Saturday, April 23, 2011

கடல் பேனா நாட்டியம்..... • .  
 • மகாவிஷணுவின் ரூபமான வேதவியாசர் மகாபாரதம் சொல்ல முழுமுதற் கடவுளாம் மகாகணபதி எழுதிய போது எழுத்தாணி முறிய, தன் அழகு தந்தத்தை ஒடித்து கைவிரல்கள் நர்த்தனத்தால் அற்புத பாரதத்தை நமக்களித்த வித்தக மருப்புடைய விநாயகனை வணங்குவோம்.  
 • இராமலிங்க வள்ளலார் ஒரே இரவில் அருட்பெருஞ்சோதி அகவல் வழங்கினார்.

 • அறிஞர் அண்ணா ஒரே இரவில் ஓரிரவு என்னும் நாடகத்தை அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதினார்.
 • வாள் முனையை விட வலிமை வாய்ந்த பேனாமுனை சாதித்த புரட்சிகள்,எழுச்சிகள், வெற்றிகள் ஏராளம். 
 • கடல்பேனா

  கடலால் சூழப்பட்ட பூமிப்ந்துக்குக் கடலன்னை வாரி வாரி வழங்கும் செல்வப் புதையல் கணக்கற்றது. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் மனித குலத்திற்கு,   கடலுக்குள் எத்தனையோ அற்புதங்களும், அதிசயங்களும், விநோதங்களும் அட அப்படியா என்று வியக்கும் வகையில் கடலன்னை நமக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறாள் என்பது பலருக்கும் தெரியாமல் தான் உள்ளது.

  கடல் பேனாக்கள் கடலுக்கடியில் அலைகள் இல்லாத இடத்தில் கூட்டம், கூட்டமாக பல வண்ணங்களில் ஆடும் பரதநாட்டியத்தைப் பார்ப்பது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். கடலுக்குள் ஓர் அற்புதக் கண்காட்சியையே நடத்திக் கொண்டிருக்கும் 
  ""பார்ப்பதற்குப் பறவைகளின் இறகுகள் போல காணப்படும் கடல் பேனாவின் விலங்கியல் பெயர் பெனாடுலாசியா என்பதாகும்.

   பறவைகளின் இறகுகளைக் கையில் வைத்துக்கொண்டு மையைத் தொட்டு, தொட்டு ஒரு காலத்தில் எழுதினோம். அந்த இறகுப் பேனாக்கள் போலவே இவையும் இருப்பதால் இவற்றிற்குக் கடல் பேனாக்கள் என்று பெயர் உண்டானது.
  உலகம் முழுவதும் உள்ள கடலில் வாழ்ந்தாலும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில்,அலைகள் ஆர்ப்பரிக்காத இடத்தில் இவை கூட்டம், கூட்டமாக வியாபித்து ஆடும் நடனம் அற்புதம். கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் இவற்றின் அழகைக் கண்டு ரசிக்க முடியும்.
  பவளப்பாறைகளை உருவாக்கும் கடல் தாமரைகள் மாதிரியான ஒருவகைப் பூச்சிகள்தான் கடல் பேனாவாகின்றன. 
  இதில் உள்ள ஒவ்வொரு இறகுகளும் 8 உணர்விழைகளைக் கொண்டிருக்கிறதாம். கடல் நீரை உறிஞ்சுதல்,உணவு உட்கொள்ளுதல், இனப்பெருக்கம்,டார்ச்லைட் போன்ற ஒளி உமிழ்தல் போன்றவையே இவற்றின் செயல்பாடுகள்.
  கடலுக்கடியில் மணலிலோ, சகதியிலோ அடிப்பகுதி புதைந்து மற்ற பகுதிகள் வெளியில் தெரிவதுபோல காணப்படும். பல வண்ணங்களில் இருக்கும் இந்த உயிரினம் 6 அடி உயரம் வரை வளரக் கூடியது.
  ஆழமான அதே நேரத்தில் அமைதியான கடல் பகுதிகளையே விரும்பும் இப்பேனாக்கள் அதன் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி விடாமல் தன்னைத்தானே பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கின்றன.
  தாவர மிதவை நுண்ணுயிரிகளே இதன் விருப்ப உணவாக இருப்பதால் இருக்கும் இடத்தில் அது கிடைக்காவிட்டால் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன.

   சின்னஞ்சிறு மீன்களும் சில பெரிய கடல் பேனாக்களில் ஒட்டிக் கொண்டும் உயிர் வாழ்கின்றன. இப்பேனாக்களில் உள்ள இறகுகள் போன்ற வளையங்கள் மூலமே இதன் வயதும் கணக்கிடப்படுகிறது.
   கடலுக்கு அடியில் வாழும் நகரும் உயிரினங்களான நட்சத்திர மீன்கள், கடல் வண்ணப் புழுக்கள் ஆகியன இவற்றின் முக்கிய எதிரிகள். இவையிரண்டும் கடல் பேனாவை பார்த்தவுடனேயே வேரோடு பிடுங்கி அழித்து விடும். இவற்றிடமிருந்து இவைகள் தப்பித்துக் கொண்டால் 100 வருடங்கள் வரை உயிர் வாழும் வகையில் இதன் ஆயுளும் கெட்டியாக இருக்கும்.
  File:Sea pen2.jpg
  ஆண் உயிரினம், இன முதிர்ச்சியடைந்து அதற்கு அருகிலேயே ஒரே சமயத்தில் பெண்ணும் அருகிலேயே ஒரே சமயத்தில் முட்டைகளை வெளியேற்றுவதால் இரண்டும் ஒன்றாகி கருவுறுதல் நடந்து இளங்குஞ்சுகளாகி விடுகின்றன. இவை ஒரு சில வாரங்கள் மட்டும் கடலில் நீந்தி வாழ்ந்து கொண்டு தனக்குச் சாதகமான இடம் கிடைத்தவுடன் மணலிலோ, சகதியிலோ அப்படியே ஊன்றி அங்கேயே வளர்ந்து கொண்டிருக்கும்.  நவீன விசைப்படகுகள் இழுவலைகளின் மூலம் மீன் பிடிப்பதால் பல அரிய வகை கடல் பேனாக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிறிதும் உபயோகமில்லாமல் கரைகளில் தூக்கி வீசப்படுகின்றன.
 • File:Orange Sea Pen Monterey Bay Aquarium.jpg
   கடல் பேனாக்களை மற்றவை தொட்டால் உடனே டார்ச்லைட் போன்ற ஒருவித ஒளியை உமிழ்ந்து எதிரிகளைப் பயப்பட வைத்து தப்பிக்கும் நுட்பத்திலும் பேனாக்கள் பலே கில்லாடிகள்'' 

19 comments:

 1. தண்ணீரில் மிதக்கும் பேனாக்கள் பற்றிய பதிவு!
  Interesting! ;-)

  ReplyDelete
 2. Dear thozi,
  You have described well about undernath the sea.It is so exhiliarating to read.Thanks a lot.

  ReplyDelete
 3. //கடல் பேனாக்களை மற்றவை தொட்டால் உடனே டார்ச்லைட் போன்ற ஒருவித ஒளியை உமிழ்ந்து எதிரிகளைப் பயப்பட வைத்து தப்பிக்கும் நுட்பத்திலும் பேனாக்கள் பலே கில்லாடிகள்'' //

  அவை மட்டுமா பலே கில்லாடிகள்?

  கடலுக்குள் இருக்கும், எவ்வளவோ மர்மங்களில், செல்வங்களில், இந்த அழகிய கடல் பேனாக்கள் பற்றியும், அவற்றின் நடனம், டார்ச் லைட் போன்ற ஒளி, அவற்றின் ஆகாரம், அவற்றின் எதிரிகள் என அனைத்தையும் மிகச்சிறப்பாக எழுதியுள்ள தங்கள் பேனாவல்லவோ பலே கில்லாடி. மஹாபாரதம் என்ற வியாசர் விருந்தை எழுதிய அந்த முழுமுதல்கடவுளாம் கணபதி, தன் கொம்பு உடைந்தாலும் பரவாயில்லை, உலகத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தன் அழகிய தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தது முதல் ஆன்மிக புராண விஷயங்களையும் விளக்கிக்கொண்டுவந்து இத்துடன் பின்னிக்கொடுத்திருக்கும் தங்க
  லின் தனித்திறமைக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். எங்கும் எதிலும் உங்களின் அறிவு சார்ந்த பார்வை பளிச்சிடுகிறது. வாழ்க!
  அன்புடன் vgk

  ReplyDelete
 4. நாம் வாழும் உலகின் அழகு, நம்மைச் சுற்றி உலா வரும் அளவிலா உயிரினங்கள், மற்றும் கண்கவர் அதிசயங்கள் பற்றித் புதுப் புது வியத்தகு செய்திகளைத் தெரிந்து கொள்ளும் போது, வழக்கம் போல வாயடைத்து நிற்கிறேன்! பகிர்தலுக்கு நன்றி!

  வீட்டில் வைத்த பொருட்களையே நாள்தோறும் தேடிக் கொண்டு வெகுவாக நேர விரையம் செய்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், இப்படி ஒரு வித்தியாசமான தேடலை முழு மூச்சாய் மேற்கொள்ளும் உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்! :)))

  ReplyDelete
 5. கடல் பேனா..வித்தியாசமான சிறப்புத் தகவல்..பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 6. எவ்வளவு விஷயங்கள்...
  வாழ்த்துக்கள்...

  இன்னும் கடலுக்குள் பல்வேறு அதிசயங்கள் ஒளிந்துக்கிடக்கிறது....

  படங்கள் விளக்கம் அருமை..

  ReplyDelete
 7. அருமையான படங்களுடன் மகிழவைக்கும் பதிவு. எனக்குப் புதிய விடயம். ரசித்தேன்.

  ReplyDelete
 8. டிஸ்கவரி சேனல் பார்த்த உணர்வு. ஏகப் பட்ட விஷயங்கள் பதிவிடத் தயாராய் வைத்திருக்கிறீர்கள் போலும்.

  ReplyDelete
 9. இத்தனை அரியதோர் கடல் பேனா!
  இதனை நான் இனி மறப்பேனா?

  ReplyDelete
 10. புதிய ஆச்சரியமூட்டும் தகவல்கள். பக்ர்வுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 11. \\அறிஞர் அண்ணா ஒரே இரவில் ஓரிரவு என்னும் நாடகத்தை அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதினார்.//

  ..முருகனருளால் நான் ஒரே நாளில் அறுமுகன் அருள்மாலை எழுதினேன் - நம்புவீர்களா ?

  ReplyDelete
 12. Very good topic.
  The pictures are speaking.
  Keep write Rajeswari.
  I can see wounderful topics in your blog.
  viji

  ReplyDelete
 13. படங்களும் பதிவும் அருமை.

  ReplyDelete
 14. ;)
  சுக்லாம்பரதரம் விஷ்ணும்
  சசிவர்ணம் சதுர்புஜம்!
  ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
  ஸர்வ விக்நோப சாந்தயே!!

  ReplyDelete