Saturday, April 30, 2011

இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்

இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்
பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் 
கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை.
தென்னாட்டு மான்செஸ்டர் என்று புகழ் பெற்ற , கோவை என்றவுடன் நினைiவுக்கு வரும் வினாயகரின் கோவில் ஈச்சனாரி ஆகும்.
ஈச்சனாரியில் விநாயகப்பெருமான் எழுந்தருளிய 
வரலாறு மிகவும் வேடிக்கையானது.

கொங்கு மண்டலத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்றானதும், முக்தித் தலமானதும் ஆடல்வல்லானின் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த ஆதி அம்பலத்தை உடையதும் ஆன பேரூர் பட்டீஸ்வரப்பெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட இந்த விநாயகர் விக்கிரகம், மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட போது , வினாயகப் பெருமானின் திருவிளையாடலால் வண்டியின் அச்சு முறிந்து வினாயகர் விக்ரகம் கீழே சாய்ந்தது.

கீழே சாய்ந்த வினாயகரை மீண்டும் வண்டியில் ஏற்ற 
எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. 

அவரே அங்கேயே கோவில் கொள்ள நினைத்தபின் மானிடர்களால் என்ன செய்ய முடியும். பின்னர் அவரே தானே வந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்க தேர்ந்தெடுத்த அதே இடத்தில் திருக்கோவில் உருவானது. 

அன்று முதல் இன்று வரை அவ்வழி செல்லும் அனைவருக்கும் அருட்காட்சி அளித்து நன்மை பல புரிந்து வருகின்றார் ஈச்சனாரி வினாயகர். 

இவ்வழியில் செல்லும் எல்லா வாகனங்களும் இவர் திருக்கோவிலில் நின்று இவர் அருளைப் பெற்ற பின்னரே செல்கின்றன


இவ்வாறு தானே உவந்து வந்து இங்கு கோவில் கொண்ட மூலவர் 5 அடி உயரமும், 3 அடி பருமனும் உடையவர். 

பாதையில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலத்தில் அங்குச பாசம் ஏந்தி துதிக்கை இடது புறம் வளைந்திருக்க உயரத்தில் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதால் கம்பீரமாகவும் எழிலாகவும் அருட்காட்சி தருகின்றார் விக்னராஜா.

இக்கோவிலில் செய்யப்படும் , 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர்விதமான அலங்காரம் செய்யும் 
நட்சத்திர அலங்கார பூஜை" மிகவும் விஷேஷமானது ஆகும். 

தமிழ் வருடப்பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று 
ஈச்சனாரி கோவிலில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்

கோவில் நவீன கட்டிட அமைப்புடுடன், மகா மண்டபம், அதனை சுற்றிலும் ஜன்னல் அமைப்பு, ஆலயத்தை சுற்றிலும் பசும் புல் தரை அமைப்பு, பூந்தோட்டத்துடன், எழிலுற விளங்குகின்றது. 

கோவிலின் உட்புறம் வினாயகப் பெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விளக்கும் ஓவியங்கள் அழகாக கண்ணாடி சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. 
யாகசாலை அற்புதமாக அமைந்துள்ளது.
திருமண மண்டபம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது

 கிழக்குப் பார்த்த கோபுரம் உடையது. மூன்று நிலைகளை கொண்டது. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் இரு யானை உருவங்கள் கலசங்களை தாங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆலயத்தினுள் நீண்ட சதுர வடிவில் உள்ள மண்டபம், நான்கு தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. 

பீடத்தில் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. 
அதன் மேல் ராசி சக்கரம் உள்ளது.

வினாயகப் பெருமானை தரிசிக்க சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகின்றது. 

சங்கடஹர சதுர்த்தியன்று வினாயகப்பெருமானை தரிசித்தால், சங்கடங்கள் தீரும் என்பதி ஐதீகம். 

