Monday, June 20, 2011

வள்ளி வாழ்ந்த வள்ளிமலைக் கோயில்

இன்று வலைச்சரத்திற்கும் அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வலைசரத்திலிருந்து வள்ளிமலைக்குப் போகலாம் வாருங்கள்.......



வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி மயில்மேல் திகழ்ந்த குமரேசன்
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி மலைகாத்த நல்ல மணவாளன் முருகன் -
வள்ளிக்கு வாயத்தவன் ,வல் அசுரர் மாய்த்தவன் ,தொல்லை வினை களைபவன்
வலிய கரம் பிடித்து அடியவர் இடர் தீர்த்து அருள் சுரக்கும் பசைநிறத்தி குறத்தி

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் வள்ளிமலைக் கோயில்
வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.

படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன.

ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வ‌ள்‌ளிமலை‌க் கோ‌‌யிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கா‌ல் ம‌ண்டப‌ப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனா‌ல் அ‌‌வ்‌விட‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் எ‌‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் செ‌ய்யாம‌ல் அ‌‌ந்த க‌ல்லை அ‌ப்படியே மூடி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.


தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை.

படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.

நுழைவா‌யி‌லி‌ல் உ‌ள்ள ஒரு ச‌‌ந்ந‌தி‌யி‌ல் வ‌ள்‌ளி அ‌ம்ம‌ன் பாறை‌யி‌ல் செது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த ‌சி‌ற்ப‌த்‌தி‌ற்கு‌ம் ஆடைக‌ள் அ‌ணி‌வி‌க்க‌ப்ப‌ட்டு ‌தீபாராதனைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன. அவரை வண‌ங்‌கி‌வி‌ட்டு உ‌ள்ளே செ‌‌ல்லு‌ம் போது சாதாரண உயர‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம் கு‌னிந்துதா‌‌ன் செ‌ல்ல வே‌ண்டு‌ம். அ‌வ்வளவு தா‌ழ்வான நுழைவா‌யிலை அடு‌த்து முருக‌ன் க‌ர்‌ப்ப‌கிரக‌ம் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது.

மேலே பா‌ர்‌த்தா‌ல் பாறை எ‌ங்கே நமது தலை‌யி‌ல் ‌விழு‌‌ந்து‌விடுமோ எ‌ன்ற அ‌ச்ச‌ம் உருவா‌கிறது. பாறைகளை‌க் குடை‌ந்து அத‌ற்கு‌ள் முருகனை வை‌த்து வ‌ழிபட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் ‌எ‌ப்படி தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று ‌பிர‌ம்‌மி‌ப்பாக உ‌ள்ளது.

எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.


மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானை‌யி‌ன் உருவம் கொண்ட பாறை எ‌ன்று ந‌ம்பு‌ம் ப‌க்த‌ர்க‌ள் அதனை கணேச கிரி என்று ப‌க்‌தியோடு வண‌ங்குகிறார்கள்.


கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.

மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம்.

இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.


இ‌ந்த கோ‌யி‌ல் மாலை 5 ம‌ணி வரை ம‌ட்டுமே ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். கோ‌யிலு‌க்கு‌ள் 4 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் செ‌ன்று‌வி‌ட்டா‌ல் அத‌ற்கு ‌பி‌ன்ன‌ர் 2 ‌கி‌.‌மீ. தூர‌ம் நட‌ந்து செ‌ன்று ஆ‌சிரம‌ம், சுனை, ‌திருமா‌ல் ‌கி‌ரீ‌ஸ்வர‌ர் கோ‌யி‌ல்களை த‌ரிசன‌‌ம் ச‌ெ‌ய்து‌வி‌ட்டு ‌திரு‌ம்ப இயலு‌ம். கோ‌யி‌‌லி‌ன் நடை சா‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், ம‌ற்ற பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ன்று ‌திரு‌ம்ப த‌னி வ‌‌ழி உ‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ச் செ‌ல்ல இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம்.


எனவே இறை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த இ‌‌‌த்தல‌த்‌தி‌ற்கு செ‌ன்று வ‌ள்‌ளி‌‌ மலை‌யி‌ன் அ‌ற்புத‌த்தை க‌ண்டு ,வ‌ள்‌ளி, தெ‌ய்வயானை சமேதரா‌ய் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் முருக‌னி‌ன் அருளை‌ப் பெ‌ற்று வரலாம்.


அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் தனமாரும்...
......

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக் குளேற்று மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.

அருணகிரியாரின் அருமைத் திருப்புகழ் மணம் கொள்ளை கொள்ளும்.

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.



திருப்புகழ் பரப்பிய வள்ளிமலை சுவாமிகள் பாதம் பணிவோம்.


26 comments:

  1. வள்ளி வாழ்ந்த வள்ளி மலைக் கோவிலைத் தரிசித்தேன்
    படங்களும் பதிவும் அருமை
    திருப்புகள் வரிகளை சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த மாதிரி இடங்களுக்கு போகும் வழிகளையும் சொன்னால் நெறைய பேருக்கு உபயோகம் ஆகும்

    ReplyDelete
  3. @
    Ramani said...
    வள்ளி வாழ்ந்த வள்ளி மலைக் கோவிலைத் தரிசித்தேன்
    படங்களும் பதிவும் அருமை
    திருப்புகள் வரிகளை சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்//

    கருத்துக்கு நன்றி ஐயா. திருப்புகழ் வரிகளைத் தயங்கி கடைசியாகத்தான் சேர்த்தேன். தங்கள் இனிய கவன்த்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. @ எல் கே said...
    இந்த மாதிரி இடங்களுக்கு போகும் வழிகளையும் சொன்னால் நெறைய பேருக்கு உபயோகம் ஆகும்//


    செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம் என குறிப்பிட்டிருகிறேன். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. @FOOD said...
    Nice sharing//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. @வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    Thanks...//

    நன்றி.

    ReplyDelete
  8. வள்ளிமலைக் கோயில் தரிசனம், மிக அருமை. ஒரு மரியாதை நிமித்தமே உங்க பதிவுக்கு வந்தேன். முழுக்க முழுக்க ஆன்மீக தரிசனங்களால் நிரம்பியது என் புரிந்து கொண்டேன். மீண்டும் சாவகாசமாக மற்றவற்றையும் படித்து அறிகிறேன். சேரியா?

    ReplyDelete
  9. வள்ளி தேவானையுடன் ஸ்ரீ முருகன், தோகை விரித்த மயிலேறி பறக்கும் காட்சி வெகு அழகாக, அருமையாக உள்ளது. பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. @ நானானி said...//

    முதல் வருகைக்கு வாழ்த்துக்கள் .நன்றி.

    பிரியமாய் அருகில் அமர்ந்து கனிவாகப் பேசும் தொனி. நன்றி அம்மா.

    ReplyDelete
  11. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியர் என்ற மாபெரும் பொறுப்புக்களை ஏற்றுள்ள போதும், வழக்கம் போல தங்கள் வலைப்பூவினில் இந்த அழகிய "வள்ளி வாழ்ந்த வள்ளிமலைக்கோயில்" பற்றிய பதிவையும் வெளியிட்டிருப்பது எனக்கு மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

    அஷ்டாவதானி போல ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தி, எதையும் மறக்காமல், அனைத்தையும் மிகச்சிறப்பாகச் செய்வதில் வல்லவர் தாங்கள், என்ற என் மனக் கணிப்பு மெய்யாகி விட்டது.

    அருமையான பதிவு, அற்புதமான விஷயங்கள், அழகான படங்கள், அனைத்துமே அருமை.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  12. தமிழ் கடவுள் தமிழர்களின் கடவுள் என அறியப்படும் முருகன் வல்லிமலையை பற்றி எழுதியுள்ளீர் உளம் கனிந்த பாராட்டுகள் .இந்த படங்கள் உண்மையில் அற்புதம் பாராட்டுகள் நன்றி .

    ReplyDelete
  13. வள்ளி வாழ்ந்த வள்ளி மலைக் கோவிலைத் தரிசித்தேன்
    படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  14. வள்ளிமலை தரிசனம் ஜோர். வலைச்சரத்திலும் பதிவிட்டு இங்கும் விடாமல் பதிவிட்டிருப்பது ஆச்சர்யம்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வள்ளிமலைக்கோயில், சித்தர்கள், சமாதி ஆச்சிரமம்,சுனை என பல கண்டோம்.

    இங்கு கதிர்காமத்தில் கதிரமலையை அண்டி வள்ளிமலை இருக்கிறது.காட்டுவழி என்பதால் ஓர்சிலர்மட்டும் சென்று தர்சிப்பார்கள். இப்பொழுது எப்படியோ தெரியவில்லை.

    ReplyDelete
  17. நல்ல பதிவு உங்கள் சுற்று பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு. இதுவரை அறியாத கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  19. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    இணையத்தில் முருகப்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்குமான தளம் - கௌமாரம் டாட் காம்.
    ( http://www.kaumaram.com ).

    வருகை புரியுங்கள் - ஒலி - ஒளிப்பதிவுகள், நூல், படங்கள், அனைத்துலக முருகன் ஆலய விவரங்கள் - அனைத்தும் முருகனைபற்றி. நீங்களும் பங்கேற்கலாம்!

    நன்றி - வணக்கம்!

    கௌமாரம் இணைய ஆசிரியர்கள்

    ReplyDelete
  20. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    இணையத்தில்
    முருகப்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்குமான தளம்
    - கௌமாரம் டாட் காம்.

    (http://www.kaumaram.com ).

    வருகை புரியுங்கள் -
    ஒலி - ஒளிப்பதிவுகள், நூல், படங்கள்,
    அனைத்துலக முருகன் ஆலய விவரங்கள்
    - அனைத்தும் முருகனைபற்றி.
    நீங்களும் பங்கேற்கலாம்!

    நன்றி - வணக்கம்!

    கௌமாரம் இணைய ஆசிரியர்கள்

    ReplyDelete
  21. 631+3+1=635

    [எனக்கு மட்டும் பதில் தரப்படவில்லை. பரவாயில்லை]

    ReplyDelete