Tuesday, April 12, 2011

விழி அழகு ...


பெரிதினும் பெரிது கேள் என்ற பெரியோர் வாக்குப்படி, எங்கும் பரந்து விரிந்த பெரிய வானத்தின் கீழ் உலகின் மணிமகுடமாய் திகழும் பரந்த பாரத தேசம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாகும்.

இஷ்வாகு குலத்தின் குலதனமாக சாளக்கிரமத்தால் ஆகிய,பாற்கடலில் தோன்றிய ,தங்கவிமானத்துடன் கூடிய திருவரங்க நாதனின் விக்ரஹம் விளங்கியது.சத்திய லோகத்தில் பிரம்மாவால் முதலில் ஆராதிக்கப் பட்டு, பிறகு தசரதனின் முன்னோர்களுக்கு பிரம்மா வழங்கினாராம்.

புத்திரபாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்த புண்ணியம் மிக்க தசரதனின் புத்திரனாக அத்தனை தவப்பயனும் ஒருங்கே திரண்டு மஹாவிஷ்ணுவே தன் ஆயுதங்களுடன் ராம,லஷ்மண,பரத,சத்ருக்கனனாக அவதரித்தார்.

அயோத்தியில் நெடுங்காலம் திருவாராதனம் செய்யப்பட்ட அரங்கவிக்ரஹம், சீதா ராம விவாகத்திற்குப் பிறகு சீதை உடனிருக்க ராமன் தன் ஆஜானுபாகுவான திருமேனி அழகுடன் கூடிய முழந்தாளைத் தொடும் நீண்ட மலர்க் கரங்களால் மணம் மிக்க மலர்களை எடுத்து மந்திர உச்சரிப்புடன் ஷோடசோபசாரங்களுடன் பூஜை செய்வதை லயித்துப் பார்த்தாளாம்.
அங்கே யோகநித்திரை பாவனையில் துயிலாமல் துயின்று
 உலகு புரக்கும் ரங்க விக்ரஹமும், மலர் கொண்டு அர்ச்சனை 
செய்யும் ராம அவதாரமும் ஒன்றே என்று உணர்ந்தாள்.

பாற்கடலில் தோன்றிய தன் உருவைத்தானே அர்ச்சிக்கும் மணாளனைக் கண்விரிய பார்த்தாளாம். 

கண் இமைத்தால் அந்த மாத்திரைப் பொழுதில் அக் காட்சி தவறிவிடுமோ என்ற அச்சத்தில் கண் இமைக்க மறந்தாளாம் பூமியில் அவதரித்த ஜனகரின் அன்புப் புதல்வி.

தானே தன்னை வணங்கும் உன்னதத்தைக் கண்ட 
ஜானகியின் விழிகள் விசாலமானதாம்.

குறும்புச் சிரிப்புடன் ராமன் விசாலாட்சி என்று அழைத்தாராம்.

விசாலம் என்றால் பெரிய அட்சம் என்றால் கண். 

விரிந்த விழிகளுடன் மெய் மறந்து ராமனின் அழகைப் பருகிய 
சீதை அண்ணலின் அன்பு விழிகளைக் கண்டு நாணத்தால் 
தலை கவிழ்ந்தாளாம்.
இன்று ராம நவமி அல்லவா?? ராம காவியம் ஆட்கொண்டது.
[Gal1]
அந்த இஷ்வாகு குலதனமான ஆரதன விக்ரஹத்துடன் கூடிய விமானம் தான் ராம பட்டாபிஷேகத்தின் போது தன்னையே சரண் என்று அடைந்த விபீஷண ஆழ்வாருக்கு  ராமபிரானால் அன்புடன் அளிக்கப்பட்டது.

 இலங்கை செல்லும் வழியில் தர்மவர்மா என்னும் சோழ அரசனின் தவத்தின் பயனால், மாலையாய் காவிரி மத்தியில் சோலைகள் சூழ திருவரங்கத்தில் கோவில் கொண்டு, தென்னிலங்கை நோக்கி விபீஷணனுக்கு அருள் நோக்கம் அளித்தாராம் ராமபிரான்.

சிரஞ்சீவியான விபீஷணன் இன்றும் இலங்கையில் ஒருகாலும் அடுத்தகால்   அரங்கன் திருமுன் கோவிலில் வைத்து அரங்கனை வழிபடுவதாக ஐதீகம்.


திருவரங்கத்தை ஆண்ட விஜய ரகுநாத சொக்கநாதர் - 
நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர். 

திருவரங்கம் நடைஅழகு, திருப்பதி குடை அழகு என்பதற்கேற்ப -
அரங்கனின் படிஏற்றம் காண தன் தேவியருடன் விரைந்து வந்தாராம்

அவர் வருவதற்குள் உற்சவம் முடிந்து விட்டதாம்.

தணியாத ஆவலுடன் அவர்  ரங்கா ! ரங்கா!! இங்கா ஒக்கசேரி!  என்று இன்னொரு முறை படியேற்றம் காண்பிக்கச் சொல்லி அரங்கனிடம் வேண்டினார்.

அரங்கனோ "ஒச்சேட்டிக்கு" என்று அடுத்தவருடம் தான் என்று அரசனாக இருந்தாலும் நேரம் தவ்றினால் குறிப்பிட்ட தரிசனத்திற்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும் என்று கறாராக்க் கூறிவிட.தன் மனைவி,மக்களுடன் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் காத்திருக்கும் உருவச்சிலைகளை கர்ப்பக்கிரகப் படிக்கெதிரில் இன்றும் தரிசிக்கலாம்.  
தூண்களிலும் சிற்ப வடிவில் காணலாம். 

36 comments:

 1. இங்கு என் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் ஏறினால் அரைமணி நேரத்தில் அரங்கனை தரிஸிக்கலாம். பலமுறை சென்றும் வருகிறேன். இருப்பினும் தாங்கள் கூறும் இவ்வளவு விஷயங்களும் அங்கு போகும் எனக்கு இதுவரை நினைவில் வந்ததே இல்லை. நல்லதொரு அழகிய பதிவு.

  விழிஅழகு விசாலாட்சியை விட, அந்த ஸ்ரீராமனின் பொற்பாதங்களை, அழகான மருதாணியுடன் (லிப்ஸ்டிக்?) ஆபரணங்கள் அணிந்தபடி காட்டியுள்ளது என்னை மிகவும் கவர்ந்தது.

  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜயராம் !

  உங்களைப்போல, தந்தி அடிப்பது போல, நாலே நாலு வார்த்தைகளில் பின்னூட்டம் இட எனக்கென்னவோ மனது இடம் தரமாட்டேங்குது. என் மனது மிகவும் விசாலமானது அந்த கண் அழகி (சீதை)விசாலாட்சிபோலவே.

  நீங்களும் ஒரு 10 வரி எழுதினால் என்ன; குறைந்தா போய்விடும்?

  முன்பெல்லாம் ஒரே பதிவுக்கு அடிக்கடி ஓடிவந்து பின்னூட்டம் கொடுத்து அசத்துவீர்கள். இப்போது உங்களுக்கு என் மீது அன்பு மிகவும் குறைந்து விட்டது.

  அன்புடன் அழுதுகொண்டே vgk

  ReplyDelete
 2. ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் நன்றாக இருந்தது. நன்றி. ;-)

  ReplyDelete
 3. ராம நவமி ஸ்பெஷலா?? நீங்க அரங்கமா நகரை சேர்ந்தவாளா??...:) தக்குடு வந்து படிச்சுட்டு போயாச்சு!!

  ReplyDelete
 4. நல்ல பதிவு.
  பொற்பாதங்களை பார்த்தவுடன் கண்ணில் ஒற்றி கொள்ள வேண்டும் போல் இருந்தது !

  ReplyDelete
 5. அழகிய, மிக அழகிய படங்கள். குறிப்பாக அந்தப் பாதங்கள்தான் எவ்வளவு அழகு? ராம சீதா படமும் அழகு.

  ReplyDelete
 6. மிக அழகான போஸ்ட்.வாழ்துக்கள்.

  ReplyDelete
 7. ஸ்ரீ ராம நவமிக்கு திருவரங்கம் ”ரங்கா ரங்கா” கோபுர தரிசனமும், மற்ற ராமர் படங்களும் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. இன்று ராம நவமி.
  தங்கள் பதிவு நல்ல தரிசனம்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 9. ரங்கரும் ராமரும் ஜொலிக்கும் படங்களோடு பதிவு அருமை...

  ReplyDelete
 10. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. ராம நவமிக்கு தோதாய் ரசிக்க வைத்த பதிவுங்க... உங்களுக்கு மட்டும் படங்கள் எங்கதான் இவ்ளோ அழகா கிடைக்குமோ... கண்ணை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்... நன்றி...:)

  விசாலாட்சி - விளக்கம் ரெம்ப அழகா இருந்ததுங்க... இதுவரை கேட்டதில்லை...

  ReplyDelete
 12. Very well written dear.
  The photos are very nice.
  Shall I save the kolusu kalkal?
  En ullam kollaikondu vittathu. Nagarave manasillai.
  Thanks
  viji

  ReplyDelete
 13. ஒரு சின்ன யோசனை. படங்களுக்கு நாடு நடுவில் வரிகள் வருவதால் படிக்க சிரமம். படங்களைப் போட்டு பின் பதிவைப் போடலாம்

  ReplyDelete
 14. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
  ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜயராம் !//

  மனம் நிறைந்த அருமையான கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. @RVS said...
  ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் நன்றாக இருந்தது. நன்றி.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 16. @ தக்குடு said...
  ராம நவமி ஸ்பெஷலா?? நீங்க அரங்கமா நகரை சேர்ந்தவாளா??...:) தக்குடு வந்து படிச்சுட்டு போயாச்சு!//

  மார்கழி மாதமானால் அரங்கமா நகரில்தான் வாசம்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. @ Geetha6 said...
  நல்ல பதிவு.
  பொற்பாதங்களை பார்த்தவுடன் கண்ணில் ஒற்றி கொள்ள வேண்டும் போல் இருந்தது !//

  பொற்பாத தரிசனத்திற்கு நன்றி.

  ReplyDelete
 18. @ஸ்ரீராம். said...
  அழகிய, மிக அழகிய படங்கள். குறிப்பாக அந்தப் பாதங்கள்தான் எவ்வளவு அழகு? ராம சீதா படமும் அழகு.//

  அழகு நிறைந்த கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 19. @Chitra said...
  மிக அழகான போஸ்ட்.வாழ்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 20. @கோவை2தில்லி said...
  ஸ்ரீ ராம நவமிக்கு திருவரங்கம் ”ரங்கா ரங்கா” கோபுர தரிசனமும், மற்ற ராமர் படங்களும் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.//

  வாங்க கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 21. @ Rathnavel said...
  இன்று ராம நவமி.
  தங்கள் பதிவு நல்ல தரிசனம்.
  வாழ்த்துக்கள் அம்மா.//

  வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @ பத்மநாபன் said...
  ரங்கரும் ராமரும் ஜொலிக்கும் படங்களோடு பதிவு அருமை..//

  ஜொலிக்கும் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 23. @ராஜி said...
  நல்லதொரு பகிர்வுக்கு நன்றி//

  வாங்க ராஜி. நன்றி.

  ReplyDelete
 24. @அப்பாவி தங்கமணி said...
  ராம நவமிக்கு தோதாய் ரசிக்க வைத்த பதிவுங்க... உங்களுக்கு மட்டும் படங்கள் எங்கதான் இவ்ளோ அழகா கிடைக்குமோ... கண்ணை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்... நன்றி...:)

  விசாலாட்சி - விளக்கம் ரெம்ப அழகா இருந்ததுங்க... இதுவரை கேட்டதில்லை...//

  வாங்க புவனா. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. @viji said...
  Very well written dear.
  The photos are very nice.
  Shall I save the kolusu kalkal?
  En ullam kollaikondu vittathu. Nagarave manasillai.
  Thanks
  viji//

  நன்றி. நன்றி ..விஜி.

  ReplyDelete
 26. @ சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...
  //

  படித்து கருத்திட்டு இருக்கிறேனே. சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 27. @ஞாஞளஙலாழன் said...
  படங்கள் அருமை.//

  நன்றி.

  ReplyDelete
 28. @எல் கே said...
  ஒரு சின்ன யோசனை. படங்களுக்கு நாடு நடுவில் வரிகள் வருவதால் படிக்க சிரமம். படங்களைப் போட்டு பின் பதிவைப் போடலாம்//

  யோசனைக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.

  ReplyDelete
 29. @FOOD said...
  நல்லதொரு அழகிய பதிவு.//

  நன்றி.

  ReplyDelete
 30. @amilvirumbi said...
  neatly depicted with pictures//

  நன்றி கருத்துக்கு.

  ReplyDelete
 31. அழகிய அருள் சுரக்கும் புகைப்படங்கள்!

  ReplyDelete
 32. படங்கள் எல்லாமே கொள்ளை அழகு!

  அதிலும் ...அந்தப் பளிங்குப் பாதங்கள்!!!! ஹரேக்ருஷ்ணா கோவில் அலங்காரம் போல இருக்கே!!!!

  இப்ப மன்னர் குடும்பத்துக்கு இங்கொகசாரின்னு கேட்கவேணாம். தினம்தினம் புறப்பாடு பார்க்கும் பாக்யம் கிடைச்சுருச்சு!!!

  ReplyDelete