Monday, January 30, 2012

பீஷ்மாஷ்டமி பிரவாகம்



thumb_lr62.gifthumb_lr62.gif
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன்,  பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் 
என்று அறிவுறுத்துகிறார்.. 
மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக்கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே 
சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், 

ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த 
பெருமையும் கண்ணனுக்கு உண்டு.

நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆன பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், 
ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள்.

இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே 
நகருவது போலப் போடுவதே வழக்கம்.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும்
சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன.

ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. 

இந்தப் பூமி சுழல்வதை நினைவுபடுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது.

காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது 

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மபிதாமகர் . நினைத்த பொழுது மரணத்தைத் தழுவலாம் என்ற வரத்தைப் பெற்றவர் 

ரதசப்தமி வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்து ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று பிராணத்தியாகம் செய்தார். 

அதனால் அத்தினம் பீஷ்மாஷ்டமி என்று சொல்லப்படுகின்றது.
அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன்
கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. 

கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம். 

இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும்.
கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார்.

"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார்.

பீஷ்மருக்குப் புரிந்தது.
"பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி,
வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

"பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது 
அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் 
இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். 

அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார். 

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. 



சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். 
நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சாரி, அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்,"
என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். 
கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் 

தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். 

ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் 
அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார். 

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. 



திருமயிலை மாதவப்பெருமாள் சூரியபிரபை வாகனம்
[madhava.bmp]

32 comments:

  1. வெகு அருமையான தகவல்களுடன் கூடிய மிகச்சிறந்த பதிவு. படங்கள் அத்தனையும் வெகு அருமை.

    நன்றி.

    ReplyDelete
  2. வை.கோபாலகிருஷ்ணன் said...

    ரத ஸப்தமியன்று ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய தங்களின் ஸ்லோகங்களை, பத்திரமாக எழுதி வைத்துக்கொண்டேன். இந்த வருஷம் போலவே, அடுத்த வருஷ ஸ்நானத்திற்கும் பயன்படும் அல்லவா! //

    நன்றி ஐயா கருத்துரைகளுக்கு,,

    ReplyDelete
  3. எருக்கிலை வைத்து ஸ்நானம் செய்வதன் காரணம் தெரிந்துகொண்டேன்(தெரியாமலேதன் இன்றும் செய்தேன்!)நன்றி.

    ReplyDelete
  4. பொருத்தமான படங்களுடன்.. அருமையான விசயங்களின் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சிறப்பான விளக்கங்களுடன் அழகான படங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  6. அழகான படங்கள். பூக்களின் படம் வெகு அருமை.பீஷ்மாஷ்டமி- இது போன்ற விசயங்கள் தங்கள் மூலமாகத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. //அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும்//

    மிகவும் அருமையான உதாரணம்.

    ReplyDelete
  8. //மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மபிதாமகர் . நினைத்த பொழுது மரணத்தைத் தழுவலாம் என்ற வரத்தைப் பெற்றவர் ரதசப்தமி வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்து ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று பிராணத்தியாகம் செய்தார். அதனால் அத்தினம் பீஷ்மாஷ்டமி என்று சொல்லப்படுகின்றது.//

    பீஷ்மர் செய்துள்ள தியாகங்களும், தந்தைமேல் அவர் வைத்திருந்த பக்தியும் வரலாற்று முக்யத்துவம் வாய்ந்ததாயிற்றே!

    கர்ம வீரரும் மஹாத்மாவும் அல்லவா! அந்த பீஷ்மப்பிதாமகர்.

    வேறு யாருக்குக்கிடைக்கும் இந்த பாக்யம்?

    ReplyDelete
  9. சிறப்பான விளக்கங்களுடன் அழகான படங்களுக்கு நன்றி சகோதரி...

    Tennis season முடிந்ததா?

    ReplyDelete
  10. //கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம். //

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையும், அதனால் கிடைக்கும் மன நிம்மதியும், அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.

    அதில் கிடைக்கக்கூடிய பலன் வேறு எதிலுமே கிடைக்காது என்பதே நான் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

    ReplyDelete
  11. //இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும். கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.//

    ஸத்யமான வாக்கு. இதைப்பற்றி நான் ஒரு பதிவு இன்று தனியே வெளியிட்டுள்ளேன்.

    இணைப்பு:
    http://gopu1949.blogspot.com/2012/01/31012012.html

    ReplyDelete
  12. //"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், //

    வேதவியாசர் சொல்வது முற்றிலும் சரியே. அதை பீஷ்மர் உணர்ந்து வருந்தியதும் பாராட்டத்தக்கதே.

    இதையே [அதாவது பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூடப் பாவம் தான் என்று நினைத்து]
    நான் பிறரிடம் உபதேசித்தால் அவர்கள் அதை சுலபமாக சரியான முறையில் பாஸிடிவ் ஆக எடுத்துக்கொள்ள ஏனோ தயங்குகிறார்களே! என்ன செய்வது!!

    தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். என்றாவது ஒரு நாள் பீஷ்மர் போலவே அவர்களும் உணரத்தான் உணர்வார்கள். சரிதானே, மேடம்.

    ReplyDelete
  13. ஆமாம்.பிறர் செய்யும் தவறுகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் வந்து சேரும்.வழக்கம்போல மனம் கவரும் படங்களுடன் விளக்கமான பகிர்வு.

    ReplyDelete
  14. படங்கள் பக்தி கொள்ளாதவரையும் பக்தி கொள்ளவைத்துவிடும். ரசனையான பொருத்தமான பதிவிற்கேற்ற படங்கள்.

    ReplyDelete
  15. //நீ ஒரு நைஷ்டிகப்பிரும்மச்சாரி, உன்னைப்போலவே கணேசனும் நைஷ்டிகப்பிரும்மச்சாரி, அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகையால் இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்.

    அர்க்க பத்ரம் = சூரிய இலை//

    ஆஹா! கடைசியில் எருக்க இலைகளின் மகிமைகளைச் சொல்லி, கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்ட வியாசரையும், அதைப் பதிவிட்ட உங்களையும் எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை.

    அருமையான புதிய தகவல்கள். ஏதோ இத்தனை வருஷமாக எருக்க இலையை ஏதோ தலையில் வைத்துக் குளிப்பதோடு சரி. இப்போது தான் தெளிவடைந்தது, அதுவும் உங்களால், உங்களின் இந்தப்பதிவினால். சபாஷ்!

    ReplyDelete
  16. //ஒழுக்கமே த்வறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்க்டன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப்போய் விடுகிறார்கள்//

    ஆஹா! இதைக் கேட்டதும் நாமும் அதுபோன்ற மேம்பட்ட ஒரு நிலைக்குப் போகும் வாய்ப்பை இழந்துவிட்டு, பிரம்மச்சாரியாகவும் இல்லாமல், துறவியாகவும் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டானாக ஆகிவிட்டோமோ எனத் தோன்றுகிறது.

    இருப்பினும் இல்லறம் தான் நல்லறம் என்பதே என் தாழ்மையான கருத்து.

    இல்லறத்தில் இருப்பவர்களால் தான் பிரம்மச்சாரிகளையும், துறவிகளையும் ஆதரிக்க முடியும்.

    அதுவும் சுகம் தரும் ஒரு இல்லற தர்மம் தானே!

    ReplyDelete
  17. கடைசியில் உள்ள நாலு கிளிகளும் அழகாக உள்ளன.

    நடுவில் இனிமையாக அன்புசெலுத்தும் இருவரும் இல்லறக்கிளிகளோ.;))))

    இடது ஓரமாக பிரம்மச்சாரி கிளியும், வலது ஓரமாக துறவிக்கிளியுமாக இருக்குமோ?

    சூப்பரான சுவையூட்டும் படங்களுடன் கூடிய, அழகான பதிவு. மிக்க மகிழ்ச்சி, மேடம்.

    ReplyDelete
  18. சுவாரசியமான விவரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. படங்களுக்காகத் திரும்பவும் படித்தேன். பீஷ்மருக்கு ஒரு பண்டிகையா!

    ReplyDelete
  19. நல்ல ரசமான தகவல்கள்.

    ReplyDelete
  20. பீஷ்மரைப் பற்றி தெரியாதவர்களுக்கு நல்ல விளக்கம். ரதசப்தமி பற்றிய விளக்கம் அருமை.

    குருஷேத்திரம் போன போது பீஷ்மர் கோவிலில் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருக்கும் காட்சியைப் பார்த்தோம்.

    இரவு ஒளி, ஒலி காட்சி மூலம், பீஷ்மர் வரலாறு காட்டப் படுகிறது.
    பீஷ்மருக்கு அருச்சுனன் தன் அம்பால் கங்கை நீர் வரவழைத்து கொடுக்க்கும் போது மெய்சிலிர்த்து போகிறது.

    ReplyDelete
  21. கோலத்திலும் கூட இது மாதிரி வழக்கம் உண்டு என்பது நான் இதுவரை கவனிக்காத தகவல்.

    பீஷ்மர் செய்த பாவம் என்ன என்ற கேள்விக்கு வியாசரின் பதிலும் அருமை.

    ReplyDelete
  22. சாஸ்த்திர‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை கார‌ண‌ காரிய‌ம‌றிந்து செய்வ‌தே சால‌வும் சிற‌ந்த‌து.த‌ங்க‌ள் ப‌ணி ம‌க‌த்தான‌து.

    ReplyDelete
  23. ரத சப்தமிக்கான விளக்கமும்
    எருக்க இலைகொண்டு குளிப்பதற்கான விளக்கமும்மிக மிக அருமை
    அறியாதனவைகளை அழகாக தெளிவாக அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  24. பிதாமகர் பீஷ்மரைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
    மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு, மேடம். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. இந்த தகவல்கள் எனக்கு மிக புதிது. படங்கள் அருமை.

    ReplyDelete
  26. பீஷ்மரைப் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது...

    படங்களும் அருமை...

    ReplyDelete
  27. பீஷ்மாஷ்டமி தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  28. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  29. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  30. செந்தில்குமார் பவானி தெரியாத பல உண்மை சம்பவன்கலை அளித்து உள்லீகல் நன்றி. பீச்மதர்ப்பனதித்கு சொல்ல வேண்டிய மந்திரக்கை(கோத்தரம் குலம் முதலியன)தெரிவித்தால் நன்றி

    70,920 views
    ல்

    ReplyDelete
  31. செந்தில்குமார் பவானி தெரியாத பல உண்மை சம்பவன்கலை அளித்து உள்லீகல் நன்றி. பீச்மதர்ப்பனதித்கு சொல்ல வேண்டிய மந்திரக்கை(கோத்தரம் குலம் முதலியன)தெரிவித்தால் நன்றி

    70,920 views
    ல்

    ReplyDelete