Wednesday, April 27, 2011

ஆஸ்திரேலியாவின் அன்சாக் தினம்..
"ஆஸ்திரேலியாவில் நீண்ட வாரவிடுமுறை தினங்களாகக் கிடைத்த அன்சாக் தினக்கொண்டாட்டத்தை என் மகன்கள் உற்சாக ஊற்றாக உல்லாசப் பயணமாக கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லிவு கொண்டாடக் கண்டுபிடிப்பபோம் கொண்டா ஒரு தீவு என்று கிளம்பிவிட்டார்கள்.                               அவர்கள் சென்ற இடங்களின் படங்களையும்,அன்சாக் தினக் குறிப்புகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிவப்புக் கலரில் இருக்கும் பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கொண்டு, உண்டியல் குலுக்குவார்கள். 
அன்றைக்கு டெலிவிஷனில் வருபவகள்( செய்தி அறிவிப்பாளர், வானிலை , விளையாட்டு நியூஸ் சொல்பவர்கள்)எல்லாம் பாப்பிப் பூவோடு தரிசனம் தருவார்கள். இந்த 'பாப்பி டே' ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. ஆஸ்திரேலிய-நியுசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக 1915ம் ஆண்டு அமைக்கப்பட்ட படையணியின் பெயரே அன்ஸாக். (Australia and New Zealand Army Corps) 1915ம் ஆண்டு கலிபொலி மீட்பு வெளியேற்றத்துக்கும் பிறகு இப்படையணி கலைக்கப்பட்டாலும் ANZAC என்ற பெயர் நிலைத்தது. இந்தப் படையணியின் முதலாவது போரின்/தாக்குதலின் ஞாபகார்த்தமாகத்தான் அன்ஸாக் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது.[ANZAC+Lone+Pine+Cemetery.jpg]1915 இன் இறுதியில் இருபக்கங்களிலும் ஏற்பட்ட பலத்த சேதங்களின் பின்னர் கூட்டுப் படைகள் பின்வாங்கின. மொத்தம் 8,000 ஆஸ்திரேலிய, 2,700 நியூசிலாந்துப் படைகள் இச்சண்டையின்போது கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 25 நாள் 1916 ஆம் ஆண்டில் அன்சாக் நாள் என  பெயரிடப்பட்டது. அனசாக் தினம் ஆஸ்திரேலியா எங்கும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. காயமுற்ற பல ஆஸ்திரேலியத் இராணுவத்தினர் சிட்னியில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 2,000க்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் லண்டன் வீதிகளில் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எகிப்தில் முகாமிட்டிருந்த ஆஸ்திரேலியர்கள் விளையாட்டு நாளாகக் கொண்டாடினர்.[
  அன்ஸாக் தினத்தன்று கடைப்பிடிக்கப்படும் மௌன நிமிடங்களின் இறுதியில்  அஞ்சலிக் கவிதை கூறப்படும்:


They shall not grow old as we are left that grow old Age shall not weary them, Nor the years condemn 
At the going down of the sun and in the the morning
we will remember them. the morning"Lest we forget"

துருக்கியில் இருக்கும் Gallipoli Peninsula என்ற இடத்தில். கருங்கடலில் மாட்டிக்கொண்டகோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போக உதவியாக, அந்த ஜலசந்தியைத் திறக்க சென்ற நாள் ஏப்ரல் 25! 


இந்த நாளை நினைவிலே வைக்கவும்,நாட்டில் எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்கிறதென்று வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செய்து அரசாங்கமும் தேசபக்தியைப் பாராட்டும் விதமாக அரசாங்க விடுமுறையாக அறிவித்தது


மரணமடைந்தவர்களைப் புதைத்துவிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினார்கள்.


எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனார்களோ அங்கெல்லாமும் நினைவு மண்டபம் எழுப்பினார்கள்.


வீரமரணம் அடைந்தவர்கள் பெயர்களையும் அங்கே செதுக்கி வைத்திருக்கிறார்கள்..


அதிகாலை நேரத்து விழித்திருப்புகளும் சடங்குகளும் அணிவகுப்புகளும், reunionsகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் என்பனவும் two-up விளையாட்டும் அன்ஸாக் தினத்துக் கலாச்சாரக்கூறுகளாகும். 


(two-up என்பது இரு நாணயங்களை மேலெறிந்து தலையா பூவா என அவற்றின் முடிவின் மேல் பந்தயம் கட்டுவது)


Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவியது.


ஒவ்வொரு வருஷமும், இந்த நாளில் அந்தந்த ஊர்களில்  இருக்கும் நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். 


அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். 
வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவர்கள் பரம்பரைக்கு) அன்றைக்கு விசேஷ மரியாதை! அவர்களும்அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற விருதுகளை பெருமையுடன் எடுத்துக் கொண்டுவருவார்கள்.முதியோர்கள் இல்லத்தில் இருக்கும் வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னேயேஅவர்களின் மெடல்களையெல்லாம் பாலீஷ் செய்து, அடுக்கி, ராணுவ உடையோடு கம்பீரமாக பங்கெடுக்க ஆர்வம் காட்டுவார்கள் 


சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்றைக்கு வலம் வருவதைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் வந்துவிடும். 


கலிபோலியில் இருக்கும் வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருடா வருடம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!

இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கலிப்போலியைச் சுத்திக் காட்டி, அங்கே 'அன்ஸாக் வாக்'கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!

நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.
ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு மிகவும் அத்யாவசியம்

உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?


ராணுவ வீரர்கள் செய்கிற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!


ANZAC day medals.
இந்த நாள் காலை உணவு ஒரு குறித்த அடையாளப் பெயர் கொண்டு அழைக்கப்படும்,
Gunfire Breakfast’ 
'gunfire breakfast' (coffee with rum added) which occurs shortly after many dawn ceremonies[P1010358.JPG]

[P1010339.JPG]
சிட்னியிலுள்ள அன்ஸாக் நினைவாலயம் & அதனுள்ளிருக்கும் வாள் மீது உயிர் துறந்த வீரன் சிலை

ஆஸ்திரேலியா-நியுஸிலாந்து பங்கு கொண்ட பிற்காலப் போர்களில் போரிட்ட வீரர்களையும் உள்வாங்கி கொண்டாடும் முகமாக அன்ஸாக் தினம் மாறியுள்ளது. அன்ஸாக் தினத்தைக் கொண்டாடும் வகையில் கலிப்பொலிக்குச் செல்வதும் அங்கு நடக்கும் அதிகாலைப் பிரார்த்தனையில் கலந்து கொளவதும் வழக்கமாக இருக்கிறது.


8 comments:

 1. அருமையான பல புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிவுக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு ,அழகான படங்கள் .
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 3. இடுகைக்கு பாராட்டுகள் உண்மையில் இந்த மாதிரி படங்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை அழகான படங்கள் உள்ளம் கவரும் வகையிலான பின்னணி நேரில் கண்டதுபோல வருனனை . உளம் கனிந்த பாராட்டுகள்

  ReplyDelete
 4. Very interesting.
  Leanred about a lot here.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 5. புதிய தகவல்கள்...

  ReplyDelete
 6. நல்ல பகிர்விற்கு நானும் பாராட்டுகிறேன்.
  உணவு உலகத்தில், “பத்த வச்சிட்டியே பரட்டை” http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_27.html

  ReplyDelete
 7. அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete