Friday, April 1, 2011

பிரிஸ்பேன் கண்ணே... • முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் விமானம் தரை இறங்கும் முன், விமானத்தைத் தாழப் பறக்கவிட்டு, பசிபிக் கடலையும், பிரிஸ்பேன் நதியையும், நதியில் மிதக்கும் படகுகளையும், விரைந்து செல்லும் கப்பல்களையும் விமான ஓட்டி அருமையாகக் காட்சிப்படுத்தினார். பிரிஸ்பேன் நகருக்கு SUN SHINE CITY என்றே பெயர். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக வர்னவில்லின் வர்ணங்களை கிழக்கு வானில் அள்ளித்தெளித்து. சூரியன்வண்ணக் கோலங்களைத்தீட்டி உதிக்கும் நேரத்தில் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு களித்தவாறே ந்கரில் கால் பதித்தேம்.


இரவு நேர அழகை The South Bank Eye, Brisbane என்ற ஜெயண்ட வீல் போன்றஅமைப்பில்கண்டுமகிழ்ந்தோம். • Wheel of Brisbane  அறுபது மீட்டர் உயரம் கொண்டது. இதன் முன்னோடி லண்டனில் இருபதை விட (London Eye's 135 metres) உயரம் குறைவென்றாலும், வசதிகளில் குறைவிலலை.

 • South Bank  இன் குறிப்பிடத்தக்க லேண்ட் மார்க் -அடையளத் தளமாகவும், சுற்றுலாப்பயணிகளையும்,உள்ளூர் மக்களையும்,மாணவர்களையும் கவர்ந்திழுக்கும் சிறப்பான இடமாகவும் விளங்குகிறது.
TV still of new year's eve firework display in Brisbane city, with Eye wheel in shot on Dec 31, 2008
 • நாற்பத்து இரண்டு குளிர்சாதன வசதி பொருத்திய அறைகள் உள்ளன.ஆறு பெரியவர்களும், இரண்டு குழந்தைகளும் அமரலாம்.


ஒவ்வொரு பயணமும் பதினைந்து நிமிடங்கள்.முன்னூற்று அறுபது டிகிரி பறவைப் பார்வையில் நகரைப் பார்க்க முடிகிறது.

photo
தூரத்தில் தெரியும் அடுக்குப் பாலத்தின் வண்ண விளக்குகளின் அலங்கார வெளிச்சமும், வானில் தெரிந்த முழுநிலவின் பால்பொழியும் அழகும்,கண்சிமிட்டும் விண்மீன்களும், வைர மாலை போல் ஜொலிக்கும் நகரின் ஆனந்தத் தோற்றமும், அமைதியாகச் செல்லும் நதியில் மிதக்கும் படகுகளுமாக -இந்திரலோகத்தினைத் தோற்கடிக்கும் அபாயமிருப்பதை உணர்த்துகிறது. 

  
மண்ணிலிருந்து விண்ணுக்கு அமைத்த விஞ்ஞானப் பாலம்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்து எட்டாவது வருடம் உலக எக்ஸ்போ பொருட்காட்சி நடைபெற்றது.அதன் நினைவாக 20 வது ஆண்டில் South Brisbane parklands. இல் மே மாதம் பத்தாம் தேதி சுற்றத் துவங்கியது.
பிரிஸ்பேன் நகரின் 150 வது வருடக் கொண்டாட்டத்தின் நினைவு நாளாகவும் அமைந்தது.
சிட்னியில் 46 மீட்டர் உயரத்தில் இதே போல ஒர் பார்வைச் சக்கரத்தை பிரிட்டிஸ்காரர் அமைத்திருக்கிறார்.


23 comments:

 1. சேம் இதே போல ஜயன்ட் வீல் இங்கேயும் ஷார்ஜா) இருக்கு ஆனா ஏறத்தான் பயம் :-)))

  படங்கள் சூப்பர்....!!பதிவு தலைப்பே உள்ளே உள்ள மேட்டரை சொல்லிடுச்சே :-)

  ReplyDelete
 2. "பிரிஸ்பேன் கண்ணே..."

  காணக்கண்கோடி வேண்டும் என்பார்கள்.
  அது உண்மை தான் என்பதை தங்களின் இந்தப்பதிவு நிரூபித்து விட்டது.

  அனைத்தும் அருமை. வீட்டில் படுத்தவாறே உலகின் அழகுகளைக் காண முடிகிறது உங்களால் மட்டுமே எங்களுக்கும் இன்று.

  நன்றிகள். தொடருங்கள் உங்கள் இந்த அரிய பெரிய பணியை என்றும் தொய்வில்லாமல். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அட சூப்பருங்க.. ஒவ்வொரு இடமா போய் பாத்துட்டு போட்டோ எடுத்து போட்டு ஆசைய தூண்டுறீங்க.. சூப்பருங்க..

  ReplyDelete
 4. @ஜெய்லானி said../
  கருத்துக்கு நன்றிங்க..

  ReplyDelete
 5. @வை.கோபாலகிருஷ்ணன் //
  வாழ்த்துக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 6. @தம்பி கூர்மதியன் said...//
  நன்றிங்க

  ReplyDelete
 7. @ "உழவன்" "Uzhavan" said...
  Super.. poganum pola iruku :-)

  April 1, 2011 2:09 PM//
  சென்று கண்டு ரசியுங்கள்.

  ReplyDelete
 8. அருமையான புகைப்படங்கள்.
  ஆரம்ப வரிகளில் எழுத்துக்கள் மிகச்சிறியதாக உள்ளது. கொஞ்சம் பெரிதாக்கலாமே.....

  ReplyDelete
 9. சகோதரி; அப்படியே பிரமிச்சு போயிட்டேன்என்னசொல்றதுனே தெரியலே. படிக்க படிக்க அந்தி இடங்களின் அழகையும் எழில் மிகு தோற்றத்தை படத்தோட, கண முன்னடிநேரில்பார்ப்பதை போன்று இருந்தது,நாமன்னு சொள்ளகூடது நான் இவளவு பாவம் செயிது இருக்கிறேன் என்று நினைக்கும் பொது மனசு வழிகிறது என்ன எழுதிறேன் என்னக்கே புரியவில்லை,நன்றி நன்றி நற்றி,வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள் நன்றி

  ReplyDelete
 10. சகோதரி; அப்படியே பிரமிச்சு போயிட்டேன்என்னசொல்றதுனே தெரியலே. படிக்க படிக்க அந்தி இடங்களின் அழகையும் எழில் மிகு தோற்றத்தை படத்தோட, கண முன்னடிநேரில்பார்ப்பதை போன்று இருந்தது,நாமன்னு சொள்ளகூடது நான் இவளவு பாவம் செயிது இருக்கிறேன் என்று நினைக்கும் பொது மனசு வழிகிறது என்ன எழுதிறேன் என்னக்கே புரியவில்லை,நன்றி நன்றி நற்றி,வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள் நன்றி
  subburajpiramu

  ReplyDelete
 11. மண்ணிலிருந்து விண்ணுக்கு அமைத்த விஞ்ஞானப் பாலம்.
  படங்கள் சூப்பர்..
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 12. @# கவிதை வீதி # சௌந்தர்//
  Thank you sir.

  ReplyDelete
 13. @கலாநேசன் said...//
  o.k Sure do it immediately.
  Thank you Sir.

  ReplyDelete
 14. @இன்பம் துன்பம் said...//
  Thank you for sharing.

  ReplyDelete
 15. @Mahalashmi said...

  மண்ணிலிருந்து விண்ணுக்கு அமைத்த விஞ்ஞானப் பாலம்.
  படங்கள் சூப்பர்..
  பகிர்வுக்கு நன்றி

  April 2, 2011 8:47 PM//
  Thank you.

  ReplyDelete
 16. ;)
  வநமாலீ கதீ சார்ங்கீ
  சங்கீ சக்ரீ ச நந்தகீ!
  ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
  வாஸுதேவோSபிரக்ஷது!!

  ReplyDelete