Friday, January 20, 2012

அருளாசி தரும் அனுமன்


ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, 
வாயுபுத்ராய தீமஹி, 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ 
அனுமனுக்கான காயத்ரி மந்திரம் 
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ 
என்று மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ், தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். 

தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே நம்முடைய துன்பம் எல்லாம் விலகி விடும்.
Hanuman Jayanti Orkut Scraps
ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.
Hanuman Jayanti Orkut Scraps
 திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. 
அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.
 [hanumath+Jayanthi.JPG]
சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் 
மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். 

ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். 

பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.

வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். 

இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். 

அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.


இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். 

‘ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘

‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். 
சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.

கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். 

பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார்.

 ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். 

அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். 
வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

Hanuman decorated in Old Kalpathy with Vada malai


ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். 

ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு!

ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! 
அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். 
கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். 

ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.


[hanuman.jpg]

26 comments:

 1. ஸ்ரீராம் , ஜெயராம் , ஜெயஜெய ராம் !
  வடைமாலை ஹனுமான் இப்படி
  பிரம்மாண்டமாய் இதுவரை நான் பார்த்தது இல்லை.
  சேவித்து மகிழ்ந்தேன் . ரொம்ப நன்றி ராஜி !

  ReplyDelete
 2. கடைசி படத்தில் போடப்பட்டுள்ள கோலத்தைப்பற்றியும், அதன் மகிமையைப்பற்றியும் உங்களுக்கே தெரிந்திருக்கும். இருப்பினும் நான் இங்கு மற்றவர்களுக்காகக் கூற விரும்புகிறேன்.

  கீழ் வரிசையில் ஒரு நேர் கோடு.
  அதன் மேல் ஐந்து அரை வட்ட வளைவுகள்.
  அதன் மேல் இரண்டு வளையங்களுக்கு நடுவில் வருமாறு 4 வளைவுகள்.
  அதன் மேல் அதே போல 3 வளைவுகள்.
  அதன் மேல் அதே போல 2 வளைவுகள்.
  கடைசியாக உச்சியில் நடுப்பகுதியில் ஒரே ஒரு வளைவு.
  ஆக மொத்தம் 15 வளைவுகள்.
  இதில் உள்ள ஒவ்வொரு 15 வளைவிகளிலும் ராம் ராம் ராம் ராம் ராம் என்று வாயால் 5 முறை உச்சரித்தபடி எழுத வேண்டும்.

  இதைத்தவிர ராம் ராம் ராம் ராம் என்று ஒன்பது முறை தனியாக அருகில் எழுத வேண்டும். அவற்றை ஒவ்வொரு முறை எழுதும் போதும் 5 முறை உச்சரிக்க வேண்டும்.

  ஆக மொத்தம் 15+9=24 முறை எழுத வேண்டும். 24*5=120 முறை உச்சரிக்க வேண்டும்.

  இதுபோல தினமும் காலையில் நான் ஆபீஸ் போனதும், அதற்காகவே வைத்திருந்த தனி நோட்டில் இது போல படம் வரைந்து 15+9=24 முறை எழுதி, 120 முறை உச்சரித்த பின்பே, மற்ற வேலைகளைத்துவங்குவேன். ஒரு 5 நிமிடங்களே ஆகும் இதற்கு.

  இது ஸ்ரீ இராம லக்ஷ்மணர்கள் போர்க்கலத்தில் மூர்ச்சையாகிக் கீழே விழுந்த போது, ஸ்ரீ ஹனுமார் கொண்டு வந்த சஞ்சீவிமலையைக் குறிப்பதாகும்.

  இதை இதுபோல சஞ்சீவி மலைபோல பாவித்து, 15+9=24 முறை படமிட்டு எழுதுவதாலும், 120 முறை உச்சரிப்பதாலும் ஏற்படும் பலன்கள் சொல்லி மாளாது. நாளை ஸ்திரவாரம், ஹனுமனுக்கு உகந்த நாள். அனைவரும் ஆரம்பித்து எழுதுங்கள்.

  இது எனக்கு ஒரு மஹானால் அறிவிக்கப்பட்ட புதையல் போன்ற செய்தியாகும்.

  பலன் என்ன என்பது போகப்போக தங்களால் நன்கு உணர முடியும்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 3. சனீஸ்வரனின் கடுமையைக் குறைக்க அனுமனின் வழிபாடு ஏன் என்பதற்கு விளக்கத்தை தங்களிடம் இருந்துதான் இன்று பெற்றேன்! நன்றி!

