Monday, April 25, 2011

அற்புத மலர்களின் நடனம்...

solar power Flipflap dancing flower(5 colors)
 • அழகிய மலர்கள் நமக்கு ஆனந்தம் தருபவை.ஆர்க்கிட் வகை மலர்கள் அதிகம் மலர்ந்தால் செழிப்பைக் குறிப்பிடுபவையாக தாவரவியல் வல்லுநர்கள ம்கிழ்வார்கள். 
 • கூடலூர் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் மலர்ந்துள்ள, “டான்சிங் டால்’’ ஆர்கிட் மலர், பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. 
 • மலை மாவட்ட வனப்பகுதிகளில் காணப்படும், “ஆர்கிட்’’ வகை மலர்கள், நான்கு வாரங்கள் வரை வாடாமல் இருக்கக் கூடியவை.  “டான்சிங் டால்’’ மலர், பார்வைக்கு இதம் தருகிறது. நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும் இவ்வகை மலர்கள், அலங்காரத்துக்கு,  பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
 • பெரும்பாலான மலர்கள், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மலரக் கூடியவை; சில மலர்கள், மருத்துவத்துக்கும், வாசனை திரவியத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. கூடலூர் நாடுகாணியில், வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், பசுமைக் குடில் அமைத்து, ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படுகின்றன.இங்கு, 80க்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர் செடிகள் உள்ளன. மலர்ந்துள்ள, "டான்சிங் டால்' மலர்கள் கருத்தைக் கவர்ந்து இனிமை தருகிறது.
 • மலர்களின் ஆடும் நடனம் புதுமையே-நம்
 • மனங்களில் தோன்றும் உணர்வு புதுமையே !வாருங்கள் மலர்களை வாழ்த்தி ஆனந்திப்போம்.
 • அழகின் சிரிப்பும் மனதின் விகசிப்பும்...
07.22..jpg (260×194)


கோவை:கோவை வேளாண் பல்கலையில் மலரியல் துறை சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ,.மலரில் சிறுமி உருவம்: "டான்சிங் டால்' எனப்படும் பாவாடை அணிந்த சிறுமியைப் போன்ற அரிய வகை மலர், "ஆன்சீடியம்', குழந்தைகளை ஈர்க்கும். இதே மலரினத்தைச் சேர்ந்த, "டென்ட்ரோபியம்', "சோனியா 17', "சோனியா 28', "எம்மா ஒயிட்', "சக்கூரா பின்டோ', "ஏரைட்ஸ்' போன்ற மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மலர்கள் வளர மண் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலூர் நாடுகாணியில் வனத்துறை சார்பில் ஜீன் பூல் தாவர மையத்தில், பசுமை குடில் அமைத்து ஆர்கிட் மலர்களை வளர்த்து வருகின்றனர். 

கூடலூர் ஜீன் பூல் தாவர மையத்தில் பூக்கத் துவங்கியுள்ள ஆர்கிட் மலர்கள்,  தற்போது இங்கு 80க்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர்ச் செடிகள் உள்ளன. இங்குள்ள ஆர்கிட் செடிகளில் தற்போது மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளன. தற்போது பூத்துள்ள, "டான்சிங் டால்' என்ற ஆர்கிட் மலர், பொம்மை நடனம் ஆடுவது போன்று காணப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆர்கிட் மலரும் ஒரு உருவத்தை நினைவுபடுத்துவதால், அவற்றை கண்டு பார்வையாளர்கள் அதிசயிக்கின்றனர்.  

நீண்ட நாட்கள் காயாமல் இருப்பதால் இந்த மலர்களை வெளிநாடுகளில் அழக்குகாக அதிகளவில் வளர்கின்றனர். இந்தியாவிலிருந்தும் இந்த மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மலர்கள், ஒரு சில நாட்களில் காய துவங்கி விடும். ஆனால், மலைப் பிரதேசங்களில், வனப் பகுதிகளில் காணப்படும் ஆர்கிட் மலர்கள் இதிலிருந்து மாறுபட்டு, இரண்டு மாதம் வரை காயாமல் அழகாக காட்சி தரக்கூடியவை.

 ஈரமான பாறை, மரப் பட்டைகள், ஈரமான பூமியில் வளரும் தன்மை கொண்ட ஆர்கிட் மலர்ச் செடிகளில், இதுவரை 120க்கும் மேற்பட்ட வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை ஆர்கிட் மலரும், வடிவம், நிறத்தில் பெரும் மாறுதல் கொண்டிருக்கும். ஆர்கிட் மலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, மே, ஜூன் மாதங்களில் பூக்கக்கூடியது
Oncidium reflexumDendrobium Orchid Bombay : Wholesale Flowers : Blooms By The Box
Cymbidium Orchid Spray (Pink) : Wholesale Flowers : Blooms By The Box


Oncidium Sweet Ears 'The OrchidWorks'
Oncidium Sweet Ears 'The OrchidWorks'-first bloom

14 comments:

 1. மகளோ/மகனோ பிறப்பது ஆனந்தம்.
  அந்த மகளுக்கோ/மகனுக்கோ ஒரு மகளோ/மகனோ பிறப்பது பேரானந்தம்.
  அழகாகப் பூத்துக்குலுங்கும் புத்தம்புதிய மலர்களைப் பார்ப்பதும் அதுபோலவே பேரானந்தம் தரக்கூடியது.

  காற்றில் அசைந்தாடும் மலர்களின் நடனம் வெகு அருமையாக உள்ளது.

  மனதைக்கொள்ளை கொள்கிறது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன் உங்கள் vgk

  ReplyDelete
 2. ஆர்கிட் மலர்கள் என்னுடைய விருப்பமான மலர். தேடித்தேடி பார்த்திருக்கிறேன். பட்டாம்பூச்சி வடிவில் சிவப்பு நிறமலர் என் விருப்பம். இத்தனை பூக்களை பார்க்கும்போது பரவசம்தான். நன்றி.

  ReplyDelete
 3. எனக்கும் மலர்கள் என்றால் மிக விருப்பம் .
  அவற்றை பார்த்து கொண்டே இருக்கலாம் .
  அருமையான படங்கள் .

  ReplyDelete
 4. படங்களும் பகிர்வும் அருமை.கண்களை கொள்ளை கொள்ளும் அழகு.

  ReplyDelete
 5. ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கும் சமயத்தில் பொருத்தமான பதிவு. மலர்கள் என்றுமே அழகுதான்.

  ReplyDelete
 6. What a pleasent photos.
  Of course useful details.
  very nice Rajeswari.
  I enjoyed it.
  Thanks.
  viji

  ReplyDelete
 7. பூக்களின் அணிவகுப்பு அற்புதம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. Dear Thozi,
  This marvellous display of flowers
  is really cooling my eyes.

  ReplyDelete
 9. வணக்கம்.
  நாட்டியமாடும் மலர்களின் நடனம்
  கூட்டிய ஆனந்தம் கொள்ளை இன்பம்
  ஊடிய மகிழ்ச்சி உன்னதமானது
  காட்டிய உமக்குக் கனிந்த நன்றி!
  தேடிப் பிடித்துத் தெளிவாய்த் தந்தீர்
  ஓடிவந்தருளும் ஓம்நமச்சிவாய!

  ReplyDelete
 10. வணக்கம்
  நாட்டியமாடும் மலர்களின் நடனம்
  கூட்டிய ஆனந்தம் கொள்ளை மகிழ்ச்சி
  தேடிப்பிடித்துத் தெளிவாய்த் தந்தீர்
  ஓடிவந்தருளும் ஓம்நமச்சிவாய!

  ReplyDelete
 11. Seenivasan KalaiyarasiMay 9, 2011 at 11:04 PM

  Arputha malargalin anivaguppai kandu agamagizhndom.. Malargal malarvadhu iyarkai.. Atharku ellai illai.. Athu pol ungal valai pathivugal thodara nal vazhthukal.. Sariyana tharunathil sariyana pathivaga amainthulathu..

  ReplyDelete
 12. @ Seenivasan Kalaiyarasi said...//
  மனதைத் தொட்ட தங்களின் கருத்துக்களுக்கு என் இதயம் கனிந்து , நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.எனக்கு உற்சாகம் அளிக்கும் தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 13. ;)
  சுக்லாம்பரதரம் விஷ்ணும்
  சசிவர்ணம் சதுர்புஜம்!
  ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
  ஸர்வ விக்நோப சாந்தயே!!

  ReplyDelete