Tuesday, January 31, 2012

ஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை

“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து 
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம் 
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன் 
தாயேமலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!”

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. 
அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. 
மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. 
முதலும் முடிவும் இல்லாதவள்...


வைரத்தை பட்டை தீட்டினால்தான் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.


இந்த வைரத்தின் அடிப்பாகம் கூராக  காணப்படும.  உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைத்திருக்கிறார்கள்..


அகிலாண்டேஸ்வரி, நித்ய கன்னியென்பதால், 
திருவானைக்கா திருத்தலத்தில், சுவாமி-அம்பாள் திருமணம் கிடையாது. 
அம்பிகையே அதிசயமானவள்  குருவாக விளங்குகிற பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்னும் வடிவில், உபதேசம் பெறும் சிஷ்யை ஆகிறாள்.  சிற்சில சமயங்களில் ஆண் வேடமும் பூணுகிறாள். 

. ஞானவாணியாக நிற்கிறாள்; வணங்குபவரை ஞானவான்கள் ஆக்குகிறாள். 

திருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில் 
(ஐந்து திருச்சுற்றுத் திருவிழா),  ஆண் வேடம் அணியும் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.

அம்பிகையை ஸ்ரீசக்ர நாயகி என்பார்கள். தாமரை இதழ்கள் முக்கோணங்கள், வட்டங்கள், பிந்து என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட அமைப்பிலான சக்கரங்கள் அல்லது யந்திரம் உண்டு.

சக்கர அமைப்புள்ள கோயில்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பது ஐதிகம்.

சிதம்பரத்தில் ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தில் "திருவம்பலச் சக்கரம்' என்னும் சிதாகாச சக்கரம் அமைந்துள்ளது.

மதுரை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வாயிலின் மேற்புறத்தில் தமிழ்வருடங்கள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது.

திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தி சந்நதியில் செப்புத் தகட்டால் ஆன மிருத்யுஞ்ஜய யந்திரம் வழிபடப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் சூரிய சக்கரம், கமல யந்திரம் என்று அழைக்கப்படும் விதத்தில் ஒரே பீடத்தில் சக்கர வடிவில் நடுவில் பெரிய தாமரையும், அதைச் சுற்றி சூரியன் நீங்கலாக எட்டுக் கோள்களும், 12 ராசிகளும் செதுக்கப்பட்ட அமைப்பு உள்ளது.

மாங்காட்டில் காமாட்சி ஸ்ரீ சக்கர வடிவாகவே விளங்குகின்றாள். பெரிய பீடத்தின்மீது அமையப்பெற்றுள்ள சக்கரமே அங்கு மூல காமாட்சியாக வழிபடப்படுகிறது. மூலிகைகளாலான அர்த்தமேரு சக்கரம் இது.

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சக்கரத்திற்கு என்றே தனியாக ஒரு சந்நதி உள்ளது. இந்தச் சக்கரம் உயரிய பீடம் இட்டு அதன்மீது நாகம் குடை விரித்தாற்போல் அமைக்கப்பெற்று பெரிய திருவாட்சியுடன் விளங்குகிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மனின் முன்புறத்தில் ஸ்ரீ சக்கரம் ஒரு தொட்டி போன்ற அமைப்பிற்குள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் பாதத்தின் கீழ் சடாட்சரச் சக்கரம் அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளியினாலான மிகப்பெரிய சக்கரம் காணப்படுகிறது.

திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் திருச்செவிகளில் விளங்கும் தாடங்கங்களில் ஸ்ரீசக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகன் மார்பில் அணியும் பதக்கங்கள் அறுகோணமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஷாடாட்சரத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றன.

திருவாரூர் தியாகராஜர் திருமார்பிலும் சக்கரம் அமைந்துள்ளது.

Monday, January 30, 2012

பீஷ்மாஷ்டமி பிரவாகம்thumb_lr62.gifthumb_lr62.gif
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன்,  பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் 
என்று அறிவுறுத்துகிறார்.. 
மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக்கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே 
சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், 

ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த 
பெருமையும் கண்ணனுக்கு உண்டு.

நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆன பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், 
ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள்.

இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே 
நகருவது போலப் போடுவதே வழக்கம்.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும்
சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன.

ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. 

இந்தப் பூமி சுழல்வதை நினைவுபடுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது.

காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது 

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மபிதாமகர் . நினைத்த பொழுது மரணத்தைத் தழுவலாம் என்ற வரத்தைப் பெற்றவர் 

ரதசப்தமி வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்து ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று பிராணத்தியாகம் செய்தார். 

அதனால் அத்தினம் பீஷ்மாஷ்டமி என்று சொல்லப்படுகின்றது.
அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன்
கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. 

கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம். 

இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும்.
கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார்.

"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார்.

பீஷ்மருக்குப் புரிந்தது.
"பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி,
வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

"பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது 
அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் 
இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். 

அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார். 

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். 
நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சாரி, அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்,"
என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். 
கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் 

தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். 

ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் 
அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார். 

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. திருமயிலை மாதவப்பெருமாள் சூரியபிரபை வாகனம்
[madhava.bmp]

நலம் தரும் ரதசப்தமி

ஓம் பூர் புவஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனப்ரசோதயாத்


காயத்ரி மந்திரம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மந்திரம்தான். "செங்கதிரோன் ஒளியைத் தேர்கின்றோம்; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!' என்பதே இந்த மந்திரத்தின் தமிழ்ப் பொருளாகும். 
இராமபிரான் இராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானைத் துதிக்குமாறு அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம் ..

காயத்ரி மந்திரமும் ஆதித்ய ஹ்ருதயமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்கக் கூடியவையாகும்.

வேதகாலத்திலிருந்து உயிர்கள் வாழ்வதற்கு தனது ஒளியினை வழங்கும் சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக திகழ்வதாக போற்றுகிறோம்..
சூரிய பகவானும் திருமாலும் ஒரு தெய்வாம்சத்தின் இருகூறுகள் என்ற அடிப்படையில் சூரியன், சூரிய நாராயணர் என்றே வழிபடப்படுகிறார்.

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப்படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.


சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிக்கும் நாள் ரதசப்தமி.. 

ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. 

சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார். 

தமிழகத்தில் உள்ள நவகிரகத் தலங்களில் முதன்மையான சூரியனார் கோவில் சூரியனுக்குரிய ஆலயமாகும். கேரள மாநிலம், ஆதித்யபுரம் என்ற சிறிய கிராமத்தில் சூரியனுக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது. 

சிவபெருமானின் மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாக வும், நெற்றிக் கண் அக்னியாகவும் விளங்கு கின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில்தான் சிவாலயங்களுக்குள் இறைவனை நோக்கியபடி வலது- இடது புறங்களில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சூரியனுக்குரிய ரதசப்தமி நாளன்று அவருக்குரிய எருக்குச் செடியின் ஏழு இலைகளை உச்சந் தலையின்மீது வைத்துக் கொண்டு ஆறு, குளங்களில் மூழ்கி எழ வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம் ஆகும்.  
Hindu Devotees Offer Prayers to the Sun God at Sunset Framed Photographic Print
வைவஸ்வத மனுவின் (விவஸ்வான் என்ற சூரிய பகவானின் வழித்தோன்றல்) ஆட்சியின் முதலாம் நாள் இந்த ரதசப்தமி நாளாகும். 

இது மகாசப்தமி என்றும்; ஜயசப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைந்தால் அது மிகப்பெரிய புண்ணிய தினமாகக் கருதப்படுகிறது. 
திருப்பதி போன்ற வைணவ ஆலயங்களில் ரதசப்தமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உற்சவருக்குரிய வாகனங்கள் சூரியப் பிரபை, சந்திரப் பிரபையென்று இரண்டு உண்டு. 

சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.
“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை,
“சப்தமி திதி’ என்கிறோம்.

 திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். 

ரதசப்தமி நாளன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சூரிய நாராயணராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார்!
Govardhana Giridhari-Chandra Prabhai.JPG

Sunrise Over the Caribbean Sea, Playa Del Carmen, Mexico Photographic Print

“அர்த’ என்றால், “பாதி!’. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார்.

 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.


ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் சூரிய பகவானை பூஜிக்க வேண்டும்.
சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. அந்தச் சக்கரத்தில் `மகாக்ஷம்' என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரமே `ஸம்வத்ஸரம்' எனப்படும் காலச் சக்கர சொரூபமாக உள்ளது.

உலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வது போல சூரியனின் ஏழு வகையான கிரணங்களும் எருக்கன் இலைகளில் ஊடுருவிச் செல்லும். அதனால் இந்த இலைகளை தலையில் வைத்து நீராடுவது உடல் நலத்திற்கு நலத்தை விளைவிக்கும்.

இப்படி நீராடும் பொழுது,

ஸப்த ஸப்திப்ரியே தே3வி

ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம் 
மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து 
ஸப்தமீ நெளமி ஸப்தமி !

தே3வி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம் 
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன 
மம பாபம் வ்யபோஹய ! 


என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.


Saturday, January 28, 2012

விழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரைப்போட்டி காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வராது  -ஆய்வுத் தகவல்
 ஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம்ஆய்வு மேற்கொண்டதில்
8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்..

ஐக்கியஅமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம்  வெள்ளி நைட்ரோ ஆக்சைடில்  (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது. 

சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ  அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.  

அது வெள்ளிநைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது. எச்சரிக்கை இது நமக்கு skin cancer 
ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. 

இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும்
ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை
  
பென் மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவைநறுமண பொருள்களில் பற்றிய ஆய்வில், உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில்இவற்றின் செயல்பாடு அதிகமாக இருப்பதால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். 
இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 

9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.
 DNA ofcancer causing viruses.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது

Focused Ultrasound at UVA School of Medicin

FUS Animated gif

நேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை போட்டி

MahaVishnu


ஸாந்த்ரானந்தாவபோதாத்மகமனுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசதசஹஸ்ரேண நிர்பாஸ்யமானம்
அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புனருரு புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்
தத்தாவத்பாஸி சாக்ஷாத்குருபவனபுரே ஹந்த பாக்யம் ஜனானாம் 

மோக்ஷத்தின் உருவாக இருப்பதும், புரிந்துகொண்ட உடன் மாயையிலிருந்து விடுவிப்பதும், குருவாயூர் ஆலயத்தில் நமது கண்முன் ஒளிவிட்டுக்கொண்டிருப்பதுமானவரே, இது மனித குலத்தின் அதிர்ஷ்டம்

 ஸ்ரீ குருவாயூரப்பன். அந்த வடிவழகைத் தரிசனம் செய்வோருக்கு அவர், தமது அருளை வாரி வழங்குகிறார்.
கோவையில் புகழ் பெற்ற ஆலயத்தில் நாராயணீயம் வாசித்துக்கொண்டிருந்த நேரம் காஞ்சிபெரியவர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வந்து தங்கியிருந்த போது நாராயணீயம் மாதம் இருமுறை துவாதசி திதிகளில் வாசிப்பதை குறிப்பிட்டார்கள் வாசிப்பவர்கள்..

காஞ்சிமுனிவரின் வாக்கிலிருந்து ""மூலம் இல்லாமலா ""என்று சொல் உதிர்ந்தது..
நாராயணீயத்தின் மூலம் எது என்று பார்த்தால் பாகவத்தின் சாரம் நாராயணியம் என்று கண்டார்கள்.. பாகவதமே மூலம்..


 ஆலயத்தில் பாகவதம் வாசிக்கத் திரு உள்ளம் கொண்ட நேரம்.. பகவானே ஆனந்தம் கொண்டு கேரளத்தில் பழுத்த வாசிப்பனுபவம் கொண்ட நம்பூதிரிகள் ஒருவர் வந்து பாகவதம் புத்தகம ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஆன்ந்தக்கண்ணீருடன் வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று தங்களுக்கும் வாசிக்க சொல்லித்தரும்படி கேட்டார்கள்.. 

அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமாக அர்த்ததுடன் சொல்லிக்கொடுத்தார்..காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரைதான் படிக்கவேண்டுமாம்.. மதியம் எளிமையாக ரசம் சாதம் போடுங்கள் போறும் என்று சொல்லி சிரத்தையுடன் சொல்லிக்கொடுத்தார்..

அகிலத்திற்கே ஒருநாழி நெல் கொண்டு முப்பத்தாறு அறங்களை வளர்க்கும் அறம்வளர்த்தநாயகி வாடாமல் வதங்காமல் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து வருடத்தில் இருமுறை உத்ராயணத்திலும், தட்சிணாயன மாதங்களிலும் பல ஆண்டுகளாக பாகவத பாராயணம்
நடைபெற்றுவருகிறது..

குருவாயூரை பிறந்தகமாகப் பெற்ற மாமி ஒருவர் பாகவத்திலும் நாராயணீயத்திலும் தேர்ச்சி பெற்றவர்.. அங்கே பாகவத புராணமெல்லாம் ஆண்கள்தான் படிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுள்ள காலத்தில் சீக்கிரம் சமையல்வேலைகளை முடித்து பெண்களாகச் சேர்ந்து பாகவதம் படித்து உரைகளைப் பார்த்து அர்த்தம் தெரிந்துகொண்டார்களாம்.. இல்லத்தில் விளக்கேற்றி தினமும் பாகவதம் நாராயணீயம் பாராயணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள்..

இவ்வாறு கோபிகைகளாக கண்ணன் புகழ்பாடும் சத்சங்கம் உருவானது..

மிகச்சிறு பிராயத்து பிள்ளைகள் பாகவதம், பகவத் கீதை, அனுமன் சாலீஸா திருப்புகழ், மற்றும் பல ஸ்லோகங்களை மனப்பாடமாக ராகங்களுடன் பாடுவதை கேட்டு வியந்திருக்கிறே.ன் அப்படி ஒரு வளர்ப்பு...

பக்தியில் திளைத்த அந்த நம்பூதிரிப்பிராமணருக்கு இரத்தப்புற்று நோயாம்..அவருக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு..

நல்லவேளை பல சினிமாக்களில் யாரையாவது பரலோகம் அனுப்பவேண்டுமென்றால் இந்தப் புற்று நோய் தலையில் சுலபமாக பழி போடும் படங்களைப்பார்த்து இடிந்து போகவில்லை..

அவருக்கு சினிமாபார்க்கும், சீரியல் பார்க்கும் வழக்கம் எதுவும் இல்லை..

வீடியோகேம் விளையாடும் இளம் வயது சிறுவன் கட்டுப்பாடில்லாத செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார் என்பதைப்புரிந்துகொண்டு வீடியோகேம் விளையாட்டில் துப்பாக்கியால் இலக்காக தன் பெருகும் செல்களைச்சுடுவதாக கற்பனையில் நினைத்து விளையாட்டாகவே புற்று நோயைப் புறம் கண்ட முன்னோடி போல தன் பக்தியால் ஹே குருவாயூரப்பா! நாராயணா என்று கதறி நம்பிக்க்கையுடன் பிரார்த்தித்து பட்டத்திரியின் வாத நோயை போக்கின பரந்தாமன் மேல் பாரத்தைப்போட்டார்..
சரியான நவீன சிகிக்சையும் பெற்று இப்போது அவர் நலமடைந்துள்ளார்..

பிரார்த்தனையுடன் துப்பாக்கியையும் தயாராகவைத்துக் கொள்ளுங்கள் என்ற போர்த் தளபதியின் ஆணை போல செயல்பட்டார்..

கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்..
தெய்வீக அதிர்வுகள் நமக்கு ஒரு பரவசத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். அதற்குத்தான் கூட்டுப் பிரார்த்தனை பற்றி சிறப்பாக பேசுகிறோம்.
வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.. ..
நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதைப் போட்டிக்காக !


ஆகவே நலமளிக்கும் நம்பிக்கையான பிரார்த்தனையும், தகுந்த மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் நலம் பெற வழிவகுக்கும் நேசமுடன் அந்த விழிப்புணர்வை வளர்க்கும் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

Before The Real Sprint