  ReplyDelete
 4. நாளை சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

  படங்கள் அத்தனையும் அழகு.
  எவ்வளவோ முறை பார்த்து ரஸித்துப் பாராட்டியிருந்தாலும், பார்க்கப்பார்க்க அலுப்பு சலிப்பு இல்லாத ருசியான படங்கள் இவை, அந்த மிளகு போட்ட சூடான சுவையான வடைப்பிரஸாதம் போலவே.

  தேரில் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும்
  பழத்தார்களுடன் கூடிய மிகப்பிரும்மாண்டமான அந்தத் தேர்கள் வெகு ஜோர்.

  ReplyDelete
 5. நாளை சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

  படங்கள் அத்தனையும் அழகு.
  எவ்வளவோ முறை பார்த்து ரஸித்துப் பாராட்டியிருந்தாலும், பார்க்கப்பார்க்க அலுப்பு சலிப்பு இல்லாத ருசியான படங்கள் இவை, அந்த மிளகு போட்ட சூடான சுவையான வடைப்பிரஸாதம் போலவே.

  தேரில் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும்
  பழத்தார்களுடன் கூடிய மிகப்பிரும்மாண்டமான அந்தத் தேர்கள் வெகு ஜோர்.

  ReplyDelete
 6. கீழே இருந்து ஆறாவதாகக் காட்டியுள்ள பழமாலைகளால் ஆன ஆஞ்சநேயர் மட்டும் இன்று தான் நான் முதன் முதலாகப்பார்ப்பது போலத் தெரிகிறது.

  ஒவ்வொரு வியாக்கிழமைகளிலும், எந்தப்பதிவு தாங்கள் எழுதினாலும், இந்தப்பதிவில் முதன் முதலாகக் காட்டப்பட்டுள்ள முழு வடை மாலை சாத்திய அனுமனையும், அதுபோல ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்,மற்றொரு எனக்குப்பிடித்தமான, முழுப்பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அனுமனையும், முதலிலோ கடைசியிலோ தயவுசெய்து காட்டி அருளுமாறு, உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இரண்டுமே மிகச்சிறப்பான படங்கள்.
  அனைவரும் வாரம் ஒருமுறையேனும் ஆனந்தமாக தரிஸிக்க வேண்டியவை.

  என் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றித்தருவீர்கள் தானே ?

  ReplyDelete
 7. ஹனுமனை வழிபடுவதால் சனி, ராகு, கேது முதலிய நவக்கிரஹ தோஷங்களும் படுத்தல்கள்கள் விலகும்.

  வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை முதலியன அவரவர்கள் விருப்பப்படியும் வசதிப்படியும் சாத்தலாம்.

  மனதில் மீளாத்துயரம் உள்ளவர்கள், கஷ்ட நிவர்த்திக்காகவும், மனச்சாந்திக்காகவும் ஹனுமார் கோயிலுக்கு சிறிதளது [50 கிராம் அல்லது இன்னும் சிறிய சாம்பிள் பாக்கெட்] நல்ல வெண்ணெயாக வாங்கிக்கொண்டுபோய் ஹனுமனின் நெஞ்சில் அதை அப்பிவிடச் சொல்லலாம்.

  அவர் நெஞ்சு வெண்ணெய் சாத்துவதால் குளிர்ந்து போகும்போது நம் நெஞ்சும் குளிர்ந்து போகும்.

  எல்லாக் மனக்கஷ்டங்களும் விலகி, மனதுக்கு ஸாந்தி ஏற்படும்.

  நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் நல்ல பலனை உணர முடியும்.

  ReplyDelete
 8. இரண்டாவது படமும் வெகு அழகாகவே அமைந்துள்ளது. அதுவும் இன்று தான் நான் முதன்முதலாகப் பார்ப்பது போல என்னுள் பரவசத்தை ஏற்படுத்துகிறது.

  இன்றைக்கே இந்த வருடத்தில் முதன் முதலாக இரட்டைப்பதிவு இட்டு அசத்தியுள்ளீர்கள். காலையில் வெற்றிகரமான 400 ஆவது பதிவு. மாலையில் 401 ஆவது பதிவு.

  பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!! ;))))

  தங்களுடையது எல்லாமே திகட்டாத தேன் அமுது தான்.

  பதிவுக்கும், பகிர்வுக்கும், ஓயாத சிரத்தையான தினசரி உழைப்பிற்கும், என் உளமார்ந்த நன்றிகள். vgk

  ReplyDelete
 9. அஞ்சனை மைந்தன்
  வாயு புத்திரன்
  பராக்கிரமசாலி அனுமன் பற்றிய
  பல செய்திகள் தெரிந்து கொண்டேன் சகோதரி.

  ReplyDelete
 10. ......................2

  ..............ஸ்ரீராமஜயம்

  ......ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!  ...................राम

  ...............राम राम

  ............राम राम राम

  .........राम राम राम राम

  ......राम राम राम राम राम
  ..... =================

  राम राम राम
  राम राम राम
  राम राम राम  vgk

  ReplyDelete
 11. அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
  அஸாத்யம் தவ கிம் வத
  ராமதூத க்ருபா ஸிந்தோ
  மத் கார்யம் ஸாதய ப்ரபோ

  எனத் திருத்தி வாசிக்கவும்.

  ஜெய் ஆஞ்சநேயா!

  ReplyDelete
 12. பஞ்சபூதங்களான

  வாயு (காற்று),
  ஜலம் (தண்ணீர்),
  வானம் (ஆகாயம்),
  நிலம் (பூமி),
  தீ (நெருப்பு)

  ஆகியவற்றை அனுமனுடன் இணைத்துப் பாடும் புகழ்பெற்ற பாடல், கம்பராமாயணத்தில் உள்ளது:

  ‘அஞ்சிலே ஒன்றுபெற்றான்
  அஞ்சிலே ஒன்றைத்தாவி
  அஞ்சிலே ஒன்றாறாக
  ஆரியர்க்காக ஏகி
  அஞ்சிலே ஒன்றுபெற்ற
  அணங்கைக் கண்டு
  அயலார் ஊரில்
  அஞ்சிலே ஒன்றை வைத்தான்
  அவன் எம்மை
  அளித்துக் காப்பான்!’

  இதன் பொருள்:

  பஞ்சபூதங்களில் ஒன்றான

  ‘வாயு’வின் மகனான அனுமன்,

  கடலைத்[சமுத்திர ஜலத்தைத்]தாண்டி,

  ’வான்’ வழியாக [ஆகாய மார்க்கமாக]
  இலங்கை சென்று,

  ‘பூமி’ தேவியின் மகளான ஸீதாதேவியைக்கண்டு,

  பிறகு இலங்கைக்கு ‘நெருப்பு’ வைத்தான்;

  இந்த அனுமன் நம்மை நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவான்.

  -o0o-

  ReplyDelete
 13. Had the darshan of hanuman in different forms & decorations. Thank you.

  to Mr.vai.gopalakrishnan :- you have nicely described about that sanjeevi malai kolam. Is there any specific number of days that need to be drawn? or can we draw the kolam daily? is that the kum kum and haldi inside that?

  ReplyDelete
 14. துளசிதாஸர் போன்ற இராமாயண பிரவசனம் செய்யும் மஹான்கள், தான் இராமாயணம் சொல்லும் இடத்தில், எங்கோ ஒரு இடத்தில் ஹனுமனும் அமர்ந்து அந்த ஸ்ரீமத் இராமாயணத்தைக் கேட்டு மகிழ்ந்து வருகிறார் என்று நினைத்துச் செய்தது நல்ல செய்தியாகும். அது தான் உண்மையும் கூட.

  சிலர் பிரவசனம் செய்யும் இடத்தின் அருகில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அமர்வதற்கென்றே கோலமிட்ட பலகையொன்றை, பயபக்தியுடன் வைத்திருப்பார்கள்.

  நான் பலரின் பிரவசனங்களில் இதை என் கண்ணால் பார்த்துள்ளேன்.

  “யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்,
  தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்ஜலிம்!
  பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,
  மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!!”

  என்றே சொல்லப்பட்டுள்ளதே! ;))))

  ReplyDelete
 15. Mira said...
  //Mr.vai.gopalakrishnan :- you have nicely described about that sanjeevi malai kolam. Is there any specific number of days that need to be drawn? or can we draw the kolam daily? is that the kum kum and haldi inside that?//

  வீட்டில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு பூஜைகள் ஏதாவது செய்வதானால், நல்ல பச்சை அரிசிமாவினால் இந்தக் கோலத்தைப் போட்டு, அந்த ஒவ்வொரு சிறிய மலைப்பகுதியிலும் ராம ராம ராம ராம ராம என்று 15 முறையும், அதன் அருகே தனியாக அதுபோல 3*3=9 முறையும் அரிசிமாவினால் மட்டும் எழுதவும். கலர்பொடியெல்லாம் ஒன்றும் தூவ வேண்டாம்.

  கோலப்பொடியும் உபயோகிக்க வேண்டாம். வெறும் பச்சரிசி மாவு அல்லது அதில் செய்த இழைகோல மாவு மட்டுமே நல்லது. வியாழன் + சனி ஹனுமனுக்கு உகந்த நாட்கள்.
  அன்று மட்டும் கூட கோலம் போடலாம்.

  தனியாக ஒரு நோட்டுப்புத்தகம் இதற்கென்றே வைத்துக்கொண்டு அதில் தினமும் இதுபோல சிறியதாக வரைந்து எழுதி வரவும். அது தான் சுலபமாக நம்மால் செய்யக்கூடியது. அதிக பலன் அளிக்கக்கூடியதும் கூட.

  vgk

  ReplyDelete
 16. மிக்க நன்றி. உடல் பலத்துக்கும், மனோ பலத்துக்கும் ஒரே கடவுள் ஆஞ்சநேயர்தான்

  ReplyDelete
 17. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே, மிக்க நன்றி. எழுதுவது கொலதினுல்லோ அல்லது தனியாக பக்கத்தில் எழுதவேண்டும? தாங்கள் நோட்டில் எழுதிய கோலத்தை உங்கள் ப்ளாகில் போடுகிறீர்களா? இதற்குமுன் பார்த்ததில்லை என்பதால், எனக்கு இன்னும் தெளிவாகவில்லை.

  ReplyDelete
 18. //Mira said...
  திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே, மிக்க நன்றி. எழுதுவது கோலத்தின் உள்ளேயோ அல்லது தனியாக பக்கத்தில் எழுதவேண்டுமா?

  தாங்கள் நோட்டில் எழுதிய கோலத்தை உங்கள் ப்ளாகில் போடுகிறீர்களா?

  இதற்குமுன் பார்த்ததில்லை என்பதால், எனக்கு இன்னும் தெளிவாகவில்லை.//


  முயற்சிக்கிறேன். என் ப்ளாக்கில் இல்லாவிட்டாலும், அது இந்த “மணிராஜ்” அவர்களின் ப்ளாக்கிலேயே வெளியிட நானே ஏற்பாடு செய்கிறேன்.

  அதுவரை கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கவும். அன்புடன் vgk

  ReplyDelete
 19. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ராம்......

  வை.கோபாலகிருஷ்ணன் சார் சொல்வது போல சஞ்சீவி மலை கோலத்தை என் மாமியார் தினமும் பூஜையறையில் போடுவார். நானும் போட்டிருக்கிறேன்.

  அனுமனின் எல்லா படங்களுமே அற்புதமாக இருந்தது.

  ReplyDelete
 20. அருமையான தரிசனம் !

  ReplyDelete
 21. வழக்கமாக சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயனை வழிபட்டு அர்ச்சனை முதலான் செய்யும் எனக்கு
  முழங்கால், வலி காரணமாக இந்த இரண்டு வாரங்களாக கோவிலுக்குச் சென்று வழி பட இயலவில்லையே
  எனும் வருத்தத்தைத் துடைக்கும் வண்ணம் , எனது வீட்டிற்கே கணினி வழியே
  அனுமனைத் தரிசிக்கும்
  அதிசய பாக்யத்தைத் தந்த
  தங்களுக்கு எனது நன்றி.

  எங்கெலாம் அனுமத் பக்தர்கள் இருக்கிறார்களோ,
  எங்கெலாம் ராம ஜெபம் நடக்கிறதோ அங்கெலாம்
  அனுமன் இருப்பார்.
  my special thanks to Sri vai.gopalakrishnan also

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 22. sure. will wait. thank you :-)

  ReplyDelete
 23. ஒம்
  அசாத்யம் சாதக ஸ்வாமிந்
  அசாத்யம் தவ கிம் வத
  ராம தூத க்ருபாசிந்தோ
  மத் கார்யம் சாதயப் ப்ரபோ

  நன்றி...

  ReplyDelete
 24. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 25. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

  ReplyDelete
 26. 2071+12+1=2084

  மீரா, கோவை2தில்லி, திரு. சூரிசிவா ஐயா மூவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete