழ்த்தி....

  ReplyDelete
 4. படைப்புகளைப்போலவே படைப்புகளுக்கு தலைப்பு வைப்பதில் தலைவியின் தனித்தன்மை பளிச்சிடுகிறது.

  வைரக்கீரீடம்! அடடா ஜொலிக்கிறதே!

  தங்கத்தேர் மனதில் தங்கி விட்டது !

  மலையின் தோற்றங்களில் கூட ஆண் பெண் என்ற தகவல் மலைப்பை ஏற்படுத்துகிறது.

  பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நதி நடுங்க வைப்பதாக உள்ளது.

  ஆமை மண்டபம் நல்ல தகவல்.
  //மனிதனின் ஐம்புலன்களையும் அடக்கினால் இறைவனிடம் சேரலாம்//
  ஆஹா ! சத்தியமான வாக்கு.
  ஆனால் அவ்வாறு அடக்கத்தானே முடிவதில்லை, அது தானே கஷ்டமாக உள்ளது!

  பிரதோஷப் பிரதட்சனம் பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகக் கூறி வரும் போது, அதைப்பற்றிய விளக்கம் ‘விளம்பரப்பலகை’ யாகவே வைத்துள்ளனர் என்பது சிறப்பு.

  //அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). //

  படிக்கும் அனைவருக்குமே சுலபமாகப்புரிய வைத்துவிடும், இந்த உங்கள் வரிகள். சபாஷ்!

  //மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள். இருவரும் இணைந்த வடிவம் 'அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் இணைந்த வடிவம்' எனப் பொருள்//

  பிரிக்க முடியாத பந்தமாகவே தான் உள்ளது.

  அனைத்தும் படங்களும் அழகு.
  அருமையான பதிவு.
  நன்றி.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 6. யப்பா!!!! எவ்வளவு தகவல்கள்

  படங்கள் கிளாசிக்

  ஈரோட்டில் இருந்து கொண்டு இவ்வளவு விஷயம் தெரியாமல் இருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 7. அருமை, பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன், முக்கியமாய்ச் சத்தியப் படிகள். மதுரை அழகர் கோயில் பதினெட்டாம்படிக் கருப்பை நினைவூட்டியது. அங்கேயும் பல வழக்குகள், குடும்பச் சண்டைகள் தீர்த்து வைக்கப் படுகின்றன. அவற்றையும் உச்ச நீதி மன்றமே ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பார்கள். இதை எல்லாம் பார்க்கையில் ஒரு காலத்தில் தெய்வீகத்தில் எவ்வளவு சிறப்பாக இருந்தோம் என்பது புரிகிறது. நன்றி அழைப்புக்கு.

  ReplyDelete
 8. வணக்கம்.உங்களைமாதிரி எழுதவேண்டும்,எல்லாக்கோவில்களுக்கும் போய்வரவேண்டும் என்று எனக்குமிக ஆவல்.ஆனால் மனசின் சுறுசுறுப்பு அளவுக்கு உடம்பால் முடியவில்லை.அதனாலென்ன உங்கள் பதிவுகளின்மூலம் எல்லாவற்றையும்
  நேரில்பார்த்த நிறைவு வருகிறது.மேலும்
  மற்றவர்களின் பதிவுகளையும் உங்களைமாதிரி உடனுக்குடன் படித்து கருத்துஎழுதவும் முடியவில்லை. நல்லது

  ReplyDelete
 9. எங்க ஊருக்கு அருகாமையில் உள்ள கோவில்! சிற்ப அதிசியம் மிகுந்த தலம்! கோவிலின் தல வரலாற்று புத்தகத்தில் கூட இவ்வளவு செய்திகள் இல்லை.உங்களின் விஸ்வரூப பதிவிற்கு அன்பான வாழ்த்துக்கள்...பத்மாசூரி

  ReplyDelete
 10. ///ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும். உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும். அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற ஆத்மார்த்த மரகதலிங்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.///

  அபூர்வத்தகவல்கள் நிரந்த பதிவு, மனதில் ஆன்மீக அலை வீசுகிறது
  அந்தக்கால சிற்பிகளின் கைவன்னகள் மனதை பிரமிக்க செய்கிறது

  ReplyDelete
 11. பதிவை விட அதிகமாக கதை சொல்லும் படங்கள். கிரீடம் கவர்கிறது.

  ReplyDelete
 12. நான்கு வருடங்களுக்கு முன்னர் அலுவல் நிமித்தமாக திருச்செங்கோடு சென்ற போது மலை ஏறினேன். மிகவும் அற்புதமான கோயில். மலை ஏற பேருந்து வசதி இருப்பது தெரியாமல் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஏறி , சர்க்கரை அளவு குறைந்து, அம்மையப்பன் தான் காப்பாற்றினான்.

  ReplyDelete
 13. நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள் .. என்ன அருமையான விவரணங்கள்.. எத்தனைப்படங்கள்? அற்புதம்

  ReplyDelete
 14. திருச்செங்கோடு அர்த்தநாரீஸர் முழுவதுமாய் தெரிந்து கொண்டோம்.

  ReplyDelete
 15. எங்கள் ஊரான திருச்செங்கோடு பற்றி படங்களுடன் விளக்கமாக எழுதியுள்ளமைக்கு மிக்க நன்றி. கேதார கௌரி விரதம் புரட்டாசி அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசையுடன் முடிகிறது. ஆடி, தை, புரட்டாசி மற்றும் பங்குனி அமாவாசைகள் இங்கு மிகவும் சிறப்பான தினங்களாகும். இவ்விடம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட சிறப்பான தலமாகும்

  ReplyDelete
 16. miga arumayana padangal nandri

  ReplyDelete
 17. ;)

  குருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
  குருர்-தேவோ மஹேஷ்வர:

  குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
  தஸ்மை ஸ்ரீ குரவே நம:

  ReplyDelete
 18. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய
  அற்புதமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 19. சிறப்பான திருத்தலத்தகவல்கள்..
  பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்க்கள்..

  ReplyDelete