அருள்மிகு வினயகப் பெருமான் திருவீதி உலா வர ரூ. 36 லட்சம் செலவில் தங்கத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் நாட்டிலேயே வினாயகப் பெருமான் திருவீதி உலா வர தங்கத்தேர் திருப்பணி செய்து அளித்து இருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
[Gal1]
[Gal1][Gal1]
[Gal1]
[Gal1]

Friday, April 29, 2011

ஒளிர்ந்து.. உயர்ந்து... சுவாமி விவேகானந்தர்


 • public-notice-3-culture-shock.jpg (240×320)
 • அன்பெனும் அட்சய பாத்திரத்தை நெஞ்சில் ஏந்தி உலகிற்கு அள்ளி வழங்கிய ஞான வள்ளல் ,பேரறிவாளர் விவேகானந்தர் உதிர்த்த முத்துக்கள் திரட்டிக் கோர்க்கப்பட்டு கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் (ஒளிகாலும் இருமுனையம் -ஆங்கிலத்தில் இதனை லெட் (LED) என்று சுருக்கமாக குறிப்பர்) - ஒளியில் எழுத்துக்கள் படிக்கட்டுக்களில் சிகாகோ கலைப்பயிலகத்தில் ஒளிர்கின்றன.(Art Institute of Chicago)
 • படிகளில் ஏறும் ஒவ்வொருவரும் சிந்தனை செறிந்த முகத்துடன் பார்த்து -படித்து - பார்வை மேலே செல்லச் செல்ல முகத்தில் கம்பீரம் கூடுகிறதே! கோவில் படிகளில் ஏறுவது போன்று உணர்ச்சி பொங்கப் பொங்க படித்துக்கொண்டே படிகளில் ஏறுகிறார்கள். வாருங்கள் நாமும் கூடவே ஏறிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரும் பெறும் புனித நல்லுணர்வைக் கண்டுணரலாம்.
 • சுமார் நூற்றுப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் வீரத்துறவி விவேகானந்தர் - 1893 ,செப்டம்பர் 11 - ஆம் நாள் -சுவாமிஜி உரையாற்றிய சிகாகோ கலைப்பயிலகத்தின் ஃபுல்லர்ட் டென் கூடத்திற்கு அருகில்தான் இவை இருக்கின்றன.
 •  அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு எச்சரிக்கையின் நிறங்களான பயங்கரவத ஆபத்தைக் காட்டும் சிவப்பு,பெரும் ஆபத்தை உணர்த்தும் ஆரஞ்சு, தொடர்ந்து பெருகும் ஆபத்து எச்சரிக்கை மஞ்சள்,பொதுவான ஆபத்து நிலையைக் காட்டும் நீல வண்ணங்களில் சுவாமி விவேகானந்தரின் உரைகளே படிக்கட்டுகளில் ஒளிர்கின்றன. 
 • சுவாமிஜியின் செய்தியை உலகமும் குறிப்பாக அமெரிக்காவும் கவனிக்கத் தவறினால் ஆபத்துதான் என்று ஒளிர்ந்து எச்சரிக்கின்றனவோ என்னவோ இந்த வண்ணங்களின் எண்ணங்கள்!!. 
 • இந்த 118 படிகளில் ஏறிச் செல்லச் செல்ல சர்வ சமயச் சபையின் முதல் நாளன்று சுவாமிஜி ஆற்றிய உரையின் முழுப் பகுதியையும் படித்து விட முடிகிறது.படிப்பவர் இதயமும் உயர்ந்து உலக சகோதரத்துவம் என்னும் ஒப்பற்ற உயரிய உணர்வை உணரப் பெறும்.
 • காவி உடுத்திய கீழை நாட்டுத் துறவி,மேலை நாட்டினரின் மனங்களை   " Sisters and Brothers of America " என்ற ஐந்தே ஐந்து சொற்களின் மூலம் வென்று,பிற மதங்களை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற இந்துப் பண்புகளை உரத்து முழங்கினாரே!!  பிரிவினை வாதத்திற்கும் மதவெறிக்கும் அழிவுக்காலம் வந்து விட்டது ,எழுமின்;விழிமின்;ஓயாது உழைமின் என்றுஅறுதியிட்டு அறிவித்தார் அந்த நிகழ்வில். 
 • என்னால் எந்த உயிருக்கும் அச்சம் ஏற்படாமல் இருக்கட்டும் என்ற உறுதிமொழி ஏற்றுத் துறவு பூண்டவர் இளம் வீரத்துறவி விவேகானந்தர். அவரது சொற்களோ தன்னைத்தானே கண்டு பயப்படும் சமயத்தின் பெயரால் அசுர சக்தியைத் திரட்டும் ஒரு சிலரின் மதவெறி மண்டிக் கிடக்கும் மனதில் புகாத துர்பாக்கியத்தால், 108 ஆண்டுகளுக்குப்பின் அதே செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்க நாட்டில் மதவெறித்தாக்குதல் நடைபெற்ற கொடுமையை என்ன சொல்ல??
 • இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுக்காட்டி "சேரவாரும் ஜெகத்தீரே! இனியாவது அமைதி கண்டு உய்வீர்!! என்று அறைகூவல் விடுக்கின்றனவோ இந்தப் படிக்கட்டுக்கள்.!!
 • இந்த கலைச்சின்னத்தின் செய்தி ஆழமானது,பொருள் பொதிந்தது; இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிக இன்றியமையாதது.
 • சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 -2010 முதல் ஜனவரி 12 -2011 வரை சிறப்பிற்குரிய இடம் என்ற அடைமொழியுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த இக் கண்காட்சியை உருவாக்கியவர் பாரதத்தின் புகழ் மிக்க கலைஞரான ஜிதிஷ் கலாட் என்பவர் ஆவார். 
 • சுவாமிஜியின் உரை முதல், அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் வரையான வரலாற்றுப் பதிவுகள் எத்தகைய வீழ்ச்சியை நம்க்கு உணத்துகின்றன?வ்ருங்காலம் எவ்வாறு சீரமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அலைகளை காண்பவர் மனதில் தோற்றுவிக்கத் தூண்டுவதே கண்காட்சியின் நோக்கமாகும்.
 • செப்டம்பர் 11 என்றவுடன் பலரின் மனதில் அழிவுப்பதையில் அசுர வேகத்தில் பறந்த போயிங் 707 விமானங்களின் சப்தமும், தோற்றமுமே திரைப்படக்காட்சியாக ஓடும் அவல நிலையை மாற்றி,இந்த கலைப்பயிலக்த்திற்குச் செல்பவர்களின் மனங்களில் நம்பிக்கையைத் தூண்டி ஆக்கப்பாதையில் செலுத்த சர்வசமய சபையில் உரையாற்றிய வீரத்துறவி விவேகானந்தரின்  திரு உருவே தோன்றட்டும்!
 •  
 •  
 • //  


Thursday, April 28, 2011

வண்ணத்துப்பூச்சி எண்ணங்கள்

Butterfly GardenMonarch Butterfly


caterpillar pictures, butterfly pictures, butterflies picture
Hatching Butterfly


Monarch Flower


அழகிய மணமுள்ள மலர்கள் தோறும் வண்ணச்சிறகு முளைத்த சின்ன ஜீவன்கள் நடந்து போகும் எழில் எண்ணச் சிறகை சிறகடித்துப் பறக்கவைக்கும். நம்மில் யாருக்குத்தான் அடிமை வாழ்வு பிடிக்கிறது?? விட்டுவிடுதலையாகி சிட்டுக்குருவியைப் போலப் பறக்கவே ஆசைப்படுகிறோம்.


கூட்டுப்புழுவாய் குடும்பத்தளைகளுக்குள் பரிணாம வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

 •  உண் என்னும் ஒற்றைக் கட்டளை மட்டும் கொண்ட குடம்பி என்னும் அருவருக்கும் புழுப்பருவம் வளர்ச்சியுற்று, வள்ளலாரின் தனித்திரு, பசித்திரு விழித்திரு என்ற கோட்பாட்டின்படி தனித்தனியே தன்னைச்சுற்றி பட்டுக்கூடு அமைத்து தவம் செய்யும் ரிஷிகளைப் போல் உண்ணாமல் உறங்காமல் ஒரே தவ உணர்வுடன்இருந்து உரிய நேரத்தில் வண்ண வண்ண பறக்கும் சிறகு முளைத்த தேவதைகளாய் மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தூதுவனாய் புதுவடிவெடுக்கின்றன. 
  • பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதற்கு என்றொரு திரைப்படப் பாடல் ஒன்று. பிடித்துப் பார்க்கப் பட்டாம் பூச்சியைத் துரத்தாத பிஞ்சு விரல்களையும், எழுதிப் பார்க்கப் பட்டாம்பூச்சியை உவமைக்கு இழுக்காத கவிஞர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம். 
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பூச்சியினங்களில் பட்டாம் பூச்சிகளின் பங்கு அதிகம். இயற்கைச் சமநிலைக்கும்,  பூக்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி இயற்கை வளநிலைக்கும் உதவும் பட்டாம்பூச்சிகள் அழிந்து வருவதைத் தடுக்க உலகெங்கும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன
  • சிங்கப்பூரில் ஏற்கனவே சாங்கி விமான நிலையத்தில் உள்ள பட்டாம் பூச்சிப் பூங்கா, செந்தோசா பட்டாம் பூச்சிப் பூங்கா எனப் பல பூங்காக்கள் பட்டாம்பூச்சி இனப் பெருக்கத்தில் அக்கறை கொண்டுள்ளன.
  • பூக்கள் வரவேற்கையில் பட்டாம் பூச்சிகள் பறந்து வருவதற்கென்ன, பாஸ்போர்ட்டா விசாவா?திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் பட்டாம் பூச்சிகளைக் கொண்டுபோய் விழாவில் பறக்கவிட்டு மகிழ்வதற்கும் இப்போதெல்லாம் பட்டாம் பூச்சிகளைப் பலர் வளர்க்கின்றனர்.

   படிமம்:Cethosia cyane.jpg

   படிமம்:Viceroy Butterfly.jpg

   படிமம்:Argynnis paphia - Kaisermantel.ogv

   படிமம்:Cairns birdwing - melbourne zoo.jpg

   வண்ணத்துப்பூச்சி பறந்த பனித்தீவு!


   தற்போது வெள்ளை வெளேரென்று பனி படர்ந்த தீவாக இருக்கும் கிரீன்லாந்து, ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது.
   கிரீன்லாந்து தீவின் தென்பகுதியில் ஒரு மைல் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சேற்று மண் படிவங்களில் இருந்து பூக்களின் மகரந்தங்களும், அதிலிருந்த பூச்சிகளின் மரபணுக்கும் ஆராய்ச்சி செய்யப்பட்டன.

   அவற்றின் மூலம், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வண்ணத்துப்பூச்சிகள், பட்டுப்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், சிலந்திப்பூச்சிகள் ஆகியவை வாழ்ந்த அடர்ந்த காடுகளுடன், பசுமையாகவும், வெப்பமாகவும் கிரீன்லாந்து இருந்தது தெரியவந்தது.
   இப்பகுதியில், பைன், ஈவ், ஆல்டர், ஸ்பர்சி ஆகிய ஊசியிலை மரக் காடுகள் நிறைந்து இருந்திருக்கின்றன. கோடைகால வெப்பநிலை 10 டிகிரி சென்டிகிரே
   டாகவும், குளிர்கால வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி சென்டிகிரேடாகவும் இருந்து வந்திருக்கின்றன. மேலும், மேலேயுள்ள பனியடுக்குகள் உருகினாலும் கூட, அடிமட்டப் பனியடுக்குகள் உருகுவதில்லை என்பதும், கடல் மட்டம் தற்போது இருப்பதைவிட 30 மீட்டர் உயரத்தில் இருந்த விவரமும் தெரியவந்துள்ளது.

   இதுவரை, இந்தக் காலகட்டத்தில் கடைசிப் பனியுகம் நிலவியதாகத்தான் பொதுவாகக் கருதப்பட்டது. அதற்கு மாறாக, இந்தக் காலகட்டத்தில் கிரீன்லாந்து தீவிலேயே வெப்பம் அதிகமாக இருந்திருப்பதால், பனியுகம் என்று கருதப்பட்ட காலகட்டத்திலும் பூமி மிகவும் வெப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

   Crescent? - Phyciodes tharosWestern Pygmy Blue, perhaps? - Brephidium exilis - female
   Greater Fritillary - Speyeria atlantis - male


   Black Swallowtail - Papilio polyxenes - female
   Lyside Sulphur - Kricogonia lyside - male
   Lyside Sulphur - Kricogonia lyside - male
   Northern Pearly-eye - Enodia anthedon
   Not sure what I am? Fritillary???? - Boloria bellona
   Colorful Butterflies

   Wednesday, April 27, 2011

   ஆஸ்திரேலியாவின் அன்சாக் தினம்..
   "ஆஸ்திரேலியாவில் நீண்ட வாரவிடுமுறை தினங்களாகக் கிடைத்த அன்சாக் தினக்கொண்டாட்டத்தை என் மகன்கள் உற்சாக ஊற்றாக உல்லாசப் பயணமாக கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லிவு கொண்டாடக் கண்டுபிடிப்பபோம் கொண்டா ஒரு தீவு என்று கிளம்பிவிட்டார்கள்.                               அவர்கள் சென்ற இடங்களின் படங்களையும்,அன்சாக் தினக் குறிப்புகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிவப்புக் கலரில் இருக்கும் பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கொண்டு, உண்டியல் குலுக்குவார்கள். 
   அன்றைக்கு டெலிவிஷனில் வருபவகள்( செய்தி அறிவிப்பாளர், வானிலை , விளையாட்டு நியூஸ் சொல்பவர்கள்)எல்லாம் பாப்பிப் பூவோடு தரிசனம் தருவார்கள். இந்த 'பாப்பி டே' ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. ஆஸ்திரேலிய-நியுசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக 1915ம் ஆண்டு அமைக்கப்பட்ட படையணியின் பெயரே அன்ஸாக். (Australia and New Zealand Army Corps) 1915ம் ஆண்டு கலிபொலி மீட்பு வெளியேற்றத்துக்கும் பிறகு இப்படையணி கலைக்கப்பட்டாலும் ANZAC என்ற பெயர் நிலைத்தது. இந்தப் படையணியின் முதலாவது போரின்/தாக்குதலின் ஞாபகார்த்தமாகத்தான் அன்ஸாக் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது.[ANZAC+Lone+Pine+Cemetery.jpg]1915 இன் இறுதியில் இருபக்கங்களிலும் ஏற்பட்ட பலத்த சேதங்களின் பின்னர் கூட்டுப் படைகள் பின்வாங்கின. மொத்தம் 8,000 ஆஸ்திரேலிய, 2,700 நியூசிலாந்துப் படைகள் இச்சண்டையின்போது கொல்லப்பட்டனர்.
   ஏப்ரல் 25 நாள் 1916 ஆம் ஆண்டில் அன்சாக் நாள் என  பெயரிடப்பட்டது. அனசாக் தினம் ஆஸ்திரேலியா எங்கும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. காயமுற்ற பல ஆஸ்திரேலியத் இராணுவத்தினர் சிட்னியில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 2,000க்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் லண்டன் வீதிகளில் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எகிப்தில் முகாமிட்டிருந்த ஆஸ்திரேலியர்கள் விளையாட்டு நாளாகக் கொண்டாடினர்.   [
        அன்ஸாக் தினத்தன்று கடைப்பிடிக்கப்படும் மௌன நிமிடங்களின் இறுதியில்  அஞ்சலிக் கவிதை கூறப்படும்:


   They shall not grow old as we are left that grow old Age shall not weary them, Nor the years condemn 
   At the going down of the sun and in the the morning
   we will remember them. the morning"Lest we forget"

   துருக்கியில் இருக்கும் Gallipoli Peninsula என்ற இடத்தில். கருங்கடலில் மாட்டிக்கொண்டகோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போக உதவியாக, அந்த ஜலசந்தியைத் திறக்க சென்ற நாள் ஏப்ரல் 25! 


