Thursday, April 7, 2011

தேசியக் கொடி

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியக் கொடி என்பது உயிரோடும், உணர்வோடும் பின்னிப் பிணைந்தபெருமை மிகு கலாச்சார அடையாளமாக விளங்குகிறது.

கொடிகாத்த குமரனைப் போற்றி வணங்குவோம்!  
Beating+Retreat-4.jpg (906×393)

aus3.gif - 7.1 K 
கங்காரு 
தேசமான 
ஆஸ்திரேலியாவில் பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்த தேசீயக்கொடி என்கவனத்தை ஈர்த்தது.
Australian National Flag at Parliament House.

ANZAC Day parade through Sydney CBD.
நட்சத்திரத்தில் ஐங்கோணமும், அறுகோணமும் ,எண்கோணமும் வழக்கமாக கோலத்திலும்,  "ஸ்ரீ'  சக்கரத்திலும் பார்த்திருக்கிறோம்.
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளாக அபிராமி அன்னையைத் துதிப்போம்.
அது என்ன ஏழு கோணம்??
அந்த கோணங்கள் ஏழும் ஆஸ்திரேலியாவின் இணைந்த மாகாணங்களைக் குறிப்பிடுகின்றனவாம்.
பட்டத்தின் வடிவிலுள்ள அந்த நட்சத்திரங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து பார்த்தால் வெறும் கண்ணால் பொலிவுடன் காட்சியளிப்பதைக் காணமுடியும் என்பது சிறப்பு.
நிலநடுக்கோட்டின் வடபுறம் வசிப்பவர்களால் இந்த நட்சத்திரக்கூட்டத்தைக் காணமுடியாதாம்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து மட்டும் தெளிவாகக் காட்சிப்படும் நட்சத்திரங்களைத் தங்கள் தேசீயக்கொடியில் ஏற்றி மரியாதை செலுத்திப் பெருமைப் படுத்துகிறார்கள். 
நம் புராணங்களிலும் சிவ, பார்வதி திருமணத்தின் போது வட திசையின் பாரத்தைத் தவிர்க்க அகத்தியரை தென் திசைக்கு அனுப்பி, உலகம் சமநிலை பெற இறைவன் அருளியதை படித்திருக்கிறோம்.
தென் அரைக்கோளத்தில், பூமத்திய ரேகைக்குத் தென்பகுதியில் காட்சிப்படும் முதல் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ் ஆகும்.
இரண்டாவது பிரகாசமான நட்சத்திரம் கனோபஸ் என்னும் அகத்திய நட்சத்திரம். இதன் அருகில் அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை நட்சத்திர வடிவில் அகத்திய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
சிரியஸை விட கனோபஸ் பெரியதாக,பிரகாசம் அதிகமாக இருந்தாலும், தொலைவில் இருப்பதால் ,சிரியஸைவிட சற்று மங்கலாகக் காட்சியளிக்க்கிறது.
  File:Sagittarius Star Cloud.jpg
  சப்தரிஷி மண்டலம் என்று இந்திய புராணம் கூறுவதை, கிரேக்க புராணம் செவன் சிஸ்டர்ஸ் -ஏழு சகோதரிகள் என்று குறிப்பிடுவது எண்ணிப் பார்க்கத்தக்கது.
  நாம் திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் செய்வோம் அருந்ததி கற்புக்கரசி, தன் கணவராகிய வசிஷ்டரைப் பிரியாமல் இரண்டு நட்சத்திரமாக இருந்தாலும் பார்வைக்கு ஒரே நட்சத்திரமாகத் தெரிவது போல் கணவன் மனைவி இருவராக இருந்தாலும், கருத்து ஒன்றாக இருக்க வேண்டும்,கருத்தொருமித்த இல்லற வாழ்வு சிறக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினர்.
   படிமம்:Mira 1997.jpg
   தெளிவான கண் பார்வை இருந்தால் மட்டுமே இரு நட்சத்திரங்களையும் பிரித்து அறிய முடியுமாம். அந்த வகையில் கண்பார்வை தெளிவாக இருவருக்கும் இருக்கிறதா என்பதை அறியவும் அருந்ததி பார்த்தல் மூலமாக கண்சோதனையாகவும் அமைந்தது.
   கிரேக்கர்கள் செவன் சிஸ்டர்ஸ் என்னும் ஏழு நட்சத்திரங்களையும் பார்க்கச் செய்து கண் பார்வைத்திறனை அளவிட்டார்களாம்.
   கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்யாமல், கண் பார்வை தெளிவுள்ள போதே அதிகாலைச் சூரியனையும், வளர்ந்து தேயும் நிலவையும், வெவ்வேறு நிறங்களிலும், பிரகாசங்களிலும், அளவுகளிலும், வடிவங்களிலும் தோன்றும் நட்சத்திரங்களின் இயற்கை அழகையும், கண்டு வணங்கி ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் சிந்தனையை அந்த கொடி தூண்டி விட்டது
   இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்"
   திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட  தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.
   saptharishi_561 
    saptharishi_560  

    6 comments:

    1. நிறைய தகவல்கள்....
     ஆஸ்திரேலியா கொடியில் இவ்வளவு அர்த்தங்களா?
     நல்ல பகிர்வு. ;-)

     ReplyDelete
    2. அனைத்து விஷயங்களிலும் ’கொடி’ கட்டிப்பறக்கிறீர்கள்.

     எல்லாக்கொடிகளிலும் மட்டுமல்ல எல்லா விண்வெளி ஆராய்ச்சி, புராணங்கள் போன்ற அனைத்து விஷயங்களிலும் பட்டொளி வீசிப்பாறந்திடும் உங்கள் ஆற்றலுக்கும், அறிவுக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்/ஆசிகள்.

     அன்புடன் vgk

     ReplyDelete
    3. அட! ஆஸ்திரேலியா தேசியக் கொடியில் இவ்ளோ விசியம் இருக்கா?

     ReplyDelete
    4. ;)
     வநமாலீ கதீ சார்ங்கீ
     சங்கீ சக்ரீ ச நந்தகீ!
     ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
     வாஸுதேவோSபிரக்ஷது!!

     ReplyDelete