Thursday, January 5, 2012

திருவாதிரைத் திருநாள்









காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல்!

காலங்களைக் கடந்த ரம்மியமான கண்ணதாசனின் பாடல் வரிகள்

மனதை மயக்கும் அருமையான உயர்ந்த மாதங்களில்
மார்கழியை பீடுடைய மாதமாகக் கொண்டாடுவோம்..

மாதங்களில் நான் மார்கழி - என்றான் கீதையில் கண்ணன்.

மாதங்களில் தலைசிறந்த மார்கழி மாதத்தில்- பிதுர்களின் தினமான அமாவாசை அன்று..மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆதிமூலம் அனுமன்

மார்கழி மாதத்தில் திருமாலை வழிபடும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வழிபடும் ஆதிரைத் திருநாளும் மகா வியதீபாதமும் சிறப்பு வாய்ந்தவை.

மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் தினம் ஆதிரைத் திருநாள் ஆகும்.

வியதீபாதம் என்பது இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று.

நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பதுபோல யோகங்களும் இருபத்தேழு உண்டு. இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும்.

ஆனால் இந்த யோகங்களில் ஒன்றான வியதீபாதம் மார்கழி மாதத்தில் ஏற்படும்போது இதற்கு "மகா வியதீபாதம்' என்று பெயர்.

ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண
யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது.

வியாதிபாத யோகம் வரும் நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன.

மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத யோகத்தன்று நடராசர் திருக்கோலம் காண்போருக்கு வாழ்வில் சுபப் பலன்கள் யாவும் கிட்டும்;
வேண்டியவற்றைப் பெறுவர்.

மார்கழி மாத தொடக்கத்தில் தான் பாரதப் போர் தொடங்கியது.

பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்தது.

விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்தது மார்கழி மாதமே. வைகுண்ட ஏகாதசி திருநாள் மார்கழி மாதத்தில் தான் வருகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படுவது ஆருத்ரா தரிசனம் என்ற ஆடல்வல்லானின் ஆனந்த திருநடன நன்னாள்.  

சிதம்பரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். நடராசருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறும். 

அதில் சிறப்பானவை மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், 
ஆனித் திருமஞ்சனமும்தான்.

ஆருத்ரா அன்று திருவாதிரைக் களி செய்து படைப்பர். 
"திருவாதிரைக் களி ஒரு வாய்' என்பது வழக்கு. அதை ஒரு கவளமாவது சாப்பிட வேண்டும்.
திருவாதிரைக் களி ஒருவாய் உண்ணாதவர்க்கு நரகக்குழி என்பார்கள்...
மார்கழியில் வரும் மஹா உற்சவம் திருவாதிரைத்திருநாள்....
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை.

இது தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடை பெறும்.

இவ்விழா பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான
திருவாதிரைத் திருநாளில் திருத்தேர் உலா நடைபெறும்.

பத்து நாட்களும் நடராசர் வாகனத்தில் உலாவருவார்.  

ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா. அன்று மூலவரே தேரில் உலா வரும் அதிசயம் காணலாம்.

பத்தாம் நாள் அதிகாலை வேளையில், சிறுசிறு மணிகள் அசையும் வெண்சப்பரத்தில் நடராசர் திருவீதி உலா வருவார். 

அப்போது நடராசர் சிலையைத் தூக்குபவர்கள் நடராசர் ஆடுவதுபோல அசைந்தாடி வருவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும்.

 பக்தர்கள் ஆர்வத் துடன்- பக்தியுடன் நடராசரைத் தரிசிப்பார்கள். 
அன்று மட்டும் களியும் படைப்பார்கள்.

உத்தரகோச மங்கை ஆலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். 

இக்கோவிலில் நடராசர் சந்நிதி மூடப்பட்டே இருக்கும். 

வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். 

ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களையப்படும். 

காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். 

இரவு 11.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். 

விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். 
பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம்.

இங்குள்ள மரகத லிங்கத்திற்கும் படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள்.

நடராசர் சந்திப்பு வைபவம்

சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, வெவ்வேறு நான்கு கோவில்களிலிருந்து வரும் நான்கு நடராசர் திருவடிவங்கள் சாலை ஒன்றின் சந்திப்பில் ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கவைத்து ஆராதனை செய்யும் வைபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைபெறுகின்றது. அந்த

நான்கு கோவில் நடராசர்கள்: ஏகாம்பரேஸ்வரர் நடராசர், அருணாசலேஸ்வரர் கோவில் நடராசர், குமரக் கோட்ட நடராசர் (சிவசுப்ரமணியர் ஆலயம்), காசிவிஸ்வநாதர் ஆலய நடராசர். (இவர் நால்வரில் மிகப் பெரிய வடிவினர்.)


கோவைத் திருவாதிரை

இந்நாளில் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர்.
பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.

கேரளத் திருவாதிரை

மணமான புதுப் பெண்கள் "பூத்திருவாதிரை' என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, "உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கணும்' என்பர்.


” நாளெல்லாம் திருநாளாகும்; நடையெல்லாம் நாட்டியமாகும்... தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜர்


திருவல்லிக்கேணியில் உடையவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அற்புதக்காட்சி


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: 


உத்திரகோசமங்கையில் சந்தனக்காப்பில் ஆருத்ரா தரிசனம் தந்த நடராஜர்

24 comments:

  1. நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க!8ஆம் தேதி கிடைக்க வேண்டிய தரிசனம் இன்றே கிடைத்து விட்டது!
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமை அருமை
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் ...
    www.devarathirumurai.wordpress.com

    ReplyDelete
  3. திருவாதிரை திருநாள் பற்றி முழுமையாக இப்போதுதான் அறிகிறேன்.கேரளத்துடன் தொடர்புபடுத்தியே இதுவரை தெரியும்,படங்கள் நன்று

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்கள், அருமையான செய்திகள் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  5. களியும் கூட்டும் வறுத்த முந்திரியுடன் பார்க்கவே, பசியைக் கிளப்புது எனக்கு.
    வரும் எட்டாம் தேதி காலை எட்டுமணி வரைக் காத்திருக்கணுமே!

    எனக்கு இப்போதே சுடச்சுட உடனே வேண்டுமே! ;)))))

    உங்களிடம் கேட்டு எந்தப்பிரயோசனம் இல்லை தான்!

    வெறுமனே படம் காட்டுவதோடு சரி.

    கேட்டால் ”சாப்பிடப்பிடிக்காது; சமைக்கவும் பிடிக்காது; அம்மா அழகாச் செய்வாங்க; நான் அழகா எடுத்துப்பரிமாறுவதோடு சரி” என்பீர்கள்.

    OK OK

    ReplyDelete
  6. 27 நக்ஷத்திரங்களிலேயே, மரியாதைக்குரிய அடைமொழியுடன்
    கூடிய நக்ஷத்திரங்கள் 2 மட்டுமே!

    ஒன்று சிவனுக்குரிய திருவாதரை
    [திரு+ஆதிரை]

    மற்றொன்று திருமாலுக்குரிய திருவோணம் [திரு+ஓணம்]

    இவை இரண்டுக்கும் மட்டும் இதுபோன்ற தனிச் சிறப்புகள் உண்டு.

    ReplyDelete
  7. இரண்டாவதாகக் காட்டியுள்ள ஆருத்ரா தரிஸனப்படம் வெகு அழகாக உள்ளது.

    இதில் மஞ்சள்நிற ஜவந்திப்பூக்கள் தான் நிறைய இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மார்கழி மாத சீசனில் நிறைய விளையும் பூவாக இருக்கலாம்.

    திருச்சி லால்குடியில் இந்த ஆருத்ரா தரிஸனம் மிகவும் பிரபலமாகும்.

    ReplyDelete
  8. லேடீஸ் ஸ்பெஷலில் இப்போது தான் தாங்கள் எழுதி வெளிவந்த, தைப்பூசம் பற்றி படித்து மகிழ்ந்தேன். மிகவும் அருமையாக ரத்தின சுருக்கமாக, பல தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    48 ஆம் பக்கத்தில், முருகன் படத்துடன் வெளி வந்துள்ளது.

    சக்தியுடன் சிவன் சேர்ந்து ஆடும் நடனம் பற்றியும், மேலும் பல நல்ல தகவல்களும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

    ’எங்கெங்கு நோக்கிணும் சக்தியடா’ என்பது போல தங்களின் புகழ்பெற்ற எழுத்துக்கள் மினிதழ்களில் எங்கெங்கு திரும்பிணும் உணரப்படுகிறது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    ;)))))

    மனமார்ந்த பாராட்டுக்கள்,
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. லேடீஸ் ஸ்பெஷலில் இப்போது தான் தாங்கள் எழுதி வெளிவந்த, தைப்பூசம் பற்றி படித்து மகிழ்ந்தேன். மிகவும் அருமையாக ரத்தின சுருக்கமாக, பல தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    48 ஆம் பக்கத்தில், முருகன் படத்துடன் வெளி வந்துள்ளது.

    சக்தியுடன் சிவன் சேர்ந்து ஆடும் நடனம் பற்றியும், மேலும் பல நல்ல தகவல்களும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

    ’எங்கெங்கு நோக்கிணும் சக்தியடா’ என்பது போல தங்களின் புகழ்பெற்ற எழுத்துக்கள் மினிதழ்களில் எங்கெங்கு திரும்பிணும் உணரப்படுகிறது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    ;)))))

    மனமார்ந்த பாராட்டுக்கள்,
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மூன்றாவது படத்தில் பழத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஸ்வாமி மிகவும் ஜோராக உள்ளது.

    எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடலைக்குறிப்பிட்டு, மார்கழி மாதத்தின் பெருமையை கூறியுள்ளதில் அதிக மகிழ்ச்சியாய் இருந்தது.

    மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கீதையில் கண்ணன்.

    ஹனுமன் பிறந்த மாதம்!

    வைகுண்ட ஏகாதசி வரும் மாதம்!!

    திருவாதரை கொண்டாடும் மாதம்!!!

    மகாவியதீபாதம் வரும் மாதம்!

    பாரதப்போர் துவங்கி கீதையை உபதேசித்த மாதம்!!

    ஆருத்ரா தரிஸன மாதம்!!!

    என எல்லாச்சிறப்புகளும் மிகுந்த மாதம் இந்த மார்கழி!

    அடடா.... எவ்வளவு இனிய சுவையான தகவல்கள் தருகிறீர்கள்
    படத்தில் காட்டியுள்ள தித்திப்புக்களியும், காரசாரக்கூட்டும் போல ;))))

    விடியற்காலம் எழுந்து வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு விளக்கேற்றி, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் சொல்லிக்கொண்டு, திருச்சி மலைக்கோட்டையை பிரதக்ஷணமாகச் சுற்றிவருவோம் நாங்கள், இதே மார்கழியில் [4.15 am to 5.15 am]

    நம் எண்ணமெல்லாம் இந்த மார்கழி மாதம் பூராவும் கடவுளடனேயே இருக்க வேண்டும், குளிருக்காகப் போர்த்திக்கொண்டு சோம்பேறியாகப் படுத்து விடக்கூடாது, என்பதனாலேயே, மார்கழியில் மற்ற கல்யாணம் போன்றவைகளை செய்ய வேண்டாம் என்று வைத்திருப்பார்கள், போல.

    மார்கழி என்றாலே எப்போதும் மனதுக்கு ‘ஜில்’ ஏற்படுத்தும் மாதமே!

    ReplyDelete
  11. கோவைத் திருவாதரை என்று தனிச்சிறப்பாகச் சொல்லியுள்ளது, புதிய செய்தியாக இருப்பினும், கேட்க மிகவும் மகிழ்ச்சியாக் உள்ளது.

    எங்கள் எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்து, களி+கூட்டு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

    குதிரை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு, தேர்கள்+கூட்டம், ஆடலரசன் ஸ்ரீ நடராஜரின், விக்ரஹங்கள் என அனைத்துமே வழக்கம்போல் மிகச் சிறப்பாக அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்.

    எல்லாமே அழகோ அழகு தான்!

    எதைச்சொல்வது எதை விடுவது?

    சூடான தித்திப்பான, உருக்கிய நெய் மணம் கமழ, வறுத்த முந்திரி மணம் மூக்கைத் துளைக்க, எனக்குப்பிடித்த காய்கறிகளை மட்டும் நிறைய சேர்த்து, நல்ல காரசாரமாக (உப்பொரைப்பாக)
    செய்த கூட்டுடன் திருப்தியாகச் சாப்பிட்டது போன்ற திருப்தியளித்தது இந்தப்பதிவைப் படித்ததும்.

    [இருந்தாலும் ............. ஜீனி என்று பேப்பரில் எழுதி, நாக்கில் வைத்தால் இனிக்குமா? நீங்கள் தான் யோசித்து பதில் சொல்லணும்]

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள். பிரியமுள்ள vgk

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    [5 நாட்கள் கழித்து உங்கள் பதிவுக்கு வருவது எனக்கென்னவோ 5 யுகங்கள் கழித்து வருவது போல உள்ளது]

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பண்டிகைக்கு ஏற்ற பதிவும் படங்களும் போட்டு புண்ணியம் தேடிக்கரீங்க.

    ReplyDelete
  14. //திருச்சி லால்குடியில் இந்த ஆருத்ரா தரிஸனம் மிகவும் பிரபலமாகும்.//

    அதாவது லால்குடி தாண்டியுள்ள “அன்பில்” என்ற ஊரில் நடைபெறும் ஆருத்ரா தரிஸனம் என்று எழுத நினைத்தேன். ஏதோ அவசரத்தில் லால்குடி என்று எழுதிவிட்டேன்.

    அதே போல அங்குள்ள அன்பில் மஹமாயீ, சமயபுரம் மகமாயீக்கு அக்கா என்பார்கள். அவ்வளவு ஜோராக பார்க்கவே மிகவும் கம்பீரமாக அந்த மஹமாயீ வீற்றிருப்பாள். தாங்கள் பார்க்காத கோயில்களா என்ன! ;))))

    ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதை அவ்வப்போது எழுதத் தோன்றுகிறது.
    உங்களுக்கு இல்லாவிட்டாலும் இதைப் படிப்பவர்களுக்காவது பயன்படலாம் என்றும் தோன்றுகிறது. vgk

    ReplyDelete
  15. 1998 இல் நடந்த ஒரு சம்பவம்.

    கல்லூரி படிப்பு முடித்த ஒரு அழகான பெண். திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவள்.

    [அவர்கள் குடும்பமே பரம்பரை பரம்பரையாக ஜோஸ்யத்தில் ஊறிப்போனவர்கள். எதற்கெடுத்தாலும் சாஸ்திர சம்ப்ரதாயங்கள், பஞ்சாங்கம் ஜோஸ்யம் என்று பார்த்தே செய்வார்கள்.]

    நன்கு படித்து மிக நல்ல உத்யோகத்தில் நிறைய சம்பாதிக்கும் ஒரு அழகான பையன். திருவாதரை நக்ஷத்திரத்தில் பிறந்தவன்.

    இருவருக்கும் படிப்பு சம்பந்தமாக ஏதோ சாதாரண முறையில் நட்பு முதலில் ஏற்பட்டுள்ளது. பிறகு அதுவே அவர்கள் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்களை நாளடைவில் விளைவித்து விட்டது.

    பெண்ணின் பெற்றோருக்கும், பையனின் பெற்றோருக்கும் இதில் மனதுக்குள் மகிழ்ச்சியே என்றாலும், இந்த இரண்டு நக்ஷத்திரங்களும் பொருந்தாது என்று பெண்ணைப்பெற்றவர்கள், மிகவும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    பெண்ணும், பையனும் தனித்தனியே என்னை சந்தித்து, எப்படியாவது நான் இதில் தலையிட்டு சுபமாக முடித்துத்தர வேண்டும் என்று என் உதவியை நாடினர்.

    அவர்களின் மனதை அறிந்துகொண்டேன். தூய்மையான நட்புடன் தான் இதுவரை பழகியுள்ளனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அவர்களின் மனதில் ஒருவர்மேல் ஒருவருக்கு உள்ள ஆசைகளையும் அறிந்து கொண்டேன்.

    இரு பக்கமும் நான் சொன்னால் என் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் தரும் ஆசாமிகளே இருந்ததால், நான் அதில் என்னைத் தலையிட்டுக்கொண்டு, கடைசியில் வெற்றி பெற்று, நல்ல முறையில் விமரிசையாகக் கல்யாணம் நடந்து முடிந்தது.

    எல்லோருக்கும் திருப்தியே! அதுபோலவே எனக்கும் திருப்தியே!!

    சென்ற ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப்பையனுக்கு, ஆயிரக்கணக்கில் இருந்த சம்பளம் லக்ஷமாக மாறியுள்ளது. பிரமோஷனும் கிடைத்துள்ளது.

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமாகவே உள்ளனர்.

    ஏதோ இந்தத் திருவாதரை, திருவோணம் என்ற பதிவில் இதைச் சொல்லணும் போலத் தோன்றியது. சொல்லி விட்டேன். vgk

    ReplyDelete
  16. ஒருவர் மேல் ஒருவர் மிகவும் ஆசை வைத்தும், திருவாதரை, திருவோணம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்த்தால் மட்டும் ’திரு திரு’ வென்று விழித்து என்னிடம் வந்ததால், ஏதோ ஒரு வழியாக எல்லோருடனும் பேசி சுமுகமாக முடிக்க அந்த ஹரியும், சிவனும் தான் எனக்கு தைர்யம் கொடுத்தார்கள்.

    எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாகவே தான் இருந்தது.

    ஏதோ நம் நல்லெண்ணம் நல்ல படியாகவே முடிந்து நல்லபடியாகவே இருப்பதைப்பார்க்க சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  17. அன்பின் இராஜைராஜேஸ்வரி மற்றும் வை.கோ - இருவரும் சேர்ந்து அமர்க்களப்படுத்டுகிறீர்கள் - படங்கள் அத்தனையும் அருமையான விளக்கங்களோடும் - பின்னூட்ட விளக்கங்களோடும் பதிவிற்கு மெருகூட்டுகின்றன. ந்ல்வாழ்த்துகள் இருவருக்கும் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. // cheena (சீனா) January 6, 2012 at 9:33 PM

      அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை. கோ - இருவரும் சேர்ந்து அமர்க்களப்படுத்துகிறீர்கள். படங்கள் அத்தனையும் அருமையான விளக்கங்களோடும் - பின்னூட்ட விளக்கங்களோடும் பதிவுக்கு மெருகூட்டுகின்றன. நல்வாழ்த்துகள் இருவருக்கும் - நட்புடன் சீனா//

      அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      இருவரும் சேர்ந்து அல்ல ஐயா. அவர்கள் பதிவினில் மட்டும். நான் பின்னூட்டங்களில் மட்டும்.

      மாங்கு மாங்கு என்று நானும் பக்கம்பக்கமாக 11 பின்னூட்டங்கள் இட்டும், அவர்கள் அந்தப் பக்கமே வருகை தந்து கருத்துக்கள் ஏதும் கூறவில்லை ஐயா ;(

      இருப்பினும் தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விகின்றது ஐயா. நன்றிகள் ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  18. சிதம்பர நடராசரை பல கோணங்களில் காட்டி தரிசிக்க செய்து விட்டீர் பாராட்டுகள் தில்லை அம்ம்பல நடராசா நடராசா நடராசா நந்தன குமார நடராசா.......

    ReplyDelete
  19. ஆருத்ரா தரிசனமும் திருவாதிரைக் களியும் பெற்றுக்கொண்டோம்.

    ReplyDelete