   இந்த நாளை நினைவிலே வைக்கவும்,நாட்டில் எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்கிறதென்று வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செய்து அரசாங்கமும் தேசபக்தியைப் பாராட்டும் விதமாக அரசாங்க விடுமுறையாக அறிவித்தது


   மரணமடைந்தவர்களைப் புதைத்துவிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினார்கள்.


   எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனார்களோ அங்கெல்லாமும் நினைவு மண்டபம் எழுப்பினார்கள்.


   வீரமரணம் அடைந்தவர்கள் பெயர்களையும் அங்கே செதுக்கி வைத்திருக்கிறார்கள்..


   அதிகாலை நேரத்து விழித்திருப்புகளும் சடங்குகளும் அணிவகுப்புகளும், reunionsகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் என்பனவும் two-up விளையாட்டும் அன்ஸாக் தினத்துக் கலாச்சாரக்கூறுகளாகும். 


   (two-up என்பது இரு நாணயங்களை மேலெறிந்து தலையா பூவா என அவற்றின் முடிவின் மேல் பந்தயம் கட்டுவது)


   Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவியது.


   ஒவ்வொரு வருஷமும், இந்த நாளில் அந்தந்த ஊர்களில்  இருக்கும் நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். 


   அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். 
   வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவர்கள் பரம்பரைக்கு) அன்றைக்கு விசேஷ மரியாதை! அவர்களும்அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற விருதுகளை பெருமையுடன் எடுத்துக் கொண்டுவருவார்கள்.   முதியோர்கள் இல்லத்தில் இருக்கும் வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னேயேஅவர்களின் மெடல்களையெல்லாம் பாலீஷ் செய்து, அடுக்கி, ராணுவ உடையோடு கம்பீரமாக பங்கெடுக்க ஆர்வம் காட்டுவார்கள் 


   சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்றைக்கு வலம் வருவதைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் வந்துவிடும். 


   கலிபோலியில் இருக்கும் வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருடா வருடம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!

   இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கலிப்போலியைச் சுத்திக் காட்டி, அங்கே 'அன்ஸாக் வாக்'கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!

   நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.
   ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு மிகவும் அத்யாவசியம்

   உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?


   ராணுவ வீரர்கள் செய்கிற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!


   ANZAC day medals.
   இந்த நாள் காலை உணவு ஒரு குறித்த அடையாளப் பெயர் கொண்டு அழைக்கப்படும்,
   Gunfire Breakfast’ 
   'gunfire breakfast' (coffee with rum added) which occurs shortly after many dawn ceremonies[P1010358.JPG]

   [P1010339.JPG]
   சிட்னியிலுள்ள அன்ஸாக் நினைவாலயம் & அதனுள்ளிருக்கும் வாள் மீது உயிர் துறந்த வீரன் சிலை

   ஆஸ்திரேலியா-நியுஸிலாந்து பங்கு கொண்ட பிற்காலப் போர்களில் போரிட்ட வீரர்களையும் உள்வாங்கி கொண்டாடும் முகமாக அன்ஸாக் தினம் மாறியுள்ளது. அன்ஸாக் தினத்தைக் கொண்டாடும் வகையில் கலிப்பொலிக்குச் செல்வதும் அங்கு நடக்கும் அதிகாலைப் பிரார்த்தனையில் கலந்து கொளவதும் வழக்கமாக இருக்கிறது.