Friday, January 13, 2012

ஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை

scan0030
மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். 

அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
Sri Andal Temple – Srivilliputhur
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். 

ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. 

மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே 
இரவுப் புறப்பாடு நடக்கும். 

அன்று, ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து 
வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.
மார்கழி மாதத்தில் வடபத்ரசாயிப் பெருமாள் முன்னால் திருப்பாவைப் பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. 

ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர் அரையர். 

முதல் நாள் உற்சவத்தைப் பிரியாவிடை உற்சவம் என்பர். 

அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.
purappadu-3
ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். 

பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் 
அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். 

ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை.

 ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 

அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. 

காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். 

அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
dsc020512
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். 

எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். 

கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். 

நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

33 comments:

  1. ஆஹா! ஆண்டாள் வைர மூக்குத்தி சேவையா!!

    ஆனந்தமாக தரிஸித்து விட்டு அப்புறமும் வருவேன்.

    ReplyDelete
  2. முதல் படத்தில் அம்பாள் நல்ல அழகும் கம்பீரமும் பச்சைப்புடவையில் கிளி கொஞ்ச ஜொலிக்கிறார்களே!

    திருமாங்கல்யம் அதைவிட கம்பீரமாக உள்ளது. கொண்டை, புஷ்ப மாலைகள், காசு மாலைகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. இரண்டாவது படம் very cute!

    அழகான செந்தாமரை மலரக்கண்டேன், அதில் பெருமாளின் தங்க கோபுரம் ஜொலிக்கக்கண்டேன், என அந்த பெரிய நாமம் போட்ட யானையார் குதூகலிக்கிறாரே!

    எங்கே தான் எப்படித்தான் கஷ்டப்பட்டு இத்தகைய சூப்பர் படங்களாக எங்களுக்குத் தருகிறீர்களோ, அதுவும் தினம் தினம்.

    எல்லாப்படங்களும் என்னுடன் நேரில் பேசுகின்றனவே! ;))))

    ReplyDelete
  4. அருகில் சென்றால் ஆண்டாளின் மூக்கினில் தானாகவே ஒட்டிக்கொள்ளும் வைர மூக்குத்தி காணாமல் போய் கடைசியில் கம்பர் கையில் அது கிடைத்து, அவருக்கும் எல்லா தரிஸனங்களும் முழுவதும் கிடைக்கச் செய்துவிட்டார்களே, அந்த சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்!

    ஆஹா! கேட்கவே ஆச்சர்யமாகவும் பேரானந்தம் தருவதாகவும் உள்ளது! ;))))

    ReplyDelete
  5. அந்த நாலாவது படத்தில் ஒரு ஆச்சர்யம் பார்தீர்களா? நீங்கள் பார்க்காததா; ))) பதிவிட்டுள்ளவரே நீங்கள் அன்றோ! சரி மற்றவர்கள் பார்த்து மகிழட்டும்....

    பொதுவாக பெருமாள் தான் தாயாரை தன் நெஞ்சினில் வைப்பார். [’வியட்நாம் வீடு’ சினிமாப் பாட்டில் கூட வருவதால் இது எல்லோருக்குமே தெரிந்தது தான்]

    இதில் ஆண்டாள் பெருமாளைத் தன் நெஞ்சினில் வைத்திருக்கிறார்களே!
    அருமை...அருமை. ஆண்டாளைப் போலதொரு பக்தி யாருக்கு வரும்?

    அந்த ஆண்டாளை அல்லவோ ஸ்வாமி தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

    அவள் அணிந்து கொடுத்த தினப்படி மாலைகளையல்லவோ ஸ்வாமி ஏற்றுக்கொண்டார்!;))))

    ReplyDelete
  6. ஸ்ரீஆண்டாளையும் ஸ்ரீரெங்க மன்னாரையும் பலமுறை, பல அலங்காரங்களில் காட்டி, அசத்தி விட்டீர்களே!

    பாவம் இந்தப் பதிவுக்காகக் கஷ்டப்ப்ட்டுள்ள உங்களுக்கு எவ்வளவு அசதியாக இருக்கும்!

    உங்களுக்காவது அசதியாவது!

    படங்களைப்பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அசந்து போகும்!!

    எங்களையெல்லாம் அசத்தவே ஸ்ரீஆண்டாள் போல அவதரித்துள்ளவர்கள் அல்லவா தாங்கள்! ;)))))

    நீடூழி வாழ்க!

    ReplyDelete
  7. கோபுர தரிஸனம் கோடி புண்ணியம் என்பார்கள். வழக்கப்படி இன்று இரண்டு கோடி புண்ணியம் தரிஸித்த எங்களுக்கு. உங்களுக்கு கோடி கோடி புண்ணியங்கள் சேர்ந்திருக்கும், தரிஸனம் செய்துவைத்ததற்கு!

    அந்தத்தேர் வழக்கப்படி ஜோர்!

    ReplyDelete
  8. இன்று நவக்கிரஹ நாயகி போல சிம்பிளாக ஆனால் மிகச்சிறப்பாக ஒன்பதே ஒன்பது படங்கள்.

    சுருக்கமாக விளக்கங்கள்.

    மொத்தத்தில் அந்த ஆண்டாளின் வைர மூக்குத்தி போலவே ஜொலிக்குது இந்தப்பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    மனப்பூர்வமான நன்றிகள்.

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்றும் க்ஷேமமாக இருக்க வேண்டும்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  9. ஒரு காலை உயர்த்தி, மற்றொரு காலை தொங்கப் போட்டு, உலகத்துப் பசுமையெல்லாம் தன் ஆடை நிறமாக்கி, அம்பாள் அமர்ந்திருக்கும் அழகே அழகு. கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.

    அருமை திருமதி இராஜேஸ்வரி

    - நுண்மதி

    ReplyDelete
  10. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.
    இங்கே கோபுர தரிசனத்துடன் தேரோட்டமும் காண
    அருள் கிடைத்தது
    பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரி.

    ReplyDelete
  11. "மணிராஜ் {ராஜேஸ்வரி} இணைய தளம்" தொடர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்
    அனைத்தயும் பார்த்ததாக அர்த்தம்!!!

    ReplyDelete
  12. உங்களின் விஸ்வரூப பதிவிற்கு அன்பான வாழ்த்துக்கள்...பத்மாசூரி

    ReplyDelete
  13. திவ்யமான தரிசனம்..

    நாலாவது மற்றும் அஞ்சாவது படங்கள் ரொம்பவே உயிர்ப்புடன் இருக்குது. அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. தெரிந்திராத விஷயங்களுடன் அழகான படங்களும். நன்றி

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "ஸ்ரீஆண்டாள் வைர மூக்குத்தி சேவை":

    கோபுர தரிஸனம் கோடி புண்ணியம் என்பார்கள். வழக்கப்படி இன்று இரண்டு கோடி புண்ணியம் தரிஸித்த எங்களுக்கு. உங்களுக்கு கோடி கோடி புண்ணியங்கள் சேர்ந்திருக்கும், தரிஸனம் செய்துவைத்ததற்கு!

    அந்தத்தேர் வழக்கப்படி ஜோர்! /

    அனைத்து கருத்துரைகளாலும் பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்க்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  16. அதிகாலை வரும்
    ஆண்டவனின் தரிசனம் தரும்
    இராஜராஜேஸ்வரி வலை வந்தால்,
    ஈசனின் அருள் கிட்டும்.

    உள்ளம் அமைதி பெறும்.

    சுப்பு ரத்தினம்.

    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  17. கம்பனுக்காகக் காத்திருந்த சுவாமி தரிசனம் பார்த்து வாசித்தேன்.மிக நன்று. மிக்க நன்றியும் வாழ்த்துகளும். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  18. ஆண்டாளின் மூக்கருகே தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.//

    நீராடல் வைபவத்தை கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ஆண்டாள் நடத்திய திருவிளையாடல் அற்புதம்//

    தெரியாத புது செய்திகளும், படங்களும் மிக அருமை.

    தேரோட்டம் கண்டு களித்தோம்.
    நன்றி.

    ReplyDelete
  19. கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை அழகு
    அனைத்து படங்களும். வரலாறும் தெரிந்து கொண்டேன், நன்றி.
    பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  20. ஆண்டாளின் மூக்குத்தி சேவை அற்புதம். படங்களுடன் அழகு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் இனிய நன்றிகள்.. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. கோபுர தரிசனத்துடன் தேரோட்டமும் அழகு...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  23. நன்றி...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    முதல் படம் தான் என்னோட ஃபேவரிட்

    ReplyDelete
  24. //அருகில் சென்றால் ஆண்டாளின் மூக்கினில் தானாகவே ஒட்டிக்கொள்ளும் வைர மூக்குத்தி//
    வித்யாசமான ஆன்மீகத் தகவல்கள் அருமை. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. படங்களோ கண்களில் ஒற்றிக் கொள்கிறார் போல! அதற்கேற்பவான பதிவும், சொல்லவே வேண்டாம்-- வழக்கம் போல அதி அற்புதம்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  26. அருமையான ஆண்டாள் வைரமூக்குத்தி சேவைக்கு நன்றி.
    படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு மேடம்.

    ReplyDelete
  27. அன்பின் இராஜைராஜேஸ்வரி மற்றும் வைகோ - அருமையான படங்கள் - ஆண்டாள் தரிசனம் அழகு தரிசனம் - பலப்பல படங்கள் - நேரில் க்ணடது போல இருக்கிறது - வைரைத் தோடு பற்றிய இரு தகவல்களும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

    ReplyDelete
  29. 2003+9+1=2013 ;)

    வைர மூக்குத்திபோன்ற தங்களின் பதில் ஒன்றுக்கு நன்றி.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete