Monday, January 2, 2012

திருக்கல்யாண திருத்தலம் திருவிடந்தை..


Vishnupati
ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும் நித்ய கல்யாணர், லட்சுமிவராகப்பெருமாள் கோமளவல்லித்தாயாருடன் அருள்புரியும் தலம் திருவிடந்தை..

பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் கல்யாண விமானம். பெருமாளை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.

ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு  இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டையும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் ..
ஆண்டாளும் எழிற்கோலத்தில் காட்சி தருகிறார்.
ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர்களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் 

360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது.
360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர். 
தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் 
என்பது தான் இக்கோயிலின் தத்துவம். 
  
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார்.
பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் அருள்புரிகிறார்..
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான்
ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. 

108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக  போற்றப்படுகிறது.

திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன்
 கூறுகிறார்கள்.

ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்;

ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார்.

அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள்.

ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். 

எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள்.

எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார்.

அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. 

சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார்.

அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். 

காலவமுனிவரும் தன் பெண்களுடன் திருவிடந்தை வந்து பெருமாளை வேண்டினார்.

பெருமாளும் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, பிரம்மச் சாரியாக வந்து நாள்தோறும் முனிவருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு,

360-ஆம் நாள் தான் அதுவரை கல்யாணம் செய்து கொண்ட அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி "அகிலவல்லி' என்னும் பெயரைச் சூட்டினார். தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.

பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்றும்;  "நித்ய கல்யாணபுரி' என்று அழைக்கப்படுகிறது.
thiruvidanthai temple
தோரணவாயிலின் மேல்மண்டபத்தில், ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதையிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை

அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.

ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன.

அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம்,
கொடிக் கம்பத்தைக் காணலாம்.
வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின்றன.

தல விருட்சமாக புன்னை மரமும்; 
தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த 
கஸ்தூரியும் விளங்குகின்றன.
கல்யாண தீர்த்தம்......

விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஒன்று விரும்பும் ஆணோ, பெண்ணோ- இங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, மிகவும் பயபக்தியுடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் இரண்டு கஸ்தூரி மாலைகளுடன் தன் பெயரில் அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச் சனை செய்துவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கிவிட்டு, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக சுவரில் மாட்டி வைக்க வேண்டும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதி சகிதமாக பழைய மாலையுடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

வைகாசியில் வசந்த உற்சவமும்,

ஆனி மாதத்தில் கருட சேவையும்,

ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும்,

புரட்டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.

பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு
திருக் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு
வெளியே மின்விளக்கு அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார்.

தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்;
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.

மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழியில் உள்ள இந்த திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்கிறார்கள்

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்,
 திருவிடந்தை- 603112, 
கோவளம் அருகில், 
புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலை. 
காஞ்சிபுரம் மாவட்டம்.


48 comments:

 1. புகைப்படங்களும் விபரங்களும் அருமை!!

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 3. சுவையான கதைக்கு நன்றி. முன்னூத்தறுவது பெண்களா? தினமொரு திருமணமா? எப்படியெல்லாம் கட்டுறாங்கப்பா!
  ம்ம்ம்.. நம்பிக்கை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

  திருவிடந்தைக்கு எப்படிப் போவது என்ற குறிப்பு உதவியானது. கோவில் சுத்தமாக இருப்பது போல் தோன்றுகிறதே? படங்கள் அருமை. புராணவரலாறு அத்தனை தெளிவாகத் தெரிகிறது.

  ReplyDelete
 4. படங்களா, பகிர்வா. ஒன்னுக்கொன்னு சூப்பரா இருக்கு

  ReplyDelete
 5. என்ன ஒரு பாந்தம் , சாந்தம்.
  படங்களும் பதிவும் வெகு அருமை. கொள்ளை கொள்ளும் அழகு.
  முன்பை விட நிறைய மாற்றங்கள் உணர்கிறேன் உங்கள் படங்களைப் பார்த்தபின்.
  மீண்டும் ஓர் தரிசனம் செய்ய வாய்ப்பு தந்ததிற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. திருவிடந்தையின் திருவரலாறும்
  அழகிய படங்களும்
  மனதில் நின்றது சகோதரி.

  ReplyDelete
 7. 2012-இல் பதிவுகளின் உற்சவம் தொடங்கி விட்டன..
  ஆண்டின் 365 நாட்களும் கல்யாண உற்சவம்...
  பதிவின் ஆரம்பமே அருமை, மங்களகரமாக உள்ளது..
  இனி எங்களுக்கு 365 நாட்களும் ஆன்மிக சுற்றுலா ...
  வழக்கம் போல் கருத்துகளும், படங்களும் பொருத்தமாக உள்ளன..
  வாழ்த்துகள் அம்மையீர்..

  ReplyDelete
 8. http://chitramey.blogspot.com/2012/01/blog-post.html
  பேரிடர் மேலாண்மை ?

  ReplyDelete
 9. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  அருமையான படங்களுடன் கூடிய, கோவிலைப் பற்றிய தல வரலாறுடன் விளக்கம் அளித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. 2011-ல், 365-நாட்களில் 380 ஆன்மீ கப்பதிவுகளை அயராது அளித்துள்ள தங்களை "வலை உலக" நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். மேலும் தொடரட்டும் தங்களின் ஆன்மீகப்பணி!

  ReplyDelete
 11. புகைப் படங்களும் விளக்கங்களும் நேரடியாக தரிசிப்பதைப் போன்ற
  உணர்வை ஏற்படுத்திப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தங்களின் ஆன்மீகப் பணி மெச்சத் தக்கது! பாராட்டுகள்!

  ReplyDelete
 13. முதல் படத்தில் இருபுறத்திலும் 2 யானையார்களுடன், நீர் நிலையின் நடுவே செந்தாமரையின் மேல் நிற்கும் மஹாவிஷ்ணு கையில் ghaதை, சங்கு சக்கரத்துடன், பின்புற ஒளிவட்டத்துடன் காட்சி தரும் படம் மிகவும் ஜோர் தான்.

  வை. கோபாலகிருஷ்ணன்/

  ஜோரான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 14. கீழிருந்து 5 ஆவது 6 ஆவது 7 ஆவது, உற்சவர் அலங்காரங்கள் ஜகத்ஜோதியாகக் காட்சி அளிக்கின்றன.


  வை. கோபாலகிருஷ்ணன்/

  இனிய கருத்துரைக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 15. நித்ய கல்யாணப்பெருமாள் என்ற பெயரிலேயே பகவானின் அனைத்து கல்யாண குணங்களையும் அறியும் வகையில் மிக அழகாக உள்ளது. வந்து பிரார்த்திக்கும் அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்யாணம் குதிர்வது நிச்சயம் என்பதைக்கேட்கவே எவ்ளோ மகிழ்ச்சியாக உள்ளது, மனதுக்கு! ;)))))

  வை. கோபாலகிருஷ்ணன்//

  அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 16. கோயில் வழிபாட்டு நேரங்கள், பஸ் ரூட், விலாசம் முதலியனவெல்லாம் அழகாகக் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. மாமல்லபுரம் + திருக்கழுங்குன்றம் போய் வந்துள்ளேன் பல்லாண்டுகளுக்கு முன்பு. நடுவில் இந்தக்கோயில் இருப்பது ஏனோ எனக்குத் தெரியவில்லை. சரி, கல்யாண ஆகாதவர்கள் தானே முக்கியமாகப் போக வேண்டும். எனக்குத்தான் குடுகுடுன்னு சிறு வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டதே. அதனால் தான் இதைப்பற்றி என்னிடம் யாரும் சொல்லவில்லையோ என்னவோ!


  வை. கோபாலகிருஷ்ணன்//

  கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 17. பள்ளிகொண்ட பெருமாளும், அருகே தேவியர்களும், உற்சவர்களும் உள்ள படம் வெகு அருமையாக உள்ளது. நல்ல பட்டை ஜரிகையுடன் அழகாக பஞ்சக்கச்சம் கட்டி பெருமாள் படுத்திருப்பதைப் பார்க்கவே ரொம்பவும் ஜோராக உள்ளது.

  வை. கோபாலகிருஷ்ணன்/

  அருமையான ஜோரான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 18. கோயில், குளம், பிரகாரங்கள், த்வஸ்தம்பம், நல்ல ஆஜானுபாகுவாக உள்ள வராஹப்பெருமாள் அம்பாளை மடியில் வைத்து அமர்ந்திருப்பது, கோடி புண்ணியம் தரும் கோபுர தரிஸனம் என்று ஏராளமான படங்களுடன் வழக்கம் போல தாராளமான விஷய்ங்களை அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  360 பெண்களையும், தினம் ஒருவளாக ஸ்வாமி பிரும்மச்சாரியாக வந்து மணந்து சென்றது என்பதைக் கேட்கவே எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாக உள்ளது! பிறகு பிரச்சனை ஏதும் இல்லாமல் அனைவரையும் அவர் ஒன்று சேர்த்துள்ளது தான் இதில் மிகவும் ஆச்சர்யம்.

  இரண்டு பெண்களை ஒற்றுமையாக ஒன்று சேர்ப்பதே நமக்கெல்லாம் மிகவும் கஷ்டம்;

  ஸ்வாமியால் எதுவும் செய்ய முடியுமே! நாம் வெறும் ஆசாமிகள் அல்லவா! நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. ஒருவளை சமாளிப்பதே கஷ்டம். இவரோ 360 பேரை .... அடடா, ஸ்வாமி ஸ்வாமி தான்; ஆசாமி ஆசாமி தான். ;)))))


  வை. கோபாலகிருஷ்ணன்//  ========================


  அசத்தலான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 19. //தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம். //

  கோமளவல்லி மிகவும் அழகான பெயர். 360 நாயகிகள். ஆனால் பெருமாள் ஒருவரே நாயகர்; தத்துவம் அருமை. நன்கு விளக்கப்பட்டுள்ளது.

  வை. கோபாலகிருஷ்ணன்//

  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 20. //கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் அருள்புரிகிறார்..//

  தன் பத்தினியுடன் ஆதிசேஷன் அதுவும் பெருமாளின் திருவடியில்,
  அடடா! அபூர்வக் காட்சி தான்.

  வை. கோபாலகிருஷ்ணன்
  ========================= //

  அபூர்வமான அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 21. //பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
  108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது//

  ஆஹா, மிக அருமையான தகவல் தான். நித்ய கல்யாணம். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளதே!

  வை. கோபாலகிருஷ்ணன்//
  =========================

  மகிழ்ச்சியான அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 22. திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகிறார்கள்.//

  //ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்;//

  //ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.//


  மிகவும் அபூர்வமாக, பயனுள்ள தகவல்கள்.

  வை. கோபாலகிருஷ்ணன்//
  =========================

  அபூர்வமான, அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 23. //ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும் நித்ய கல்யாணர், லட்சுமிவராகப்பெருமாள் கோமளவல்லித்தாயாருடன் அருள்புரியும் தலம் திருவிடந்தை..//

  அருமையான தகவல். அழகழகான் படங்கள். 2012 ஆம் ஆண்டும் சூடுபறக்க ஆரம்பித்து விட்டது.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  தொடரட்டும் தங்களின் இந்த மிகச்சிறப்பான ஆன்மிகப்பணி.


  வை. கோபாலகிருஷ்ணன் //


  பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் பிளாக்கர் சரியில்லாவிடாலும்
  இ மெயிலில் சிரமப்பட்டு சிரத்தையாக
  கருத்துரைகள் அளித்து பதிவினை விளக்கமாக ஜொலிக்கச் செய்த்த ஒவ்வொரு கருத்துரைகளுக்கும் இனிய மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா..

  ReplyDelete
 24. மனோ சாமிநாதன் said...
  புகைப்படங்களும் விபரங்களும் அருமை!!//


  அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 25. Rathnavel said...
  அருமையான பதிவு.
  வாழ்த்துகள் அம்மா/


  நிறைவான நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 26. அப்பாதுரை said...
  சுவையான கதைக்கு நன்றி. முன்னூத்தறுவது பெண்களா? தினமொரு திருமணமா? எப்படியெல்லாம் கட்டுறாங்கப்பா!
  ம்ம்ம்.. நம்பிக்கை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

  திருவிடந்தைக்கு எப்படிப் போவது என்ற குறிப்பு உதவியானது. கோவில் சுத்தமாக இருப்பது போல் தோன்றுகிறதே? படங்கள் அருமை. புராணவரலாறு அத்தனை தெளிவாகத் தெரிகிறது.//

  நம்பிக்கைதானே வாழ்க்கை!

  கருத்துரைக்கு நன்றிகள்..

  ReplyDelete
 27. FOOD NELLAI said...
  படங்களா, பகிர்வா. ஒன்னுக்கொன்னு சூப்பரா இருக்கு

  சூப்பரான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 28. ஸ்ரவாணி said...
  என்ன ஒரு பாந்தம் , சாந்தம்.
  படங்களும் பதிவும் வெகு அருமை. கொள்ளை கொள்ளும் அழகு.
  முன்பை விட நிறைய மாற்றங்கள் உணர்கிறேன் உங்கள் படங்களைப் பார்த்தபின்.
  மீண்டும் ஓர் தரிசனம் செய்ய வாய்ப்பு தந்ததிற்கு மிக்க நன்றி//

  அழகான நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 29. மகேந்திரன் said...
  திருவிடந்தையின் திருவரலாறும்
  அழகிய படங்களும்
  மனதில் நின்றது சகோதரி./

  அழகான நிறைவான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 30. Advocate P.R.Jayarajan said...
  2012-இல் பதிவுகளின் உற்சவம் தொடங்கி விட்டன..
  ஆண்டின் 365 நாட்களும் கல்யாண உற்சவம்...
  பதிவின் ஆரம்பமே அருமை, மங்களகரமாக உள்ளது..
  இனி எங்களுக்கு 365 நாட்களும் ஆன்மிக சுற்றுலா ...
  வழக்கம் போல் கருத்துகளும், படங்களும் பொருத்தமாக உள்ளன..
  வாழ்த்துகள் அம்மையீர்../

  அருமையான மங்களகரமான வாழ்த்துகளுக்கும் நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..

  ReplyDelete
 31. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  அருமையான படங்களுடன் கூடிய, கோவிலைப் பற்றிய தல வரலாறுடன் விளக்கம் அளித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

  நட்புடன் நல்வாழ்த்துகள் அளித்து கருத்துரையால்
  பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 32. சந்திர வம்சம் said...
  2011-ல், 365-நாட்களில் 380 ஆன்மீ கப்பதிவுகளை அயராது அளித்துள்ள தங்களை "வலை உலக" நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். மேலும் தொடரட்டும் தங்களின் ஆன்மீகப்பணி!/

  அருமையான மங்களகரமான வாழ்த்துகளுக்கும் நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..

  ReplyDelete
 33. Ramani said...
  புகைப் படங்களும் விளக்கங்களும் நேரடியாக தரிசிப்பதைப் போன்ற
  உணர்வை ஏற்படுத்திப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள்/

  அருமையான மங்களகரமான வாழ்த்துகளுக்கும் நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 34. ரமேஷ் வெங்கடபதி said...
  தங்களின் ஆன்மீகப் பணி மெச்சத் தக்கது! பாராட்டுகள்!

  பாராட்டுகளுக்கும் நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்

  ReplyDelete
 35. புகைப் படங்களும் விளக்கங்களும் நேரடியாக தரிசிப்பதைப் போன்ற
  உணர்வை ஏற்படுத்திப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. Lakshmi said...
  புகைப் படங்களும் விளக்கங்களும் நேரடியாக தரிசிப்பதைப் போன்ற
  உணர்வை ஏற்படுத்திப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி
  வாழ்த்துக்கள்/

  வாழ்த்துகளுக்கும் நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் அம்மா..

  ReplyDelete
 37. நன்றி. எனக்கு உபயோகமான தகவல் ஒன்று இதில் இருக்கிறது. மிக்க நன்றி.

  ReplyDelete
 38. நித்ய கல்யாணமூர்த்தி, வராஹமூர்த்தி கோமளவல்லி தாயாரோட என்ன ஜம்முனு உட்கார்ந்திருக்கார்.. முகத்தில் எத்தனை சாந்தம்.... மக்களை பரிபாலிக்கும் வராஹமூர்த்தியும் கோமளவல்லி தாயாரும் பார்க்கவே மனதை நிறைக்கிறார்கள்பா..

  படங்கள் மிக அழகாக, பார்த்துக்கிட்டே படிச்சுக்கிட்டே வரும்போது என்னவோ ஒரு ஆன்மீக கட்டுரை படிக்கிற மாதிரி தோணாமல் அழகா நானே அந்த கோயிலுக்குள் நுழைவது போலவும் அங்குள்ள ஸ்தல வரலாறு படிப்பது போலவும் அங்குள்ள தீர்த்தத்தில் நனைத்தது போலவும் ரங்கபெருமான் என்ன அழகா சயனிச்சுட்டு இருக்கார்.. திருஷ்டி பொட்டு பார்த்தால் திருஷ்டி போகுமா?

  கல்யாணம் ஆகாம இருக்கும் பொண்ணு பையனை கூட்டிட்டு போய் அவங்க சொல்றமாதிரி பூஜை பண்ணினால் கண்டிப்பா நல்லது நடக்கும்னு நம்பிக்கையா போட்டிருப்பதை படிக்கும்போதே அந்த அனுகிரஹம் கிடைத்துவிட்டது போல மனம் ஆழ்ந்துவிடுகிறதுப்பா...

  ஒவ்வொரு படமும் அப்படியே கோயிலுக்குள் நுழைந்து ஒவ்வொன்றாக தரிசித்துக்கொண்டே வருவது போல தான் அமைந்துள்ளது...

  சரி வராஹமூர்த்திய சேவிச்சுக்கோங்கோ அம்பாளை தரிசனம் பண்ணிக்கோங்கோ...

  என்னென்ன தோஷ நிவர்த்தியோ அதெல்லாம் பூர்த்தி செய்யுங்கோ அப்டின்னு சொல்லிட்டு அதோடு விடாம...

  இந்த கோயில் பத்தின எல்லாமும் சொலிட்டேன்... இதை படிச்சதுமே இந்த படங்களை பார்த்ததுமே உங்களுக்கும் உடனே அந்த கோயிலுக்கு போகணும்னு மனசுல பிரவாகமா துடிக்குமே....

  தெய்வதரிசனம் யாருக்கு தான் விருப்பம் இருக்காது?

  இந்தாங்கோன்னுட்டு பஸ் நம்பர், அது புறப்படும் இடம் எந்த நேரத்துல கோயில் திறந்திருக்கும்... சிறப்பு பூஜை எப்பெப்ப.. அதனால் நாம் பெறும் பலன்கள் என்னென்ன

  அப்பப்பா மனசு அத்தனை ரிலாக்ஸ் ஆகிறது ராஜேஸ்வரி....

  இம்முறை ஊருக்கு போனப்ப நிறைய கோயில்கள் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன்...

  இனி இந்த வருடம் போகும்போதும் உங்களுடைய இந்த திரியில் இருக்கும் கோயில்கள் குறிப்புகள் எல்லாம் எடுத்துக்கிட்டு முடிந்தவரை போய் பார்த்துவிட்டு வருவேம்பா...

  360 நாளும் தினம் ஒரு பெண்ணாக பெருமாள் கல்யாணம் பண்ணிக்கிறார்னா எல்லாமே அம்பாள் தான்.... ஒரே அம்பாள் தான்... ஒரு பெண் எப்படி தன் கணவனுக்கு மனைவியாக, மகனுக்கு தாயாக, தாய்க்கு குழந்தையாக, சகோதரியாக இப்படி எல்லா ரூபமும் பெறுகிறாளோ அது போல ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணா அழகா பெருமானை கல்யாணம் பண்ணிக்கிற பாக்கியம் பெறுகிறாள்... 360 ஆவது நாள் எல்லா பெண்களையும் ஒரே பெண்ணாக்கி கோமளவல்லி தாயாரை ஆஹா எத்தனை இஷ்டம் தன் பாரியாளை இடது தொடையில் வைத்து எத்தனை அன்புடன் தாயாரை நோக்கியபடி வராஹமூர்த்தி அமர்ந்திருக்கும் கோலம்...

  சலிக்காம படிக்கவைக்கும் அருமையான வரிகள் ராஜேஸ்வரி...

  எப்போதும் எதை கொடுத்தாலும் திகட்டும்படி மிகைப்படுத்தியோ...

  ஏனோதானோ எப்படியோ என்றோ...

  அடப்போ தினமும் இதே வேலையா என்று அலுத்துக்கும்படியோ...

  இப்படி எதுவுமே இல்லாம....

  ரசித்து ரசித்து ஒவ்வொரு படமாக ஏற்றி....

  ஆழ்ந்து அதில் அமிழ்ந்து வரி வரியாக பகவானை மனதில் இருத்தி இங்கு கட்டுரையாக வரித்து படிப்போரையும் பரவசப்படுத்தும் மிக அற்புதமான சேவை ராஜேஸ்வரி நீங்கள் செய்வது...

  பெருமாளின் கடாக்‌ஷம் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை சுற்றியிருப்போருக்கும் கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா...

  அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி....

  ReplyDelete
 39. உண்மையில் புதிய செய்தியாக இருக்கிறது ஆண்டு முழுமையும் திருகல்யாணம் நடைபெறும் கோவிலா சிறப்பு இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் பாராட்டுகள் தொடர்க ......

  ReplyDelete
 40. போளூர் தயாநிதி said...
  உண்மையில் புதிய செய்தியாக இருக்கிறது ஆண்டு முழுமையும் திருகல்யாணம் நடைபெறும் கோவிலா சிறப்பு இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் பாராட்டுகள் தொடர்க ......//

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 41. மஞ்சுபாஷிணி said...
  நித்ய கல்யாணமூர்த்தி, வராஹமூர்த்தி கோமளவல்லி தாயாரோட என்ன ஜம்முனு உட்கார்ந்திருக்கார்.. முகத்தில் எத்தனை சாந்தம்.... மக்களை பரிபாலிக்கும் வராஹமூர்த்தியும் கோமளவல்லி தாயாரும் பார்க்கவே மனதை நிறைக்கிறார்கள்பா.....
  ....ஆழ்ந்து அதில் அமிழ்ந்து வரி வரியாக பகவானை மனதில் இருத்தி இங்கு கட்டுரையாக வரித்து படிப்போரையும் பரவசப்படுத்தும் மிக அற்புதமான சேவை ராஜேஸ்வரி நீங்கள் செய்வது...

  பெருமாளின் கடாக்‌ஷம் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை சுற்றியிருப்போருக்கும் கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா...

  அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி....//

  அருமையான ஆழ்ந்த கருத்துரைகளால் மனதைப் பரவசப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள் தோழி..

  ReplyDelete
 42. Shakthiprabha said...
  நன்றி. எனக்கு உபயோகமான தகவல் ஒன்று இதில் இருக்கிறது. மிக்க நன்றி.

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 43. வழக்கம்போல் படங்களும், தகவல்களும் சிறப்பாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 44. G.M Balasubramaniam said...
  வழக்கம்போல் படங்களும், தகவல்களும் சிறப்பாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

  பாராட்டுக்களுக்கு நிறைவான நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 45. படங்களும் பதிவும் அருமை, பல முறை சென்ற கோவில் என்றாலும் பல புதிய தகவல்கள். நன்றி பகிர்ந்தமைக்கு

  ReplyDelete
 46. 1888+12+1=1901 ;)))))

  அடியேன் மெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க முடிந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் சிரத்தையாக வெளியிட்டு மகிழ்வித்து உதவியுள்ளதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete