Friday, April 22, 2011

ருத்ராட்சத்தேரும்,ருத்ராட்சப் பந்தல்களும்..
படிமம்:RudrakshaTree.jpg
பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. 
உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். 
தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். 
பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராட்ச மணிகள் அணியப்பட்டு வந்தன
சேலம் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக நண்பர்கள் குழு சார்பில் எட்டு அடி உயரத்தில், மூன்றே கால் அடி அகலத்தில் அமைத்த மரத்தேரில், 75 ஆயிரம் ருத்ராட்சங்களை தாமிரக் கம்பியில் கோர்த்து அலங்கரித்து, ருத்ராட்ச தேர் தயார் செய்யப்பட்டு கோவிலுக்கு வழங்கப்பட்டது, 

தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு,  சோமஸ்கந்தருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், ருத்ர கலசாபிஷேக ஹோமம், குபேர ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள்,  தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்து புனித நீர் தெளிக்கப்பட்ட தேரில், ருத்ராட்ச கவசத்தில் சோமஸ்கந்தர் எழுந்தருளி பவனி வந்தார். சிறப்பு பூஜை நடத்தி கோவிலை வலம் வந்த பின், தேர் வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

உலகத்திலேயே முதன் முதலாக ருத்ராட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை கொண்டுள்ள கோவில் என்ற பெருமை சேலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கிடைத்துள்ளது.
 
பேரூர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பட்டீஸ்வரர் சிரசத்துக்கு மேல், ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


பள்ளியறை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 5,000 ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட ருத்ராட்ச பந்தல் பொருத்தப்பட்டுள்ளது. " 3 அடி அகலத்தில், 4 அடி நீளத்தில் தேக்கு மரத்தால் செவ்வக வடிவத்தில், கம்பிகளின் உதவியால் 5,000 ருத்ராட்சங்கள் கோர்க்கப்பட்டு, இந்த ருத்ராட்ச பந்தல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பந்தலின் நான்குமுனைப் பகுதிகளிலும் மொத்தம் ஆறு ஸ்படிக மாலை கோர்க்கப்பட்டுள்ளன.


கோவில் மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரரின் சிரசத்தின் மேல் பகுதியில், இப்பந்தல் இரும்பு கம்பிகளால் மாட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிவபெருமானுக்கு ருத்ராட்சம் மிகவும் சிறப்பு என்பதால் இது அமைக்கப்பட்டுள்ளது

ருத்ராட்ச சிவலிங்கம் -திருநெல்வேலி மாவட்டம் 
பாபநாசம் கோவிலில் உள்ள மூலவர்  ருத்ராட்சத்தால் ஆனவர்.

பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள .பாபநாசகோவில் மூலவரே உலகில் முதல் சிவலிங்கம் எனத தல புராணம் உரைக்கும்.


பங்குனி 22ம் தேதி முதல் சித்திரை முதல் தேதி வரை நடை பெறும் திருவிழாவில் அகத்தியர் பொதிகை மலையில் இமயத்தில் நடைபெற்ற சிவபார்வதி திருமணத்தைக் கண்ட நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் நடைபெறும்.

தேவேந்திரனே தனது பிரம்மஹத்தி தோஷம் தீர பாபநாசத்தில் வழிபட்டதாகக் கூறுகிறார்கள்.


ஈசனுக்கு முக்காளா-லிங்கர், பரஞ்சோதி-லிங்கர், பழமறை நாயகர், வைராச லிங்கர் பாபவிநாசேஸ்வரர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகிறது. 

தாமிர பரணி மஹாத்மியத்தில் இந்த கோவிலுக்கு எதிரில் இருக்கும் படித்துறைக்கு பெயர் "இந்திர கீல தீர்த்தம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

சித்திரை மாதத்தில் இங்கு முறைப்படி நீராடுபவர்களுக்கு ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்குமாம். 

தென் தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கான சூரியனார் கோவிலாகத் திகழ்கிறது இந்த க்ஷேத்திரம் .

இங்கு சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்து சூரியனை வழிபட்டிருக்கிறார் ரோமசர். 

இந்த இடத்தில் விராட புருஷன் தவம் செய்து ஈசன் அருள் பெற்றான்  

பொதிகையின் புகழைக் கேள்விப்பட்ட நாரதரும் இங்கு வந்து, முக்களா விருக்ஷத்தின் கீழ் இருந்த சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. 
ருத்ராட்ச அம்மன்
கேரள மாநில எர்ணாகுளத்திலிருக்கும் சோட்டாணிக்கரையில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் சோட்டாணிகரை பகவதி என்றே அழைக்கப்படுகிறார்.

இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனவர் என்பதே தனிச் சிறப்பு காலைமதியம்,மாலை மூன்று வேளையும் துர்க்கா,லட்சுமி,சரஸ்வதியாக அருள் பாலிக்கும் அற்புதத் திருத்தலம்.
தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள்,மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்து குணமடைகிறார்க்ள்.  

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. 

ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. 

ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். 

ருத்திராட்ச மணிகளை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். 

சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. 

பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது. 

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மரத்துப் போகாமல் இருப்பதற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது


ருத்ராட்சங்களாலன பந்தல் போன்ற அமைப்பில் அஷ் மானகிரி அமைத்து மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சுந்தரேசுவரருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.. 

மதுரையில் உள்ள பழைய சொக்கநாதர், முக்தீஸ்வரர், திருவேடகம், தென்திருவாலவாயில் திருக்கோயில்களுக்கும் ருத்ராட்ச பந்தல் அமைக்கப்ப்ட்டுள்ளது.
 
திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் 
ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் ஆலயத்திலும் காணலாம்.
  விஞ்ஞானிகள் ருத்திராட்சங்களின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன் ,உண்மையான ருத்திராட்ச மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். 

 ருத்திராட்ச மணிகளை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். ருத்திராட்ச மணிகளை அணிவோரின் உள் ஒளியை மேலோங்கச் செய்கிறது. இது 

பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. 

குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.  


17 comments:

 1. அரிய தகவல்களுடனும் படங்களுடனும் கூடிய
  அருமையான பதிவு
  இடை இடையே இருந்த இடவெளிகளை
  கொஞ்சம் சரிசெய்தால் படிப்பதற்க்கு
  இன்னும் ஆர்வத்தைத் தூண்டும்படியாக
  இருக்கும் என நினைக்கிறேன்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ருத்ராக்ஷம் பற்றிய நிறைய பயனுள்ள தகவல்கள். ருத்ராக்ஷத்தை ஆண் பெண் யார் வேண்டுமானாலும் அணியலாம். நல்ல பகிர்வு. ;-))

  ReplyDelete
 3. நல்ல விடயப் பகிர்வுங்க... இப்போதும் எங்கள் சாமியறையில் ஒரு மாலை இருக்கிறது.. நன்றிகள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா

  பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).

  ReplyDelete
 4. //சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.//

  பூஜை, பாராயணம் செய்யும் போது அணிவதுண்டு. இன்று ஸ்ரார்த்தமானதால் அணிந்து கொண்டேன். மேலு அது என் அப்ப அவர்கள் உபயோகித்தது. இடையில் வெள்ளிக்கம்பிகள் கட்டி, ஸ்படிகங்களும் இடையிடையே சேர்த்து, அடியில் ஒரு பவுன் தங்கத்தில் குப்பி போட்டு, அவர் நினைவாக அணிந்து வருகிறேன்.

  நல்ல பயனுள்ள பதிவாகத் தந்துள்ளீர்கள். உங்களிடம் எவ்வளவு விஷயங்கள் புதையல் போல பதிங்கியுள்ளன எப்பதை நினைக்கும்போது எனக்கு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது.

  வாழ்க ! வாழ்க !! பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 5. ருத்திராட்சம் பற்றி இவ்வளவு தகவல்களா? நன்றி.

  ReplyDelete
 6. Dear Rajeswari,
  It is a great news that Chottanikarai Amman vikrakam is of rudraksham!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  Now only i new this.
  Thanks for sharing.
  Very well written and useful writings too.
  I fallen love with your blog dear.
  viji

  ReplyDelete
 7. மிக மிக அருமையான தகவல்கள் சொல்கிறீர்கள் . கமென்ட் போடாவிட்டாலும் தொடர்ந்து உங்கள் பதிவை நான் பார்க்கிறேன். நன்றி

  ReplyDelete
 8. அரிய பல தகவல்கள். அதில் பல நான் அறிந்திறாதவை. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 9. ருத்த்ராட்சம் பற்றி பல தகவல்கள். முக எண்ணிக்கையைக் கொண்டு கூட ருத்ராட்ச்த்தின் சிறப்பை வகைப் படுத்துவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 10. In Rameswaram also a Rudraksha Mandabam is in the praharam. It is completely built-up with variety of Rudrkshas. Doing Meditation in the Mandabam gives different spiritual experience. Try it Rajeswari. Very Good Post.

  ReplyDelete
 11. சிறப்பான பதிவு. படங்கள் அற்புதம்.

  ReplyDelete
 12. வணக்கம்.ருத்ராட்சம் அணியுமுன் அதை பால் மற்றும் நெய் முதலியவற்றில் மூழ்கவைத்துப் பிறகுஅணியவேண்டும் என்று கேள்விப்பட்ட ஞாபகம்.பிறகுமறந்துபோய்விட்டது.அந்தத் தகவலையும் கொஞ்சம் விரிவாகத் தந்தீர்களானால் உபயோகமாய் இருக்கும்.
  நல்லது.

  ReplyDelete
 13. மிகவும் நன்றி மேடம் பகிர்வுக்கு பத்து வருடம் முன் வரை அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் ருத்ராட்சம் அணிந்த பிறகு முழுக்க சைவன் ஆகினேன்.

  ReplyDelete
 14. அன்புள்ள சகோதரிக்கு வணக்கம் பல !
  சிறப்பான பதிவு. படங்கள் அற்புதம்.
  மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 15. ருதராட்ச விவரணம் மிக நன்று. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 16. ;)
  சுக்லாம்பரதரம் விஷ்ணும்
  சசிவர்ணம் சதுர்புஜம்!
  ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
  ஸர்வ விக்நோப சாந்தயே!!

  ReplyDelete