Sunday, April 24, 2011

ஸ்வா‌மி நாராய‌ண் அ‌க்ஷ‌ர்தா‌ம் கோ‌வி‌ல்

கி‌ன்ன‌ஸ் பு‌த்தக‌த்‌தி‌ல் ஹ‌ி‌ந்து கோ‌வி‌ல் 
தலைநக‌ர் புது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள அ‌க்ஷ‌ர்தா‌ம் கோ‌வி‌ல், உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய ஹ‌ி‌ந்து கோ‌வி‌ல் எ‌ன்ற பெருமை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌கி‌ன்ன‌ஸ் பு‌த்தக‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்று‌‌ள்ளது.

பா‌ப்‌ஸ் ‌ஸ்வா‌மி நாராய‌ண் அ‌க்ஷ‌ர்தா‌ம் கோ‌வி‌ல் 86,342 சதுர அடி பர‌ப்பள‌வி‌ல் ‌பிர‌ம்மா‌ண்டமாக அமைந்துள்ளது. இதன் நீளம் 356 அடி; அகலம் 316 அடி; உயரம் 141 அடி ஆகு‌ம். கோ‌விலு‌க்கு முன்புறம் அழகிய புல்வெளி அமைந்துள்ளது.
கி‌ன்ன‌ஸ் பு‌த்தக வெ‌ளி‌யீ‌ட்டு ‌நி‌ர்வாக‌க் குழு‌வி‌ன் மூ‌த்த உறு‌ப்‌பினரான மை‌க்கே‌ல் ‌வி‌ட்டி புது டெ‌ல்‌லி‌க்கு வ‌ந்தபோது, உலகிலேயே பெரிய ஹ‌ிந்து கோயில் என்று அக்ஷர்தாம் கோ‌விலை அ‌ங்‌கீக‌ரி‌த்து இருப்பதற்கான சான்றிதழையும், விருதையும் வழங்கினார். ஆலய நிர்வா‌கி பிரமுக் சுவாமி மகாராஜ் அவற்றை பெற்றுக் கொண்டார்.
கோ‌வி‌லி‌ன் வரைபட‌த்தை 3 மாத‌ங்களு‌க்கு‌ம் மே‌ல் ஆ‌ய்வு செ‌ய்ததோடு, நே‌ரிலு‌ம் வ‌ந்து பா‌ர்‌த்த ‌பிறகே இ‌ந்த சா‌ன்‌றித‌ழ் வழ‌ங்க‌ப்படுவதாக மை‌க்கே‌ல் ‌வி‌ட்டி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கின்னஸ் நூலில் ஒரு ஹ‌ிந்து கோயில் இடம் பெற்றுவது இதுவே முதல் முறையாகும்.

இது தவிர, அதிக அளவில் கும்பாபிஷேகம் நடத்தியவர் என்ற வகையில் பிரமுக் சுவாமி மகாராஜ் பெயரும் கின்னஸ் பு‌த்தக‌த்‌தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தசென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரை 5 கண்டங்களில் 713 கும்பாபிஷேகங்களை அவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 
 


 உள்ளுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திரையரங்கில், "குரு இல்லாமல், ஒரு மனிதன் கடைத்தேற முடியாது' என்பதை விளக்கும் திரைப்படம் காட்டப்படுகிறது.


இப்படி ஒரு திரைப்பட அரங்கு ஆசியாவில் வேறு எங்கும் இல்லை என கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். அதாவது ஒரே இடத்தில் 14 திரைகள் உள்ளன. 22 ஸ்லைடு வீடியோ புரொஜக்டர்களைக் கொண்டு திரையிடுகின்றனர். ஒரே நேரத்தில் 14 காட்சிகளை பார்ப்பதென்றால் வியப்புக்குரியது தானே!

15 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்கா ஒன்று இங்கு இருப்பது இன்னும் விசேஷம். இதில் இருக்கும் நீர்நிலை ஒன்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக சித்தரித்துள்ளனர். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுக்கும் காட்சியும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், ஆதிவாசிகள் மற்றும் கிராமநலன், உயிரினங்கள், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை மற்றும் பண்பாடு குறித்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ஏராளமான அறிஞர்களை உள்ளடக்கிய இந்த மையம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க கூடமும் இருக்கிறது
1992 அக்டோபர் 30ல் திறக்கப்பட்ட இந்தக் கோயில் 23 ஏக்கர் பரப்பளவுள்ள பசுமையான நிலத்தில் அமைந்துள்ளது. கோயிலில் சுவாமி நாராயண் நினைவிடம், "ஆர்ஷ்' எனப்படும் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், பூங்கா ஆகியவை உள்ளன.

ராஜஸ்தான் மார்பிளால் ஆன சுவாமி நாராயணன் நினைவிடத்தின் மத்தியில் 7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை அமைந்துள்ளது. சுவாமியை பின்பற்றி வாழ்ந்த மகான்களின் மார்பிள் சிலைகள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. 6 ஆயிரம் மெட்ரிக் டன் (60 லட்சம் கிலோ) இளஞ்சிவப்பு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டது. 108 அடி உயரமும், 240 அடி நீளமும், 131 அடி அகலமும் உடையது இந்த கோயில்.
கண்காட்சி அரங்கம்: சுவாமி நாராயணனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கம் இங்கு உள்ளது. நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் தான். ஆனால், நான்கு மணி நேரத்துக்கு குறையாமல் சுற்றிப்பார்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.
ஒரு மாய உலகத்துக்குள் சென்று திரும்பிய உணர்வை இது ஏற்படுத்துகிறது. இங்குள்ள சிலைகளுள் திருப்பாவை இயற்றிய நம் தமிழகத்து ஆண்டாள் சிலையும் அடக்கம். ராமாயணம், மகாபாரத காட்சிகளை விளக்கும் அரங்கங்களை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கலாம்.
சினிமாக்களில் கூட இவ்வளவு பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்தது இல்லை என சொல்லுமளவு இவை உள்ளன. அது மட்டுமா? சுவாமி நாராயணனின் பக்தர்கள் பாடுவது போன்ற ஒரு "பிரேமானந்த்' என்ற அரங்கம் எவரையும் கைத்தட்டி மகிழ வைக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார். 

சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.

இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய ÷க்ஷத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார்.
முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய ÷க்ஷத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர்.

ராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், "இவரே இனி உங்கள் குரு' என அறிவித்தார். அவருக்கு "சகஜானந்தா' எனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனை தங்கள் தெய்வமாகவே கருதினர்.

ஏழை மக்களிடமும், பாவம் செய்து துன்பப்படும் மக்களிடமும் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். மூடநம்பிக்கை, இன்பம் தரும் பொருட்களிடம் அடிமையாகி கிடத்தல் ஆகியவற்றில் சிக்கியிருந்த மக்களை சந்தித்து அவர் உபதேசம் செய்தார். இதன் காரணமாக குஜராத் மக்களில் பெரும்பாலோனோர் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்து மனஅமைதி பெற்றனர். அந்த மகானின் நினைவாக இக்கோயில் எழுப்பப்பட்டது.

இங்கே தான் ஒரு தடவை தீவிரவாதிகள் தாக்குதலில் பல பக்தர்கள் உயிரிழந்தனர்.நாங்கள் சென்று தரிசித்து வந்த சில வருடங்களிலேயே உலகை அதிர வைத்த நிகழ்வு ..

[Gal1] [Gal1]

11 comments:

 1. இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்

  ReplyDelete
 2. நல்ல பதிவு. நிறைய படங்கள். நிறைய விஷயங்கள்.
  நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 3. கடந்த மாதம்தான் நான் அந்தக் கோவில் போய்வந்தேன்
  ஆயினும் இத்தனை தகவல்களை தங்கள் பதிவின் மூலம்தான்
  தெரிந்து கொள்கிறேன் நன்றி
  தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அடுத்த முறை தில்லி செல்லும் போது(எப்போதோ!) பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!

  ReplyDelete
 5. ரெண்டு வருஷங்கள் முன் இந்தக்கோவில் போய் வந்தேன். ஆனா இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்கலை. உங்க பதிவின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
 6. தாங்கள் “ஸ்வாமி நாராயண அக்ஷர்தாம் கோவில்” பற்றிய வெளியீடு செய்த சமயம் எனக்கு பேரன் [பெளத்ரன்]பிறந்துள்ளான். அவனுக்கும் நாராயணன் என்ற திருநாமம் சூட்ட உள்ளோம்.

  குழந்தை நல்லபடியாக பிரஸவம் ஆக வேண்டுமே என்ற கவலையில் மருத்துவமனையில் 11 to 4 இருந்துவிட்டதால் பின்னூட்டமிட சற்றே தாமதமாகிவிட்டது.

  படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல் மிகவும் அருமை.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. விவரங்கள் + படங்கள் = சுவாரஸ்யம்.

  ReplyDelete
 8. Great! congratulations! Happy Easter!

  ReplyDelete
 9. Dear thozi,
  Really you are rendering very good articles without any hassle.This type of article is so precious and it should be preserved .

  ReplyDelete
 10. உங்க பதிவ, எங்க அம்மா படிச்சதால எனக்கு மணிபர்சு காலி... ஹிஹிஹி...
  கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போகணுமாம்..

  ReplyDelete
 11. 405+2+1=408 ;)

  [பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயணன்’ பிறந்துள்ள அதே தினமான 24.04.2011 அன்று, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, ஸ்வாமி நாராயண் பற்றிய இந்தப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. ;) ]

  ReplyDelete